பிழையால் சுவை
குறைந்த உணவினை
சுவையானதாக திருத்த
தெரிந்தவளால் தன்
வாழ்வின் நடந்தேறிய
பிழை சரிசெய்ய இயலாமல்
காதல் வேதனையில்
தவிக்கிறேனடா விழியில்
நீரோடு!!!
********************************************
வயிற்றை நிறைத்து மனதை தொடும் காதல்….
மனக்குமுறலை எல்லாம்
பலம் கொண்டு மட்டும்
ஊதுக்குழலில் ஊத
அடுப்பின் கணல் கங்குகள்
திகு திகு என எரிய
உலையில் உள்ள அரிசியோ
என் மனம் போல் கொதிக்க
நான் பொங்கி வடித்தது
எல்லாம் என் காதலே….
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
+1
+1
சோக கவிதை.. ஒரு பெண்ணின் சோகத்தை சமையலோடு ஒப்பிட்டு சொல்லி இருக்கிறீங்க…
அருமை.. வாழ்த்துக்கள் டா..
காதல் வேதனையையும் சமையலையும் இணைத்து ஒரு அழகிய படைப்பு…