நுவலி, ஒரு அறை கண்ணத்தில் குடுத்தது ம் தொப்பென்று கட்டிலில் விழுந்து விட்டான்…. முதலில் அவன் நடிக்கிறான் என்று நினைத்தாள் , அவனிடம் இருந்து எந்த அசைவும் இல்லாமல் போகவே பயந்து போய் அவனை எழுப்ப அவன் எழவே இல்லை….. அவளுக்கு தீடீரென ஒரு சந்தேகம் வந்துவிட்டது, ” நாம அடிச்சது நால மயக்கம் போட்டு விழுந்து விட்டாரா…? நாம அவ்வளவு உறுதியா…? இல்ல இவரு இப்படி வீக்கா இருக்காரா…? ஒன்றுமே புரியவில்லையே….? அவளுடைய மனமோ இப்ப இந்த ஆராய்ச்சி ரொம்ப முக்கியமா போய் அவருக்கு என்ன ஆச்சுன்னு பார் என்றது…. அவனின் முகத்தை ஒரு ஈர துணியைக் கொண்டு துடைத்து விட்டவள் , அவனைப் எழுப்ப “அவனோ மெதுவாக கண்களைத் திறந்து ….. திறந்து மூடிக் கொண்டான்….. அவனின் நெற்றியில் கைவைத்து பார்க்க, உடம்பு எல்லாம் நெருப்பாக சுட்டது….
அப்பொழுது தான் அவளின் மரமண்டைக்கு ஒன்று புரிந்தது…. ஐஸ் தண்ணியில் நனைந்த உடுப்புடன் கொஞ்சம் நேரம் இருந்ததால் தான் இப்பொழுது காய்ச்சல் வந்து இருக்கு என்று , கொண்டு வந்த பாலில் சிறிது மஞ்சள் தூள் , சிறிது மிளகுதூள் போட்டு , அந்த பாலை அவனுக்கு சிறிது …. சிறிதாக ஊட்டினாள்….. அவனை தன் மீது சாய்த்துக் கொண்டு பாலை ஊட்டியதால் அவளின் முதுகு சீக்கிரமாக வலி எடுத்துக்கொண்டது….. “அடேய் உதிரா நேரம் பார்த்து பழி வாங்காதடா”… என்னால முடியல உன்னோட எடையை தாங்குற அளவுக்கு நான் இன்னும் வரவில்லைடா….? எல்லாம் என்னைச் சொல்லனும் அவனைப் பழி வாங்குறேன் என்ற பெயரில் நானே சொந்த காசுல சூனியம் வைத்துக்கொண்டேன்….. இவன் என்னவோ காய்ச்சல் வந்தாலும் நல்லாதான் தூங்குறான் …ஆனால் எனக்கு தான் இன்னைக்கு சிவராத்திரி போல “என புலம்பியவள்.., அவனுக்கு தைலம் எடுத்து தேய்ச்சு விட ஆரம்பித்தாள்….
நடுராத்திரி வரை அவனுக்கு தைலம் தேய்த்து விட்டவள் , சிறிது நேரம் தூங்கலாம் என்று அவனின் அருகில் படுத்துக்கொள்ள , சில நிமிடங்களில் அவனிடம் இருந்து உளறல் சத்தம் கேட்டு எழுந்தவள் அவனைப் பார்க்க, “அவனோ குளிர் காய்ச்சலில் நடுங்கி கொண்டே எதையோ முணுமுணுத்து கொண்டு இருந்தான்”
நுவலி , அவனின் வாய் அருகில் தன்னுடைய காதை வைத்து கேட்க , அவளுக்கு தான் எதுவும் புரியாமல் போனது…. இப்படி குளிரில் நடுங்குபவனை பார்க்க சற்று பரிதாபமாக இருந்தது. — “எனக்கு இப்ப வேற என்ன பண்றதுனு தெரியவில்லையே…… ?” வீட்டில் இருப்பவர்களிடம் சொல்லலாம்னு பார்த்தா நடுராத்திரி ஆகுது .எல்லோரும் தூங்கிக் கொண்டு இருப்பாங்க ….இப்ப என்னப் பண்றது என யோசித்த அவளுக்கு அழுகையே முட்டிக்கொண்டு வந்தது…..
