Loading

அத்தியாயம் 6

மறுநாள் விடியல் யாருக்கு என்ன வைத்திருக்கிறது என்பது தெரியாமல் சாதாரணமாகவே விடிந்தது. முதல் நாளை போல தாமதமாக சென்று, அவனின் எள்ளலுக்கு ஆளாக கூடாது என்பதற்காகவே விரைவாக கிளம்பிக் கொண்டிருந்தாள் திவ்யான்ஷி. இதில், அவளிற்கு தெரியாமலேயே, பல நாட்களாக தொலைந்து போன சுறுசுறுப்பும் உத்வேகமும் மீண்டிருந்தது.

 

அலுவலகத்தில் தன்னிடத்திற்கு வந்ததும் தான் அவளின் ஓட்டம் முடிவிற்கு வந்திருந்தது.

 

‘உஃப், சீக்கிரம் வந்தாச்சு. இன்னைக்கு அவன்கிட்ட ரொம்ப சிக்காம கவனமா இருக்கணும்!’ என்று மனதிற்குள் கூறிக் கொண்டவளை சரியாக கணித்தது போல அங்கிருந்த தொலைபேசி ஒலிக்க, திடீரென்று கேட்ட ஒலியில் பயந்து தான் போனாள் அவள்.

 

அதை எடுக்கும் முன், சுற்றிலும் பார்க்க, அங்கு அவளைத் தவிர யாரும் இருக்கவில்லை. வெளியே பார்த்தவளின் விழிகள், எம்.டி அறைக்குள்ளும் பார்த்திருக்க வேண்டுமோ!

 

‘இன்னும் யாரும் வரல. இவருக்கிட்ட இருந்து தப்பிக்க நானே சீக்கிரமா வந்துருக்கேன். ஆனா, இவரு எனக்கு முன்னாடியே வந்துட்டாரா? ஐயோ, இப்போ போன் அட்டெண்ட் பண்ணா, ‘ஏன் லேட்டா வந்த?’ன்னு கேட்பாரோ?’ என்று புலம்பியபடியே அழைப்பை ஏற்றாள்.

 

“இன்டர்காம் சரியா வேலை செய்யுதா, மிஸ். திவ்யான்ஷி?” என்று எடுத்ததும் துஷ்யந்த் வினவ, ‘இதைக் கேட்கவா போன் பண்ணாங்க?’ என்று குழப்பத்துடன் நினைத்தாலும், “எஸ் சார்.” என்று அவனிற்கு பதில் கூறியிருந்தாள்.

 

“ஓஹ், அப்போ கால் வரும்போது சத்தமெல்லாம் நல்லா கேட்குது தான?” என்று அடுத்த கேள்வி கேட்க, ‘போச்சு காலைலயே ஆரம்பிச்சுட்டான்!’ என்று உள்ளுக்குள் புலம்பியவள், “எஸ் சார்.” என்று அதே பதிலை கூறியிருந்தாள்.

 

“ம்ம்ம், உங்களுக்கு ஹெல்த் இஸ்யூ எதுவும் இல்லையே?” என்று அவன் வினவ, ‘ஐயோ’ என்றிருந்தது திவ்யான்ஷிக்கு. “அதெல்லாம் எதுவும் இல்ல சார்.” என்று வேகமாக பதிலளித்தாள், எங்கு அதற்கும் இன்னும் பேசுவானோ என்ற பயத்தில்.

 

“ஓஹ், அப்போ ரொம்ப நேரமா ஏன் கால் அட்டெண்ட் பண்ணல, மிஸ். திவ்யான்ஷி?” என்று இத்தனை கேள்விகளுக்கும் காரணமாக விளங்கிய கேள்வியை கேட்க, ‘இதுக்கா டா இந்த அக்கப்போரு?’ என்று தான் தோன்றியது அவளிற்கு.

 

காலையிலேயே கடுப்படித்ததால், திவ்யான்ஷிக்கு லேசான கோபம் எட்டிப்பார்க்க, “சார், அஞ்சு மாடி ஏறி இப்போ தான் வந்தேன். சோ கொஞ்ச நேரம் மூச்சு வாங்கிட்டு, உங்க காலை அட்டெண்ட் பண்ணேன்.” என்று கூறினாள்.

 

அதற்கு மறுபுறத்திலிருந்து, “ஓஹ்” என்று மட்டும் பதில் வர, திவ்யான்ஷிக்கு தான் திக்கென்றிருந்தது.

