என் கள்வனின் சுவடு
சமையலின் சுவையறிய வந்தவன்…
என் இதழின் சுவையறிந்து சென்றவன்…
பின்னிருந்து அணைத்து,
என் இடையில் உன் கரம்தனை அழுத்தி,
என் காதோரத்தில் நீ தந்த மென்முத்தம்
தித்திக்கின்றது சர்க்கரையைக் காட்டிலும்!!
கள்ளத்தனம் பல புரிந்தாலும்,
பிள்ளைமுகம்தனை கடன் வாங்கி,
உன் கள்ளம் யாருமறியா வண்ணம்
வந்த சுவடே தெரியாமல்
சமையலறையிலிருந்து நீ திரும்புவதை
கள்ளமாய் ரசித்துக்கொள்வேன்
நானும் என் கள்வனை…..
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
+1
+1
வாவ்.. nice.. அழகான காதல் கவிதை.. சமையல் அறையில் நடக்கும் அழகிய காதல் கூத்து உங்கள் கவிதையில் பிரதிபலிக்கிறது… வாழ்த்துக்கள் மா… 😍😍
நன்றி மா
என் கள்வனின் சுவடு..அழகான தலைப்பு..தலைப்பிற்கேற்ப கவிதையும் அருமையோ அருமை..சிறப்பான காதல் படைப்பு..
nanri sagi