Loading

இதயத்தில் புதைந்து இருந்த காதல் சொல்லாமலே வெளிவந்து விடுகின்றன நமக்கே தெரியாமல் … இருவரும் தங்களின் முத்தத்தின் மூலம் காதலை பகிர்ந்துக்கொள்ள , இவர்களை நினைவு உலகத்திற்கு கொண்டு வர சுமதியின் வயிறு சத்தம் போட்டது…. “அந்த சத்தத்தில் சற்று கடுப்பு ஆனாலும் வெளியே காட்டாமல் , அவளைப் பார்த்து ‘நீ போய் சாப்பிடு ” நான் வீட்டுக்கு போறேன் …. 

          அவளோ அமைதியாக அவனையே பார்த்துக்கொண்டு இருக்க…. 

       அவளைப் பார்த்து சிரித்தவன் …. நீ என்ன நினைக்கிறாய் என்று எனக்கு தெரியும் டி கேடி… நான் இப்ப போறேன் நீ போய் சாப்பிடு, நான் இன்னும் கொஞ்ச நேரம் இங்க இருந்தால் அத்தை கிட்ட மாட்டிக் கொள்வேன்….. அத்தைக்கு ஆல்ரெடி என் மேல நம்பிக்கையே இல்லை. இப்ப உன் கூட சேர்த்து வைச்சு பார்த்தது அவ்வளவுதான் நான்… இப்ப நான் போறேன் டி ‘அவளின் நெற்றியில் அழுத்தமாக ஒரு முத்தம் வைத்துவிட்டு அங்கிருந்து சென்றான்’.

       இரு இதயங்கள் சொல்லாமல் சொல்லிக்கொண்டன தங்களின் காதலை , அவர்களின் அக்கறை மூலம்…. 

     முதலில் கண்விழித்த உதிரனுக்கு அடிப்பட்ட இடத்தில் சிறிது வலிக்க , அவனுடைய தூக்கம் பறிபோனது….. மெதுவாக கண் விழித்தவன் தன்னுடைய அருகில் குழந்தை போல உறங்கும் அவளையே பார்த்துக் கொண்டே இருந்தான்….. சரியான ராட்சசி டி நீ …! என்னுடைய மனதிற்குள் எப்படி வந்தாய் என்றே எனக்கு தெரியவில்லை….? பாலை வனமாய் இருந்த என்னுடைய இதயத்தில் நீ புகுந்து ,”பூந்தோட்டம் ஒன்றை வளர்த்து விட்டாய் பெண்ணே…!”

நேற்று இரவு என்னால தான் உன்னுடைய தூக்கம் இல்லாமல் போனது. இப்பவாவது கொஞ்ச நேரம் உறங்கட்டும் என்று கூறிக்கொண்டே அவளின் தலையில் ஒரு முத்தம் வைக்க…

           ஏன்டா , தூங்கட்டும் னு சொல்லிவிட்டு இப்படி பக்கத்துல உட்கார்ந்து பேசிக்கொண்டே இருந்தா , எப்படி டா தூக்கம் வரும்…?….. உன்னை கல்யாணம் பண்ணியதற்கு என்னை தூங்கவிடாமல் பண்ற….? இந்த உலகத்திலே மனைவியை தூங்கவிடாமல் கொடுமை பண்ணும் ஒரே கணவன் நீதான் டா….. 

          அவளின் கண்ணத்தை பிடித்து கிள்ளியவன் , இந்த வாய் இருக்கே இதை என்னப் பண்ணலாம் … யோசிப்பது போன்று செய்துவிட்டு ….., குனிந்து அவளின் உதட்டினை தன் வசப்படுத்திக் கொண்டான்…. சிறிது நேரம் கழித்து அவளை விட்டு பிரிந்தான்.அவளைப் பார்த்து ” புருசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தால், மனைவி அழுவாங்கனு கேள்விபட்டு இருக்கேன் “.. அதுவும் இல்லை என்றாலும் கணவனுக்கு ஆறுதல் சொல்லி ஆறுதலாக இருப்பாங்கனு பார்த்து இருக்கேன். ஆனால் நீ என்னடான்னா…? வந்ததும் வராததுமா என்கிட்ட வந்து சண்டை போடுற…. உன்னை ஏமாற்றிவிட்டு இன்னொரு பெண்ணை திருமணம் செய்துக் கொள்வேன் என்று நீ எப்படி நினைக்கலாம்…? … உன்னை என்ன பண்ணலாம்…?…. எனக்கு உடம்பு சரி ஆகட்டும் , அப்ப இருக்கு உனக்கு மிகப்பெரிய தண்டனை…..

