Loading

தன்னுடைய புகுந்த வீட்டில் முதன்முறையாக வந்து இருக்கிறாள் இவர்கள் என்னை எப்படி நடத்துவார்கள்? என்னுடைய குணம் இவர்களுக்கு பிடித்து போகுமா ? என யோசித்துக்கொண்டு இருந்தாள். 

       “அடேய் ” எத்தனை பேர் இருக்காங்க டா ?

        நீங்க சொன்ன அத்தனை பேரும் ரெடியா இருக்காங்க மா.

       ஒவ்வொருத்தராக வந்து என்னுடைய பேத்திக்கு ஆரத்தி எடுத்துவிட்டு அவ கையில் இருந்து சேலையை வாங்கிக் கொண்டு போகச் சொல்லுடா. பாட்டியின் கத்தலில் தான் நினைவுக்கே வந்தாள் நுவலி. அப்பொழுது அவள் தெருவில் நிற்பதையும் அவளின் எதிரே வரிசையாக பெண்கள் ஆரத்தி எடுக்க தட்டுடன் இருப்பதையும் பார்த்து “மனோன்மணியை பார்க்க ” அவரோ ஒரு சின்ன சிரிப்புடன் தலையை ஆட்டினார். 

ஒவ்வொருத்தராக வந்த அவளுக்கு ஆரத்தி சுற்றிவிட்டு அவளிடம் இருந்து சேலையை வாங்கிக் கொண்டு சென்றனர் கடைசியாக பாட்டி அவளுக்கு ஆரத்தி சுற்றிவிட்டு வீட்டுக்கு உள்ளே அழைத்து சென்று பூஜையறையில் விளக்கு ஏற்ற சொல்லிவிட்டு ,”அனைவரும் கடவுளை வணங்கினார்கள்”. ஒவ்வொருவரும் தன்னுடைய மனதில் கடவுளிடம் ஒவ்வொரு வேண்டுதல்களை வைத்தனர்.  

      அனைவரும் ஒன்றாக உட்கார்ந்துக் கொண்டு கதைகளை பேசிக்கொண்டு இருந்தனர். 

        வனஜா, எல்லோரும் எழுந்து வாங்க சாப்பிட , கதை பேசியது எல்லாம் போதும். சீக்கிரமா சாப்பிட்டு போய் தூங்குங்க .” அத்தை” வாங்க வந்து சாப்பிடுங்க! நீங்க விடிய… விடிய கதை பேசிக்கொண்டே இருப்பீங்க!

      ராம், அந்த வேலையாவது ஒழுங்கா பார்த்தா நல்லா இருக்கும். இந்த பாட்டிக்கு கதை கூட சரியா சொல்லத் தெரியாது ? கதை பேசுகின்றேன் என்ற பெயரில் கடுப்பேத்துது .

        மணி, “அட எடு வட்ட கிறுக்கு பயலே” என்னையே கிண்டல் பண்றீயா? உனக்கு எல்லாம் அறுபது வயதில் தான் கல்யாணம் ஆகப்போகிறது டா.

        ராம், “அச்சச்சோ ” பாட்டி அப்படி எல்லாம் சொல்லக்கூடாது. நம்ம ரெண்டு பேரும் சமாதானம் ஆகிவிடுவோம் . அவனுக்கு பயம் வந்துவிட்டது எங்க பாட்டி சொல்ற மாதிரி நமக்கு அறுபது வயதில் தான் கல்யாணம் ஆகுமோ என்று. 

         மணி, அடடா! என்ன கல்யாண ஆசை வந்துவிட்டதா? 

    ராம் ,என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் திருதிருவென முழிக்க .

         மணி, நீ இன்னும் சின்னப்பிள்ளை டா! உனக்கு கல்யாண வயசு வரும்போது கல்யாணம் பண்ணி வைத்துவிடலாம் . இப்ப எல்லோரும் வாங்க சாப்பிடலாம் .

        அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட , ராம் ஓரக்கண்ணால் சுமதியை தான் பார்த்துக்கொண்டு இருந்தான். சுமதியோ சிரிப்பை அடக்கிக்கொண்டு யாரும் பார்க்காத வாறு அவனை பார்த்துவிட்டு சாப்பாட்டில் கவனம் இருப்பது போல மற்றவர்களுக்கு தன்னை காட்டிக்கொண்டு இருந்தாள்.

