அறையில் இருந்த எல்லாவற்றையும் அடித்து நொறுக்கியவன் அந்த இடமே அதிரும் வண்ணம் கத்தினான்.
அவன் கோபத்தை எவ்வளவு அடக்க முயன்றும் அவனால் முடியவில்லை. தன் காதல் விளையாட்டு பொம்மை ஆகி விட்டதா என கேட்டவன் மனதுக்கு ஆறுதலாக அந்த அறையை கலவரப் படுத்தினான்.
*****
“எப்படி முடிந்தது உன்னால. என் இதயத்தை சுக்கு நூறாக உடைச்சு எறிய. என் காதல் அவ்வளவு தானா?” என ஆதங்கமாக கேட்டவனுக்கு அங்கு பதில் கிடைக்கவில்லை.
அதில் மேலும் கடுப்பானவன் அருகிலிருந்த ஜாடியை எடுத்து கீழே போட்டு உடைத்து தன் இயலாமையை வெளிக்காட்ட, அவளோ கண்ணீருடன் நடுங்கிக் கொண்டிருந்தாள்.
வாயை திறக்காமல் ஓரத்தில் ஒதுங்கி நடுங்கிக்கொண்டு இருப்பவளை பார்த்த அவனது கோபம் இன்னும் ஏற, “இது எல்லாத்துக்கும் காரணம் உன் அப்பன் தாண்டி. அவனை…” என பற்களைக் கடிக்க,
“அப்பா என்ன பண்ணாரு?” என அவளுடைய வார்த்தை சற்று வீராப்பாக வர, அவளை பார்வையாலே எரித்துவிடும் பார்வை பார்த்தான்.
****”
இந்த நிமிசத்துக்காகவும் இந்த நொடிக்காகவும் தான் நான் இத்தனை வருஷம் எதிர்பார்த்தேன். என்னோட காதல் தேவதை, இன்னும் சில நிமிசங்கள்ல என்னோட எல்லாமுமாக ஆக போறா.
என் காதல் கானல் நீராகிடுமோ என்று பயந்த நாட்கள் இந்த நொடி விலக ஆரம்பிச்சிருச்சு. என் இதயம் உனக்கானது மட்டும் தான்.
அதேபோல உன்னுடைய இதயமும் எனக்கானது.என்னோட காதலால இந்த உலகத்தில் உள்ள அத்தனை சந்தோஷத்தையும் உனக்கு தரனும்னு நினைக்கிறேன். உன்னையும் என்னையும் சேர்த்து வைக்க இந்த காதலே போதும். நம்ம வாழ்க்கையில இனி யாருக்கும் இடமில்லை.
என்னடா நடக்குது இங்கு..
ஒரு டீசர ல எல்லாரையும் ரெக்கை இல்லாம வானத்துல பறக்க வச்சுட்டு சட்டுனு தள்ளி போட்டுட்டீங்களேமா 😲😲😲
அப்பன் தான் காரணமா… மீஸ்டர் கதாநாயகி அப்பாகார்… என்ன பண்ணுனீங்க அப்படி 🤔🤔🤔
எம்புட்டு யோசிச்சும் பதில் கிடைக்கலியே 😤😤
அதானே பதில் தெரிஞ்சா ரைட்டர் எப்படி கதை எழுதுவாரு… நாளை வரை பொறுப்போம்…
இந்தா மா சங்கு சக்கரம் நாளைக்கு சீக்கிரம் கதையோட வந்துடுங்க… மீ சோ வெயிட்டிங் 😜😜
Sure sis
Enna sis hero ipDi kathuraan?? Ithula vera oruthan kushiya irukaan pola 🙄🙄