Loading

      எண்ணங்கள் எல்லாம் நீயாகி போனாய். பைத்தியம் ஆகி போனேன் என்று தனது டைரியில் எழுதினா மாதங்கி. கல்லூரியில் அறிவியல் படிப்பை  விருப்பமுடன் எடுத்து படிக்கிறா. நம்ம ஹீரோ கம்ப்யூட்டர் சயின்ஸ் டிபார்ட்மென்ட்.

 

காதல் மலர்ந்தது எப்படி? யாரும் அறியாத ஒன்று. இங்கே  பார்க்காமலே வருகிறது. மாதங்கி அதிகாலையில் உறங்கிக்கொண்டிருந்தாள். அப்போது அவளுக்கு ஒரு கனவு வந்தது.  ஒரு ஆடவன் அவளைத் தொட்டு தூக்குவதுபோல், அவள் முகத்தோடு முகம் உரசி, மூச்சுக்காற்றை  அவளுக்குள் செலுத்தியது போல் உணர்ந்தாள். இந்தக் கனவு காணும்போது  வயது என்னவோ 16.

 

அன்றைக்கு கனவு போலிருந்தது. கல்லூரியில் சேர்ந்த முதல் நாள்  மாதங்கியின் நண்பர்களும்  சிரித்துப் பேசிக்கொண்டு  பேருந்துக்காக காத்து கொண்டிருந்தனர். ஏய் நீ ரொம்ப லக்கிடா. மச்சி   ஜாயின் பண்ண அன்னைக்கு  உனக்கு பிறந்தநாள். விஷ் யு ஹாப்பி பர்த்டே டூ யூ. என்று லதா கூறினாள். அவளைத் தொடர்ந்து தேவிகா, மானசி , சரத் என்று வாழ்த்த  அவள்  தேங்க்யூ என்று சொன்னாள்.

 

அவளுக்கு அதிர்ஷ்டம்  அவளுடன் படித்த பெரும்பாலும் அவள் குரூப்ல சேர்ந்ததுதான். எனவே  அனைவரும்  அவள் பிறந்தநாளை  சிறப்பாக கொண்டாட அவள் வீட்டுக்கு செல்வதாக முடிவு இருந்தது.

 

காலையில் பஸ் ஏற ரோடு கிராஸ் பண்ணும் போது அவள் மேல அந்த கார் மோதி கீழே விழுந்தா.

 

தலை முழுவதும் ரத்தம். காரில் இருந்து வந்த அருண் அவளை தூக்கி ஹாஸ்பிடல் சென்றான். டாக்டர் அவளை பரிசோதனை செய்து பார்த்து ” மிஸ்டர் அருண், அவங்களுக்கு பிளட் ரொம்ப லாஸ் ஆகி இருக்கு. பி + பிளட் கிடைக்க ரெடி பண்ணுங்க. அவங்க பெத்தவங்களுக்கு சொல்லிடுங்க. “

 

அருண் உடனே ” டாக்டர் என் பிரிஎண்ட் பாலா அந்த குரூப் தான். அவனுக்கு கால் பண்றேன். “

 

ஹலோ பாலா நான் அருண். நம்ம ரோடு சைடு ல என்று ஆரம்பித்து எல்லாவற்றையும் சொல்ல பாலா அடுத்த 15 நிமிடத்தில் அங்கு வந்தான்.

 

அவன் ரத்தம் குடுக்க, அவள் உயிர் பிழைத்தாள். கிளம்பும் போது பாலா அவளை பார்க்க தன்னை மறந்து நின்றான். எவ்ளோ அழகு. குழந்தை போல இருக்காளே. என்று மனது சொல்லியது. அவள் காதருகே ரொம்ப பிடிச்சுருக்கு உன்னை. என்று மட்டும் கூறி சென்றான்.

 

அந்தக் குரல் மட்டும் அவளுக்கு ஆழமாய் பதிந்து இருந்த ஒன்று. கல்லூரியில் பாலா அருண் இருவருமே ஒரே குரூப் தான். அருண் அவள் அழகில் மயங்கி காதலிக்க தொடங்கினான். இதை உணர்ந்த பாலா சொல்ல முடியாமல் தவித்தான்.