வீட்டில் இருந்த போர்வைகள் எல்லாத்தையும் எடுத்து அவன் மீது போர்த்தி விட்டு , அவனின் கால்களை அழுத்திவிட்டு கொண்டு இருந்தாள்….
அவளுக்கே தீடீரென நாம சின்ன குழந்தை மாதிரிதான் இருக்கமோ…? எதுவுமே நமக்கு தெரியவில்லையே….? இப்ப இந்த குளிர் காய்ச்சலுக்கு என்ன பண்றதுனு கூட தெரியவில்லையே….? என்று யோசித்துக்கொண்டே அவனின் கைகளை தேய்த்து விட்டுக் கொண்டு இருந்தாள்…. சிறிது நேரத்தில் அவனின் உளறல் சத்தம் அவளுக்கு கேட்கவில்லை….அப்பொழுது அவனை விட்டு எழுந்து சென்றவள் நேராக பூஜை அறைக்கு சென்று கடவுளை வணங்கிவிட்டு, திருநீறு கொண்டுவந்து அவனின் நெற்றியில் வைத்துவிட்டு , மறுபடியும் அவனுக்கு நெற்றியில் தையலம் தேய்த்துவிட்டு , அவனையே பார்த்துக்கொண்டு இருந்தாள்…. .
கொஞ்ச நேரம் கழித்து வசுமதியின் குரல் கேட்டது அவளுக்கு…. “அம்மா “என்ன இவ்வளவு சீக்கிரமா எழுந்து இருக்காங்க என்று மணியைப் பார்க்க அது ஐந்து மணி என்று காட்டியது….. அமைதியாக அவனை முறைத்து பார்த்துக்கொண்டு இருந்தாள்….
வசுமதி , வெளியே தெருவில் சாணம் தெளித்து கோலம் போட்டு கொண்டு இருந்தார்…. சிறிது நேரத்தில் பூஜையறையில் இருந்து மெல்லிய சத்தத்தில் பாடல் கேட்டுக்கொண்டு இருந்தது…. வீட்டில் இருந்த ஒவ்வொருவரும் எழுந்து வேலையைப் பார்க்க….. அப்பொழுதுதான் மெதுவாக கண் விழித்தான் உதிரன்…. கண்களை மெதுவாக திறந்து சுற்றும் முற்றும் பார்க்க “தன்னையே முறைத்துக் கொண்டு நுவலி உட்கார்ந்துக் கொண்டு இருப்பது தெரிந்தது… மெதுவாக அவளிடம் பேச வாய்திறக்க” காற்று மட்டுமே வெளியே வந்தது அவனுக்கு”….
அவன் கண்விழித்ததைப் பார்த்த நுவலி , வேகமாக அவனின் நெற்றியை தொட்டு பார்த்தவள் , ” அவனிடம்… உனக்கு எதாவது வேண்டுமா….? இப்ப எப்படி இருக்கு உடம்பு….? உடம்புல எங்கையாவது வலிக்கிறதா..? மருத்துவமனைக்கு போகலாமா….? எதாவது இப்ப குடிக்கிறீயா…? இப்ப உனக்கு குளிருதா…? அடுக்கடுக்கா கேள்விகளைக் கேட்டுக் கொண்டே போக ….
உதிரன், அமைதியாக எல்லாவற்றிற்கும் இல்லை என தலையாட்டிவிட்டு. அவளைப் பார்த்து “நீ இரவு முழுவதும் தூங்கவில்லை யா….?”
கண்கள் இரண்டும் எப்படி சிவந்து போயிருக்கு பாரு…..!
