Loading

புன்னகை ஒன்றை பூவிதழ் மூலம் பரிமாறி விட்டு செல்லும் தன் கணவனை கண்டு புன்னகை செய்துக்கொண்டு இருந்தாள் நுவலி. வேக வேகமாக காலை கடன்களை முடித்துவிட்டு அப்படியே காக்கா குளியல் ஒன்றை குளித்து விட்டு 

பாத்ரூம் விட்டு வெளியே வந்தான் உதிரன். 

       நுவலி, உதட்டில் ஒரு சிறு புன்னகையுடன் அவனையே பார்த்துக் கொண்டு இருக்க .

          அவளின் அருகில் வந்தவன் அவளின் நெற்றியில் தன்னுடைய நெற்றியை முட்டி விட்டு ” சீக்கிரம் போய் குளித்து ரெடியாகி வாடா! ” நான் இப்ப வெளியே போறேன் என்றவன் வேகமாக துணி உடுத்திக் கொண்டு தலையை துவட்டி விட்டு வெளியே சென்றான்.

           எங்க தான் மா போனான் என் பேராண்டி?. இன்னும் அவனை காணவில்லை? எங்க எல்லோரையும் வரச்சொல்லி விட்டு அவன் எங்க போனான் ? .

        வசுமதி, நீங்க சாப்பிடுங்க பாட்டி. வயசான காலத்தில் ஏன் சத்தமாக பேசுறீங்க ? இப்படி வந்து நாற்காலியில் உட்கார்ந்து பேசுங்க .

          யாரை பார்த்து டி எம்மா? வயசு ஆச்சுனு சொன்ன? உன்னால என் கூட வேலையை போட்டிபோட்டு செய்ய முடியுமா?

           உதி, போட்டி போடுவது எல்லாம் இருக்கட்டும் எதுக்கு இவ்வளவு சத்தமா பேசிக்கொண்டு இருக்கிற பாட்டி? . வந்ததும் அத்தை கிட்ட வாயாட ஆரம்பித்து விட்டாயா? உன்கிட்ட எத்தனை முறை சொல்றது “வயசான காலத்தில் அமைதியா இருனு ” எதையும் கேட்பது இல்லை. இப்படியே நீ யார் பேச்சியும் கேட்காமல் இரு உன்னை என் கூடவே பார்டருக்கு கூட்டி போய் விடுவேன் .

            நீ என்னைய வே மிரட்டுற டா. நான் பார்த்து பிறந்தவன் இப்ப என்னையே சத்தமா பேசாதேனு சொல்றான். வாழ்க்கை எப்படி எல்லாம் போகுது , இந்த காலத்து பசங்களே வேற மாதிரி இருக்காங்க .

          “அச்சச்சோ பாட்டியம்மா ” அவரின் கழுத்தை கட்டிக்கொண்டு “நீ எதுக்கு பாட்டி இப்படி பேசுறீங்க ?” நான் போய் உங்களை மரியாதை இல்லாமல் பேசுவேனா? நீங்க எப்படி என்னை இப்படி நினைக்கலாம்? தன்னுடைய பேச்சு திறமையால் தன்னுடைய பாட்டியிடம் பேசிக்கொண்டு இருந்தான். 

             போதும் டா எப்பா’ உன்னுடைய வாய் ஜாலத்தை என்கிட்ட காட்டாதே! போய் உன் பொண்டாட்டியை கூட்டி வாடா. எம்புட்டு நேரம் உங்க அத்தை மூஞ்சிய பார்த்துக்கொண்டு இருப்பது போய் உன் பொண்டாட்டியை கூட்டி வாடா அவகிட்ட கொஞ்ச நேரம் பேசுறேன்.