தன்னை காப்பாற்றியவன் என்பதால் அருணிடம் மாதங்கி சகஜமாகவே பழகினா.

 

தேவிகா  : ” மாதங்கி என்னடி சீனியர் உன்னையே சுத்துறான். என்ன லவ்வா?. ஆளு செம இருக்கான் டி .”

 

மாதங்கி:” அப்படி எல்லாம் இல்லடி. என் காதல் வேற. அவர் என் உயிரை காப்பாற்றாமல் இருந்தா இன்னிக்கு நான் உயிரோடு இருந்திருக்க மாட்டேன். அதுவுமில்லாம  அவர் நல்ல டைப். “

 

தேவிகா :” நீ யாரையாவது லவ் பண்ணுறியா? “

 

மாதங்கி :” என்னோட லவ் வேற. நான் அவரை பார்த்ததும் கிடையாது . பேசியதும் கிடையாது. சொல்லப்போனா யாருனே தெரியாது “

 

தேவிகா :” ஏய் என்ன? கதை விடுறியா? கடுப்பு ஏத்தாத டி. என்னடி பிரச்சினை உனக்கு. நல்ல அம்மா அப்பா. வீட்டுக்கு ஒரே பிள்ளை. நீ சொல்றதை பார்த்தா “

 

மாதங்கி:” நீ கேக்குற ஒவ்வொரு கேள்வியும் நான் தெனம் தெனம் எனக்கு நானே கேட்கிறேன். ஏதோ ஒரு உந்துதல். என்னைத்தேடி வான்னு கூப்பிடுது. அதை மீற முடியல.  பைத்தியக்காரத்தனமா இருந்தாலும், கிருஷ்ணனை காதலித்த  மீராவை ஏத்துக்கலையா? ராதை காதலி னு நாம  சொல்ல வில்லையா? அது போல தான் இதும். “

 

தேவிகா மலைத்து போனாள். சிறு வயது முதல் இவளை பார்ப்பவள். அவள் ஒன்று நினைத்தால் தன்னை மாற்றிக் கொள்ள மாட்டாள் . அது அவளுடைய தாய் தந்தையருக்கு தெரியும். காலம்தான் அவளுக்கு பதில் சொல்ல வேண்டும். 

 

அருண் :” டேய் பாலா நான் மாதங்கி கிட்ட ப்ரொபோஸ் பண்ண போறேன். அவ இல்லைனா எனக்கு வாழ்க்கையே இல்லை டா “

 

பாலா : ” கண்டிப்பா அவ உனக்கு தான் டா மச்சான் ” என்றான் தன் மன வலியை மறைத்து வைத்து கொண்டு.

 

அன்று காதலர் தினம். 14 அருண் கையில் சிவப்பு ரோஜா பூகொத்து வாங்கி கொண்டு பாலாவை காண சென்றான். அவன் ஏதோ ஒரு யோசனையில் இருந்தான். பிறகு குளிக்கச் சென்றான். உள்ளே வந்த அருண் அங்கு இருந்த பாலாவின் டைரியை  ஆச்சரியத்துடன் பார்த்தான்.

எல்லாவற்றையும் கூறுபவன்  தன்னிடம் மறைக்காதவன்  அப்படி என்ன இருக்கும் அதில்? குளிக்க தானே போயிருக்கான். வரதுக்குள்ள என்னன்னு பாப்போம். அப்படி இருந்தும் மனசாட்சி உறுத்தியது. முதல் பக்கத்தைப் பார்த்தவன் மனதிற்குள்  ஆயிரம் சுனாமிகள்.

 

      அருண் இன்று வாழ்வது   பாலா தந்த பிச்சை. சிறுவயதிலேயே தாய் தந்தை இருந்த அவனுக்கு  அனைத்துமாக இருப்பவன் பாலாவும் பாலாவின் அப்பாவும் தான். இங்கே இவன் இப்படி ஒரு செயலை செய்திருப்பான் என  அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை  .

