Loading

கட்டியணைத்து முத்தமிடுவாய்
காலை நேர பரபரப்பில்
வாரியணைத்து வம்பிலுப்பாய்
வாகாக நறுக்குகையில்
கொட்டி கவிழ்த்து இடைமறிப்பாய்
கொக்கரிக்கும் குக்கரை அடக்குவதற்குள்
கண்சிமிட்டும் நேரத்தில் எல்லாம் வீணாக
கன்னம் சிவக்க புன்னகைக்கிறாய்..

பொல்லாத காதல் கொண்டு
ஆட்டி வைக்கிறாய் என்னை..
உன் குறும்பு என்னை வதைத்தாலும்
உன்னுள் நான் தொலைகிறேன்..
குட்டி கரும்பே.. இன்ப தேனே..
இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்?

தினம் தினம் உன் சேட்டைகளால்
என் வாழ்வில் சுவை சேர்த்து
உன் மழலை பேச்சில்
காலை நேர சமையல் கூட
அழகாய் மலர்ந்து..
உன் பாத சுவட்டால் சுவையும் தித்திக்கிறதே கண்ணா..

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

3 Comments

  1. குட்டி கரும்பே..இன்ப தேனே!!!..சூப்பர் சிஸ்..