            உதி, என்ற பொண்டாட்டிகிட்ட நீங்க என்ன பேசபோறீங்க ? இன்னைக்கு முழுவதும் நான் மட்டும்தான் என்னுடைய பொண்டாட்டிகிட்ட பேசுவேன். நான்தான் சாயந்திரம் வேலைக்கு கிளம்ப போறேனே அதுக்கு அப்பறமா உங்க கூட தானே இருக்கப் போறா அப்ப அவ கிட்ட பேசுங்க எவ்வளவு நேரம் வேண்டுமோ அவ்வளவு நேரம்.

            எப்பா யாருக்கு டா வேண்டும் உன்ற அனுமதி . எனக்கு எப்ப அவகிட்ட பேசணும்னு தோணுதோ அப்ப அவகிட்ட பேசுவேன் . அவ எனக்கு பேத்தி டா அப்பறம் தான் உனக்கு பொண்டாட்டி புரிஞ்சுதா டா? . வசுமதியோ வேடிக்கை பார்க்கும் ஒரு பார்வையாளராய் மட்டுமே இருந்தார். உதிரனின் அம்மாவும் அப்பாவும் சிரித்துக்கொண்டே இருந்தனர்.

         வனஜா, என்னங்க சம்மந்தி பாட்டியும் பேரனும் பேசுவதை பார்த்து அதிர்ச்சியாகி நிக்கிறீங்களா? அவங்க எப்பவுமே அப்படிதான் .இருவருமே சின்னக் குழந்தை மாதிரி மாறி மாறி கலாய்த்து கொள்ளுவாங்க நீங்க எதுவும் நினைத்துக் கொள்ளாதீங்க. என்ற புருசனை பாருங்க எப்படி வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருக்காரு .நீங்க போய் என்ற மருமகளை அழைத்து வாங்க.

      வசுமதி , சரி என்று தலையாட்டிவிட்டு நுவலியை அழைக்க செல்ல,

         உதி, “அத்தை” நீங்க இருங்க , நான் போய் நுவலியை அழைத்து வருகின்றேன் நீங்க பாட்டி கூட பேசிக்கொண்டு இருங்க. வேகமாக தன்னுடைய அறைக்கு செல்ல “அப்பொழுது தான் குளித்து முடித்துவிட்டு புத்தம் புது ரோஜா மலரை போல கண்ணாடி முன்பு வந்து நின்றாள் . அவளின் ஈர கூந்தலில் இருந்து தண்ணீர் துளி துளியாய் கீழே விழுந்து தரையை நனைத்து கொண்டு இருந்தது. அறையின் கதவை சத்தம் வராமல் மெதுவாக சாத்திவிட்டு தன்னவளின் பின்னால் பூனை நடைப் போட்டு அவளின் அருகில் வந்தவன் அவளை பின் இருந்து அணைத்துக்கொண்டு அவளின் கழுத்து வளைவில் தன்னுடைய முகத்தை வைத்து அவளின் வாசத்தை தன்னுள் சுவாசித்துக் கொண்டு இருந்தான்.

              அவனின் தீடீர் அணைப்பில் சற்று மிரண்டவள் பிறகு கண்ணாடி வழியே தன்னவனை கண்டு அழகாக ஒரு புன்னகை செய்தாள். ஆயிரம் உறவுகள் நம்மை சுற்றி இருந்தாலும் நம்மை எந்நேரமும் ஆபத்தில் இருந்து பாதுகாக்க நினைக்கும் தாய்க்கு அடுத்த படியாக நம்மை பாதுகாத்து நம்முடன் வாழும் ஓர் உறவு மனைவி ஆயிற்றே! என்ன தான் அவள் வேற்று வீட்டு பெண் ஆயினும் நம் உறவில் இணைந்து நம் உயிரில் கலந்து நம்மை அன்பால் ஆச்சி செய்கின்றாள் .

சொல்ல முடியாத உணர்வுகளையும் கண் அசைவில் கண்டு பிடித்து நம் உணர்வுகளுக்கு மதிப்பு அளித்து நம்மை உணர்வுபூர்வமான மனிதராக மாற்றும் அளப்பரிய சக்தி பெண்ணிடமே உண்டு. 

