Loading

என் சமையலறையில்…

என் வீட்டு சமையற்கட்டில்

முதல் முதலாய்

உன்  வரவுவை கண்டதும்

நீர்பட்ட பாலாய்

என் மனம் அடங்கியதடி ..

கரிக்குழம்பு வாசத்தைவிட

உன்  வியர்வை வாசனைகள்

என்னை ருசிக்கவா என்று தூண்டிவிடுதடி..

உப்பு உறைப்பற்ற உணவைக்கூட

உன் கைப்பிடியில் உண்ணும் போது

அமிர்தமடி எனக்கு…

பாகற்காய் கசப்புக்கூட

உன் இதழ்வழி பகிர்தலில்

இனிப்பாக மாறிவிடும் மர்மம்

என்னவோடி  ??

காலம் முழுக்க இப்படியே

உன் கைப்பிடியில்

என் சமையலறையில்

உன் வாசம் நிறைந்துகிடக்கும்

வரம்  வேண்டுமடி

என் கண்மணியே...!!!

 

                                             – நறுமுகை.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

13 Comments

  1. deiyamma

    வாவ்.. வாவ்… வாட் அ ரொமான்டிக் கவிதை. சூப்பர் சூப்பர் மா..

    அழகான காதல் கவிதை. ஒரு ஆண் மகனது மனதில் தோன்றும் எண்ணங்களை அழகாக கவிதையில் சொல்லி இருக்கிறீங்க. அருமை.. வாழ்த்துக்கள் டா..

  2. அனைத்து ஆண்களும் ஆசைபடும் ஏன் பெண்களும் ஏங்கும் காதலான வரம்அது
    . மிகமிக நன்று வாழ்த்துக்கள்.

    வாழ்க வளமுடன்…

  3. கவி அருமை ஆனால்..
    கரிக்குழம்பு என்பது கறிக்குழம்பு என வரணும் sis. கரி என்பது :
    கரி, பெயர்ச்சொல். யானை · நிலக்கரி கனிமம், அடுப்புக்கரி. யானை .

  4. கவி அருமை ஆனால்..
    கரிக்குழம்பு என்பது கறிக்குழம்பு என வரணும் sis. கரி என்பது :
    கரி, பெயர்ச்சொல். யானை · நிலக்கரி கனிமம், அடுப்புக்கரி. யானை .

  5. ஆண்மகனின் எண்ண வெளிப்பாடு உங்கள் கவிதைவரியில் மிகச் சிறப்பாக…