Loading

சென்னை கமிஷ்னர் அலுவலகம் காவல்துறை உதவி கண்காணிப்பாளர் அறையில் மேசையின் ஒருபக்கம் ஆதவ் கிருஷ்ணன் அமர்ந்திருக்க மறுபக்கம் ஹேமாவுடன் ஜெனிஃபரும் கிரிதரனும் அமர்ந்திருந்தனர்.

தனக்கு வேண்டிய விவரம் அனைத்தையும் ஹேமாவின் வாய்மொழியாக பொறுமையாய் கேட்டு தெரிந்து கொண்டவன் “உங்க பொண்ணு சொல்றது பார்த்தா இது தான் அவனோட ஃபர்ஸ்ட் அட்டம்டா இருக்கணும் போட்டோ ஓகே கைடன் கேமரா விசாரிச்சா தான் தெரியும்” எனக்கூறி அமைதியாய் அவர்களைப் பார்க்க அவர்களும் இவனையே பார்த்துக்கொண்டிருந்தனர் அடுத்து என்ன என்று.

“ஓகே நெக்ஸ்ட் இன்னைக்கும் அவன் உனக்காக வெயிட் பண்ணலாம் சரியா” என்று கேட்க அவள் பயத்துடன் ஆமாம் என்பதாய் தலையசைத்தாள்.

“ஒகே அப்போ கிளம்பலாம் நீங்க அவன அடையாளம் காட்டினால் போதும் அதுக்கப்புறம் நான் பாத்துக்கறேன்” என்று கூற அவள் பதட்டமாய் தன் தந்தையை பார்த்தாள்.

“பயப்பட வேண்டாம் உங்க அப்பாவும் நானும் உங்க பக்கத்துல தான் இருப்போம்” எனக்கூற குத்துமதிப்பாய் தலை உருட்டினாள்.

அவர்கள் அறையை விட்டு வெளியே வந்ததும் ஜெனிஃபர் தன்னுடைய ஸ்கூட்டி சாவியை ஹேமாவின் கைகளில் கொடுத்து “தைரியமா இரு” என்றவர் தன் துணை இதற்குமேல் தேவையில்லை என அங்கிருந்து கிளம்ப பார்க்க அவர் கையை இறுக்கமாக பிடித்துக்கொண்டு பார்வையால் கெஞ்சினாள்.

“கமான் ஹேமா நீ தைரியமான பொண்ணு இந்த ஒரு விஷயத்தால உன் குணம் மாற அனுமதிக்கக் கூடாது. எல்லாம் சரியாயிடும் இதுக்கு மேல எதுக்கும் பயப்படாத உன்னோட அப்பா உன்னோட ஒவ்வொரு அடிலையும் உனக்கு துணையா இருப்பார் வீட்டுக்கு போய் சேர்ந்ததும் எனக்கு கால் பண்ணு சரியா” என்றவர் இவர்களையே பார்த்துக் கொண்டிருந்த இரண்டு காவலர்களிடமும் தலையசைத்து விடைபெற்றார்.

ஹேமாவிற்கும் அவர் கூறியது விளங்கியது தான் ஆனாலும் இவ்வளவு நேரம் அவருடன் இருந்தது பாதுகாப்புணர்வை கொடுத்திருக்க இன்னும் அதற்க்குள்ளே இருக்க விரும்பினாள் ஆனால் இப்படியே இருந்தால் இந்த பிரச்சினையை விட்டு வெளியேற முடியாது என்பதும் புரிய தன் மனதை திடப்படுத்திக் கொண்டு தந்தையை அனுமதிக்காய் பார்த்தாள்.

அவரும் அவள் தலையில் கை வைத்து “போமா அப்பா உன் பின்னாடி தான் வருவேன்” என்றதும் ஸ்கூட்டியை கிளப்ப “அவன் எப்பவும் உங்கள பாக்குற இடத்துக்கு முன்னாடியே உங்க அப்பா போனுக்கு கால் பண்ணுங்க கனெட்லையே இருப்போம் உங்களுக்கும் தைரியமா இருக்கும்” என்று ஆதவ் கிருஷ்ணன் சொன்னதும் தலையசைப்போடு அங்கிருந்து கிளம்பினாள். உள்ளுக்குள் தனக்குத்தானே தைரியம் கூறிக்கொண்டாலும் ஏனோ வாய்திறந்து பேச தான் வரவில்லை அந்தப் பிரச்சினையின் தாக்கத்தால்.

