அத்தியாயம் 12
ஆனந்த், “டேய், ஆகாஷ் உன்னோட மொபைல் அடிச்சுட்டு இருக்குது. நீ வேற ஏதோ யோசனையில் இருக்குற,
ஆகாஷ், “மும்ம் அப்பா சொல்லுங்க “
கார்த்திகேயன், “நீ எங்கடா இருக்குற,
ஆகாஷ், “அப்பா, நான். என்னோட அறையில் தான் இருக்குறேன்.
கார்த்திகேயன், “உன்னுடன் யாரும் இருக்காங்களா?,
ஆகாஷ், “ஆமா, ஆனந்த் தான் இருக்குறான். “
கார்த்திகேயன், “நீ அங்கேயே இரு ,இதோ வாரேன்..
நிவேதிதா சொன்னதைக் கேட்டதும் கடுங்கோபமான சொர்ணம்மாள் ரத்னாவை அழைத்தாள் .
ரத்னா, “சொல்லுங்கம்மா,
சொர்ணம்மாள், “ரத்னா ஹாசினி என்ன பண்றா ,
ரத்னா, அம்மா,என்னை மன்னிச்சுருங்க அவ தூங்கிட்டு இருக்குறா, அவளும் இப்ப தான் ஊரில் இருந்து வந்துருக்க, அவளை தொந்தரவு பண்ணாமல் நம்ம எல்லாரும் போவோம்மே,
ராஜவேல்பாண்டி, “இந்த பூஜையே அவளுக்காக தான்,அவ வராமல் இருந்தால் நல்லாவா இருக்கும்.இப்ப மணி வேற பத்து ஆயிடுச்சு, இன்னும் அவ கிளம்பி வருவதற்குள் நல்ல நேரம் முடிந்து விடும்மே,
ஹாசினி..ஹாசினி.. என கோபத்தோடு அழைத்தாள்.
அவங்க பாட்டியின் சத்தம் கேட்டதும் விரைவாக எழுந்து குளியல் அறைக்குள் நுழைந்து ஈரத் தலையைத் துவட்டியபடி வந்தாள்.
ஹாசினி உனக்காக தான் இந்த பூஜை. சீக்கிரமாக கிளம்பி வா, நாங்க எல்லாரும் காரில் உட்கார்ந்து இருக்கிறோம். தாரணி நீயும் அவளுக்கு துணையாக அவள் கிளம்புவதற்கு உதவி பண்ணும்மா?,
தாரணி, “மும்ம்ம்.. சரிங்க பாட்டி,
ஹாசினி, “ச்சே இப்ப தான் வந்துருக்கேன். இன்னிக்கே கோவிலுக்குப் போகனும்மா?,என. எரிச்சலோடு பேசினாள்.
தாரணி, “நீ எப்ப வந்த டி”
ஹாசினி ,அக்கா, ‘நான் 6.30க்கு வந்து இறங்குனேன்.வந்தவுடனே பாட்டியம்மா ரெஸ்ட் எடுக்கச் சொல்லிட்டு, இப்ப சீக்கிரம் கிளம்பு என்று உயிரை வாங்குது,
தாரணி, “சரிடி, இப்பவே லேட் ஆயிடுச்சு, சீக்கிரமா கிளம்பு என்றாள்.
ஹாசினியும் ,தாரணியும் காருக்குள்ளே அமர்ந்ததும் கோவிலை நோக்கி சென்றது.
நளினி, “ஏன்டி கோவிலுக்குப் போறோம்.இன்னிக்காவது ஒரு புடவை கட்ட வேண்டியது தானே?,
ஹாசினி, “அம்மா ,இன்னொரு நாளைக்கு கட்டுறேன். நீ வேற ஏதாவது சொல்லிட்டு இருக்காதே, நானே கடுப்புல இருக்கேன் என்றாள்.
நளினி, “உனக்கென்ன கடுப்பு “,நாங்க தான் உன்னால கடுப்பா ஆகனும் என. கடிந்து பேசினாள்.
லலிதா, “அவ மேல எதுக்காக கோபமாக பேசுற, சின்ன பொண்ணு வேற, நம்ம எல்லாரும் அவளுக்காக தான் கோவிலுக்குப் போயிட்டு இருக்கிறோம் .நீ எதுவும் அவளைச் சொல்லாதே, என்றாள்.