ஆயிரம் …. ஆயிரம் ஆண்டுகள் கடந்தாலும் அசைக்க முடியாதது பெண்மையின் சக்தி .பெண்மையை புரிந்தவன் பெண்மையை போற்றி வைரமாக உலகத்திற்கு ஒளி தருகின்றான். 

                என்ன சாருக்கு காலையிலே அன்பு மழை மனசுக்குள்ள பொழிகின்றதா? முகத்தில் ஒரே புன்னகை மயமா இருக்கீங்க ? 

         நான் என்னடி பருவநிலை மாற்றமா? பருவநிலைக்கு ஏற்றார் போல மனசு மாற. நான் உன்னுடைய கணவன் டி எனக்கு எப்பொழுதும் மனசுக்குள்ள காதல் மழை பொழிந்து கொண்டேதான் டி இருக்கும். அது என்ன மாயமோ மந்திரமோ தெரியவில்லை உன்னுடைய முகத்தைப் பார்த்தாலே என்னுடைய இதயத்தில் அப்படி ஒரு சந்தோசம் ஏற்பட்டு என் முகத்தையே அழகா காட்டுகிறது. 

           பாருடா! சார் காலையிலே காதல் வசனம் மாதிரி பேசிக்கொண்டே இருக்கீங்க ? என்ன இன்னைக்கு சாயந்திரம் என்னை விட்டு போக போறீங்க தானே! அந்த சந்தோசத்தில் இருக்கீங்களா? அந்த சந்தோசம் தான் முகத்தில் ஒளி வட்டமாக தெரிகின்றதா? 

   அவனின் முகம் இவளின் கடைசி வார்த்தைகளில் ஒளி இழந்த விளக்கை போல மாறிவிட , அவனின் முகவாட்டத்தை கண்டவள் அவனின் புறம் திரும்பி “சாரி டா புருஷா ” சும்மா உன்னை கலாய்த்து பார்த்தேன் டா. இதுக்கு போய் இப்படி மூஞ்சியை தொங்க போட்டுக் கொண்டு இருக்க?.

         அவளை தன்னுடன் அணைத்துக்கொண்டு, அவளின் தலையை தன் நெஞ்சில் சாய்த்தவன் ” என்கிட்ட பேசாத டி ‘ எப்ப பாரு என்னுடைய மனதை நீ நோகடிக்கும் வேலையை மட்டும் சரியா செய்கிறாய் “.

நான் உன்கிட்ட ரொம்ப கோவமா இருக்கேன் போடி என்கிட்ட பேசாதே!

                “ஓ” சரி விடு டா நான் போறேன். பாட்டி மா எனக்காக என்கிட்ட பேச வெளியே காத்திருக்காங்க எனக்கும் அவங்ககிட்ட பேசவேண்டும்னு தோணுது. என்னைப் பார்க்க ஊரில் இருந்து வந்து இருக்காங்க “நான் போறேன் நீ தான் என் மேல ரொம்ப கோவமா வேற இருக்க “.

                சரி போடி. 

           போ னு வாய் மட்டும் தான் சொல்லுது ஆனா கை மட்டும் அப்படி நடந்துக் கொள்ள மாட்டேன் என்கிறதா? உனக்கு. என்னை ஏன்டா? இப்படி இருக்கமாக அணைத்து இருக்க? இன்னும் கொஞ்ச நேரம் விட்டால் கூட என்னுடைய முதுகு எலும்பு உடைந்து விடும் போல!

            உனக்கு என்கிட்ட பேசுறதை விட பாட்டிகிட்ட பேசுவதுதான் ரொம்ப பிடித்து இருக்கு தானே ! போ … போய் அவங்க கூடவே இரு. அவன் அவளை விட்டு விலகி நிற்க. 