ஹேமா எப்போதும் தன்னை வழிமறிக்கும் இடத்திற்கு முன்னாடியே அவனை பார்த்து விட்டவள் தன் வாகனத்தின் வேகத்தை குறைத்து தந்தைக்கு அழைப்பு விடுத்தாள்.
இவள் வருவதை பார்த்தவன் கண்களில் ஆச்சரியபாவம் காட்டி “குட்டி” என்றவாறு மெதுவாய் வந்து கொண்டிருந்த ஸ்கூட்டியின் முன்னால் கை வைத்து நிறுத்த இவள் கைகளோடு சேர்ந்து ஸ்கூட்டியும் நடுங்க ஆரம்பித்துவிட்டது.

“எண்ணிக்கை கூடிகிட்டே இருக்கு எப்ப வர போற” என்றவாறே அவள் கைகளை தொட உடலில் பரவிய அருவருப்போடு ஆக்ஸிலேட்டரை முறுக்கி வேகமாக அவனை கடந்து சென்று விட்டாள்.

ஆதவ் கிருஷ்ணனின் அருகிலிருந்து ஸ்பீக்கரில் இருந்த போன் மூலம் அந்த வார்த்தையை கேட்ட கிரிதரனின் கைகள் கோபத்தில் முறுக்கேறினாலும் கண்கள் கலங்கிவிட்டது தன் மகளின் நிலையை நினைத்து.

அவரை வீட்டின் வாசலில் இறக்கி விட்டவன் “இனிமே நீங்க ஒர்ரி பண்ணிக்க வேண்டாம் நான் பாத்துக்குறேன்” என்று உறுதியளித்து சென்றான்.

கிரிதரன் வீட்டுக்குள் நுழைந்ததும் “ஏங்க இந்த பொண்ண பாருங்களேன் நான் இவளுக்காக வாசல்லயே நிற்கிறேன் வந்தவட்ட மேம் வீட்டுக்கு போனியே என்ன ஏதுனு கேட்டா திரும்பிக்கூட பாக்காம ரூமுக்குள்ள போய் கதவை சாத்திக்கிட்டா”.

“விடும்மா அவளோட மேம் ஏதாவது திட்டி இருப்பாங்க”.

“அது சரி வெளியே பாத்தீங்களா வேற யாரோட ஸ்கூட்டிலியோ வந்திருக்கா இவ ஸ்கூட்டி என்ன ஆச்சுன்னு தெரியலியே”.

“அவ ஸ்கூட்டில ஒரு சின்ன பிராப்ளம் ஆயிடுச்சு நான்தான் சர்வீஸ் விட்டேன் இது அவ மேம் ஸ்கூட்டியா இருக்கும் நம்மது ரெடியாய் வந்ததும் கொடுத்துடலாம்” என்றவரின் மனம் மகளை நினைத்து கவலையில் இருந்தாலும் அவரின் வாயிலிருந்து தன் மனைவியை சமாளிப்பதற்கான சமாளிப்புகள் இத்தனை வருட பழக்கத்தில் தங்குதடையின்றி வந்துகொண்டிருந்தது.

“இத அவ நின்னு சொல்றதுக்கு என்ன சரி விடுங்க நான் உங்களுக்கு காபி கலந்து கொண்டு வரேன்” என்றவர் எப்போதும் போல அவர் சமாளிப்புகளை ஏற்று தன் வேலையை பார்க்க சென்றார்.

ஹாலை மொத்தமாய் இருட்டாக்கி தொலைக்காட்சியில் அண்ணாத்தை படத்தை ஓடவிட்டிருந்த சூர்யா சிரித்து சிரித்து வயிறு வலித்ததால் சிரிப்பை அடக்கியபடி சோபாவில் தன் பக்கத்தில் அமர்ந்திருந்த தோழியை பார்த்தாள் அவளோ கன்னத்தில் கை வைத்து கடனே என அமர்ந்திருந்தாள்.

“என்னடி ரியாக்க்ஷன் இது இத மட்டும் சூப்பர்ஸ்டார் ஃபேன்ஸ் பார்த்தாங்க உனக்கு இங்கையே சமாதி கட்டிடுவாங்க”.

“என் முகத்தை நான் எப்படி வச்சுக்கனும்னு கூட அடுத்தவங்கள கேட்கனுமா ஏன்டி உயிர வாங்குற அதான் இந்த படம் மொக்கைனு உலகமே சொல்லுதே ஏதாவது நல்ல படமா போட்டா என்ன”.