        இப்படி நல்லா உனக்கு பேசத் தெரியுது தானே…! அப்பறம் ஏன் வீட்டில் இருந்து கிளம்பும் போது என்கிட்ட ஒரு வார்த்தைகூட சொல்லாமல் போன…? என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிவிட்டு போகனும் என்ற நினைப்பே வரவில்லை உனக்கு..எப்படி வரும் உனக்கு கல்யாணம் ஆன இரவே என்னை தூங்கவிடாமல் கொடுமை பண்ணவன் தானே நீ…. நீ ஒழுங்கா என்கிட்ட சொல்லிவிட்டு போயிருந்தா , நான் ஏன் தப்பு ….தப்பாக யோசிக்க போறேன்… இது எல்லாத்துக்கும் நீ தான்டா காரணம்….. எப்படி உன் மேல தப்பை வச்சிக்கிட்டு என்னை குற்றம் சொல்ற…. 

உன்கிட்ட வந்து கேட்டதற்கு பதிலா நான்கு அடி குடுத்து இருக்க வேண்டும்…

     சரி டி ,சாரி…. வா வீட்டுக்கு போகலாம்…. 

இருவரும் எழுந்து சென்று , மருத்துவர் குடுத்த மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொண்டு வெளியே வந்தனர்…. 

வெளியே ஆட்டோ எதாவது வருகின்றதா என நுவலி சாலையே பார்த்துக்கொண்டு இருக்க , அப்பொழுது ஒரு ஆட்டோ வந்தது. அந்த ஆட்டோவை நிறுத்தி அதில் இருவரும் உட்கார்ந்துக் கொள்ள ஆட்டோ கிளம்பியது….. ஆட்டோ சிறிது தூரம் சென்று இருக்கும்…,

     நுவலி, நம்ம மருத்துவமனை பில் கட்டவில்லையே ….?

     உதிரன் , ஆமாம்….ஆமாம் நாம பில் கட்டவில்லை…. இப்ப என்ன பண்றது….? ஒருவேளை நாம பில் கட்டாததற்கு வீட்டிற்கு காவல்துறையை அனுப்பி விட்டால் என்ன பண்ணுவது ….? அவன் யோசித்துக்கொண்டே கூற…. 

       நுவலி, “அச்சச்சோ ” என பதறியபடி வாங்க நாம மறுபடியும் மருத்துவமனை சென்று பில் கட்டி விட்டு வரலாம்… நமக்கு எந்த பிரச்சனையும் வேண்டாம் …. ஆட்டோகார அண்ணா வண்டியை நீங்க மருத்துவமனைக்கு திருப்புங்கள்….   

     உதிரன் , சிரித்துக்கொண்டே ……! அண்ணா நீங்க வீட்டிற்கு போற வழியில் போங்க.. வண்டியை எல்லாம் திருப்ப வேண்டாம்….

            எதுக்கு வண்டியை திருப்ப வேண்டாம் என சொல்ற….? வேற எதாவது பெரிய பிரச்சனை ஆக போகிறது …

         அவளின் காதருகில் சென்றவன், அடியேய் …..’ என்னுடைய பொண்டாட்டி அவர்களே ……! எந்த தனியார் மருத்துவமனையிலும் பில் கட்டாமல் வெளியே அனுப்ப மாட்டாங்க புரியுதா..? என்னை அட்மிட் பண்ணும் போதே ராம் பில் கட்டிவிட்டான்…. 

           எருமை .. எருமை இதை முதல்லயே சொல்லி இருக்கலாமே….? என்னை பதட்டபட வெச்சி பார்க்கும் போது அம்புட்டு சந்தோசமா இருக்கா உனக்கு. வீட்டுக்கு வாடி உன்னை என்னப் பண்றேன் பாரு….. அவள் வில்லத்தனமாக பேசிக்கொண்டு இருக்க…  

          அவனுக்கு சிரிப்பு மட்டுமே வந்தது… நான் காத்துக் கொண்டு இருக்கேன் என்னுடைய பொண்டாட்டி அவர்களே…..!

நீங்க என்ன பண்ண போறீங்க என்பதை பார்க்க நான் ஆவலாக உள்ளேன்…. 

      நுவலி ,பேச வாய்திறக்க போக, ஆட்டோ நின்றது ….