 

‘அச்சோ, இப்படி பேசி வச்சுருக்கேன். இதுக்கும் ஏதாவது திட்டுவாரோ? இவருக்கிட்ட மட்டும் யோசிக்காம ஏதாவது பேசிடுறேன். இதெல்லாம் எங்க போய் முடியப் போகுதோ!’ என்று நினைத்துக் கொண்டவள், அவனின் மறுமொழிக்காக காத்திருந்தாள்.

 

“உங்க ரெஃப்ரெஷ்மெண்ட் முடிஞ்சுருச்சுன்னா, ஃப்வை மினிட்ஸ் கழிச்சு என்னோட ரூமுக்கு வாங்க.” என்று அவளின் பதிலை கூட எதிர்பார்க்காமல் அழைப்பை துண்டித்திருந்தான்.

 

‘கண்டிப்பா இன்னைக்கு இருக்கு!’ என்று தன்னைத்தானே நொந்து கொண்டாள் திவ்யான்ஷி.

 

*****

 

வழக்கமான அலுவலக நேரத்திற்கு வந்தால், என்னதான் ‘மாறுவேஷத்தில்’ வந்தாலும், அவனின் ரசிகர்கள் கண்டுகொள்வதால், சீக்கிரமாக வந்திருந்தான் துஷ்யந்த்.

 

திவ்யான்ஷி வருவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பே வந்திருந்தவன், கடந்த ஆறு மாதங்கள் நடந்த நிகழ்வுகளை பற்றிய விபரங்களை தன் கணினியில் பார்த்துக் கொண்டிருந்தான்.

 

வெகு நேரம் அதையே நோக்கிக் கொண்டிருந்தவன், சற்று இளைப்பாற எண்ணி கணினியிலிருந்து பார்வையை திருப்ப, திரைசீலை விலகியிருந்த ஜன்னல் வழியே வேகமாக வந்து கொண்டிருந்த திவ்யான்ஷியைக் கண்டான்.

 

அவசரமாக வந்தவள், தன்னிடத்தில் அமர்ந்ததும் தான் சற்று ஆசுவாசப்பட்டாள். அவளின் செய்கைகளை சிரிப்புடன் பார்த்தவனிற்கு தெரிந்து தான் இருந்தது, அவளின் பதற்றம் முதல் நாள் அவள் மீது அவன் சுமத்திய குற்றச்சாட்டிற்காக தான் என்பது.

 

அவளை சீண்ட எண்ணி, அவளை தொலைபேசியில் அழைத்தான். அவன் கேள்விகளுக்கு அவள் மனதோடு பேசும்போது வெளிப்படும் பாவனைகளை கண்டு சிரிப்பாக இருந்தது துஷ்யந்த்திற்கு.

 

அதில் அவனின் உற்சாகம் மீண்டிருக்க, மேலும் அவளை பதற்றமடைய செய்த பின்னரே, தன் அறைக்கு அழைத்தான்.

 

*****

 

சரியாக ஐந்து நிமிடங்களில் அவன் அறைக்கு வந்தவளை கண்டவன், ‘இதுல எல்லாம் பெர்ஃபெக்ட் தான்!’ என்று எண்ணியபடி, அவளிற்கான வேலைகளை சொல்ல ஆரம்பித்தான்.

 

கிட்டத்தட்ட பத்து நிமிடங்கள் நடைபெற்ற அந்த உரையாடல் ஒருவழியாக முடிவுக்கு வர, திவ்யான்ஷியும் ஒரு மானசீக பெருமூச்சுடன் வெளியே செல்ல நினைக்கும்போது, மீண்டும் அவளை அழைத்தான் துஷ்யந்த்.

 

“மிஸ். திவ்யான்ஷி, தமிழ்நாடு லெவல்ல நடக்குற லீக் போட்டியோட ஓப்பனிங் செரிமனிக்கு இன்விடேஷன் வந்திருக்கு. நாளைக்கு நாம அங்க போகணும். சோ, அதுக்கான அரேஞ்மெண்ட்ஸ் பார்த்துக்கோங்க. மத்த டீடெயில்ஸ் உங்களுக்கு மெயில் பண்ணிருக்கேன். அதையும் பாருங்க.” என்று அவன் சொல்லிக்கொண்டே இருக்க, அவளோ ‘நாம போகணும்’ என்பதிலேயே அதிர்ந்து நின்றிருந்தாள்.