“எவ்வளவு தைரியம் இருந்தா நீ சூப்பர் ஸ்டார் படத்தையே நல்லா இல்லைன்னு சொல்லுவ பல ஹீரோஸ் நடிச்ச நடிப்ப ஒரே படத்துல எப்டி கொட்டியிருக்கார் பாரு அதையே நல்லா இல்லைன்னு சொல்லிடுவியா எங்க சொல்லேன் சொல்லித்தான் பாரேன்” என்று அவளும் மூச்சுவாங்கி தன் நடிப்புத் திறனை காட்ட “அத நான் ஏற்கனவே சொல்லிட்டேனே ஏண்டி இப்படி உயிர வாங்குற” என்ற இரு கைகளாலும் தன் முகத்தை முடி கொண்டாள்.

அப்போது அவர்கள் வீட்டின் கதவு திறக்க கண்களில் சந்தோஷம் பொங்க தன் முகத்தில் இருந்த கைகளை விலக்கிப் பார்த்தவள் உடனே தன் இருக்கையிலிருந்து எழுந்து “அம்மா வந்துட்டீங்களா இவ என்ன கொலை பண்ண பாக்குறா” என்று ஜெனிஃபரை கட்டிக்கொண்டாள்.

“பாரு பேபிமா உன் புருஷனோட ஃபேவரிட் ஆக்டரோட படத்தை பார்க்க சொன்னா நான் அவளை கொலை பண்ற ரேஞ்சுக்கு பேசுறத”.

“போதும் போதும் உன் அப்பாவுக்கு பிடுச்சா எல்லாருக்குமே பிடிக்கனுமா என்ன எனக்கே பிடிக்காது” என்று கூறி காவியாவுடன் கை அடித்துக் கொள்ள “பேபிமா” என்று கோபம் கொண்டு சோபாவை தன் கையால் குத்தியவள் அதற்கு மேல் முடியாமல் சிரித்து விட்டாள் “செம காமெடி படம்மா” என்று.

“உன்கூட சேர்ந்து நானும் தான் இந்த கர்மத்த பாத்திட்டிருந்தேன் எனக்கு ஒரு சின்ன காமெடி கூட தெரியல இதுல நீ அப்படி என்னத்த பார்த்துதான் சிரிக்கிறியோ”.

“அதுக்குனு ஒரு ரசன வேனும் அத உன்கிட்ட போய் எதிர்பார்க்க முடியுமா”.

“சரி சரி ரெண்டு பேரும் சண்டை போட்டது போதும் கவிமா நீ வீட்டுக்கு போடா”.

“ஏன்மா வெளிய கிளம்புறீங்களா?”

“இல்லடா வீட்ல அம்மா தனியா இருப்பாங்க நீ போ”.

“சரிமா பாய் சூர்யா” என்றவள் அவள் வீட்டிற்குள் நுழையவும் கதவடைத்து மீண்டும் தன் வீட்டை இருட்டாக்கி சோபாவில் தன் மகள் அருகே வந்தமர்ந்தார்.

“என்ன பிரச்சினை பேபிமா?”.

“ஏன் என்ன பிரச்சனை?”.

“உன் ஸ்டுடென்டுக்கு என்ன பிரச்சனை?”.

“என் ஸ்டுடென்டுக்கு பிரச்சினைன்னா தான் நான் வீட்டுக்கு கூட்டிட்டு வரணுமா?”.

“உன்ன பத்தி எனக்கு தெரியாதா பிரச்சினை இல்லேன்னா காரணத்தை அப்பவே சொல்லி இருப்பியே”.

“ஒத்துக்குறேன் என் பொண்ணு ஸ்மார்ட் தான்” என்றவர் அவள் தோளை சுற்றி கை போட்டவாறு “அந்த பொண்ணு பேரு ஹேமா யாவனோ தப்பா போட்டோ எடுத்து மிரட்டி இருக்கான்”.

“சே இந்த மாதிரி ஆளுகள நடுரோட்டில் நியூடா ஓட விடனும் அப்பவும் புத்தி வர்ரது சந்தேகந்தான்” என்றவளின் முகம் கோபத்தில் சிவந்தது அந்த இருட்டிலும் தாய்க்கு தெரிந்தது.

“நீ கோவப்படுறதுனால எதுவும் ஆகப்போறதில்லை வீனா டென்ஷன் ஏத்திக்காத அவ அப்பா இன்ஸ்பெக்டர் தான் அவர்கிட்ட பேசியாச்சு ஏசிபியும் பார்த்தாச்சு அவரு பாத்துக்குறேன்னு சொல்லி இருக்காரு”.