             அவனை தன் புறமாக திருப்பி அவனின் கழுத்தில் மாலையாக தன்னுடைய கையை போட்டுக்கொண்டு ” நீ சரியான பொறாமை பிடித்தவன் டா ” நான் உன்னை விட்டு எங்கடா போக போறேன்? நீதானே என்னோட உலகம். எப்ப பாரு என்னை திட்டிக்கொண்டே இருக்க இதுக்கு எல்லாத்துக்கும் சேர்த்து உனக்கு தண்டனை இருக்கு ” தீவிரமாக யோசித்தவள் , “ஆங் ” உனக்கு என்ன தண்டனை குடுக்கலாம்னு கண்டுபிடித்து விட்டேன். எப்ப பாரு இந்த வாய் தானே என்னை திட்டிக்கொண்டே இருக்கிறது இதுக்கு தான் முதல் தண்டனை என கூறியவள் அவன் சுதாகரிக்கும் முன் அவனின் உதட்டை கடித்து வைத்தாள்.

          “ஆ” ஏன்டி ‘ இப்படி என்னுடைய உதட்டை கடித்து வைத்த? வலிக்கிறது பாரு டி தன்னுடைய உதட்டை தேய்த்துக்கொண்டே அவளிடம் புகார் அளித்தான். 

         இன்னொரு முறை என்னை போனு சொன்ன அவ்வளவுதான்.அச்சச்சோ என்னுடைய மாமாவுக்கு வலி அதிகமாக இருக்கா ? நீ இங்கேயே இரு நான் போய் ஐஸ்கட்டி கொண்டு வருகின்றேன் என கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பி இரண்டு அடிகள் எடுத்து வைத்து இருப்பாள் அவனின் முரட்டு கைகள் அவளை தடுத்து நிறுத்தியது. “என்ன ? என்பது போல அவனைப் பார்க்க”

      நீ ஐஸ்கட்டி எடுத்து வர போகவேண்டாம். என்னுடைய காயத்திற்கு மருந்து இந்த அறையிலே இருக்கிறது.

             எங்க இருக்கு மாமா ? சொல்லு நான் எடுத்து போட்டு விடுறேன்.

              நீ மருந்து போட்டு விட வேண்டாம் நானே போட்டுக் கொள்கின்றேன். 

             அவன் கோவத்தில் இருக்கான் போல என்று நினைத்தவள் அவனின் அருகில் வந்து “சாரி மாமா ” ரொம்ப வலிக்கிறதா? 

              அவளின் பின் கழுத்தை பிடித்து தனக்கு அருகில் இன்னும் நெருக்கமாக கொண்டு வந்தவன் அவள் சுதாரிக்கும் முன் அவளின் இதழை தன் இதழ் காயத்திற்கு மருந்து ஆக்கிக் கொண்டான். வெளியே இருந்து ” அட பேராண்டி நான் வீட்டிக்கு போறேன் டா நீ வெளியே வரவே வேண்டாம் ” என பாட்டி சத்தமாக கூற. வனஜாவும் வசுமதியும் பாட்டியை ஒருசேர பார்க்க. பாட்டியோ “என்ன நான் இப்ப தப்பா சொல்லிவிட்டேன் இவங்க ரெண்டு பேரும் நம்மை இப்படி பார்கிறாங்க என்ற ரீதியில் பார்த்துக்கொண்டு இருந்தார்”.

            நுவலி, அவனை வலுக்கட்டாயமாக தன்னிடம் இருந்து பிரித்து விட்டு ” அவனை பார்த்து முறைத்துக் கொண்டு இருந்தாள்”.

              என்னடி , இப்படி முறைக்கிற? 