 

அதிர்ச்சியை அப்படியே பிரதிபலித்த அவளின் முகத்தை கண்டவன், “எனிதிங் ராங், மிஸ். திவ்யான்ஷி?” என்று வினவ, “நாம போகணுமா, சார்?” என்றாள் அவள்.

 

“எஸ், நாம போகணும்.” என்று இம்முறை அழுத்தமாக கூறினான் அவன்.

 

அப்போதும் தயங்கிபடி நின்றிருந்தவளை பார்த்தவனிற்கு அதுவரை இருந்த இலகுபாவம் மாறி, கோபம் அந்த இடத்தை ஆக்கிரமித்துக் கொள்ள, “என்கூட வரதுல ஏதாச்சும் பிராப்ளமா?” என்று பல்லைக் கடித்துக் கொண்டு வினவ, அப்போது தான் அவனின் கோபத்தை உணர்ந்தாள் திவ்யான்ஷி.

 

அவள் ஏதோ கூற வருவதற்குள், “லிசன் கேர்ஃபுல்லி மிஸ். திவ்யான்ஷி. நீங்க என்னோட பி.ஏ. சோ இது மாதிரி சில இடங்களுக்கு நான் போகும்போது நீங்க என்னோட வரவேண்டியதா தான் இருக்கும். இதெல்லாம் உங்களுக்கே தெரிஞ்சுருக்கும், தெரிஞ்சுருக்கனும்! வாட்டவெர் தி ரீசன்… உங்க சில்லி ரீசனெல்லாம் சொல்லாம, ஆக வேண்டியதை பாருங்க. டோன்ட் மேக் மீ ரிப்பீட் திஸ் அகேயின்!” என்று கோபமாக கூறினான்.

 

அவள் தலையை அசைத்தபடி வெளியேற முயல, “அண்ட் ஒன் மோர் திங். அந்த ஓப்பனிங் செரிமனில என்னோட மேனேஜரை இன்ட்ரோட்யூஸ் பண்றேன். என்னோட கிரிக்கெட் சம்பந்தப்பட்ட ஸ்கெட்யூல் எல்லாம் அவனுக்கு தான் தெரியும். இனி, அவன் கூட டிஸ்கஸ் பண்ணி பிசினஸ் சம்பந்தப்பட்ட மீட்டிங்ஸ் எல்லாம் ஸ்கெட்யூல் பண்ணுங்க.” என்று கூறிவிட்டு அவன் வேலைகளை பார்க்க ஆரம்பிக்க, அங்கிருந்து வெளியே வந்தால் போதும் என்றவாறு தன்னிடத்திற்கு வந்து அமர்ந்தாள் திவ்யான்ஷி.

 

‘ச்சே இவனோட எப்படி ஒன்னா போறது? கேள்வி கேட்டே டென்ஷன் பண்ணுவானே!’ என்று புலம்பிக்கொண்டே அவன் கொடுத்த வேலைகளை செய்ய ஆரம்பித்தாள்.

 

துஷ்யந்த் அனுப்பிய மெயிலை கண்டவளிற்கு மேலும் அதிர்ச்சியளிக்கும் விதமாக, திண்டுக்கலில் நடக்கவிருக்கும் திறப்பு விழாவிற்கான பயண அட்டவணையில் இரண்டு நாட்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. முதல் நாள், திறப்பு விழா மற்றும் பிரபல கிரிக்கெட் வீரர்கள் பங்குகொள்ளும் சிறப்பு விருந்தும், அடுத்த நாள் முதல் போட்டியும் நடைபெறும் என்று இருந்தது.

 

‘சுத்தம்!’ என்று மனதிற்குள் முனகிவிட்டு, தங்குவதற்கான ஏற்பாடுகளை அந்த மெயிலில் குறிப்பிட்டிருக்கும் நபரை அழைத்து உறுதிசெய்து கொண்டாள்.

 

அப்போது வந்த சந்தியாவோ, திவ்யான்ஷியின் குழப்பமான முகத்தை பார்த்து, “ஹே திவ்யா, என்னாச்சு? ஏன் ரெஸ்ட்லெசா இருக்க?” என்று வினவ, “ஒன்னுமில்ல சந்தியா. ஐ’ம் ஃபைன்.” என்றாள் திவ்யான்ஷி.