“போலிசா இருந்தா மட்டும் என்னம்மா பண்டிடுவாங்க அவன்டேந்து போட்டோஸ புடுங்கிட்டு இரண்டு தட்டு தட்டி விடுவாங்க அவ அப்பா போலீஸா இருந்தாலும் இதுக்கு கம்ப்ளைன்ட்டா கொடுக்க போறாங்க”.

“சூர்யா”.

“எல்லாத்துக்கும் காரணம் இந்த சொசைட்டி தான் ஏம்மா இது இப்படி இருக்கு இந்த விஷயம் வெளிய வந்தா கூட எல்லாரும் அந்த பொண்ண தான் தப்பா பேசுவாங்க ஒருத்தரோட விரல்கூட அந்த நாய் பக்கம் திரும்பாது பேசுறது பொண்ணாயிருந்தாலும் சரி ஆணாயிருந்தாலும் சரி எந்த பிரச்சனையானாலும் கைகாட்ட படுறது பொண்ணா மட்டும் தான் இருப்பா ஏம்மா?”.

“கம் டவுன் சூர்யா”.

“உனக்கும் நான் பெண்ணியம் பேசுற மாதிரி தெரியுதா நான் ரியாலிட்டிதானே சொல்றேன்” என்றவளுக்கு இயலாமையிலும் கோபத்திலும் கண்கள் கலங்கியது அவளின் நாடியைப் பிடித்து தன்னை பார்க்க செய்தவர் “என்ன இது சின்ன பிள்ளையாட்டம் இப்ப நீ கலங்குறதால ஏதாவது மாறிட போகுதா சொல்லு இதுக்குதான் உன்னை யோகா கிளாஸ் அனுப்புனே கொஞ்சமாது கோபத்தை கண்ட்ரோல் பண்ணுடா இந்த கோபம் உன்ன தான் பாதிக்கும் வேறு யாரையும் இல்ல”.

“எனக்கு புரியுதுமா தலை வலிக்குது நான் ரூமுக்கு போறேன்” என்று எழுந்து சென்றவளின் பின்னால் “காபி கொண்டு வரேன் லாக் பண்ணாத” என்ற தாயின் சத்தம் தொடர்ந்தது.

‘பிக்கப் மி பிக்கப் மி’ என்று எப்போதும் அவனை அழைக்கும் குரல் அந்த நடு இரவிலும் அழைக்க ஒரு கையால் காரை லாவகமாக ஒட்டியவாறே டெஸ்க் போர்டில் இருந்த ப்ளூடூத்தை எடுத்து காதில் மாட்டிக் கொண்டான்.

“இன்னும் தூங்காம என்னம்மா பண்றீங்க”.

“கோயிலுக்கு கூட்டிட்டு போன அம்மாவ அப்படியே விட்டுட்டு வந்தோமே வீட்டுக்கு போனாங்களா இல்லியானு தெரியாம நீ வேனா இருக்கலாம் அதுக்காக அம்மாவும் அப்படியே இருக்க முடியுமா அன்னைய நான் முடிஞ்சு அடுத்த நாளே ஆயிடுச்சு இன்னும் காணோம்னுதான் போனை போட்டேன் உடனே எங்க போட்டீங்கனு உன் மொக்கைய ஆரம்பிக்காத” என்று அவர் இடைவெளி விடாது பேச சிறு புன்னகையை முகத்தில் தவழவிட்டவாரே “முக்கியமான ஒருத்தர பார்கனும்மா” என்றான்.

“ஏன் அந்த அவர காலைல பார்க்க முடியாதா”.

“அவர் இந்த டைம் தான்மா எனக்கு கொடுத்தார்” என்றவாறே தன் பக்கத்தில் அமர்ந்திருந்தவனை பார்த்தான் அவனது கைகள் காரோடு சேர்த்து விலங்குமாட்ட பட்டிருக்க அவனும் இவனைத்தான் பார்த்துக்கொண்டிருந்தான்.

“என்னவோ போ கண்ணா உன்னை முதல் முதல்ல போலீஸ் டிரஸ்ல பார்க்கும் போது அவ்வளவு கர்வமா இருந்துச்சு ஆனா இப்ப எல்லாம் நீ ஏன்தான் இந்த வேலைக்கு போனேனு அடிக்கடி என்ன யோசிக்க வைக்கிற”.