 

          கல்லூரி வாசலில் அனைத்து ஆண்களும் பிடித்தவர்களை பார்க்க, பெண்கள் உள்ளே ஆசைகள் வைத்து கண்டும் காணாமலும், சிங்கிள் எல்லாரும்  கடுப்புடன் காத்திருக்க, அருண் மனசாட்சி அவனிடம் கேள்விகள் ஆயிரம் கேட்டது.

 

” டேய் உன் லவ் காக அவன் குடுத்த ரத்தத்தை நீ தான் குடுத்தனு சொல்லி வச்சு இருக்க. இந்த விஷயம் ரெண்டு பேருக்கும் தெரியாது. இது தப்பு இல்லையா?. உனக்கு அவ்ளோ செஞ்சிருக்கான். அவன் மனசுக்குள்ள என்ன இருக்குன்னு டைரி படிச்ச உனக்கு தெரியலையா? என் நண்பனுக்கு துரோகம் செய்ய முடியலன்னு  அவன் எழுதியிருந்தது  உனக்கு உரைக்க வில்லையா? பாவண்டா அவ. நீ உன்னை காதலிக்கிற ஷாலினியை மேரேஜ் பண்ணிக்கோ. அதுதான் சரிவரும். “

 

என்ன செய்தோம் எதுவும் அவனுக்கு தோணவில்லை.  மனதில் ஆயிரம் யோசனை. கண்ணில் அவள்  மனதில் நட்பு என்று எண்ணியபடியே கல்லூரி வந்தான்.அப்போது அங்கு வந்த   பாலா  ” என்னடா ப்ரொபோஸ் பண்ண போகலையா? கண்டிப்பாக ஒன்னு ஏத்துகுவா மச்சான். என்று கூறி முடிக்கும் முன்னே மாதங்கி வந்துசேர்ந்தா.

 

   “உங்க பேர் என்ன?”

 

    “என் பெயர் பாலா “

 

      “இதுக்கு முன்னாடி நீங்க என்ன பார்த்து இருக்கீங்களா?”

 

     “அது வ….ந்து…. ஏன் கேக்குறீங்க?”

 

       “அருண் யாரு இது? தயவுசெஞ்சு உண்மைய சொல்லு”.

 

         “என்னமா என்ன ஆச்சு? மாதங்கி ஆர் யூ ஓகே? “என்று அருண் கேட்க,

 

        “இல்ல இது நிச்சயமா நடக்கல. நான் உங்கள முன்னாடியே பார்த்து இருக்கேன் பாலா”.

 

        “அதுக்கு வாய்ப்பே இல்லை”. பாலா கூறி முடித்தான்.

 

            “என்ன ஆச்சு? “ஷாலினி அங்கே வந்தாள். அவளுக்கு தெரியும் அருண் அவளை நேசிப்பது. கண்களில் காதல் விழிகள் இருந்தது  

 

 

            பாலாவை  சட்டென்று மாதங்கி கட்டியணைத்தாள். இது யாருமே எதிர்பார்க்காத ஒன்று. பாலா கூடத்தான்.

 

           “நீங்க பாலா வா? என் கனவில் வந்தது நீங்கதானே பாலா. பைத்தியக்காரி மாதிரி சுத்திட்டு இருந்தேன். எல்லா பசங்க மத்தியில் உங்களுக்கு தேடினேன். ஆனா இன்னிக்கு இந்த டிரஸ்  பார்க்கவும் தான் எனக்கு அடையாளம் தெரியுது. சொல்லு பாலா சொல்லு. நீ எங்க பார்த்த?” என்று கதறினாள்.