“என்னை எங்கடா தூங்கவிட்ட கருவாயா…?” உன் மேல குளிர்ந்த தண்ணியை ஊற்றியதற்காக என்னை பழிவாங்கி விட்ட…. இரவு முழுக்க என்னை கொடுமைப்படுத்தி இருக்க நீ தெரியுமா….? நான் பிறந்தது வளர்ந்த இத்தனை வருடத்தில் ஒரு நாள் கூட நான் தூங்காம இருந்ததே இல்லை தெரியுமா உனக்கு….? உனக்கு இரவு முழுவதும் கைகால்களை அழுத்திவிட்டு என்னுடைய கை இரண்டும் வலிக்கிறது….. நான் அப்பவே எங்க அப்பாகிட்ட சொன்னேன் “எனக்கு கல்யாணம் வேண்டாம்னு” சொன்னா யாரும் கேட்கவில்லை…. உன்னை என்னோட தலையில கட்டி வச்சிட்டு போயிட்டாங்க…. அவங்க எல்லாம் இப்ப நிம்மதியா இருக்காங்க….’ நான் மட்டும் தான் இப்ப கஷ்டப்படுறேன் உன்னை கல்யாணம் பண்ணிக்கொண்டு….. “கல்யாணம் ஆன ஒரு நாளுக்கே இப்படி நீ கொடுமை படுத்துற ” இன்னும் இருக்கிற நாளை எல்லாம் நீ என்னை எப்படி எல்லாம் கொடுமை படுத்துவியோ எனக்கு தெரியவில்லை…..? நீ இவ்வளவு பெருசா எருமை மாடு மாதிரி வளர்ந்து இருக்கியே ….? உன்னால ஒரு காய்ச்சலை தாங்க முடியாது….? என்னை இரவு முழுவதும் தூங்கவிடாமல் கொடுமைப்படுத்தி விட்ட…. நீ எனக்கு வேண்டாம் ….. வேண்டவே வேண்டாம்…..நீ உங்க வீட்டு போ ….அவள் அழுது கொண்டே கூற…..
வெளியே வசுமதி மும்முரமாக வேலைச் செய்துக்கொண்டு இருந்தார்….. யாரும் இவர்கள் இருவரையும் தொந்தரவு செய்யவில்லை…. இருவரும் வெளியே வரும்போது வரட்டும் என்று அவரவர் வேலையைச் செய்துக்கொண்டு இருந்தனர்…
ரத்னம், காலையிலே கடைக்கு சென்று ஆட்டுக்கறி , மீன் , முட்டை என இறைச்சியை வாங்கி வந்து குடுத்து விட்டு , தன்னுடைய மனைவியிடம் “இங்க பாருடி …, எல்லாத்தையும் நல்லா சமைத்து வை”…. மாப்பிள்ளைக்கு ஆட்டுக்கறி சமைத்து வை, நம்ம பொண்ணுக்கு இரத்தமும் , ஆட்டு மூளையும் ரொம்ப பிடிக்கும் , அதையும் நல்லா சமைத்து வை…. நீ போய் நுவலியை எழுப்பாதே …! குழந்தை எப்ப தூங்கி எழுந்து வருதோ அப்பவே வரட்டும்….. நேற்று கல்யாண அலைச்சல் அதிகமா இருந்து இருக்கும் …நல்லா ஓய்வு எடுக்கட்டும்….
தன்னுடைய கணவரைப் பார்த்து முறைத்தவர்…. அவரிடம் “நீங்க இன்னும் அவளை சின்ன குழந்தையாவே நினைத்துக்கொண்டு இருங்க” அவளும் உங்க காலை பிடித்துக்கொண்டே சுத்தட்டும்… எப்பவாவது வீட்டில் படித்த பொண்ணு மாதிரி நடந்து இருக்காலா….? அறிவே இல்லாத குழந்தை மாதிரி இருக்கா…. நானும் இப்ப திருந்து வா..’ அப்ப திருந்து வானு பார்த்தா … எங்க எதுவும் நடக்கிற மாதிரி இல்லை….. “வீட்ல அவ இருந்தா குழந்தை மாதிரியே இருக்கா நீங்களும் அவ பின்னாடியே போறீங்க” புட்டிபால் மட்டும் தான் அவளுக்கு குடுக்கல…? உங்க இரண்டு பேரோட நடவடிக்கைகளைப் பார்க்க சகிக்கல..! இதை எல்லாம் பார்க்க வேண்டும் என்று என்னுடைய தலையில எழுதி இருக்கு….. “இந்த நிலையில அவ அடுத்த மாதம் எதையோ ஆராய்ச்சி பண்ண போறாளாம் ” …. வெளியே மட்டும் வளர்ந்த பொண்ணு மாதிரி நடந்துகொள்வது வீடுனு வந்துவிட்டா குழந்தையா நடந்துக் கொள்வது ……. இதற்கு எல்லாம் காரணம் நீங்கதான்…. உங்களை என்னப் பண்றேன்னு பாருங்க… என்று எதையே வசுமதி தேட….