நிவேதிதா, “ஹாசினி,நீ காலையில் எத்தனை மணிக்கு வந்து இறங்குன,
ஹாசினி, “அண்ணி நான் வீட்டுக்கு வரும் போது ஒரு 6.30 மணி இருக்கும் என்றாள்.
“நம்ம எல்லாரும் இங்க இருக்குறோம். அண்ணனை மட்டும் காணோம்மே!, “
நிவேதிதா, “உங்க அண்ணன் வீட்டுல தான் தூங்கிக் கொண்டு இருக்காங்க, நேற்று வேலை பார்த்து இன்னிக்கு காலையில் தான் வந்தாங்க, அதான் அவங்கள தொந்தரவு பண்ணல.
சமீதா பாப்பா நல்லா தூங்கிக் கொண்டு இருக்கிறாள் என சொல்லிக் கொண்டே கன்னத்தைப் பிடித்து கிள்ளியதும் ஒரே அழுகை. அவளைச் சமாதானப்படுத்துவதற்குள் கோவிலே வந்து விட்டது.
ஐயரும் பூஜை செய்யத் தயாராக நிலையில் இருந்தார்.
சொர்ணம்மாள், “ஹாசினி இங்க வா,
ஹாசினி, “சொல்லுங்க பாட்டி,
ராஜ்வேல்பாண்டி, “இவ தான் எங்களோட பேத்தி ஹாசினி .இவளுக்கு தான் அந்த பரிகார பூஜையை செய்ய வந்திருக்கோம்.
ஹாசினியும் அந்த பூஜையை விடாமல் கவனித்து கொண்டிருந்தாள். அந்த நேரம் ஆகாஷீடம் இருந்து போன் ஒலித்தது .
சொர்ணம்மாள், “உம் போனைக் கொடு, இந்த நேரத்துல யாரு போன் பண்றா,
ஹாசினி, பதற்றமாக இது என்னோட தோழி தான். ஊருக்கு வந்துட்டேனு அவகிட்ட சொல்லாமல் இருந்துட்டேன். இதோ இப்பவே சொல்றேன்.
ஆகாஷ், “ஹலோ ஊருக்குப் போயிப் போன் எதுவுமே பண்ணல,
ஹாசினி, :அடியேய், நானு என்னுடைய குடும்பத்தோட கோவிலில் இருக்குறேன். அப்புறமா பேசுறேன் என அழைப்பைத் துண்டித்தாள்.
நிவேதிதா, “இவ பதற்றமாக பேசுவதை பார்த்தா?,இவளோட ஆளு தான் பேசியிருப்பான். நம்ம சொன்னா யாருமே நம்பமாட்டாங்க, எதுக்கு வம்பு. நம்ம வாயை மூடிட்டு நடக்குறத மட்டும் வேடிக்கைப் பார்த்துட்டு இருக்க வேண்டியதுதான்.
சொர்ணம்மாள், “பெண்ணோட அப்பா இருக்கனும்மா ,
ஐயர்,:”,இவுக தகப்பனார் இருக்கனும்னு அவசியமில்லை.
ஆகாஷ், “வாங்கப்பா என உள்ளே அழைத்தான்.
கார்த்திகேயன், “ரெண்டு பேரும் காலேஜீக்குப் போகாமல் நல்லா ஊரைச் சுத்திக்கிட்டு இருக்கீங்களா,
ஆனந்த்,”அப்பா நாங்க எங்க போயி ஊரைச் சுத்த, நானே கூப்பிட்டாலும் இவன் வரமாட்டான்.
ஆகாஷ், “அப்பா உங்ககிட்ட ஒரே ஒரு விஷயம் கேட்கிறேன். அதுக்கு மட்டும் உண்மையைச் சொல்லுங்க, நீங்க சொல்லப் போற பதில் தான் என்னுடைய வாழ்க்கையே இருக்குது.
கார்த்திகேயன், “ஆகாஷ், நான் சொல்லப் போற பதிலில் உன்னுடைய வாழக்கை இருக்கிறதா?,
ஆகாஷ், “உங்களுக்கு ஏற்கனவே ஹாசினியை தெரியுமா?
கார்த்திகேயன், டேய் ! நீதானே அவளை எனக்கு முதன் முதலில் அறிமுகப்படுத்தி வைச்ச, அப்போது தான் நானும் அவளை பார்த்திருக்கிறேன்.