         அடியேய் …..! எதுவா இருந்தாலும் வீட்டுக்கு உள்ள போய் பேசலாம் வாடி…. ஆட்டோவிலே இன்னும் எவ்வளவு நேரம் தான் உட்கார்ந்துக் கொண்டு இருப்ப…?’ வீடு வந்தாச்சு , சீக்கிரம் இறங்கி வாடி…. 

ஆட்டோகாரருக்கு காசு குடுத்து விட்டு இருவரும் வீட்டுக்கு உள்ளே வர , வீட்டில் யாரும் இல்லை…. வீட்டில் யாரும் இல்லாததை நினைத்து நுவலிக்கு நிம்மதியாக இருந்தது…. தங்களின் அறைக்கு சென்றவர்கள் உடையை மாற்றிக்கொண்டு ,நுவலி சோர்வாக கட்டிலில் உட்கார்ந்து விட….

          முகத்தை கழுவிக்கொண்டு வெளியே வந்த உதிரன் அவளின் சோர்வைப் பார்த்துவிட்டு ,அவளுக்காக காதல் கொண்ட மனம் வருத்தப்பட்டாலும்

இன்னொரு மனமோ அவளை வம்பிழுத்து பார்க்க சொன்னது…   

என்னடி …! இப்படி ஜாலியா உட்கார்ந்துக் கொண்டு இருக்க…? கத்தி குத்து வாங்கிய நானே போய் முகம் கழுவிக்கொண்டு வந்து இருக்கேன் ஆனா உனக்கென்ன டி….? நீ நல்லாத்தானே இருக்க…போய் முகம் கழுவிக்கொண்டு வாடி… “இந்த கட்டிலை விட்டு முதல்ல எழுந்திரு”, எனக்கு சோர்வாக இருக்கு.நான் படுத்துக்கொள்ள போறேன்…. 

       அவனை முறைத்துக் கொண்டே கட்டிலில் அமைதியாக படுத்துக்கொண்டாள்…. 

        அவள் அமைதியாக படுத்துக் கொண்டதை பார்த்தவன் வேகமாக அவளிடம் வந்து , என்னாச்சு டா ….? உடம்புக்கு சரியில்லையா….? என்னனு சொல்லுடா …! சொன்னால்தான் தெரியும். என்கிட்ட சொல்ல பிடிக்கவில்லையா …? நான் போய் அத்தையை கூட்டிக்கொண்டு வரேன்… 

       யாரையும் கூப்பிட வேண்டாம்… எனக்கு ஒன்றும் இல்லை….

        அவன் எங்கே கேட்டான்…. தோட்டத்திற்கு சென்று “அத்தை ….அத்தை”….

         தோட்டத்தில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக்கொண்டு இருந்த வசுமதி , உதிரனின் குரல் கேட்டதும் தான் செய்துக்கொண்டு இருந்த வேலையை அப்படியே விட்டுட்டு அவனிடம் வந்து “எப்ப வந்தீங்க மாப்பிள்ளை?”…. நுவலி உங்களைப் பார்க்க வந்தாலே நீங்க பார்த்தீங்களா…? இப்ப அவ எங்க இருக்கா…?

       அத்தை …. அத்தை …. பொறுமை.. அவ வீட்டில் தான் இருக்கா. நாங்க ரெண்டு பேரும் ஒன்னா தான் வீட்டுக்கு வந்தோம்…. அவளுக்கு உடம்புக்கு முடிவில்லைனு நினைக்கிறேன்…. என்கிட்ட எதுவும் சொல்ல மாட்றா , சோர்வா கட்டிலில் படுத்துக்கொண்டு இருக்கா நீங்க வந்து என்னனு பார்க்கிறீங்களா….?

             சரிங்க மாப்பிள்ளை , நான் போய் என்னனு பார்க்கிறேன் , நீங்க கவலைப்படாதீங்க …. நுவலியின் அறைக்கு வந்தவர் , அவளின் நெற்றியில் கைவைத்து பார்க்க உடம்பு சுடவும் இல்லை… ஏதோ நினைத்தவர் ஒருவேளை இப்படி சோர்வாக இருக்க காரணம் திருஷ்டியாக கூட இருக்கலாம் …நான் இப்ப வந்து விடுகின்றேன் என்றவர் வெளியே செல்ல…. உதிரன் அமைதியாக அவளையே பார்த்துக்கொண்டு இருக்க…. 

          வசுமதி மீண்டும் அறைக்குள் வந்தார்…. தன்னுடைய கையில் எதையோ மறைத்து வைத்துக்கொண்டு இருக்க …. அது என்னவென்று அவனும் கேட்கவில்லை .அமைதியாக பார்த்துக்கொண்டு இருந்தான்… வசுமதியோ தான் கையில் வைத்திருந்த பொருட்களை வைத்து திருஷ்டி கழித்துவிட்டு செல்ல, அப்பொழுதும் அவள் அமைதியாகவே படுத்துக்கொண்டு இருந்தாள்…. 