          நுவலி, நான் தான் நீ என்ன சொல்றேன்னு யோசிக்காம நானும் இருந்துவிட்டேன். எனக்கு தெரியாம அறையில் ஏது மருந்துனு யோசித்துக்கொண்டு இருந்தேனே தவிற உன்னுடைய வார்த்தையின் அர்த்தத்தை கவனிக்காமல் விட்டுவிட்டேன். வீட்டுக்கு பாட்டி , அத்தை மாமா எல்லோரும் வந்து இருக்காங்க கொஞ்சமாவது உங்களுக்கு அறிவு இருக்கா இப்படியா பண்ணுவீங்க? இப்ப நான் எப்படி வெளியே போவேன். பாட்டி வேற கண்டுபிடித்து விட்டாங்க போல ? உங்களை எல்லாம் வைத்துக்கொண்டு நான் என்னப் பண்ண போறேனோ? அவளின் முகம் சிவந்து போனது அவனின் தீடீர் செய்கையினால்.

            உதி, நீ என்னுடைய பொண்டாட்டி டி அது எல்லோருக்கும் தெரியும் . மற்றவர்கள் தம்மை பற்றி என்ன நினைப்பார்கள் என்று நினைத்து வாழாதே புரியுதா? அவளின் ஈரத்தலையை துணியால் துவட்டி விட்டுக்கொண்டு ” நான் இல்லாம நீ சாப்பிடாம இருக்க கூடாது .நான் மறுபடியும் வரும் போது கொஞ்சமாவது எடை கூடி இருக்க வேண்டும் .எப்பவும் என்னையே நினைத்து பீல் பண்ணக்கூடாது . உனக்கு பொழுது போக தான் பாட்டியை உன் கூட விட்டு போறேன் ” .

             “ஆமா” நீ இருந்தா தான் நான் சாப்பிடுவேன் இல்லனா பட்டினியாக தான் கிடப்பேனா? உனக்கு ஆசை தான் மாமா. உன்னை நினைத்துக் கொண்டு இருப்பதுதான் எனக்கு வேலையா? வேற வேலை எனக்கு எதுவும் இல்லையா? அவள் அவனை வம்பிழுக்கவே கூற,

இப்பொழுது அவளுக்கு தண்டனை தருவது அவனின் முறையானது. 

வெளியே பாட்டி வனஜா கண்ணன் மூவரும் சாப்பிட்டே முடித்து இருந்தனர்.

 வசுமதி இவர்கள் இருவருக்கும் உணவை தட்டில் போட்டுக்கொண்டு வந்து அறையிலே கொடுக்க ,

       உதி, நாங்களே வெளியே வந்து எல்லோர் கூடவும் சாப்பிட்டு இருப்போமே அத்தை, நீங்க ஏன் இவ்வளவு கஷ்டப்படுறீங்க ?

       வசு, மாப்பிள்ளை இதுல எனக்கு எந்த சிரமும் இல்லை. வெளியே எல்லோரும் சாப்பிட்டு உறங்கிக் கொண்டு இருக்காங்க. உங்க மாமா மதியம் சமைக்க கறி வாங்க கடைக்கு போய் இருக்காரு ,நீங்க இருவரும் சேர்ந்து இங்கேயே சாப்பிட்டு ஓய்வு எடுங்க என்று கூறிவிட்டு அவர் சென்றுவிட்டார்.

          நேரம் ஆக… ஆக இருவரின் மனதிலும் பிரிவின் வலி நுழைந்து கொள்ள ஒருவருக்கு தெரியாமல் ஒருவர் மறைத்துக்கொண்டு இருவரும் வெளியே புன்னகை செய்தபடி மாறி… மாறி உணவை பரிமாறிக் கொண்டனர். 