 

வாயை பிடுங்கி விஷயத்தை கரப்பதற்காகவே காத்திருக்கும் சந்தியா அதோடு விடுவாளா என்ன? பலமுறை என்னாயிற்று என்று கேட்டு கேட்டே, திவ்யான்ஷியை வெறுப்படைய செய்து, அவள் வாயாலேயே அவளும் துஷ்யந்த்தும் தமிழ்நாடு லீக் போட்டி திறப்பு விழாவிற்கு செல்லப்போவதை கூற வைத்தும் விட்டாள்.

 

“பார்றா! இப்படியொரு சான்ஸ் யாருக்கு கிடைக்கும்? இந்தியன் கேப்டனோட டூ டேஸ் டிரிப்!” என்று சிலாகிக்க, அவளின் கண்களோ அப்பட்டமாக பொறாமையை வழியவிட்டு கொண்டிருந்தன.

 

அவளின் தொனியை கேட்க சகிக்காத திவ்யான்ஷியோ, “ப்ச், நான் போறது அஃபிசியல் டிரிப். அதுவும் என்னோட பாஸ் கூட. சோ டோன்ட் எக்ஸாஜெரேட் திஸ் சந்தியா.” என்று அழுத்தமாக கூறிவிட்டாள்.

 

உடனே தன் முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு, “ச்சே திவ்யா, நான் சும்மா உன்னை டீஸ் பண்ண அப்படி சொன்னேன். டோன்ட் டேக் இட் சீரியஸ்லி.” என்று கூறினாள்.

 

அதற்கு வெறும் தலையசைப்பையே பதிலாக கொடுத்துவிட்டு தன் வேலைகளை செய்ய தயாராக, சந்தியா அப்போதும் அவளிடத்திற்கு செல்ல முயலவில்லை.

 

“உன்னை பார்த்தா ஏதோ கடுப்புல இருக்க மாதிரி இருக்கே திவ்யா. ஏன் உனக்கு சாரோட போக பிடிக்கலையோ?” என்று அடுத்த தூண்டிலை போட, அதில் மாட்டிக்கொள்ள விரும்பாமல், “அப்படியெல்லாம் இல்ல சந்தியா. அது வேற ஒரு பெர்சனல் டிஸ்டர்பன்ஸ் விச் ஐ’ம் நாட் கம்ஃபர்டேபில் டூ ஓப்பன்-அப்.” என்று கூறி அத்துடன் பேச்சை கத்திரிக்க முயன்றாள்.

 

‘இதுக்கு மேல கேள்வி கேட்காத.’ என்று மறைமுகமாக கூறியும் தோண்டி துருவும் சந்தியாவிடமிருந்து அத்தனை எளிதில் தப்பிக்க முடியுமா என்ன?

 

“ஹே திவ்யா, நேத்து தான் இதே மாதிரி ஒரு ஸ்டோரி படிச்சேன். ஹீரோ ஒர்க் விஷயமா வெளியூரு போக, அவனோட பி.ஏவா இருக்க ஹீரோயினும் கூட போவா. ஹீரோயின் ஹீரோ கம்பெனில சேர்ந்ததே ஹீரோவை பழி வாங்குறதுக்கு தான். சோ, இந்த சிசுவேஷனை யூஸ் பண்ணி, ஹீரோ தனியா இருக்குறப்போ அவனை கத்தியால குத்திடுவா…” என்று சொல்லிக் கொண்டிருக்க, திவ்யான்ஷியோ திடுக்கிட்டு சந்தியாவை பார்த்தாள்.

 

திவ்யான்ஷியின் முகபாவனைகளை கண்டு திருப்தியடைந்த சந்தியா, அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், “ஹே திவ்யா, அது ஜஸ்ட் ஒரு ஸ்டோரி… சும்மா இந்த சிசுவேஷன் அதோட ஒத்துப்போகுதேன்னு சொன்னேன். உனக்கும் சாருக்கும் ஃபர்ஸ்ட்ல இருந்து முட்டிட்டே இருக்கு. அண்ட் இப்போ வேலைக்காக வெளியூருக்கு போறீங்க… அதை வச்சு சும்மா தான் சொன்னேன். இதுக்கு எதுக்கு நீ ஷாக்காகுற?” என்று வினவினாள்.

