Loading

சமையலறை செல்லாத என்னை..
சமைக்க சொல்லி தூண்டியது உனது
படைப்பு !!
தோசை என்று ஊற்றியது
இட்லி ஆனதே!!
காணொளி பார்த்த சமைத்த
கறியும் கரியாய் ஆனதே!!
உன்னைப் பற்றி அறியும் போதெல்லாம் நீ என்னிடம் அன்பு காட்டி
எனக்கு கொடுத்த பரிசு, தழும்புகள்.!.
உன் நேசம் அறிவதால் ,
நீ தந்த சுவடுகளை ஏற்கிறேன்..
இனியும் உன்னை நாடி வருவேன்
உன் சுவையான சுவடுகளை பெற

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

4 Comments

  1. காணொளி பார்த்து இப்படி வரும் என்று நினைக்கிறேன். உண்மை தான்.. புதிதாக சமைக்கையில் இப்படி பல பரிசுகள் வாங்குவது இயல்பு தான். வாழ்த்துக்கள்.

  2. இட்லியாவது வந்ததே நான் செஞ்சதுலாம் என்னனு யாரையாவது வைத்துதான் கண்டுபிடிக்கனும் .

    சமையல் மட்டுமல்லாமல் அனைத்திலும் முதல் முயற்சியில் சில தழும்புகள் சகஜம்தான் சகி , தொடர்ந்து முயல வாழ்த்துகள் .

    வாழ்க வளமுடன் …

  3. அருமை..காணொளி பார்த்து சமைத்த கறியும் கரியாய் ஆனதே!!!!சிறப்பு சிஸ்