செந்நிற வெய்யோன்
இளஞ்சூட்டு கதிர் பாய்ச்சி
சாளரம் வழி சாமரம் வீசிட!
ஆக்குபறை கருமை நீங்கி…
முன்னெற்றியில் நீர் சொட்டும்
பேதையவளின் மஞ்சளிட்ட முகம்
உப்பு நீர் திரவத்தில் முக்குளித்திட!
புறங்கை கொண்டு புறம் தள்ளி…
தணலடுப்பின் ஜூவாலையில் கொதித்திட்ட
தேநீரின் நறுமணம்…
நாசி சேர் தொண்டையில்
அமிர்தமென இறங்க ஏங்கிட!
அடுப்பிலேற்றிய பச்சை காய்கறிகள்
பருப்புடன் நீரில் கலந்திட்ட மகிழ்வில்
குதியாட்டம் போட்டு துள்ளிட!
கலந்திட காத்திருக்கும் புழுங்கலரிசி
தன் இணைத் தேடி தவித்திட!
மன்னவனின் நினைவு வஞ்சியவளை
சுகமாய் தாக்கியது.
இமை குடை மூடி
பின்னிருந்து அணைத்திட்ட தன்னவனின்
வலிமை கரங்களுக்குள்
சிக்கித் தவிக்கின்றாள்
கொடியிடை தையல்.
கரண்டி பிடித்த கை
தன் இயக்கம் நிறுத்தி,
மோன நிலை நீடித்திட!
பட்டென தெறித்த கொதி நீரில்
உறை நிலைக்கு செல்லாது,
சுயம் மீண்டவளின்
பிஞ்சு விரல்கள்
கீரையோடு உறவாட!
பொறாமை துளிர்த்திட்ட பண்டங்கள்
கோமகளின் அறுசுவை உணவில்
இடம்பெற தடம் புரண்டு நின்றன.
செய்திட்ட பதார்த்தங்களின்
பல வண்ணக் கலவைகளை
கண்கள் ரசித்திட!
நறுமணம் நுரையீரல் நிரப்பி
உண்ணும் வேட்கையை அதிகரித்து,
சுவையோடு சுவை கலக்க…
சிப்பி வாய்க்குள் பொதிந்து கிடக்கும்
‘நா’ மகன் உமிழ் அருவியை கொட்டி நின்றான்!
வாவ்.. வாவ்… சூப்பர் மா..
என்ன ஒரு காதல் கலந்த சமையல் கலை.. அருமை.. அருமை..
அழகா இருந்தது. ரொமான்டிக் சமையல்.. வாழ்த்துக்கள்…
மிக்க நன்றி சிஸ்😊
அருமையான சமையல் சகோ 😊
நன்றி
மிக அருமை சகி.
நன்றி
அருமையான காதலான இன்ப சமையல் …மனதை தொட்டதை நாவும் தொட எண்ணும் கவிதை ..
வாழ்க வளமுடன்…
நன்றி சிஸ்
Wooow
Super kadal kalanda samayal kavithai
நன்றி சிஸ்
ஆஹா அழகான ரொமாண்டிக்குடன் கூடிய சமையல்..அழகு சிஸ்