ஆகாஷ், “நீங்க இப்படி சொல்றீங்க!,ஆனா ஹாசினியோட குடும்பத்திற்கு உங்கள பிடிக்காதா?,அவுக வீட்டுக்கு ஒரே ஒரு முறை போனீங்களா,அப்போது தான் அவ பார்த்துருக்கா,
கார்த்திகேயன், “நீ ஹாசினியோட ஊர் சொல்லு என்றார்.
ஆகாஷ், “அப்பா நம்ம உருக்கு அடுத்த செந்தூர்புரம்..
கார்த்திகேயன், “அந்த ஊருல சொர்ணம்மாள், ராஜவேல்பாண்டியோட பசங்க ஜவுளிகடை நடத்திட்டு செல்வ செழிப்போடு இருக்காங்களே?,அந்த குடும்பமா?,
ஆகாஷ், “அட!, ஆமா அப்பா ,அந்த குடும்பத்தில் உள்ள பெண்ணை தான் காதலிக்கிறேன் .
கார்த்திகேயன், “வேகமாக எழுந்தவரோ இது எப்போதும் சரிப்பட்டு வரவே வராது. நீ படிச்சதெல்லாம் போதும், முதலில் நீ கிளம்பு நம்ம ஊருக்குப் போகலாம்.
ஆகாஷ், “அப்பா எதுக்காக என்ன ஊருக்குக் கிளம்பச் சொல்றீங்க “,இன்னும் அடுத்த வாரம் எனக்கு டெஸ்ட் இருக்குது. இந்த நேரத்துல இப்பவே கிளம்பு என்று சொல்றீங்க!
கார்த்திகேயன், ” உங்க அப்பா உயிரோட இருக்கனும்னு நினைக்கிறீயா?,
ஆகாஷ், “அப்பா,நீங்க என குரல் தடுமாறியது.
கார்த்திகேயன், “பேசாமல் துணிகளை எடுத்து வைச்சுட்டு வா என்றார்.
சொர்ணம்மாள்,ஐயரே!,பூஜை முடிஞ்ச பிறகு பிரசாத்தை எம் பேத்தி கையால கொடுத்துருலாம்மா?,
ஐயர்!, இதோ இன்னும் செத்த நேரத்துல முடிஞ்சுடும்.
நிவேதிதா, தாரணி, “உனக்கு எதுவும் கோபமில்லையா ?
தாரணி, “எதுக்காக கோபப்படனும் அண்ணி,
நிவேதிதா, “உங்க பாட்டி ஹாசினி மேல மட்டும் ரொம்ப அக்கறையா இருக்கிறத பத்தி தான்.
தாரணி, “ஹா..ஹா… ஹா..
நிவேதிதா, “என்னடி எதுக்காக சிரிக்குற நான் இப்போது காமெடி ஒன்னும் சொல்லவில்லையே என்றாள்.
தாரணி, “அண்ணி இப்ப ஹாசினிக்கு நடந்தது வெறும் பரிகார பூஜை.அதுவும் அவளோட நேரம் இப்போதைக்கு சரியில்லையாம், அதான் ஹாசினிக்கு இந்த பூஜையை செஞ்சு முடிச்சா, வீட்டுல ஒரு விசேஷம் நடக்கும் என நம்ம குடும்பத்துக்குப் பார்க்கக்கூடிய பரம்பரை ஜோசியர் தான் இப்படி பண்ணச் சொன்னாங்க என்றாள்.
நிவேதிதா, “ஓ. கோ!,இதுல இம்புட்டு விஷயம் இருக்குதோ! அதான் நீ பேசாமல் இருந்தாயோ?
தாரணி, “ஆமாம்..அண்ணி நேற்றே எங்க அம்மா எல்லாத்தையும் தெளிவாக சொல்லிட்டாங்க,என்றாள்.
ராஜவேல்பாண்டி, “ஹாசினி எழுந்திருச்சு, அந்த பிரசாதத்தை எல்லாருக்கும் கொடுத்துட்டு வாம்மா ,கோவிலில் யாரு இருந்தாலும் அவங்கிட்ட கொடுத்துட்டு வாம்மா என கூறினார்.
ஹாசினியும் பிரசாத்தை ஒவ்வொருவருக்கும் கொடுத்து வந்தாள், அப்போது பச்சிளங்குழந்தையில் ஒரு அம்மா கஷ்டப்படுவதை பார்க்க முடியாமல் நிறைய கொடுத்துக் கொண்டு இருந்தாள் .அவளின். சேவையைப் பார்த்த நரேஷ் அப்படியே திகைத்து நின்றான்.