 

திவ்யான்ஷிக்கு அப்போதும் படபடப்பு குறையாததால், “எனக்கு தலைவலிக்குது. கேஃபிடீரியா போறேன்.” என்று முணுமுணுத்து விட்டு அங்கிருந்து செல்ல, அவளின் முதுகை பார்த்து வெற்றிச்சிரிப்பு உதிர்த்தாள் சந்தியா.

 

*****

 

தன் வருகையை பதிவு செய்வதைப் போல காலை வேலையை துஷ்யந்த்தை சந்தித்து ஆரம்பிக்க வந்தான் அபராஜித்.

 

“ஹாய் டா.” என்று ஆர்ப்பாட்டமாக வந்தவனிற்கு பதில் சொல்லாமல் தன் கைகடிகாரத்தில் பார்வையை பதிக்க, “இவன் வேற எக்ஸ்ப்ரெஷன்லேயே வெறி ஏத்துவானே!” என்று முணுமுணுத்து விட்டு, “ஏன் டா, நீ சீக்கிரம் வந்தா, உன்னை மாதிரி எல்லாரும் சீக்கிரம் வரனுமா?” என்றபடி அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தான்.

 

“நம்ம கம்பெனின்னு நினைப்பு இருந்தா வரலாம்.” என்று தன் வேலையை பார்த்தபடி கூற, “க்கும், எல்லாத்துக்கும் ஒரு ஆன்சர் வச்சுருப்பான்!” என்று அப்போதும் முணுமுணுத்தான்.

 

பிறகு, அன்றைக்கான வேலைகளை பட்டியலிட்டு, அதற்கான விபரங்களையும் தகவல்களையும் பற்றிய கலந்துரையாடலை முடித்தனர்.

 

“அபி, நாளைக்கு தமிழ்நாடு லீக் போட்டி ஆரம்பிக்குது. அந்த ஓப்பனிங் செரிமனிக்கு இன்வைட் பண்ணியிருக்காங்க. ரெண்டு நாள் இங்க இருக்க மாட்டேன். மாமாவும் இப்போ ரெஸ்ட்ல இருக்காரு. சோ நீதான் பார்த்துக்குற மாதிரி இருக்கும்.” என்று துஷ்யந்த் கூற, இது எப்போதும் நடக்கும் வழக்கமான விஷயம் என்பதால் அபராஜித்தும் அப்போதைக்கு பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

 

“ஓஹ், நோ பிராப்ளம் டா. திவ்யான்ஷி வச்சு இங்க மேனேஜ் பண்ணிடலாம்.” என்று அவன் கூற, “அவங்களும் என்னோட வராங்க.” என்று துஷ்யந்த் கூறியதைக் கேட்டு அதிர்ச்சியில் உச்சத்தில் இருந்தான் அபராஜித்.

 

பின்னே, எப்போதும் இவை போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள செல்லும்போது யாரையும் உடன் அழைத்து செல்ல விரும்பாதவன், இப்போது திவ்யான்ஷியை அழைத்து செல்லப்போவதாக கூறும்போது, அதிராமல் என்ன செய்வான்!

 

நிமிடம் கடந்தும் அவனிடமிருந்து பதில் இல்லாமல் போக, நிமிர்ந்து அவனைப் பார்த்தான் துஷ்யந்த்.

 

அபராஜித்தின் அதிர்ச்சியை கண்ட துஷ்யந்த், “எவ்ளோ நேரம் கழிச்சு ஷாக்ல இருந்து வெளிய வரதா உத்தேசம்?” என்று வினவினான்.

 

துஷ்யந்த்தின் கேள்விக்கு எதிர்வினையாக, “டேய் உண்மையை சொல்லு. அந்த பொண்ணு உன்கூட வரப்போகுதா? ஆயா சத்தியமா?” என்று அபராஜித் கையை நீட்ட, அவனை முறைத்தான் துஷ்யந்த்.

 

“என்னடா திடீர்னு? இப்படியெல்லாம் செஞ்சா, எனக்கு ஷாக்கா இல்லாம எப்படி இருக்குமாம்?” என்று அபராஜித் கூற, துஷ்யந்த்திற்கே ஒரு மாதிரி இருந்தது.

 

“டேய் இப்போ எதுக்கு ஓவரா ஷாக்காகுற? என்னோட பி.ஏ என்னோட அஃபிஸியல் டிரிப் வராங்க. இதுல என்ன ஷாக் உனக்கு?” என்று துஷ்யந்த் வினவ, “ஏன் இதுக்கு முன்னாடி உனக்கு பி.ஏவே இல்லையா?” என்று அவனை மடக்கினான் அபராஜித்.

