காலை சூரியன் வந்துவிட்டேன் கடமையை செய்யாமல் இன்னும் என்ன தூக்கம் என்பது போல நிம்மதியாக உறங்கி கொண்டு இருக்கும் இவர்களைப் பார்த்து போலியாக முறைத்துக் கொண்டு இருந்தது. காலை பனியும் சூரியனின் வெப்பமும் போட்டிபோட்டு கொண்டு இருக்க , ” அவர்கள் இருவரும் தந்த கதகதப்பில் தன்னுடைய பெட்சீட்டை தன்மேல் இழுத்து போர்த்திக்கொண்டு இன்னும் கொஞ்ச நேரம் உறங்க ஆரம்பித்து இருந்தனர்.
சர்மா , நேரில் வந்து அனைவரையும் வழி அனுப்ப எண்ணி அவர்களின் அறைக்கு வந்து பார்க்க “அனைவரும் சுகமாக உறங்கி கொண்டு இருந்தனர்” . நல்ல வேளையாக உதிரனுக்கு போன் வர அவன் எழுந்து வெளியே போனை எடுத்துத் கொண்டு சென்று இருந்தான்.
சிங்கின் அருகில் வந்தவர் ” சிங் … மிஸ்டர் மன்வேந்திர சிங் “
“ஆ…. ஆங்… இ”
என்னடா! நீ ஆ… இ …உ என்று வார்த்தைகள் சொல்லிக்கொண்டு இருக்க?
நீ எதுக்கு தொலைவாக இருக்க சோனா ? என்னுடைய பக்கத்தில் வந்து சொல்லிக்கொடு நான் சீக்கிரமாகவே கற்றுக்கொள்கின்றேன். அவளின் கையை பிடித்து இழுக்க “அவளோ பேலன்ஸ் இல்லாமல் அவன் மீதே வந்து தொப்பென்று விழுந்தாள் ” அவளின் இடுப்பை சுற்றி வளைத்தவன் ” இப்ப நீ என்ன வேண்டும் என்றாலும் சொல்லிக்கொடு “அவள் அவனை விட்டு எழ முயல ” ஏன்டி என்னை விட்டு போற ? அப்படியே கட்டிலில் அவளை கீழே தள்ளி அவளின் மீது படர்ந்தவன் அவளின் உதட்டில் முத்தம் வைக்க போக ”
உதிரன் ஓடி வந்து அவனை தூக்கி நிறுத்தினான்.
சோனா…. சோனா இங்க பாரு டி என்று கூறிக்கொண்டே மறுபடியும் கட்டிலின் மீது படுக்க போக,
உதிரன், “நங்” என்று ஒரு கொட்டு வைத்தான் .
தன்னுடைய தலையை தேய்த்துக்கொண்டே மெதுவாக கண்களைத் திறந்து ” எதுக்கு டா என்னுடைய தலையில் கொட்டு வைத்த?”
எதுக்கு டா நானும் சோனாவும் தனியா இருக்கும் போது இப்படி வந்து தொந்தரவு பண்ற?
எங்கடா இருக்கா இங்க சோனா?
நண்பா கட்டிலில் படுத்துக்கொண்டு இருக்கா பாரு டா ” நீ நல்லா கட்டிலை பாரு டா ! அங்க யாரு இருக்கா என்று தெரியும் “. சிங் , தன்னுடைய கண்ணை நன்றாக துடைத்துக்கொண்டு கட்டிலை பார்த்து சோ…. சார் நீங்க எப்படி என்னுடைய பெட்டில் ?
உதிரன் , தன்னுடைய சிரிப்பை அடக்க முடியாமல் வெடித்து சிரிக்க , ” சர்மாவோ முறைத்து பார்த்துக்கொண்டு இருந்தார் சிங்கை.
சிங், சார் எதுக்கு என்னை இப்படி முறைத்து பார்த்துக்கொண்டு இருக்கீங்க?
சர்மா, உன்னை வெட்ட வா இல்ல குத்தவா என்ற ரீதியில் அவனைப் பார்த்துக்கொண்டு இருக்க.
சிங், எதுக்கு இங்க ஊமை படம் ஓட்டிக்கொண்டு இருக்கீங்க ரெண்டு பேரும்? என்னுடைய சோனா எங்க ? உங்களை பார்த்ததும் அவள் வெளியே போய் விட்டாளா?