கண்ணன் சீக்கிரமாக சாப்பிட்டு ” முதுகு வலி இருக்கிறது நான் போய் சீக்கிரமா தூங்குறேன் என கூறிவிட்டு சென்று விட்டார்”. நுவலிக்கு என்ன பேசுவது என்று தெரியாமல் அனைவரும் பேசுவதை அமைதியாக கேட்டுக்கொண்டு இருந்தாள். 

        என்னடா கண்ணு வீட்டு ஞாபகம் வந்து விட்டதா? சரியாவே சாப்பிட மாட்ற? நீ ஒழுங்கா சாப்பிடாம இருந்தா உடம்பு என்ன ஆவது? உங்க வீட்டுக்கும் என்ற பையனுக்கும் நான் என்ன பதில் சொல்வேன் சொல்லு? வீட்டு ஞாபகம் வந்துவிட்டதா டா? மிகவும் பரிவுடன் நுவலியைப் பார்த்து கேட்டுக்கொண்டு இருந்தார் வனஜா. 

      நுவலி, இல்லை என்று தலையை ஆட்ட. 

      மணி, இங்க பாரு ஒருத்தன் நம்ம முன்னாடியே தன்னுடைய காதலியை சைட் அடித்துக்கொண்டு இருக்கான் பாரு? யாருக்கு என்ன நடந்தா என்னனு தன்னுடைய வேலையில் கவனமாக இருக்கான் பாரு. “அடேய் ” இவ உன்ற தங்கச்சி தானே! எதாவது ஆறுதல் சொல்றீயா பாரு ? 

         பாட்டி கூறிய “தன்னுடைய காதலி” என்ற வார்த்தையில் அதிர்ச்சியாகி விட்டான். என்ன பேசுவது என்று கூட தெரியாமல் இருந்தான் ராம். சுமதியோ குனிந்த தலையை நிமிர்த்த வே இல்லை. இந்த விசயம் மற்றவர்களுக்கும் ஒரு சந்தோசமான விசயமாக இருந்தது. எல்லோரின் பார்வையையும் ராமையே நோக்கி இருக்க, அவனோ இன்னும் அதிர்ச்சி குறையாமல் அப்படியே தான் இருந்தான். பாட்டி அவனின் கையில் கிள்ள ” ஆ” என்று கத்திக்கொண்டே சுய நினைவுக்கு வந்தான். என்னடா! அப்படியே கனவு உலகத்திற்கு போய்விட்டீயா? கல்யாணத்திற்கு முன்னாடியே எங்க பேச்சு எல்லாம் உன்னுடைய காதில் விழவில்லை இதுல கல்யாணம் ஆனபிறகு நம்மளை எல்லாம் பார்த்து பேசுவானா? கண்டிப்பாக மாட்டான் .

       ராம் , பாட்டி கொஞ்ச நேரம் அமைதியாக இருங்க’ தயவு செய்து அத்தை வீட்டில் எதுவும் சொல்லிவிடாதீங்க? நானே இப்பதான் இவகிட்ட என்னுடைய காதலை சொல்லி ஓகே பண்ணி இருக்கேன் நீங்க எதாவது செய்து என்னுடைய காதலை வேரோடு சாய்த்து விடாதீங்க! அவனின் பேச்சை கேட்டு அனைவரும் சிரித்து விட்டனர். 

        மணி, அட போடா எங்களுக்கு வேற எந்த வேலையும் இல்லையா? உன்னுடைய காதலை தண்டோரா போடுவதுதான் எங்களுக்கு வேலை பாரு? ஆளையும் மூஞ்சியும் பாரு முருங்கைக்காய்க்கு கை கால் முளைத்த மாதிரி , சுமதியின் பக்கம் திரும்பி “ஏம்மா உனக்கு இவன் தான் வேண்டுமா? நல்லா யோசித்து சொல்லு ? உனக்கு நான் வேற நல்ல பையனா பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கின்றேன் “.