“அம்மா” என்றவனின் குரலிலேயே அவன் சிரிப்பு தெரிந்ததோ என்னவோ “சிரிக்காதடா” என்று அதட்டினார் அவர்.

“சரி சிரிக்கல சொல்லுங்க”.

“நான் என்ன சொல்றது உனக்கு தெரியாதா என்ன போலீஸ்காரனுக்கு லீவு இருக்காது தான் ஃபுல்டே வேலை இருக்கும் தான் அதுக்காக வீட்டுக்கே வராம இருக்கனுமா நேரம் கிடைக்கும் போதாச்சு வீட்டுக்கு வரனும் தானே உனக்கு நேரம் கிடைச்சாலும் ஸ்டேஷன் ஸ்டேஷனா தான் சுத்துற”.

“விட்ட இந்த அஞ்சு வருஷமா நான் வீட்டுக்கே வரலைன்னு சொல்லுவீங்க போல”.

“ஆமா சொல்லுவேன் இல்லைனு சொல்லுவியா நீ” என்று கேட்கும் போது கார் கிரீச்சிட்டு நிற்கும் சத்தம் அவரை அடைந்தது உடனே “கண்ணா வீட்டுக்கு வந்துட்டியா” என்று மகிழ்ச்சி பொங்க கேட்டார்.

“மா சொன்னேனே முக்கியமானவரை பார்க்கணும்னு” என்றவனின் குரலில் இத்தனை நேரம் இருந்த சிரிப்பு மறைந்திருந்தது.

“ஓ இப்பதான் பாக்க போறியா என்ன கண்ணா இது ஒரு நாளைக்கு ஒரு வாட்டி முகத்தை காட்டலாம்ல”.

“மா நீங்க இருக்கீங்களே ஏமோஷனல் குயின் சரி நான் உங்களுக்கு அப்புறமா பேசறேன்”.

“கண்ணா” என அவர் ஏதோ கூற வர “பாய்மா” என்றவன் தன்பக்க கதவைத் திறந்து இறங்கினான். அங்கு இந்நேரமும் இவனுக்காக கதவைத் திறந்து காத்திருந்த அறுபது வயதைத் தாண்டிய தோற்றமுடைய ஒருவர் நின்றார்.

“நல்லா இருக்கீங்களா தாத்தா”.

“நான் நல்லா இருக்கேன் தம்பி இன்னைக்கு வரதா சொல்லலையே இங்க கிளீன் பண்ணி ரொம்ப நாளாச்சு” என்றவாறு அவர் தலையை சொரிந்து கண்களால் அந்த கட்டிடத்தை காட்டினார் அந்த பழைய காவல்நிலையம் தூசி படிந்திருந்தது.

“அதுக்கென்ன தாத்தா ஒரு நாள்தான் அப்புறமா கிளீன் பண்ணிக்கோங்க” என்றவன் இன்னொரு பக்க கதவைத்திறந்து அந்த முக்கியமானவனின் கையை விடுவித்து தன்னோடு இழுத்துக்கொண்டு அந்த கட்டிடத்தினுள் நுழைந்தான்.

அங்கு ஏற்கனவே ஒரு அறையில் மட்டும் லைட் எரிய அங்கு இழுத்து சென்றவன் “எப்படி இருக்கு மிஸ்டர் கந்தன் இந்த பிளேஸ் உங்களுக்கு பிடிச்சிருக்கா” என்று கேட்க அவன் விழிகள் பயத்துடன் அவ்விடத்தை வட்டமிட்டது.

“வாங்க உட்கார்ந்து பேசலாம்” என்று அங்கிருந்த ஒரு சேரில் அவனை தள்ளியவன் தானும் ஒரு சேரை அவனுக்கு நேராய் இழுத்துப்போட்டுக்கொடு அமர்ந்தான்.

“கூல் மிஸ்டர் கந்தன் எனக்கு தெரியும் உங்களுக்குள்ள இப்ப பல கேள்விகள் இருக்கும் எதுக்காக உங்க குரூப்லேந்து உங்களை மட்டும் தனியா கூட்டிட்டு வந்திருக்கேன்? அதுதான் உங்க முதல் கேள்வி கரெக்டா சொல்லிட்டேனா போலீஸ்காரனாச்சே கரெக்டா தான் சொல்லியிருப்பேன் இல்லையா” என்று அவன் சின்னப் புன்னகையோடு கேட்க இவனுடல் பயத்தில் நடுங்கியது.

