ஆய கலைகளில் ஒன்றாம் சமையல் கலை…
ஆனால் எனக்குத்தான் அது பெருங் கவலை…
அரிசிகளில் உண்டாம் ஆயிரம் வகை…
இட்லி அரிசிக்கு வித்தியாசம் தெரியாத நானும் ஒரு வகை….
சோறு வடிக்க சொன்னால்….
கஞ்சி கடைந்த நானோ
ஓர் அறியா பிள்ளை…
இதில் குற்றம் யாரைச் சொல்வது….
குழைந்து போன இட்லி அரிசியையா???…
அல்லது குழைய வைத்த தண்ணீரையா??…
குற்றமாயினும் குட்டு வெளியாகக் கூடாது….
உதவவே இருக்கிறான் தயிர் தம்பி…
உருமாறினான் தயிரிலிருந்து சாதமாய்…..
தயிர் சாதத்தின் சுவையோ அற்புதம்..
அது விட்டுச் சென்ற சுவடோ…
என்றும் மறக்காத கேலிக் கூத்து !!!!!
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
+1
+1
ஹா ஹா.. நான் ரசித்து சிரித்து படித்த கவிதை… நல்ல காமெடியாக இருந்து. சுப்பர்.. வாழ்த்துக்கள்.. மனம் இலகுவாக மாற உதவும் உங்கள் கவிதை… வித்தியாசமான கற்பனை.
❤நன்றி சகி😍
ஹாஹாஹா …குழைந்த சாப்பாட்டை தயிராய் மாற்றி அருமையென பெயர் வாங்குவதெல்லாம் வேற மாதிரி அழகு தான் ….மிகமிக அருமையான இயல்பாய் ரசித்து சிரிக்க வைக்கும் கவிதை சகி .
வாழ்க வளமுடன்…
மிக்க நன்றி சகி 🤍🙏
அட இப்படியும் எழுதலாமா..மாத்தி யோசி!!!செம்ம சிஸ் சிரிச்சிட்டே வாசிச்சேன்..அற்புதம் சிஸ்
நன்றி❤