டேய்!, நரேஷ் நீ உள்ளே போடா, அர்ச்சனைத் தட்டு வாங்கிட்டு வந்துடுறேனு சொன்னாள் பத்மா.
நரேஷிடம் வந்து பிரசாதத்தை கொடுக்க, அதை வாங்கச் சென்ற நரேஷை தடுத்தாள் பத்மா.
டேய், பிரசாதம் யாரு கொடுத்தாலும் வாங்குவியா?,உனக்கு அறிவு இல்ல, முதலில் வா நம்ம போயி சாமி கும்பிடுவோம் என கையைப் பிடித்து அழைத்து சென்றாள்.
நரேஷீம், பத்மாவும் அர்ச்சனை செய்து சாமியை தரிசித்து விட்டு கோவில் பிரகாரத்தை சுற்றி வரும்போது சொர்ணம்மாளை பார்த்தாள். அவங்கள பார்த்த மறு நிமிஷமே வேகமாக எதிரே வந்து நின்றாள்.
பத்மா, “நீங்க சொர்ணம்மாள் பாட்டி தானே?, “
ஆமா.,நீங்க யாரு..
பத்மா, “நீங்க ஜே. என். ஜென்ஸ் டெக்ஸ்டைல் ஓனர் ஜகநாதன் அவங்களோட மனைவி பத்மா.இங்க என்னம்மா கோவிலில் ஏதாவது வேண்டுதலா?,
சொர்ணம்மாள், “என்னோட பேத்திக்கு நேரம் சரியில்லை. அவளுக்கு எந்த பிரச்சினையும் வந்துவிட கூடாது என்பதற்காக தான் இந்த பூஜை.
பத்மா, “சரிங்கம்மா, நாங்க கிளம்புறோம்.
சொர்ணம்மாள், “நில்லுங்க. தாரணி அந்த பிரசாதத்தை எடுத்து என்னிடம் கொடு.
தாரணி, “இந்தாங்க பாட்டி..
பத்மா இத வாங்கிக்கோ, என கையில் கொடுக்க, பக்கத்தில் வந்தாள் ஹாசினி.
சொர்ணம்மாள்,”இவ தான் எம் பேத்தி ஹாசினி. எல்லாருக்கும் பிரசாதம் கொடுத்தாச்சா? ,
ஹாசினி, “கொடுத்தாச்சு பாட்டி,இவுக யாரு பாட்டி,
சொர்ணம்மாள்,”இவுக ஜே. என் ஜகநாதனோட மனைவி பத்மா, அது அவங்க மகன் நரேஷ்.
பத்மா, “ஸாரிம்மா,நீ யாரென்று தெரியாமல் அப்படி பேசிட்டேன்.
சொர்ணம்மாள், “ஹாசினி இவுக உன்னை என்ன சொன்னாங்க “
ஹாசினி, “பாட்டி அப்படியெல்லாம் அவங்க என்னை ஒன்னும் சொல்லவில்லை. எல்லாருக்கும் பிரசாதம் கொடுத்துட்டு இருக்கும் போது இவங்களும் வந்தாங்க, ஓரமாக போய் கொடுக்க வேண்டியது தானே எனச் சொல்லிட்டு சன்னதிக்கு சென்று விட்டார்கள்.
பத்மா, சரிம்மா நாங்க வருகிறோம் என சென்றார்கள்.
“காரின் அருகே சென்றதும் அவர்களைப் பின்தொடர்ந்து வந்தாள் ஹாசினி. “
ஹாசினி, “நீங்க வயசுல என்னை விட பெரியவங்க, கோவிலுக்குள்ளே வந்துட்டாளே நம்மள விட பெரியவங்க சன்னதிக்குள்ள. இருக்கிற கடவுள் தான். அத விட்டுட்டு பிரசாதத்தை யாரு வேணுமென்றாலும் கொடுக்கலாம். அந்த பிரசாதமே கடவுளின் ஆசியோடு தான் நமக்கே கிடைக்குது. இனிமேலாவது பிரசாதம் கொடுக்கிறவங்கள பார்க்காதீங்க!,அவங்ளோட நல்ல மனசை பாருங்க என அறிவுரை சொல்லிட்டு சென்றாள்.
நரேஷ், “பொண்ணு பார்க்கவானு ரொம்ப நாளா கேட்டுக்கிட்டே இருந்தீங்களே,!,இந்த பொண்ணு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு என சொல்லிட்டு காரின் கதவைத் திறந்து அம்மாவை உள்ளே போகச் சொன்னான்.
