Loading

அடியே திமிரழகி..அடங்காத சதிரழகி..

கபடி.. கபடி என்று காட்டாற்று வெள்ளமாய் எதிர்த்து நிற்கும் கூட்டத்தில் ஒருவனை மட்டும் குறிவைத்து பாடிச்சென்றான் தமிழரசு.

எதிரில் தன்னை மட்டுமே நோக்கி அவன் வருவதை உணர்ந்தவன் அந்தக் காட்டாற்று வெள்ளத்தையே புரட்டிப் போடும் புயல் காற்றாய் பறந்து வந்து அவன் கழுத்தை வளைத்துப் பிடித்து அமுக்கினான் வெற்றிமாறன்.

அவன் வளைத்துப் பிடிக்கவுமே மாமா..‌ மாமா விடாத புடி.. புடி என்று கூட்டத்தில் மயிலின் சாயலில் புள்ளி மானாய் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தாள் பூங்குழலி.
தமிழரசு ஒரு நிமிடம் அவளின் அழகில் தடுமாறவும் அவன் திமிற திமிற பிடியை இறுக்கி அவனை வளைத்துக் கீழே அமுக்கவும் வெற்றிமாறனின் குழுவில் உள்ள மற்றவர்கள் வந்து அமுக்கவும் அவனால் கோட்டைத் தொட முடியாமல் அவுட் ஆகவும் அந்தக் குழு வெற்றி பெற்றது.

மண்ணைப் பாத்து விளையாடும் போது பொண்ணைப் பாத்தா இப்படி தான் மண்ணைக் கவ்வ வேண்டி வரும் என்று நக்கலாக மொழியவும் சே என்று தரையை எட்டி உதைத்து மண்ணைக் கிளறிவிட்டுச் சென்றான் தமிழரசு அந்த மைதானத்தில் இருந்து.

———-

என்னாலலாம் அப்பாவோட சொந்த ஊர்ல போய் ஒரு நாள் கூட இருக்க முடியாதுடி வைஷீ.. சரியான பட்டிக்காடு. ஒரு என்டர்டைன்மென்ட்ம் கிடையாது அங்க. சுத்த போர். என்னோட பெரியம்மா பையன் எங்கண்ணா அகிலன் மாதிரி நானும் ஃபாரின் போய் ஹையர் ஸ்டடிஸ் முடிச்சுட்டு அங்கேயே செட்டில் ஆகப் போறேன் என்றாள் மதிவதனி.

ஏன்டி உங்க அப்பாக்கு சொந்த ஊர் மேல அவ்வளவு பாசம்னு சொன்ன. நீ ஃபாரின் போயிட்டா உன் கூட வருவாங்களா அவங்க.

ஒத்தப்பொண்ணு வச்சுக்கிட்டு எனக்காக வராம எங்க போக போறாங்க. மொத அடம்பிடிப்பாங்க அப்புறமா நான் பேசியே சரி கட்டிடுவேன்.

—-

டேய் இடியட்.. கண்ணை எங்க வச்சுடா நடந்து வர்ற. பட்டிக்காட்டான் என்று வண்டியை சடன் பிரேக் போட்டு நிறுத்தி விட்டு நல்லா பட்டிக்காட்டான் மிட்டாய் கடைய பாத்த மாதிரி பல்லக் காட்டிட்டு நடந்து பரலோகம் போயிடாத.. தள்ளி போடா அங்குட்டு என்று வண்டியை எடுத்துச் சென்று விட்டாள்.

என்ன திமிரு.. சரியான ராங்கியா இருப்பா போல. அல்லிராணி இவளலாம் கட்டிக்க போறவன் என்ன பாடு படப்போறானோ..

அண்ணே.. உங்களுக்கு இந்த மாதிரி பொண்ணு பாத்தா உங்க குணத்துக்கும் தைரியத்துக்கும் மேட்சா இருக்கும்ணே.

என்னாது இது மாதிரியா. அதுக்கு நான் சன்னியாசம் போயிடுவேன். இவளலாம் கட்டிக்கிட்டு யாரு குடும்பம் நடத்த. போடா டேய் என்று அவன் தலையில் தட்டி விட்டு நகன்றான் அங்கிருந்து.

