Loading

“ஐயோ… வலிக்குது…. வேண்டாம்…. மன்னிச்சிடுங்க…. மன்னிச்சுடுங்க சார்…. இனிமே பொண்ணுங்களை கிண்டல் பண்ண மாட்டேன்…. என் மேல சத்தியமா சார்…. அம்மா மேல சத்தியமா…. சார் விட்டுருங்க சார்…. வலிக்குது சார்…” என ஒருவன் புழுவைப்போல் துடித்து கதறிக் கொண்டிருக்க அவனின் கதறலை கொஞ்சம் செவிமடுக்காது தன் வலது கரத்தில் இருந்த லத்தியால் அவனைப் போட்டு புரட்டிக் கொண்டிருந்தான் ஆறு அடிக்கும் குறைவான உயரத்தில் மாநிறத்தில் சூரியனாய் ஜொலித்துக் கொண்டிருந்தவன்.

“பொறுக்கி நாயே உன்ன படிக்க காலேஜ் அனுப்புனா அங்கவர பொண்ணுகளுக்கு நீ பாடம் எடுக்குறியா ஏன் உன் வீட்ல இருக்கு அம்மாக்கும் தங்கச்சிக்கு எடுக்க வேண்டியது தானே வெளியே தான் இருக்காங்க கூட்டிட்டு வரவா எடுக்குறியா” என்று கேட்டுக்கொண்டே ஏற்கனவே கன்னி சிவந்து இருந்த அவன் உடலில் மீண்டும் கோடு போட ஆரம்பித்தான்.

அவர்களுக்கு சற்று விலகி நின்றிருந்த இரண்டு கான்ஸ்டபிள்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு “பாவம் இப்பதான் காலேஜ் செகண்ட் இயர் இப்படி போட்டு அடிக்கிறாரே இந்த மனுஷன்”.

“வேற ஏதாவது தப்பு செஞ்சிருந்தா கூட இந்த அடி விழுந்திருக்காது போயும் போயும் பொண்ணுக கிட்ட வம்பு பண்ணி நம்ம சார் கிட்ட மாட்டியிருக்கான் விடுவாரா”.

“சரிதான் கொலை செஞ்சா கூட இவ்வளவு வாங்கி இருக்க மாட்டான் ஆனா ஏன்டா இந்த மனுசனுக்கு இதுக்கு மட்டும் இவ்ளோ கோவம் வருது”.

“நானும் மூணு வருஷமா உன் கூட தானே குப்பை கொட்டுறேன் எனக்கு மட்டும் ஞான திருஷ்டியா இருக்கு கண்டுபுடுச்சு சொல்றதுக்கு” என்று கடுப்பாக உள்ளே இருந்து வந்த “அம்மாஆஆஆஆ” என்ற அலறலில் மீண்டும் அங்கே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தனர் ஐயோ பாவம் என்று”.

***************

நடுரோட்டில் ஆண் பெண் வயது வித்தியாசமில்லாமல் கூடி இருக்க அதன் நடுவே தன் தோழி கைப்பற்றி இழுப்பதையும் பொருட்படுத்தாது தன் முன் நின்றவனின் சர்ட் கலரை இறுக்கிப் பிடித்து குலுக்கியவாறு “பொறுக்கி நாயே பொறுமையா இருக்கணும் பொறுமையா இருக்கணும் நான் யோகா கிளாஸ் எல்லாம் போய் வந்தா நீ நிமிஷத்துல அத எல்லாம் வீணாகிட்டு ஏகிட்டயே எகுறுறியா அப்போலேந்து பாத்துட்டே இருக்கேன் சும்மா சும்மா ஒரசிட்டே நிக்குற என்ன பார்த்தா எப்படிடா தெரியுது உனக்கு ஒ வீட்ல அம்மா இல்ல போய் அவள ஒரச வேண்டிதானே” எகிரிக் கொண்டிருந்தாள் நிலவென முகத்தையும் அதில் சூரியனாய் கோபத்தையும் சுமந்தவள்.

தான் அவளை சீண்டியதால் திட்டுகிறாள் என்று அமைதியாக இருந்தவன் அவளின் கடைசி வார்த்தையில் “ஏய்” என்று அவனும் துள்ள தன் தோழியிடமிருந்து கையை பறித்தவள் அவன் கன்னத்தில் தன் நான்கு விரல்களை பதித்தாள்.

“என்னடா என்ன ஒ வீட்ட சொன்னதும் ராசாவுக்கு ஏறியுதோ இன்னொரு தடவை நீ இப்படி பண்றது பார்த்தேன்” என்றவளின் விழிகள் ஒரு நொடி அவன் இடுப்பின் கீள் சென்று வர “அறுத்திடுவேன்” என்ற வார்த்தையுடன் தன் தோழியின் இழுவிசைக்கு ஏற்றவாறு நகர்ந்தாள்.

***************

நான் இப்பொழுது போய்விடுவேன் என்று அவனிடம் இருந்த பொறுமை எச்சரிக்கை கொடுக்க தன் அலுவலக அறையில் தன் முன்னால் இடப்பக்கம் அமர்ந்திருந்தவளை நோக்கி கூரான பார்வையை செலுத்தினான்.

அவனது பார்வைக்காகவே காத்திருந்தவள் போல் அவளும் “நான் உங்ககிட்ட ஒன்னு கேட்கலாமா” என்றால் அவன் பார்வையை நேருக்கு நேர் எதிர் கொண்டவளாய்.

தன் இடக் கையை தாடையில் பதித்தவனாய் மேல் கீழாக லேசாகத் தலை அசைக்க “உங்களுக்கு கல்யாணம் ஆகலைன்னு தெரியும் யாரையாவது லவ் பண்றீங்களா” என கேட்டாள் கூலாக.

இவளின் கேள்வியை எதிர் கொண்டவனோ முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாது மீண்டும் இல்லை என்பது போல் தலையசைப்பை மட்டுமே தர அவள் பக்கத்தில் இருந்துவளோ தான் இங்கேயே மயங்கி விழுந்து விடுவோமோ எனும் அளவுக்கு பதட்டமடைந்து தோழியின் கைபற்றி இழுத்தாள் ஆனால் அதை சற்றும் சட்டை செய்யாதவளாக “என்ன கல்யாணம் பண்ணிக்கிறீங்களா” என்று உதட்டில் சிறு புன்னகையுடன் அவன் பார்வையுடன் தன் பார்வையை பின்னிக் கொண்டு கேட்டாள்.

இதை கேட்டவனிடம் அப்போதும் ஒரு வித்யாசமும் தெரியவில்லை சிலை போல் பார்வையில கூட மாற்றமில்லாமல் அப்படியே உறைந்து இருந்தான்.

***************

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
2
+1
0
+1
0

  உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

  8 Comments

  1. hani hani

   நல்ல ப்ரப்போஸல்.. ரெண்டு ஒன்னுக்கு ஒன்னு ஏத்த ஜோடி தான். வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️❤️

  2. Archana

   டீசர் செம்மையா இருக்கு யாரு யாருக்கு பிரொப்போஸ் பண்ணினாங் ரிசல்டகாக வெளியிட்டிங்😎😎😎 படைப்பு வெற்றிபெற வாழ்த்துக்கள் 🥳🥳🥳.