கார்த்திகேயன், “பரபரப்பாக அவனின் கையைப் பிடித்து இழுத்து வந்து சோபாவில் தள்ளினான்.
பவித்ரா, “பதற்றமாக வந்து என்னவென்று கேட்க,
கார்த்திகேயன், “உம் பையன் அதான் சொர்ணம்மாளுடைய பேத்தியை காதலிக்கிறானா?, அவங்களுக்கும் நமக்கும் என்ன பிரச்னை என்பதை அவ பேத்தி கேட்க சொல்லியிருக்கா?,
ஆகாஷ், “அப்பா எதுக்காக என்னை கூட்டிட்டு வந்தீங்க, “
கார்த்திகேயன், “இனிமேல் எங்கேயும் நீ போகவே கூடாது. இந்த வீட்டை விட்டுபோகனுனு நினைச்ச ,திரும்பி வரும் போது என்னோட பிணம் வாசலில் கிடக்கும் என்றார்.
ஆகாஷ், “, “அம்மா நீயாவது சொல்லும்மா?எதுக்காக அப்பா இப்படியெல்லாம் பேசிட்டு போறாங்க என கேள்வி மேல் கேள்வி கேட்டான்.
பவித்ரா, இப்போதைக்கு சில விஷயங்கள் உன்னிடம் சொல்லாமல் இருப்பதே நல்லது என்றாள்.
ஆகாஷ், “ச்சே.என்னதான் நடக்குது, யாருமே என்கிட்ட எந்த ஒரு உண்மையையும் சொல்லவே மாட்டேங்கிறாங்களே என. குழப்பத்திலேயே இருந்தான்.
கோவிலில் இருந்து அனைவரும் வீட்டிற்குச் சென்றார்கள்.
ராஜவேல்பாண்டி, “ஹாசினி எம் பின்னாலயே வா “
ஹாசினி, “சொல்லுங்க தாத்தா,
ராஜவேல்பாண்டி, “என்னங்கண்ணு காலேஜ் படிப்பு எல்லாமே எப்புடி போகுது, “
ஹாசினி, “ம்ம்ம். தாத்தா சூப்பராக போகுது “
ராஜவேல்பாண்டி, “உன்னோட ஆகாஷ் எப்படி இருக்குறான். “
ஹாசினி, “அதிர்ச்சி ஆகி எழுந்தாள். தாத்தா உங்களுக்கு எப்படி தெரியும்.
ராஜவேல்பாண்டி, “நீ அந்த ஆகாஷோட ஊரைச் சுத்துறத வீடியோ எடுத்து வைச்சுருந்தாள் நிவேதிதா.
ஹாசினி, “தாத்தா அப்படினா நான் லவ் பண்ற விஷயம் எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சா?,
ராஜவேல்பாண்டி, “பதற்றப்படாதே?இந்த விஷயம் எனக்கும் உங்க அண்ணனுக்கும் மட்டும் தான் தெரியும்னு நினைச்சேன். ஆனா உங்க பாட்டிக்கும் தெரிஞ்சுடுச்சு..
ஹாசினி, “என்னது பாட்டிக்கு தெரிஞ்சு போச்சா?,
ராஜவேல்பாண்டி, “நீ பயப்படுகிற மாதிரி எதுவும் இல்ல, நடந்தது என்னவென்றால்….. …
ஹாசினி, “ச்சே, “பாட்டி எம் மேல எம்புட்டு பாசம் வச்சிருக்காங்க!
அவங்களுக்கு நானே துரோகம் பண்றேன் நினைக்கும் போது ரொம்ப கஷ்டமாக இருக்குது தாத்தா..
ராஜவேல்பாண்டி, “நீ கவலைப்படாதே?,நீ காதலிக்கிற பையன் யாரென்று தெரியுமா?,அவனைப் பத்தி ரவி சொல்லும் போது எனக்கே அப்படி ஒரு ஆச்சரியம் என்றார்.
தாத்தா நான் லவ் பண்ற விஷயத்தை அண்ணன் சொன்னாங்கன்னு சொல்றீங்க, அவனுக்கு எப்புடி தெரியும். அதான் எனக்கும் புரியல என்றாள் ஹாசினி.
ரவி, “தங்கச்சி அத நானே சொல்றேன்..