        ராம் , பாட்டியை பார்த்து ஒரு பெரிய கும்பிடு போட்டுவிட்டு ” விட்டால் நீங்க இன்னைக்கே என்னோட காதலுக்கு சமாதி கட்டி விடுவீங்க நான் கிளம்புறேன் ” என்று அனைவரிடமும் கூறிவிட்டு, சுமதியை அழைத்துக்கொண்டு சென்று விட்டான். 

              ஏங்க இன்னும் எவ்வளவு நேரம் தான் அவ போட்டோவையே பார்த்துக்கொண்டு இருப்பீங்க? வாங்க வந்து சாப்பிடுங்க . பல முறை தன் கணவனை அழைத்தும் , அவர் சாப்பிடாமலே நுவலியின் போட்டோவை கையில் வைத்துக்கொண்டு மெளனமாக இருந்தார். அவரின் கண்கள் மட்டும் கலங்கி இருந்தது. அவரின் கலங்கிய விழிகளை பார்க்க முடியாமல் ” இப்ப எதுக்கு கண்ணை கசக்கி கொண்டு இருக்கீங்க? நான் இப்பவே நுவலிக்கு போன் போட்டு சொல்றேன் உங்க அப்பன் இங்க சாப்பிடாம உன்ற போட்டோவை கையில் வைத்துக்கொண்டு அழுது கொண்டு இருக்காருனு ” சொல்லவா ? சொல்லுங்க? நான் அவளுக்கு போன் போட்டு உங்க நிலமையை சொன்னேன் வையுங்கள் அவ உடனே கிளம்பி வந்து விடுவா, வர சொல்லட்டுமா? 

         ரத்னம், வேண்டாம் என்று தலையாட்ட. அப்ப ஒழுங்கா சாப்பிடுங்க என்று அவரின் முன்பு சாப்பாட்டு தட்டை வைத்தார் வசு. சாப்பாட்டை எடுத்து வேண்டா வெறுப்பாக சாப்பிட்டு முடித்து விட்டு , எழுந்து சென்று கட்டிலில் உட்கார்ந்துக் கொண்டார் ரத்னம். சிறிது நேரம் கழித்து தன்னுடைய வேலை எல்லாம் முடித்துக்கொண்டு வந்தவர் தன்னுடைய கணவரின் நிலமையை கண்டு சிரித்துவிட்டு அவரின் அருகில் உட்கார்ந்துக் கொண்டு அவரை தன்னுடைய மடியில் படுக்க வைத்துவிட்டு ,அவரின் தலைமுடியை மெதுவாக கோதி விட்டுக் கொண்டு இருந்தார் வசுமதி. இருவரிடையே பெருத்த அமைதி மட்டுமே இருக்க’ இருவரும் சிறிது நேரத்தில் தூக்கத்தின் மடியில் இருந்தனர். 

         வனஜா, இது தான் டா உதியோட அறை. இனிமே இது உங்க அறை நீ போய் தூங்கு டா’ காலையில் எழுந்து பையில் இருக்கும் துணி எல்லாம் எடுத்து அலமாரியில் வைத்துக் கொள் டா .சரி நீ இப்ப போய் தூங்கு எனக்கும் தூக்கம் வருது. உங்க மாமா இந்நேரம் சொர்க்கம் தாண்டி வேற உலகத்திற்கு போய்க் கொண்டு இருப்பாரு. உங்க பாட்டியை பாரு இங்கேயே பாயை விரித்து படுத்துக் கொண்டாங்க “உனக்கு எதாவது வேண்டும் என்றால் என்னை கூப்பிடு டா ” சரி என்று நுவலி தலையை ஆட்ட , வனஜா தன்னுடைய அறைக்கு சென்றுவிட்டார்.    

          உதிரனின் அறைக்குள் வந்தவள் அந்த அறை முழுவதும் ஒருமுறை தன்னுடைய பார்வையை செலுத்தினாள். சுவற்றில் எல்லா பக்கமும் உதிரனின் போட்டோக்கள் பிரேம் போட்டு சுவற்றில் மாட்டி வைத்து இருந்தனர். சுவற்றில் இருந்த தன்னவனை சைட் அடித்துக்கொண்டே நிற்க “அந்நேரம் அவளின் போன் ஒலித்தது ” உதிரன் தான் போன் செய்து இருந்தான்.