“மிஸ்டர் கந்தன் உங்க குரூப்ப இந்த வீக்ல பாக்கலாம்னு நெனச்சேன் பட் நீங்க இன்னைக்கே பார்க்க வச்சுட்டீங்க அதுக்கு ஒரு தேங்க்ஸ்” என்றவன் இரு விரல்களால் சல்யூட் வைக்க அவனது சாதாரணமான பேச்சிலும் முகத்தில் இருந்த புன்னகையிலும் குழம்பியவன் “சார்” என்று இழுத்தான்.

“கூல் மிஸ்டர் கந்தன் என்ன சொல்லனுமோ சொல்லுங்க”.

“என்ன மட்டும் எதுக்கு சார்”.

“உங்களுக்கு என்ன பத்தி தெரியாதுல நான் ஏசிபி அதவ் கிருஷ்ணன் என்னோட பேரு அப்புறம் இது என்னோட காவல் கோட்டை உங்கள மாதிரி பெண்கள்கிட்ட பிரச்சினை பண்றவங்களுக்கான இடம்” என்றவனின் பேச்சில் அவன் சகலமும் ஒடுங்கிவிட்டது.

“ச ச சா”.

“என்னாச்சு பாம்பு வந்திருச்சா” என்றவாறு அவன் தன்னைச் சுற்றிப் பார்க்க “சா சார் தெரியாம பண்ணிட்டேன்”.

“ஐ நோ மேன் திருட்டு உனக்கு தெரியாது தான் அதான் உனக்கு தெரிஞ்ச வேலை பார்த்திருக்க”.

“இல்ல சார் இது தான் சார் இதுக்கு முன்னாடி இப்படி இல்ல சார்”.

“இதுக்கு முன்னாடியும் மூனு வீட்டுல திருடி இருக்கீங்களே சார்” என்று அவன் கூற ஒரு நொடி முழித்தவன் “சார் மூளை கெட்டுப் போய் பண்ணிட்டேன் சார்” என்றான்.

“ஓ அப்படிங்களா சார் பிராப்ளம் இல்ல சார் கெட்டு போன மூளையை எப்படி சரி பண்ணனும்னு எனக்கு தெரியும் சார் சரி பண்ணட்டுங்ளா சார்” என்றவாறு எழுந்துவந்தவனின் வேகத்தில் இவன் சேரோடு சரிந்து விழுந்தான்.

“மிஸ்டர் கந்தன் எதுக்காக இப்படி உங்க டிரஸ் எல்லாம் அழுக்காக்குறீங்க கைடன் கேமரா வரைக்கும் டெவலப் ஆன நீங்க இப்படி அழுக்குல உக்காரலாமா கமான் எந்திரிங்க” என்று கை நீட்ட அவன் பின்னால் நகர்ந்தவாறே “அப்படி எல்லாம் இல்ல சார் கேமரா எல்லாம் இல்ல அந்த பொண்ணு தப்பா புரிஞ்சுடுச்சு போட்டோ… போட்டோ மட்டும் தான் மொபைல் தான்… இதுல தான்..” என்றவாறு தன்னிடமிருந்த மொபைலை நீட்ட அதை வாங்கி தன் பேன்ட் பாக்கெட்டில் வைத்துக் கொண்டான்.

“ஓகே கூல் மிஸ்டர் நீங்க டென்ஷனாக வேண்டாம் யார் யாரெல்லாம் உங்க கூட்டுனு சொன்னா உங்ககிட்ட கூட்டிட்டு வந்துடுவேன்”.

“இல்ல சார் இது அவங்களுக்கு தெரிஞ்சா கொன்னே போட்டுருவாங்க” என்று அவன் இதுவரைக்கும் பயந்தது ஒன்றுமே இல்லை என்பதுபோல் பயந்து அலற இவன் புருவங்கள் ஆச்சரியத்தில் ஏறி இறங்கியது.

🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
6
+1
0
+1
0

  உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

  2 Comments

  1. Archana

   ஆதவ்வோட ஆக்ஷன் ஸ்டார்ட் ஆகிச்சு இனி வாத்தி ரைட் தான் 💃💃💃💃💃💃💃💃💃💃

  2. Sangusakkara vedi

   Aadav action begins… Title card potachu… Anga potathum y en surya baby antha mokka padathukku sanda poduthu…. Baby ma nenga singham nu ninachuttu iruken… Enna emathiratha….
   Semma ud sis…. Waiting for next one..