சர்மா ,அவனை கூப்பிட்டு தன்னுடைய அருகில் பெட்டில் உட்கார வைத்துக்கொண்டு , அவனின் கையை பிடித்து ” என்னுடைய இத்தனை வருட குடும்ப வாழ்க்கையில் நான் ஒரு முறை கூட பெட் கிஸ் வாங்கினதும் இல்ல குடுத்ததும் இல்ல! ஏன்னா எனக்கு சுத்தம் இல்லாதது எதுவும் பிடிக்காது .
சரிங்க சார் ! அதை ஏன் என்கிட்ட சொல்றீங்க ?
உதிரன் சிரித்துக்கொண்டே “மச்சான் உன்னுடைய போனுக்கு ஒரு வீடியோ அனுப்பி இருக்கேன் பாருடா “. என்ன வீடியோ அனுப்பி இருக்கான் என்ற யோசனையுடன் வீடியோவை ஓபன் செய்து பார்க்க “அதிர்ச்சியில் அப்படியே மொபைலை கீழே விட்டுவிட்டு சர்மாவை பார்க்க “. அவரோ அவனின் முதுகில் நான்கு அடிகள் கொடுத்துவிட்டு “நான் பேய் பயிற்சி செய்யும் இடத்தில் இருக்கேன் நீங்க எல்லோரும் சீக்கிரமாக ரெடியாகி வாங்க என்பதை மட்டும் கூறிவிட்டு மறுபடியும் சிங்கின் தலையில் ஒரு கொட்டு வைத்துவிட்டு சென்றார்.
அவர் வெளியே சென்ற பிறகு மச்சான்’ அப்போ சோனா இங்க வரவில்லையா?
உதி, சிரித்துக்கொண்டே மச்சான் “நீ அவரோட கற்பு கூடவே விளையாட ஆரம்பித்து விட்டாய் டா ”
நா…. ன் … நான் என்று நினைத்து தான்டா இது எல்லாம் பண்ணேன்.
உதி, ஜஸ்ட் மிஸ் டா இல்லனா இதுவரைக்கும் இராணுவ வரலாற்றிலே நடக்காத ஓர் சம்பவம் இன்று நடந்து இருக்கும். காலையிலே என்ன ஒரு கண் கொள்ளா காட்சி டா.
உன்னை யாரு டா இதை எல்லாம் வீடியோ எடுக்க சொன்னது ? என்னுடைய மானத்தை வாங்க வே இப்படி வீடியோ எடுத்து வச்சி இருக்க டா !
கொஞ்ச நேரத்தில் அவருடைய மானம் தான் போய் இருக்கும் டா. உதிரன் போன் பேசிவிட்டு மீண்டும் அறையின் உள்ளே வர “அங்கு நின்றுக்கொண்டு இருந்த சர்மாவை சோனா என்று நினைத்து அவரின் கையை பிடித்து இழுத்து தன் மீது போட்டவன் , அவருக்கு இதழ் முத்தமும் கொடுக்க போய்விட்டான்” .சர்மா எவ்வளவு போராடியும் அவனிடம் இருந்து விட முடியவில்லை. உதிதான் வேடிக்கை பார்த்தது போதும் உடனே சர்மா சாரை காப்பாற்ற வேண்டும் இல்லையேல் நிலைமை இன்னும் மோசமாக கூடும் என்று நினைத்து சிங்கிடம் இருந்து சர்மாவை காப்பாற்றி விட்டான்.
சிங், தன்னைத்தானே நொந்து கொண்டவன் வேகமாக ரெஸ்ட் ரூம் ஓடிவிட்டான். உதிரன் சிரித்துக்கொண்டே இருக்க , ஒரு மணி நேரத்தில் அனைவரும் ரெடியாகி மைதானத்தில் இருந்தனர்.
அனைவரையும் பார்த்து கம்பீரமாக தனது கம்பீரமான பார்வையில் ஒருமுறை பார்த்து விட்டு அவர்களிடம் ” நீங்க போகின்ற பாதை எப்பொழுதும் மலர் பாதையாக இருக்காத ஒன்று ” இந்த விசயம் உங்கள் அனைவருக்கும் தெரியும். நீங்கள் ஒவ்வொருவரும் இந்த திரு நாட்டிற்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்ட வீரர்கள் நீங்கள் . உங்களை நினைத்து எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது . நாட்டில் இருக்கும் கிருமிகளை எப்படி கிருமிநாசினி கொண்டு அழிக்கின்றோமோ அதே போல நாட்டில் இருக்கும் விஷ செடிகளை உங்கள் கையில் இருக்கும் கோடாரி என்னும் இராணுவத்தை ஆயுதமாக கொண்டு அழித்து நாட்டை சுத்தமாக்கும் பணியை அரசு உங்களுக்கு அளித்து உள்ளது. இங்கு இருக்கும் விஷ செடிகள் நாம் நினைப்பதை விட பயங்கர தன்மை கொண்ட விஷத்தை வைத்து இருக்கும். நீங்கள் எப்பொழுதும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் . நீங்கள் யாருக்காக பாதுகாப்பை தர போகின்றீர்களோ அவர்களே தங்களின் பதவியை தக்க வைத்துக் கொள்ள உங்களை பலி கொடுக்கலாம்! அந்த மாதிரி விஷ செடிகளை சரியாக கண்டறிந்து நாட்டில் இருந்து களை எடுக்க வேண்டும். நீங்க எப்போதும் ஒன்றாக இருந்து இந்த நாட்டுக்காக போராடுங்கள். நீங்கள் அனைவரும் இந்த மிஷினில் வெற்றிபெற என்னுடைய வாழ்த்துக்கள்.
அனைவரும் ஒன்றாக “தேங் யு சார் ” உங்க எண்ணத்தை நாங்க நிறைவேற்றுவோம் கவலை வேண்டாம்.
நாங்க எப்பொழுதும் ஒன்றாக தான் இருப்போம். “நாங்கள் நினைக்காத வரை மரணமும் எங்களை நெருங்காது சார்” சிங் வெறி தனமாக பேச , “அனைவரும் கைத்தட்டி கரகோசம் எழுப்பினார்கள்.
சர்மா , சிங்கை அணைத்துக்கொண்டு நீ நல்லாதான் பேசுகின்றார் டா. எப்பொழுதும் கவனமாக இரு ” அங்க போய் கனவு கண்டு நிதி அமைச்சர் நீதிமானுக்கு முத்தம் குடுத்து விட போகிறாய்” அவனுக்கு மட்டும் கேட்கும் படி மெதுவாக கூறினார். சிங்கோ தலையை சொறிந்த படி சிரித்து தலையை ஆட்டிக்கொண்டு இருந்தான்.
உதிரன், அவர்களின் அருகில் சென்று அப்படி ஒரு சம்பவம் நடந்தால் “செய்திதாளின் முதல் பக்கத்தில் இருவரின் புகைப்படமும் அவர்களின் முத்தக் காட்சியும் வரும் ” கொஞ்ச நாட்களுக்கு நாட்டின் தலைப்பு செய்தியே இவர்களின் முத்தம் தான்! கூறிவிட்டு அவன் சிரிக்க.
சார் மெதுவாக தானே சொன்னாரு உனக்கு எப்படி டா கேட்டது?
சர்மா, அவனுக்கு தான் பாம்பு காது என்று உனக்கு தெரியாதா டா? உன்னுடைய சோனாகிட்ட போனில் பேசும் போது தொலைவாக சென்று பேசு டா அதுதான் நாட்டுக்கும் உனக்கும் நல்லது. இல்லை என்றால் இவனே அதை தலைப்பு செய்தியாக மாற்றி விடுவான்.
உதிரனைப் பார்த்து நீ பண்ணாலும் பண்ணுவ டா எதுக்கும் உன்னிடம் இருந்து நான் கொஞ்சம் தள்ளி இருக்கின்றேன். சர்மா , சிங்கை பார்த்து சிரிக்க, “அங்கு சிறிது நேரம் சிரிப்பு சத்தங்களே நிறைந்து இருந்தது”.
அனைவரும் சர்மாவிடம் விடை பெற்றுக்கொண்டு கிளம்பினார்கள்.
சர்மா உதிரனை தனியாக அழைத்து தயவு செய்து உன்னுடைய கோவத்தை மூட்டை கட்டி வைத்துவிட்டு வேலையை பாரு டா ! வரும் போது எந்த பிரச்சனையையும் கூட்டி வந்து விடாதே! இது வயதான உடம்பு டா இன்னும் கொஞ்ச வருடத்தில் நான் ஓய்வு எடுத்துக்கொள்ள போறேன் அதற்குள்ள எதையும் பண்ண வச்சிடாதே டா! பெண்பிள்ளை கூட நம்பி வெளியே அனுப்பி விடலாம் போல உன்னை நம்பி உன்னையே என்னால் வெளியே அனுப்ப முடியவில்லை டா புரிந்துக்கொண்டு பொறுமையாக இருடா!
உதி, போங்க பா எப்ப பாரு உங்களுக்கு விளையாட்டு தான். அவரை அணைத்துக்கொண்டு “மிஸ் யு பா” நான் வரும் வரை நீங்க சும்மா இருந்தால் சோம்பேறி வந்துவிடும் அதனால் உங்களுக்கு ஒரு சின்ன வேலையை வச்சிட்டு போறேன்.
சர்மா, நீ எனக்கு வேலையை வைக்கலடா எங்கையோ என்னுடைய சீட்டுக்கு அடியில் ஆப்பு வைத்துவிட்டு போற டா’ அது என்ன பிரச்சனை என்று சொல்லுடா?
போங்க பா’ அதை நீங்க தான் கண்டுபிடிக்கனும் நான் இப்ப கிளம்புறேன் “பாய் பா”. “டேய்….டேய்” சொல்லிவிட்டு போடா இது வயதான உடம்பு “அவன் எங்கு கேட்டான் ? கேட்டால் அவன் உதிரன் இல்லையே?”.
அனைவரும் இரயிலில் ஏறி அவரவர் சீட்டில் உட்கார்ந்து அரட்டை அடித்துக் கொண்டும் விளையாடிக் கொண்டும் இருந்தனர். சில பேர் உறங்கிக் கொண்டு இருந்தனர். சிங்கும் தனக்கு உறக்கம் தான் முக்கியம் என்று உறங்கி விட்டான்.
உதி ,மட்டும் உறங்காமல் தொழிற்சாலை திறக்க போகும் இடத்தை பற்றியும் அந்த ஊரை பற்றியும் இணையத்தில் தேடி…. தேடி படித்துக்கொண்டு இருந்தான். அவனுக்கு கிடைத்த சில விசயங்களை வைத்து யோசிக்க “அவனுக்கு ஒன்று மட்டும் புரிந்தது ” சிலரின் பணத்தாசையில் உருவானது இந்த தொழிற்சாலை என்று.
நீங்க என்ன பண்ணு செய்வீர்களோ ? ஏது செய்வீர்களோ எனக்கு தெரியாது? இந்த தொழிற்சாலை திறக்கும் போது குறைந்தது நூறு இறப்பாவது இருக்க வேண்டும். அப்ப தான் தொழிற்சாலையில் இருந்து பணம் கொட்டோ கொட்டுனு கொட்டும். என்னுடைய தலைமுறைகள் எல்லாவற்றிற்கும் நான் ஒரு அடித்தளமாக ரோல் மார்டலாகவும் இருக்க வேண்டும் . அங்க சாவு நூறை தாண்டினாலும் ஒன்னும் பிரச்சனை இல்லை. அப்படியே அந்த பலிகளில் நம்ம இராணுவ வீரர்களையும் சில பேரை சேர்த்து பலி கொடுக்க வேண்டும். அப்போதான் மக்களும் சீக்கிரமாக நம்புவார்கள் நமக்கும் வரபோகின்ற தேர்தலில் மறுபடியும் வெற்றி கிடைக்கும். நான் ரொம்ப முயற்ச்சி பண்ணி என்னுடைய கண்ணாமூச்சி எதிரி உதிரனை இங்க வர வைத்து இருக்கேன் அவனை கண்டிப்பாக போட்டு தள்ளனும் . எவனை நீங்க கொல்றீங்களோ எனக்கு தெரியாது இவனை முதல்ல கொல்றீங்க புரிகின்றதா ? தன்னுடைய அடியாட்களிடம் கத்திக்கொண்டு இருந்தான் நிதி அமைச்சர் நீதிமான். எப்படியாவது தன்னுடைய பல நாள் பகையை இந்த தொழிற்சாலை திறப்பதில் நிறைவேற்றிக்கொள்ள வேண்டும் என்ற வெறியோடு தன்னுடைய ஆட்களிடம் தன்னுடைய பிளானையும் அதனை செயல்படுத்த வேண்டிய முறையும் விளக்கிக் கொண்டு இருந்தான்.
ஒரு வழியாக இவர்களின் இரயில் பயணம் முடிவு வந்தது. அனைவரும் சென்னை வந்து இறங்கி அங்கிருந்து தங்களுக்காக அரேஞ் பண்ணி இருந்த வேனில் புறப்பட்டனர். தன்னுடைய வீட்டிற்கு அனைவரையும் அழைத்து சென்றான். சில மணி நேரத்திலேயே உதிரனின் வீட்டிற்கு சென்றுவிட, நுவாலி தன்னுடைய அறையில் புத்தகத்தை படித்துக்கொண்டு இருந்தாள். தன்னுடைய வீட்டிற்கு வந்த தன்னுடைய நண்பர்களான இராணுவ வீரர்களை ஃபிரஷப் ஆகி விட்டு அனைவரையும் சாப்பிட சொன்னான். வனஜா கண்ணன் மற்றும் மனோன்மணி பாட்டி இவர்கள் மூவருமே அனைவருக்கும் சாப்பாட்டை பரிமாறினார்கள். தான் கொண்டு வந்த எல்லா பையையும் வெளியே வைத்துவிட்டு தன்னுடைய தோளில் இருந்த ஒரு பையை மட்டும் மாட்டிக்கொண்டு தன்னுடைய அறைக்கு பூனை நடை போட்டு கொண்டு சென்றான். அறையில் இருந்த கட்டிலில் சாய்ந்து கொண்டு புத்தகத்தை ஆர்வமாக படித்துக்கொண்டு இருந்தாள் உள்ளே வந்த தன்னுடைய மனவாளனை கவனிக்காமல் விட்டு விட்டாள்.அவளின் அருகில் சென்றவன் கீழே முட்டிபோட்டு கொண்டு அவளின் புத்தகத்தை வாங்கி மூடி வைத்து விட்டு அவளின் மடியில் தலைவைத்து படுத்துக்கொண்டான்.
முதலில் மிரண்டவள் தன்னவன் தான் என்று உணர்ந்ததும் அழுகையும் புன்னகையும் ஒரு சேர வந்தது அவளுக்கு. அவனை எழுப்பி தன் அருகில் உட்கார வைத்தவள் அவனின் முகம் முழுவதும் தன்னுடைய முத்தத்தை பதிய வைத்துவிட்டு அவனை இறுக்கமாக கட்டி அணைத்துக் கொண்டாள். அவனும் அவளை இருக்கமாக அணைத்துக் கொண்டான்.
நுவாலி, ஏன்டா என்கிட்ட சொல்லவே இல்ல நீ வருகின்றாய் என்று?
நான் மட்டும் வரவில்லை ? என்னுடன் சேர்ந்து என்னுடைய நண்பர்கள் அனைவரும் வந்து இருக்கிறார்கள்.
அவங்க எங்க இருக்காங்க மாமா ?
வெளியே சாப்பிட்டு கொண்டு இருக்காங்க மா.
அதனால் தான் நம்ம வீட்டில் நிறைய பேருக்கு சமைத்தார்களா? வீட்டில் இருந்த அனைவரிடமும் நான் கேட்டு விட்டேன் எதுக்கு இவ்வளவு சாப்பாடு என்று? “யாரும் பதில் சொல்லவே இல்லை ” .
நான் தான் டி உன்கிட்ட நான் வரும் விசயத்தை சொல்ல வேண்டாம் என்று சொன்னேன்.
எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை மாமா உன்னை தீடீர் என்று பார்த்ததும் ,” அவளின் கண்களில் இருந்து ஆனந்த கண்ணீர் வெளியே வர”.
இது அழுவதற்கான நேரம் இல்லை டி என் பொண்டாட்டி! நாம சந்தோசமாக இருக்க வேண்டிய நேரம் இது என கூறிக் கொண்டே அவளின் இதழை வன்மையாக சிறை பிடித்து இருந்தான்.
தொழிற்சாலை திறக்க போடும் மேடையின் அருகில் மக்கள் நிற்கும் எல்லா இடத்திலும் மண்ணில் கன்னி வெடி வைத்துவிடுங்கள் “அனைவரும் வெடித்து சாகட்டும் ” கொடுரமாக திட்டம் தீட்டிக் கொண்டு இருந்தான் நீதி.