Loading

சமைக்கும் கரங்கள்
புகை மூட்டத்தில்
மிளிரும் சுவடு
தெரியாமல் !

சின்ன சின்னதாய்
குடுவையில் தாளிப்பு
ஆவியாக திரவியம் வீசும் !

சேர்மானம் சேர்த்து
அம்மிக்கல்லில் அரைத்த
கலவை அடுப்பகறையை
முழு வாசமாக்கிட !

புது வாசம் நசியை
தீண்டையில் உமிழ்நீர்
சுரத்தது நாவின் சுவையை
சுண்டி இழுக்க !

ருசி பார்க்க நீட்டிய
உள்ளங்கையில் ஈட்ட
மிதமாக துளி ரசம்
அமிர்தமாக தித்திக்க !

சொந்த கைபக்குவம்
மனம் மணக்க சோதனையே சுவையானது சிலநேரம் !

சௌகரியாமன சமையல்
தினம் ஒரு மாற்றத்துடன்
பந்தங்களுக்கு சமைத்திட !

ருசிபார்த்த பாதர்த்தம்
எல்லாம் போதும் என்று
திகட்டி மனம் மகிழ !

பழமையான சமையலே
நாவின் சுவடாக மாறியது ஆரோக்கியமாக !

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

3 Comments

  1. deiyamma

    அடுப்பங்கரை, நாசி, பதார்த்தம் இந்த வார்த்தைகள் சரி பார்க்கவும்.. பழைமை கால சமையல் முறையில் ஒரு வித சுவை இருக்க தான் செய்கிறது. வாழ்த்துக்கள். அருமை..

  2. ஆமாம் சகி ..நான் பார்த்து அறியவில்லை எனினும் அம்மியில் அறைப்பதை பார்க்கும் பொழுதே நாவில் எச்சில் ஊறும் என பிறர் சொல்லி கேட்டுள்ளேன். மிக நன்று …பழமையான உணவுமுறை ஆரோக்கியமானதுதான் .

    வாழ்க வளமுடன்….

  3. அம்மிக்கல்லில் அரைத்து சாப்பிடும் உணவின் ருசியே தனிசுகம் தான்..உள்ளங்கையில் ஊற்றி ருசி பார்ப்பதெல்லாம் செம பீல்…