——-

அதெப்புடியா எங்க கிட்ட அஞ்சு ரூபாய்க்கு வாங்கி நீங்க அம்பது ரூபாய்க்கு விக்கிறேங்க. நாங்க செலவு பண்ணதுக்கும் கூலிக்கும் கூட வராது போல. உழைக்குறவன் ஒருத்தன் திங்குறவன் ஒருத்தனா..

டேய் இங்க அவ்வளவு தான் ரேட். இங்க மட்டும் இல்லை இங்க இருக்குற கமிஷன் கடை மொத்தமும் இதே ரேட் தான் குடுப்பாங்க. உன் மூட்டைகளை தூக்கிட்டு போய் எங்க வேனா போட்டுக்கோ. போடா..

இந்த சந்தை மொத்தமும் நீ ஏலத்துல எடுத்துருக்குற திமிருல பேசுறியா. இதுக்கு ஒரு முடிவு கட்டல என் பேரு வெற்றிமாறன் இல்லடா..

——

ஏன்டா காட்டான்.. நீ நிஜமாவே காலேஜ் போய் படிச்சியா இல்லை எருமைமாடு மேய்ச்சியா.

ஏய் இந்த டா போட்டு திமிறா பேசிட்டு இருந்த பல்லத் தட்டிடுவேன்டி..

ஆமா நீ பல்லைக் தட்டந்தண்டிக்கும் நான் பல்லக் காட்டிட்டு இருக்கேன் உன்கிட்ட. அவன் கிட்டே எகிறாம இங்கே என்கிட்ட வந்து குதிக்குற. படிக்காத அவனுக்கே அவ்வளவு மூளை வேலை செய்யும் போது படிச்ச உனக்கு ஏன் வேலை செய்ய மாட்டேங்குது. அதுவும் கூட இத்தனை தடிமாடுங்கள வச்சிக்கிட்டு அவனை எதிர்த்துப் போராட முடியல. சும்மா தான் காட்டான் மாதிரி மீசைய முறுக்கி விட்டுக்கிட்டு அலைய வேண்டியது..

உனக்கு கொழுப்பு கூடி போச்சுடி அல்லிராணி. இப்போ என்ன தான்டி பன்னனுங்குற.

இந்த இம்போர்ட் எக்ஸ்போர்ட்னு வார்த்தை எல்லாம் கேள்வி பட்டுருக்கியா காட்டான்.

ஹான் என்று முழித்தான்.

தொடரும்.

இதற்கு முன் மூன்று கதைகள் எழுதியிருக்கிறேன் வேறொரு தளத்தில். இருந்தும் நான் புது எழுத்தாளர் தான். படித்து விட்டு ஏதாவது தவறுகள் இருப்பின் சுட்டிக்காட்டி என் எழுத்துக்களை மேம்படுத்த உதவுமாறுக் கேட்டுக் கொள்கிறேன் தோழமைகளே..

நன்றி 🙏..

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
7
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    7 Comments

    1. மிக சிறப்பு 👌👌👌கதாபாத்திரங்களின் பெயர்கள் அருமை👏👏👏 தொடக்கம் சிறப்பு👍👍👍

    2. தொடக்கம் அருமை சகி. வாழ்த்துக்கள். பிரதிலிபியில் நீங்கள் எழுதுவதை படிக்கமுடியலை இதில் படிக்க முயற்சிக்கிறேன்

      1. Author

        நன்றிங்க சகி. உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றிங்க.

      2. யார் அந்த அல்லி ராணியா இருக்கும்🤔🤔🤔🤔 படைப்பு வெற்றி பெற வாழ்த்துகள் சிஸ்🥳🥳🥳🥳🥳

    3. மிக்க நன்றிங்க. தெடர்ந்து படித்து ஆதரவு தாருங்கள்.

    4. கதை மாந்தர்கள் மனதை கொள்ளை கொண்டு விட்டனர். மனதிற்கு பிடித்தமான குடும்பக் கதை. நகைச்சுவையும், அழுத்தமும் கொண்ட சிறப்பான எழுத்து நடை. மேலும் படைப்புகளை தொடர வாழ்த்துகள்.