 

  அருண் துடித்து நின்றான். பாலாவுக்கு அதிர்ச்சி. என்ன என்று தேவிகா அப்போது கேட்டாள்.  தோழியை காணோம் என்று தேடி அவள் பாலாவை கட்டிப்பிடித்து அழுததை கண்டு பதறிக் கொண்டு வந்தாள். தோழியின் குரல் கேட்டதும், அவளைக் கட்டிக் கொண்டு மாதங்கி, இவன் தான் டி என் கனவில் வந்தவன். என்னோடு வாழ்பவன். எப்ப பாத்தாலும் தெரியல. இந்த ட்ரஸ் ஓட நான் பார்த்திருக்கேன். அந்தக் குரல் சத்தியமா இவன் தாண்டி. ஆனா பொய் சொல்றான். ” அவள் கூறியதைக் கேட்டு அனைவரும் திகைத்தனர்.

 

         அருண் பாலாவை பார்க்க, இவ தான் உன் பொண்டாட்டியா? எனக்காக விட்டு குடுப்பியா?  பைத்தியமா நீ என்று கத்தினான். பாலா வாய் திறக்கவில்லை.

 

மச்சான் உன் டைரி நான் பார்த்துட்டேன். முதல் பக்கத்தில் அவளுடைய முகத்தை வரைந்து இருந்த. இரட்டைச் சடையோடு  அவளை நீ மணப்பது போல். அதிர்ந்துபோய் தான்   நான் இருக்கிறேன். சொல்லித் தொலை. என்னடா இது. கருமம் புடிச்ச லவ்வு” என்று தலையில் அடித்துக் கொண்டான்.

 

பாலா அனைவரையும் பார்த்து, மாதங்கி நான் ஒரு விபத்தில் இருந்து காப்பாற்றினேன். அவள் அழகில் மயங்கி அவள் பின்னாடியே சென்றேன். என்னைப் பார்த்து அவளுக்கும் பிடித்து இருந்தது. என்னால்தான் அவளுக்கு அந்த விபத்து நடந்தது. அது போலத்தான் கல்லூரியிலும் அவள் சேர்ந்த முதல் நாள் அவளைக் கண்டு   சந்தோசத்தில் ஹாய் பொண்டாட்டி என்றேன். அப்போதும் எதிர்பாராத விபத்து நடந்தது. கூட்டம் கூடியதால் அருண் பார்த்ததால் நான் அமைதியாக சென்று விட்டேன். அருண் அவளை நன்றாக பார்த்துக் கொண்டான். அவளை அவன் நேசிப்பதை புரிந்து கொண்டேன். ரத்தம் நான்தான் கொடுத்தேன். அவளை மிகவும் பிடிக்கும் எனக்கு.  அதைவிட என் நண்பன் பாவம் அல்லவா? “

 

பாலா கூறி முடிக்கவும், மாதங்கி அவள் கன்னத்தில் பளார் என்று அறைந்தாள். படுபாவி, உன்னைத் தேடி அலைகிற மனசுக்கு இன்னொருத்தன் வர முடியுமா? என்று கத்தினாள்.

 

அப்போது அருண் அவளைப் பார்த்து, ஹலோ நான் லவ் பண்றது ஷாலினியை. நீங்க எதுக்கு சண்டை போடுறீங்க? வா டார்லிங் நாம ரொமான்ஸ் பண்ணலாம் என்றபடியே ஷாலினியை கையில் தூக்கினான்.

 

இப்பொழுது பாலாவும் மாதங்கி யும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். இருவர் கண்ணிலும் காதல் இருந்தது. யாரோ என்று இத்தனை நாள் இவள் தேடி அலைந்தாள் . அவனோ இவளைத் தன் மனைவியாகவே எண்ணினான். யார் காதல் உயர்வு என்று சொல்வது?

இருவரும் கண்ணோடு கண் நோக்கி, அவளை அவன் கட்டி அணைக்க, அவன் மூச்சுக்காற்று இவளோடு கலந்தது. அவன் முத்திரையை உதடுகளில் பெற்றவள் மெல்ல சொன்னாள் ” மாமா ஐ லவ் யூ 🌹”

 

பாலா : ” மை செல்ல பொண்டாட்டி என்று கட்டியனைத்தான். காதல் வாழ வைக்கும். இவர்கள் நலமாக வாழ வாழ்த்துவோம்.❤❤❤❤❤

 

 

    

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. கதையின் போக்கு மிகவும் அழகாக இருந்தது. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.