       ஹாய் பொண்டாட்டி என்ன பண்ற? சாப்பிட்டியா? இப்ப இந்த மாமனை தானே! சைட் அடித்துக்கொண்டு இருக்க ? 

         “நம்ம சைட் அடிப்பதை நேரில் இருந்து பார்த்த மாதிரியே சொல்றானே!” இந்த ரூம்ல எங்கையாவது கேமரா எதாவது வச்சி இருக்கானா? இல்ல வேலைக்கு போறேன் என்று சொல்லிவிட்டு , வேலைக்கு போகாமல் நமக்கு பின்னாடி ஒளிந்து கொண்டு நம்ம செய்வதை எல்லாம் பார்த்துக்கொண்டு இருக்கானா? என்ற சந்தேகம் எல்லாம் அவளின் மண்டைக்குள் தோன்ற சுற்றும் முற்றும் கண்ணை உருட்டி … உருட்டி பார்த்துக்கொண்டு இருந்தாள்.

         என்னடி ‘ நான் உன்ற பின்னாடி இருந்து பார்த்துக்கொண்டே இருக்கேனா என்ற எண்ணம் உன்னுடைய மனதிற்குள் தோன்றி சுற்றும் முற்றும் என்னை தேடுகின்றாயா? அவளின் தலை தன்னால் தலை ஆட்டியது .பிறகு தான் தான் தலை ஆட்டியதை நினைத்து தனக்கு தானே ஒரு சிறு புன்னகையை உதட்டில் வர வைத்துக்கொண்டாள். நுவலி அமைதியாக இருக்கவே மறுபடியும் உதிரனே , என்ன ஆச்சு மா ? இந்த மாமாவை ரொம்ப மிஸ் பண்றியா?

         இல்லையே! நான் சும்மா உன்னுடைய ரூம் இல்ல … இல்ல நம்ம ரூம்மை சுற்றி பார்த்துக்கொண்டு இருக்கேன். உன்னை எல்லாம் நினைத்துப் பார்க்கும் அளவுக்கு எனக்கு நேரம் இல்லை .

          நான் நம்பிவிட்டேன் டி. ஏன்டி இப்படி சின்னப்பிள்ளை மாதிரி பச்சையா பொய் சொல்ற? சரி அதை எல்லாம் விடு நீ சாப்பிட்டியா? வீட்டில் எல்லோரும் என்னப் பண்றாங்க? 

        ஈ…ஈ….. கண்டு பிடித்துவிட்டாயா? நான் சாப்பிட்டேன். வீட்டில் எல்லோரும் சாப்டுட்டு விட்டு தூங்க போயிட்டாங்க. இந்த வீட்டிலேயே இப்ப நான் மட்டும் தான் தூங்காம இருக்கேன் .

       ஏன் ? என்ன ஆச்சு என் பொண்ணாட்டிக்கு ? ஏன் இன்னும் தூங்கவில்லை?

           நான் ஏன் இன்னும் தூங்கவில்லைனு உனக்கு தெரியாதா? நான் தாங்காமல் இருப்பதற்கு நீ மட்டும் தான் காரணம் . நான் தூங்கிவிட்டால் உன்னை நினைக்க முடியாமல் போய்விடுமே அதற்காக தான் நான் உறக்கத்திடம் சண்டைபோட்டு கொண்டு இருக்கேன் .

        அவளின் காதலை எண்ணி பெருமிதம் கொண்டான். நாம என்ன செய்துவிட்டோம் எதற்காக நம்மை இப்படி காதல் செய்கிறாள் ? என்ன கேள்வியும் அவனுக்குள் தோன்றியது. ஒரு பக்கம் குற்ற உணர்வாக இருந்தது. இரண்டும் போட்டி போட மெளனமே விடையாக இருந்தது அவனுக்கு.

          மாமா’ ஏன் அமைதியாக இருக்க? என்ன ஆச்சு ? சாப்பிட்டியா?

     “ம்” சாப்பிட்டேன் டா. எனக்கு ஏதோ போல இருக்கு டா’ இத்தனை வருட என்னுடைய இராணுவ வேலையில் ஒவ்வொரு முறையும் வீட்டுக்கு போய் மறுபடியும் வேலைக்கு திரும்பும் போது ஏற்படாத புதுவித உணர்வு இப்பொழுது ஏற்படுகிறது. அந்த எண்ண உணர்வுகள் என்னை ஏதோ செய்கிறது டா . சரியாக சொல்லவேண்டும் என்றால் சுவாசிக்க கூட முடியாத அறையில் இருப்பது போல ஓர் உணர்வு வருது மா. நீ என்னை விட்டு தூரமாக இருப்பதால் என்னவோ எனக்கு இந்த மாதிரி எண்ணங்கள் தோன்றுகிறது . நான் வேலைக்கு போகவில்லை டா , என்னுடைய வேலையை நான் ரீசைன் பண்ணி விட்டு வந்து விடுகின்றேன் .

          அவனின் எண்ண போராட்டங்களை உணர்ந்தவள் அவனை சமாதானம் படுத்தும் விதமாக” சரி மாமா நீ இப்படியே திரும்பி வந்து விடு நமக்கு என்ன அந்த வேலை இல்லனா என்ன வேற வேலையே இல்லையா என்ன?” வீட்டுக்கு வந்து விவசாயம் பாரு இல்லனா இங்க இருக்கிற கம்பெனிகளுக்கு ஏதாவது ஒன்றுக்கு வேலைக்கு போ அதுவும் பிடிக்கவில்லை என்றால் வீட்டிலேயே இரு . இப்ப என்ன நீ வேலைக்கு போகவில்லை என்றால் உலகம் சுழலுவதை நிறுத்தி விடுமா என்ன? 

         ஏன்டி இப்படி சொல்ற? நீ என்னை ஆறுதல் படுத்துவாய் என்று நினைத்து உன்கிட்ட என்னுடைய எண்ண ஓட்டங்களை சொன்னா நீயும் என்னை கோழை மாதிரி வீட்டுக்கு வர சொல்ற ?

          உனக்கே தெரியுது தானே மாமா’ அப்பறம் என்ன ? உன்னை பிரிந்து இருப்பது எனக்கும் ரொம்ப கஷ்டமாக தான் இருக்கு அதற்காக நீ வேலையை ரிசைன் பண்ணிவிட்டு வந்து விட்டால் எல்லாம் சரி ஆகுமா? நீ செய்யுற வேலை ஒன்றும் சாதாரண வேலை இல்லை” இந்த நாட்டுக்கே பாதுகாப்பு தர இடத்தில் இருக்க ஒரு காவல்காரனாய் “. உன்னுடைய வேலையை கேட்டதும் முதல்ல எனக்கு ரொம்ப கஷ்டமாக தான் இருந்தது ஆனால் என்னப் பண்ண? எதுவும் மாற்ற முடியாதே! உன்னுடைய வேலைக்கு நீ எவ்வளவு முக்கியத்துவம் தந்து அன்னைக்கு என்கிட்ட பேசின ? நீயும் என்னுடைய வேலையும் இரு கண்கள் மாதிரி என்னால் ஒரு கண்ணுக்காக இன்னொரு கண்ணை தூக்கி எறிய முடியாதுனு. அன்னைக்கு நீ அப்படி பேசியது எல்லாம் வெறும் கதை வசனமாக இருந்ததோ? உன்னுடைய வேலை நீ எவ்வளவு முக்கியம்னு என்கிட்ட சொன்னியோ அப்பவே உன்னை ரொம்ப பிடிக்க ஆரம்பித்து விட்டது தெரியுமா? “நான் யாரோட பொண்டாட்டி தெரியுமா? ஒரு வீரனோட பொண்டாட்டினு எனக்கு நானே பெருமையா பேசிக் கொள்வேன்”. ஆனால் நீ இப்ப திரும்பி வந்து விட வானு கேட்கும் போது எனக்கு உன்மேல் செம கோவம் வருது டா மாமா.

          சின்ன பெண் என்று நினைத்தவள் இன்று குருவாக நமக்கு ஆறுதல் அளிக்கிறாளே என்று நினைக்கும் போதே அவனுக்கு தன் மனையாளை நினைத்து பெருமையாக இருந்தது. 

“ஐ லவ் யு டி பொண்டாட்டி ” யுவர் மை பெஸ்ட் பிரண்ட் டி. என்னுடைய மன குழப்பத்தை நீ ஒரே வார்த்தையில் சரி பண்ணிவிட்டாய் டி.ஆமாம் நான் ஒரு வீரன் தான். நீ இப்ப என்னுடைய அருகில் இல்லாமல் போய் விட்டாய் . என்னுடைய அருகில் இருந்து இருந்தாள் அப்படியே உன்னை தூக்கி சுற்றி இந்த உலகத்திற்கே கேட்கும் படி சத்தமா சொல்லி இருப்பேன் ” இவ தான் என்னுடைய வாழ்க்கையை வசந்தமாக்க வந்த தேவதை என்று “. உன்னை பொண்டாட்டியாக பெற நான் என்ன புண்ணியம் செய்தனோ தெரியவில்லை டி.

         எனக்கு என்னவோ நான் பாவம் செய்துவிட்டது மாதிரி தோன்றுகிறது.

       ஏன்டி அப்படி சொல்ற?

       நுவலி, நீ என்னை அப்படி நினைத்து இருந்தால் எனக்கு விவாகரத்து பத்திரத்தை கொடுத்து இருந்து இருப்பீயா? அந்த விவாகரத்து பத்திரத்தை என்கிட்ட கொடுக்க கூட நேரம் இல்லை சாருக்கு அப்படியே டேபிள் மீது வைத்துவிட்டு போய்விட்டீங்க தானே! அவள் சற்று கோவமாக பேசிக் கொண்டே போக,

           நாம எப்ப இவளுக்கு விவாகரத்து பத்திரத்தை கொடுத்தோம் என்று யோசித்தவனுக்கு அப்பொழுது தான் ஞாபகம் வந்தது. மை டியர் பொண்டாட்டி உங்களை விவாகரத்து செய்துவிட்டு நான் என்ன பண்ண போறேன் ? அந்த பேப்பர்ல என்ன இருந்து என்றாவது படித்தாயா? படித்து இருந்து இருந்தால் என்கிட்ட இப்ப சின்ன பிள்ளை கணக்கா சண்டை போட மாட்ட . அந்த பேப்பர்ல என்ன இருந்தது என்றால் “உன்னை நினைத்து நான் சில கவிதைகள் எழுதி இருந்தேன் . அந்த பேப்பர் எல்லாம் என்னுடைய வீட்டில் இருந்தது உனக்கு ஒரு சர்ப்ரைஸ் ஆக இருக்கட்டும் என்று நினைத்து அந்த பேப்பரை என்னுடைய நண்பனை கொண்டு வர சொன்னேன் அவன் கொண்டு வராம யார்கிட்டையோ கொடுத்து அனுப்பி விட்டான். அவன் கிட்ட இருந்த கவரை எடுத்து போட்டு கொண்டு வந்து இருக்கான் . அது என்ன கவர் என்று கூட நான் பார்க்கவில்லை டி அன்னைக்கு நடந்த கலவரத்தில் நானும் அப்படியே மறந்து போய்விட்டேன் “. மேடம் கவரை மட்டும் பார்த்துவிட்டு என்னைய திட்டி தீர்த்து இருப்பீங்க போல?

           சாரிடா மாமா. கொஞ்சம் ஓவரா திட்டிவிட்டேன் . உன்னுடைய அந்த பிரண்ட் யாரு அவரு கொண்டு வந்து கொடுத்து இருந்தால் இந்த பிரச்சினை வந்து இருக்காது தானே?

          அவன் தான் உன்ற அண்ணன் ராம். சரிடா நீ இப்ப போய் தூங்கு மாமா உனக்கு காலையில் போன் பண்றேன் . இப்பவே மணி பதினொன்று தாண்டிவிட்டது. 

         சரி மாமா ,லவ் யு .

           லவ் யு டூ டி.

    போனை கட் செய்து விட்டு அவனின் சட்டையை எடுத்து அணைத்துக்கொண்டு உறங்கி போனாள் நுவலி.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
4
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்