 அறையிலே இருந்து தங்களின் இந்த கொஞ்ச நேரத்தை தங்களுக்காக இருவரும் செலவிட்டு கொண்டு காதல் மொழியில் தங்கள் உலகத்தில் பேசிக்கொண்டு இருந்தனர். அவர்களுக்காக நேரம் என்ன காத்துக்கொண்டா கிடக்கும் அது அதனுடைய வேலையை சரியாக செய்துக் கொண்டு இருந்தது. மதிய நேரமும் வந்து விட்டது . வசுமதியும் ரத்னமும் அனைவரையும் எழுப்பி மதிய உணவை சாப்பிட வைத்தனர். உதிரனுக்கும் நுவலிக்கும் அறைக்கே உணவை எடுத்துக்கொண்டு வந்து கொடுத்தார் வசு. இன்றைய பகல் நேரத்தை தங்களின் இதயத்தில் இருவரும் ஒரு நொடி விடாது சேகரித்து வைத்துக் கொண்டனர்.மதிய உணவையும் இருவரும் மாறி… மாறி ஊட்டிக் கொண்டு தங்களின் மனதில் பொக்கிச நினைவாக சேகரித்து கொண்டனர். 

               வெளியே அனைவரும் சேர்ந்து பேசிக்கொண்டு இருக்க ராமுவும் சுமதியும் வந்தனர். ராமுவை பார்த்ததும் பாட்டி சிரிக்க. ராமுவோ பாட்டியைப் பார்த்துவிட்டு’ பாட்டியோட சிரிப்பு சரியில்லையே ? நமக்கு எதுக்கு டா வம்பு நாம வந்த வேலையைப் பார்ப்போம் என நினைத்தவன் ‘ உதிரா…. டேய் உதி என அழைக்க…

     வசு, இப்படி உட்காருங்க தம்பி நான் போய் மாப்பிள்ளையை கூட்டி வரேன் என்று கூறிவிட்டு , உதிரனை சென்று அழைக்க.

        உதி, என்னடா மச்சா சீக்கிரமா வந்துவிட்ட? 

      ராமு, என்னடா நீ நேரத்தை பார்க்கவில்லையா? இன்னும் கொஞ்ச நேரத்தில் கிளம்பினால் தான் ரயிலை பிடிக்க முடியும் . 

         சரிடா எனக்கு தெரியும். நான் ரெடியா தான் கிளம்பி இருக்கேன் நீ இங்கேயே இரு நான் பையைக் கொண்டு வரேன் என்றவன் அறையின் உள்ளே செல்ல , அங்கே கட்டிலின் ஓரத்தில் உட்கார்ந்துக் கொண்டு கண்களில் இருந்து கண்ணீர் துளிகளை சிந்த விட்டு கொண்டு இருந்தாள் நுவலி. அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டவன் அவளின் முகம் முழுவதும் முத்தம் வைத்தான் . இங்க பாருமா நீ இப்படி உடைந்து போய்விட்டால் நான் எப்படி நிம்மதியா என்னுடைய வேலையில் கவனத்தை செலுத்துவேன் சொல்லு? 

           நான் அழவில்லை மாமா. நான் தைரியமா உனக்காக காத்து இருப்பேன் டா மாமா அவளும் அவனின் முகம் முழுவதும் முத்தம் வைத்தாள் கடைசியாக அவர்களின் இதழ் முத்தம் எவ்வளவு நேரம் நீண்டது என்று அவர்களுக்கே தெரியாது ? ராமு அழைக்கவும் தன்னிலைக்கு வந்தவர்கள் ஒருவருக்கு ஒருவர் ஆறுதல் கூறிக்கொண்டு வெளியே வந்தனர். பூஜையறையில் அனைவரும் சேர்ந்து கடவுளை வணங்கினார்கள். பெரியவர்கள் அனைவரும் உதிரனுக்கு ஆசிர்வாதம் செய்து வழி அனுப்பி வைத்தார்கள். ராமு காரை ஓட்ட காரின் பின் இருக்கையில் உதிரன் உட்கார்ந்துக் கொண்டு அனைவரிடமும் விடைபெற்று பெற்று கொண்டு சென்றனர். தன் கண்களில் இருந்து மறையும் வரை இரு காதல் இதயங்களும் பார்த்துக்கொண்டே இருந்தனர்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
2
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்