       உதிரன் ,கட்டிலில் உட்கார்ந்துக் கொண்டு நுவலியின் கையை எடுத்து தன்னுடைய கைக்குள் வைத்துக்கொண்டான்…. இப்படி இருவரும் எவ்வளவு நேரம் இருந்தார்கள் என்று தெரியவில்லை…? வசுமதி வந்து இரவு உணவை சாப்பிட அழைத்தபோது தான் நேரம் இரவு ஆகிவிட்டது என்று உணர்ந்தான் உதிரன்…. 

       இரவு உணவை அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட, ரத்னவேல் தனக்கு அசதியாக இருக்கு என்று கூறிவிட்டு உறங்க சென்றுவிட்டார்….

      வசுமதியும் சிறிது நேரத்தில் சென்றுவிட…. நுவலியும் , உதிரனும் மட்டுமே சாப்பிட்டுக்கொண்டு இருந்தனர்… பாதி சாப்பாட்டிலே அவள் எழ ,அவளின் கையை பிடித்து அமர வைத்தவன் “தன்னுடைய கையால் சாதத்தை எடுத்து அவளுக்கு ஊட்ட “…. அவனை வெறுமையாக பார்த்தவள் சில நொடிகளில் சாப்பிட ஆரம்பித்தாள்…. அவன் ஊட்டி முடித்ததும் , பாத்திரங்களை கொண்டுபோய் சமையல் கட்டில் வைத்துவிட்டு இருவரும் தங்களுடைய அறைக்கு வந்தனர்…. 

       நுவலி, கட்டிலில் அமைதியாக உட்கார்ந்துக் கொண்டு விட்டத்தை வெறித்துப் பார்த்தப் படி இருக்க….. அவளின் அமைதி அவனை ஏனோ கொன்றது.. இதுவரை பொறுமையாக இருந்தவன், இதற்கு மேலும் பொறுமை காக்க முடியாது என உணர்ந்தவன் அவளின் அருகில் கட்டிலில் சென்று உட்கார, அப்பொழுதும் அவள் அவனை திரும்பியும் பார்க்கவில்லை… அவளின் முகத்தை தன்னை நோக்கி பார்க்கும்படி திருப்பியவன் , அவளிடம் “என்னாச்சு மா…?” சொன்னால் தான் தெரியும்…. அவள் அமைதியாக அவனின் மடியில் தலைவைத்துப் படுத்துக்கொள்ள…. மெதுவாக அவளின் தலைமுடியை கோதி விட்டான்…. நேரம் செல்ல … செல்ல அவளின் கண்களில் இருந்து கண்ணீர் வெளியேறி கொண்டு இருந்தன…

           தீடீரென அவளின் முகத்தை குனிந்து பார்த்தவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது அவளின் கண்களில் இருந்து வழியும் கண்ணீர்….. 

         அவளை உட்கார வைத்தவன், “அவளின் கண்ணத்தில் வழியும் கண்ணீரை துடைத்து விட்டு விட்டு” அவளையே பார்க்க… அவளின் உதடுகள் இரண்டும் எதையோ கூற துடித்துக்கொண்டு இருந்தன….  

       நுவலி எதையும் கூறாமல் தன்னுடைய அழுகையை கட்டுப்படுத்திக்கொண்டு கட்டிலில் படுத்துக்கொண்டாள்…. அவளின் கால்களை நேராக கட்டிலில் இருக்கும் படி வைத்து விட்டு, ‘போர்வையை எடுத்து அவளுக்கு போர்த்தி விட்டு ‘ அவளை பார்த்து ஒரு பெரிய மூச்சு ஒன்றை வெளியே விட்டவன், அவளின் அருகிலேயே படுத்துக்கொண்டான்…. சில நொடிகள் அவளின் முகத்தையே பார்த்தவன் தன்னுடைய இமைகளை மூட….. 

          சிறிது நேரத்தில் நுவலி அவனின் அருகில் அவனை இறுக்கமாக அணைத்த படி படுத்துக்கொண்டாள்…. அவளின் முதுகை ஆதரவாக தட்டிக் கொடுத்தவன் . எதுவாக இருந்தாலும் காலையில் பேசிக் கொள்ளலாம் என்று நினைத்தான்…..

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
6
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments