வணக்கம் தோழமைகளே! டீசர் வாரத்திற்கான வெற்றியாளர்களுக்கும், கலந்து கொண்டவர்களுக்கும் தூரிகை குழு சார்பாக மனமார்ந்த வாழ்த்துகளும் நன்றிகளும்.
அனைவரின் டீசர்களும் அருமையாக இருந்தது. குறிப்பிட்ட வெற்றி பெற்ற படைப்பைத் தேர்வு செய்ய கடினமாகவும் இருந்தது. எழுத்துப்பிழை, எழுத்துநடை, கதைச் சுருக்கம் என அனைத்து விதத்திலும் அனைவரின் டீசரும் புள்ளி அளவிலேயே மாற்றம் இருந்தது. ஆகவே, டீசர் மூலம் எழுத்தாளர் ஏற்படுத்திய எதிர்பார்ப்பைப் பொறுத்து ஒரு டீசர் தேர்வாகியுள்ளது.
குறிப்பு: இந்த வார தேர்வுக்கும் இறுதி முடிவுக்கும் சம்பந்தம் இல்லை. இறுதி வெற்றியாளர்கள் முழு கதையின் எழுத்துப் பிழை, எழுத்து நடை, மேலும் கொடுக்கப்பட்ட ‘தீம்’ – ஐ பொறுத்தே தேர்வு செய்யப்படுவார்.
ட்ரையல் டீசர் வாரத்திற்கான வெற்றி பெற்ற படைப்பு:
உடல் பொருள் ஆவி நீயடி – பம்பர வெடி
சில நறுக் முறுக் டீசர்:
நினைவாய் அல்ல துணையாய் வருவேன்
விசித்திராவின் விசித்திர நாழிகை
மன்னவனின் உயிர் உறையும் நிமிடம்
சூரியனின் மங்கை.
2. இரண்டு வரியில் குறள் போன்ற கருத்துக்கள் வழங்கிய அனைத்து வாசகர்களுக்கும் வாழ்த்துகள். இருந்தும், அதிக அளவில் தங்களின் பங்கேற்பை அளித்தவர்கள் அடிப்படையில் ஒரு வாசகர் தேர்வு செய்யப்படுகிறார்.
வெற்றியாளர்:
நான்சி
3. மீம்ஸ் க்ரியேட்டர்: அதிக அளவிலும், சிரிக்கும் வகையிலும் மீம்ஸ் அளித்த அனைவர்க்கும் வாழ்த்துகள்!
ஒருவரை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டிய நிர்பந்தத்தால், மீம்ஸ் எண்ணைக்கையின் பொறுத்து வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மீம்ஸ் க்ரியேட்டர் வெற்றியாளர்:
அனு சந்திரன்
இந்த வார போட்டியை சிறப்பாக நடத்திச் சென்ற அட்மின்களுக்கு பாராட்டுகள்!
எழுத்தாளர்கள், வாசகர்கள் அனைவருக்கும் தூரிகை தளம் சார்பாக தீபாவளி நல்வாழ்த்துகள்…
வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். 🥰🥰🥰
congrats to everyone …….happy deepavali
அனைவருக்கும் வாழ்த்துக்கள் 🥰இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
வாவ் சூப்பர். .. வெற்றி பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🤩🤩
😍😍😍😍😍வாவ் எல்லாருக்கும் என்னோட வாழ்த்துக்கள் 💃💃💃💃🥳🥳🥳🥳🥳.
வெற்றிப்பெற்ற அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்