“ஆளை விட்டால் போதும்டா சாமி ” என்று வெளியே சென்றுவிட்டார் ரத்னம்….
உதிரனின் உதட்டில் மெல்லிய புன்னகை ஒன்று தோன்றியது…. அவள் அழுது கொண்டே புலம்புவதை பார்க்க….
அவளின் கையை பிடித்து அவன் இழுக்க, அவனின் மீது வந்து விழுந்தாள் நுவலி… அவளை அப்படியே தன்னோடு சேர்த்து அணைத்துக்கொண்டு மறுபடியும் உறங்கி விட்டான்…. இவளும் சில நிமிடங்களில் தூக்கத்தின் தாக்கத்தினாலும் , இரவு முழுவதும் தூங்காமல் விழித்து இருந்ததால் படுத்த கொஞ்ச நேரத்தில் உறங்கி விட்டாள்….
யாரோ அழைக்கும் சத்தத்தில் கண் விழித்தவள் , கட்டிலை விட்டு எழாமல் புரண்டு …. புரண்டு படுத்துக்கொண்டு இருந்தாள்…. சிறிது நேரத்தில் தன்னுடைய முதுகில் எதோ குத்துவதை போன்று உணர்ந்தவள் ,”அது என்னது என்று பார்க்க….?” ஒரு பேப்பரும் , பென்னும் இருந்தது…. அதை எடுத்து படிக்க ஆரம்பித்தாள்….,
நான் தான் நுவலி உன்னுடைய உதிரன்… உன்னை எப்படி எனக்கு பிடித்தது என்று இன்றுவரை எனக்கு காரணமே தெரியவில்லை …. கல்யாணமே வேண்டாம் என்று இருந்த என்னை கல்யாணம் பண்ண வச்சது நீ தான்…. இப்ப உன்னைவிட்டு போக சொல்லுவதும் நீ தான்…. வாழ்க்கையில நான் ஆசைப்பட்டது சில விசயங்கள் மட்டுமே …! அந்த விசயத்துல நீயும் ஒன்னு…. உன்னை நான் விருப்பப்பட்டு தான் கல்யாணம் பண்ணிகிட்டேன்….. உன் கூட இருக்கிற ஒவ்வொரு நிமிடத்தையும் என்னுடைய இதயத்துல சேமித்து வைக்க வேண்டும்னு நினைத்தேன்…. ஆனால் நீ என் கூட வாழ பிடிக்கவில்லை என கூறிவிட்டாய் , இதற்கு யாரை குற்றம் சொல்லுவது என்று எனக்கு தெரியவில்லை…
” ஆயிரம் ஆசைகள் , ஆயிரம் கனவுகளோடு தான் உன்னுடைய கழுத்தில் தாலி கட்டி என்னுடைய மனைவியாக்கிகொண்டேன்”…. நான் ஒருபோதும் நினைத்து கூட பார்க்கவில்லை என்னோட வாழ்க்கை இப்படி பாதியிலே முடிந்து போகும் என்று… “உன்னை என்னால் ஒருபோதும் மறந்து போக முடியாது…?” அதனால் நான் மறைந்து போகிறேன்…..கடிதத்தை படித்து முடித்தவளுக்கு பயம் வந்துவிட்டது, வெளியே யாரோ கூப்பிடும் சத்தம் வேற கேட்டுக்கொண்டு இருந்தது…. இந்த வீட்டில் யாருமே இல்லையா என்று எண்ணியபடி வெளியே வர” வாசலில் நின்று ஒருவர் “அக்கா…. அக்கா” என்று அழைத்துக்கொண்டு இருந்தார்….
நுவலி, என்ன கடைகாரரே…! இம்புட்டு தூரம்…..?
காலையில் மாப்பிள்ளை வந்து பூச்சிமருந்து வாங்கிக் கொண்டு போனாரு…. நான் ஏதோ நியாபகத்துல வீரியம் அதிகமான பூச்சி மருந்தை மாற்றி குடுத்து விட்டேன்… அந்த பூச்சி மருந்தை பயிருக்கு அடித்தா ” பயிர் செத்து போயிடும் ” அதை சொல்லத்தான் ஓடி வந்தேன் மா….. அவர் கூறிவிட்டு சென்றுவிட,
இவளுக்கு தான் “இதயம் வேகமாக துடித்தது பயத்தில் ” ….. வீட்டில் யாராவது இருக்காங்களா என்று தேட வீட்டில் ஒருத்தரும் இல்லை… இவர்கள் எல்லோரும் எங்கே போனார்கள் என்று தேடிக்கொண்டே தோட்டத்து பக்கம் போக” அங்கே வசுமதி வாழை இலையை நறுக்கிக் கொண்டு இருந்தார்”….. அவரிடம் வேகமாக போய் “அம்மா உதிரனை பார்த்தியா….?”
இல்லடி…. மாப்பிள்ளையை சீக்கிரமா வர சொல்லு போன் போட்டு… அவரு வெளியே போனது மட்டும்தான் பார்த்தேன்…. எங்க போனாருனு எனக்கு தெரியவில்லை…? இந்த ஊர்ல யாரை இவருக்கும் தெரியும்….? ரொம்ப நேரம் ஊரை சுத்தி பாக்காம சீக்கிரமா வீட்டுக்கு வர சொல்லு “…..அவர் கூறிவிட்டு சென்றுவிட…
தன்னுடைய போனில் இருந்து அவனுக்கு அழைப்பு விடுக்க….. போன் ரிங் போய்க் கொண்டே இருந்தது ஆனால் அழைப்பு ஏற்கப்படவில்லை…. .
ஒரு நொடியும் தாமதிக்காமல் வயலை நோக்கி ஓடிக்கொண்டு இருந்தாள்…கண்ணீர் ஒருபக்கம் கண்ணத்தை நனைத்து கொண்டு இருக்க …… அந்த கண்ணீரையும் துடைக்க முடியாமல் ஓடிக்கொண்டு இருந்தாள்……. ஒரு வழியாக தன்னுடைய வயல்வெளிக்கு வந்தவள் “அவனை தேட , அவளுடைய கண்களுக்கு எங்குமே புலப்படவில்லை ….?”…
உதிரா…… உதிரா ….. எங்க இருக்க ….? நான் உன்கிட்ட பேசணும் … என்னை ஏமாற்றிவிட்டு போயிடாதே ….!என்று அழுதுகொண்டே சத்தமாக அவனை கூப்பிட , இவளின் குரலே மறுபடியும் இவளுக்கு எதிரொலித்தது ….. வயல் முழுவதும் தேடிப் பார்த்தவள் கடைசியாக கிணற்று மேட்டுக்கு சென்றாள்….. அந்த கிணற்று மேட்டில் உதிரன் படுத்துக்கொண்டு இருக்க ….. அவனின் அருகில் வேகமாக ஓடியவள் “அவனை எழுப்ப அவன் எழுந்திருக்கவே இல்லை….! அவனின் அருகில் பூச்சிமருந்து பாட்டிகள் திறந்து கிடந்தன…. அவனின் கண்ணத்தை தட்டி எழுப்ப …… அவனோ அசைவற்று இருந்தான்….. அவளோ என்ன செய்வது என்று தெரியாமல் ” யாராவது இருந்தா ஓடிவாங்க …. காப்பாத்துங்க…. தயவுசெய்து யாராவது இருந்தா உதவி பண்ணுங்க “…. அந்த வயல்வெளியில் அவளின் கதறலே எங்கும் நிரம்பி இருந்தது ……
Dei enna da nadakuthu inga … Ava sonnathukka nee marunthu kuducha ithellam over da…. Rendu thattu mandaila thattuna sari aairuvada… Nadikuranka nijamave kuduchana nu teriyalaye … Enaku oru doubt kudukanum nu mudivu pannunaven v2laye kuduka vendiya Thane ..
Thank you sago 🥰