Loading

டீஸர்…..

 

“அதுக்கு என்ன மித்தி செய்ய சொல்ற. எனக்குன்னு இங்க  யாராவதும் இருந்தா கூட யோசிக்கலாம். அப்பிடித்தான் யாரும் இல்லையே.” என்று அவன் சோகமாய் சொல்ல.

பதிலேதும் இல்லை அவளிடம். நீண்ட மௌனம், பின் அவளே தொடர்ந்தாள். “அறிவு செகண்ட் இயர்ல ஒரு தடவ எனக்கு நீ ப்ரொபோஸ் பண்ணினல….” என்று அவள் முடிக்கும் முன்னே. 
 
“அதத்தான் நீ ரிஜெக்ட் பண்ணிட்டயே, அத ஏன் மித்தி இப்போ ஞாபகப்படுத்துர.” என்றவன் சற்று நிறுத்தி, “என்ன மித்தி சொல்ல வந்த நான் குறுக்க பேசவே மாட்டேன் நீ முழுசா சொல்லு.” என்று ஆர்வமாய் கேட்க.
 
“இல்ல அறிவு அப்போ உண்மையா உன்மேல எனக்கு அப்டி எதுவும் தோணல. ஆனா இப்போ…..”
 
 
 
விக்கிரமங்களம் ஊராட்சி தங்களை அன்புடன் வரவேற்கிறது என்ற வரவேற்பு பதாகையை தாண்டி பேருந்து நிற்க. அதிலிருந்து அறிவு இறங்க, அங்கே டீக்கடையில் அமர்ந்திருந்த அறுபதுகள் அனைவரும் “வந்துட்டான்யா சிங்க குட்டி. வந்து நின்னான் பாரு, சரியான நேரத்துக்கு.” என்று ஒருமித்த குரலில் சொல்லிவிட்டு அவர்களுக்குள் எதை எதையோ பேசிக்கொண்டிருக்க. அறிவோ எதுவும் புரியாமல் வீட்டை நோக்கி நடக்க….. கால்களோ தானாக நின்றது அவள் வீட்டின் முன்பு.
 
 
சட்டை இல்லாத தன் உடலில் தோளை மட்டும் மறைத்து கிடந்த துண்டை எடுத்து கண்களை ஒத்தி எடுத்தவர். 
“அப்பா ஒண்ணு சொன்னா செய்வியா தங்கம். சத்தியம் பண்ணி குடு.” என்று அவர் கைகளை நீட்ட.
 
“அப்பா…… நீ மொத விசயத்தை சொல்லு. என்ன நடந்துச்சு. யார் என்ன சொன்னாங்க. அப்பறமா நான் சத்தியம் பன்றேன்.” என்றவளிடம்.
 
“தங்கம்…..  உன்கிட்ட சொல்லாம எங்க போக போறேன். என் குலசாமியே நீதான தங்கம். ஆனா சத்தியம் மட்டும் பண்ணு.” என்று விடாமல் அவர் பிடிவாதம் செய்ய.
 
“நீ என்ன சொன்னாலும் செய்வேன் ப்பா. சத்தியம்.” என்று சொல்லி அவள் அவர் முகத்தையே பார்க்க. 
 
“என்ன நடந்தாலும், யாருக்கு என்ன ஆனாலும் ஏன் இந்த ஊரவிட்டே போகவேண்டி வந்தாலும். அம்மாவும் நானும் உன்கூடவே இல்லனாலும் நீ படிச்சு பெரிய ஆளா ஆகி, இன்னைக்கு நம்மள காலுக்கு கீழ போட்டு மிதிக்கிற அம்புட்டு பயலையும் உன் முன்னாடி கை கட்டி நிக்க வைக்கணும் கண்ணு. அப்பத்தேன் இந்த அப்பன் கட்ட வேகும்.” என்று அவர் சொல்லிமுடிக்கும் முன்னே.
 
“அப்பா… பைத்தியமாப்பா நீ. இப்படியெல்லாம் பேசுனா உன்ன நானே கொன்னுடுவேன்…. என்ன நடந்துச்சுன்னு சொல்ல போறீயா இல்லையா…”….. என்று அவள் விடாப்பிடியாக நிற்க. நடந்ததை சொல்ல தொடங்கினார் அவர்.
 
 
*************************************
 
 
“அறிவு என்ன இப்டி நிக்குற. உன்ன தூக்கி வளத்தவரு அறிவு. என்னைவிட உன்னத்தான் அறிவு அவரு வளத்தாறு. காப்பாத்து அறிவு. காப்பத்துடா….” என்று அவள் தன்னை மீறி கத்த. 
 
“அடியேய் சிறுக்கி, எம்புட்டு கொழுப்பு உனக்கு. அய்யாவ பேர சொல்லி கூப்பிடுற. டா போட்டு பேசுற, இருடி உங்க அப்பன முடிச்சுட்டு வந்து உன்ன கவனிச்சுக்கிறோம்.” என்று சொல்லிய ஒருவன் “என்னடா வேடிக்கை பாத்துகிட்டு போடுங்கடா…..” என்று சொல்லவும். அறிவு ஒரு அடி முன்னாள் எடுத்து வைக்க, 
 
“அறிவு இனிமேல் நீ சின்ன வயசுல இருந்தே சொல்ற மாதிரி உன்ன  மரியாதையா கூப்பிடறேன் அறிவு. அய்யா அய்யான்னு கூட கூப்பிடறேன். நீ சொல்றதெல்லாம் செய்றேன். காலத்துக்கும் உனக்கு அடிமையா கூட இருக்கேன், எங்க அப்பாவ விட சொல்லு அறிவு. நீ சொன்னா விட்டுவாங்கியடா, விட சொல்லு அறிவு.” என்று சத்தமாய் பேச கூட திராணியத்து போய் அவள் கெஞ்ச. 
 
“அறிவு அண்ணேன், அவ பேசுறத கேக்காத. அவ எறிஞ்ச கல்லுதேன் உங்க சித்தப்பா மண்டைய பொலந்திருச்சு. பொழைக்கிறதே கஷ்டம் தெரியுமா.” என்று ஒருவன் சொன்னதும். முன்னே வைத்த காலை பின்னே வைத்தான் அறிவு…
 
 
” அப்பா……… அப்பா………..” என்றவள் அடுத்த முறை கத்த கூட குரல் வராமல் விக்கித்து அவள் நின்றுவிட, அங்கிருந்த மற்ற அனைவருமே அவரை மேலும் மேலும் வெட்டி சிதைத்து அங்கேயே உயிர் பிரிய செய்தனர். அத்தனையையும் எந்த குற்றவுணர்ச்சியும் இல்லாமல் வேடிக்கை மட்டுமே பார்த்து  கொண்டிருந்தான் அறிவிழந்த அறிவழகன்.
 
 
 
 
– இன்பா செல்வம்
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்