Loading

எனக்கு மட்டுமே பரீட்சியமான என்வீட்டுத் தோழி 

என்வலிகளையும் உணர்வுகளையும் முழுவதுமாய் அறிந்தவளும் அவளே 

காய்கறி நறுக்கும்போது இனிக்கஇனிக்க பலக்கதைகள் பேசிடுவாள் 

பலவித நறுமணங்களை தனக்குள் அடக்கி வைத்திருப்பாள் 

அதிலும் அந்ததாளிக்கும் வாசணையால் மதிமயங்க செய்திடுவாள் 

அறுசுவைகளையும் அறிந்து வல்லமை பெற்றே விளங்கினாள் 

ஓரவஞ்சனைக்காரி குறைவான சுவையை என்னை ருசிபார்க்கசொல்லி 

நிறைவான சுவையை அனைவருக்குமளித்து பாராட்டை பெற்றிடுவாள் 

காலைமுதல் இரவு  உறங்கும்வரை என்னுடன் உரையாடிவிட்டு 

துயில்கொள்ள மட்டும் என்னைவிட்டு தனியாக சென்றிடுவாள் 

ஒருநாளும் என்னைப் பிரியாத அன்புத்தோழி சமையலறை!!

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. அழகான கவிதை. அருமையான வரிகள்

  2. ஹே சமையலறையை தோழியாக்கியாச்சு..சிறப்பான சிந்தனை சிஸ்