 

திடீரென்று அப்படி கேட்பான் என்று எண்ணாதவன், சற்று தடுமாறி, அந்த தடுமாற்றம் வெளியே தெரியாதவாறு சமாளித்து, “இதுக்கு முன்னாடி அப்படி கூட்டிட்டு போகணும்னு அவசியம் இல்ல. ஏன்னா, இதுக்கு முன்னாடி பிசினஸ் முழுக்க மாமா தான் பார்த்துக்கிட்டாங்க. நான் சும்மா மேற்பார்வை மட்டும் பார்க்குற மாதிரி இருந்துச்சு. ஆனா, இப்போ சிசுவேஷன் அப்படியில்ல. மாமாவால இதுக்கு மேல கம்பெனியை பார்த்துக்க முடியாது. சோ, கிரிக்கெட் அண்ட் பிசினஸ் ரெண்டையும் நானே பார்த்துக்க என்னோட அசிஸ்டெண்ட்ஸ் உதவியும் தேவைப்படுது. அதனால தான் இந்த டிரிப்.” என்று பெரிதாக விளக்கிவிட்டு மனதிற்குள் சற்று ஆசுவாசப்பட்டுக் கொண்டான்.

 

அவன் கூறியதை கன்னத்தில் கைவைத்து கதை கேட்பதைப் போல கேட்ட அபராஜித், “ஹ்ம்ம், நீயும் ஏதோ சொல்ற, நானும் அதை நம்புறேன்… வேற வழி?” என்றான்.

 

அதற்கு மறுமொழியாக துஷ்யந்த்திடமிருந்து வெளிப்பட்ட முறைப்பை பற்றியெல்லாம் கவலை இல்லாதவனாக, “இந்த வீக்கெண்ட் உன் தங்கச்சி வரா ஞாபகம் இருக்குல, அதுக்குள்ள டிரிப் முடிச்சுட்டு வந்துடுவியா, இல்ல ஏதாவது எக்ஸ்டென்ஷன் இருக்குமா?” என்று அவனை வம்பிலுக்கும் வேலையை ஆரம்பித்தான் அபராஜித்.

 

“நான் என்ன ஹனிமூனுக்கா போறேன், எக்ஸ்டெண்ட் பண்ண?” என்று பல்லைக் கடித்துக்கொண்டு துஷ்யந்த் வினவ, ‘மாட்டுன டா நண்பா!’ என்று உள்ளுக்குள் குதூகளித்தவனாக, “பார்றா ஹனிமூன் ஆசை எல்லாம் இருக்கா? நான் கூட உன்னை முரட்டு சிங்கிள்னுல நினைச்சேன்!” என்றான் அபராஜித்.

 

“இங்கயிருந்து கிளம்பு டா முதல்ல… வேலை செய்ய விடாம டிஸ்டர்ப் பண்ணிட்டு!” என்று துஷ்யந்த் கூற, “க்கும், நாங்க பண்றதெல்லாம் டிஸ்டர்பன்ஸா தான் இருக்கும்!” என்று கூறியபடி அங்கிருந்து வேகமாக வெளியே சென்றான், இன்னும் சிறிது நேரம் அங்கிருந்தாலும், உயிருக்கு ஆபத்து என்பதால்!

 

‘ஃபர்ஸ்ட் வேலையா இதை அஸ்மிக்கு சொல்லணும்.’ என்று நினைத்தவன், அவளிற்கு அழைக்க அவள் எடுக்காததால், ‘உங்க அண்ணன் அவன் பி.ஏவோட டிரிப் போறானாம்.’ என்ற செய்தியை அனுப்பினான்.

 

‘ஷப்பா, கொளுத்தி போட்டாச்சு!’ என்ற நிம்மதியுடன் தன் வேலையை பார்க்க சென்றான் அபராஜித்.

காதலி வருவாள்…

 

ஹாய் பிரெண்ட்ஸ்…😍😍😍 லேட்டா வந்ததுக்கு சாரி… இதோ அடுத்த அத்தியாயம் போட்டாச்சு… ஃபுல் அண்ட் ஃபுல் துஷ்யந்த் அண்ட் திவ்யான்ஷி தான்…😍😍😍 படிச்சுட்டு உங்க கருத்துகளை சொல்லுங்க…😁😁😁

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
7
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்