ஹாசினி, “அண்ணா, இங்க வா!,நேற்று நல்லா தூங்கலயாம்மே?,
ரவி, “ஆமா நேத்து ரொம்ப வேலை,அதுவும் ஜவுளிக்கடையில் ரொம்ப கூட்டம். அப்பாவால் சமாளிக்க முடியல, அதான் நானும் கூடவே இருந்து உதவியாக இருந்தேன்.
ஹாசினி, “நானும் ஊருல இருந்து வரும்போதே அப்பாவை பார்த்துட்டு தான் வந்தேன் .அப்பா நம்முடைய கடைக்குப் பக்கத்துல இருக்குற குடோனில் தான் இருந்தாங்க? அப்போது பார்த்தேன். இன்னும் அப்பா வீட்டுக்கு வரல என வருத்தத்தைத் தெரிவித்தாள்.
ரவி, “சரிம்மா உன் கூட பழகுற ஆகாஷை எனக்கு முன்னாலயே தெரியும். தினமும் நம்ம கடை பக்கத்துல தான் அவனோட ப்ரண்ட் செல் சர்வீஸ் கடை வைத்திருக்கிறான். நானும் சும்மா இருக்கும் போது அங்க போயி பேசிட்டு இருப்பேன்.
ஆனா அவனுக்கு நீதான் என் தங்கச்சினு அவனுக்கு தெரியாது. நம்ம குடும்பத்திற்கும் அவங்க குடும்பத்திற்கும் ஏதோ
ஒரு பகை இருக்கிறதாம்
அதுவும் தாத்தா தான் சொன்னாங்க, என சொல்லிக் கொண்டிருந்த நேரத்தில் நிவேதிதா சமீதாவோடு வந்தாள்.
நிவேதிதா, “தங்கச்சியும், அண்ணனும் ஏதோ ரகசியம் பேசிக்கிட்டு இருக்கீங்க!,
ஹாசினி, “அப்படியெல்லாம் ஒரு இரகசியமும் இல்லை. நேத்து அண்ணனுக்கு வேலை அதிகமாக இருந்ததாம். அத பத்தி தான் கேட்டுட்டு இருந்தேன்.
நிவேதிதா, “மும்ம்,நம்பிட்டேன்.. நீங்க இரண்டு பேரும் வேற ஏதோ பேசிட்டு இருந்தீங்க!,நான் வந்ததுமே அப்படியே பேச்சை மாத்திட்டீங்க, நானும் கூடிய சீக்கிரமே எல்லாருக்கும் விஷயத்தை தெரியப்படுத்துறேன் என்று நினைத்தாள்.
ஹாசினி,”ஆகாஷீற்கு போன் செய்ய முயற்சித்தபோது சுவிட்ச் ஆப் என்று வந்தது. இவனுக்கு என்னாச்சு, எப்போதும் போனை சுவிட்ச் ஆப் பண்ணவே மாட்டானே, என. சந்தேகத்தில் இருந்தவளோ நந்தினிக்குப் போன் செய்தாள்.
நந்தினி, “சொல்லுடி,ஊருக்குப் போகும் போது தான் என்னிடம் சொல்லவில்லை. அங்க போயாவது சொன்னீயா?,
ஹாசினி, “இங்க வந்து இறங்கியதுமே பாட்டி என்னைக் கோவிலுக்கு கிளம்பச் சொல்லிட்டாங்க, இன்றைக்கு ஆகாஷ் வந்தானா?,
நந்தினி, “ஓ,கோ விஷயம் இது தானோ?, அவனுக்கு போன் பண்ணியிருப்ப!, அவன் எடுக்க வில்லை என்றதும் எனக்கு போன் பண்ற,
ஹாசினி, “ஆமா!,இன்னிக்கு அவனை பார்த்தியா?
நந்தினி, “ஆகாஷ் காலேஜீக்கு வந்த மாதிரியே இல்ல,
ஹாசினி, “ஆகாஷ் கூடவே சுத்திக்கிட்டு இருக்கும்மே மங்கி, அத பார்த்தியா?,
நந்தினி, “யாரையுமே பார்க்கல, என உறுதியாக சொன்னாள்.
ஹாசினி, “அங்க ஆகாஷ் வந்தா எனக்கு போன் பண்ணச் சொல்லு, என அழைப்பைத் துண்டித்தாள்.
சொர்ணம்மாள் மறைமுகமாக ஹாசினி பேசியதை அப்படியே கேட்டுவிட, அதைப் பார்த்ததுமே திகைத்து நின்றாள்.
ஆகாஷ், அச்சசச்சோ பலமுறை எனக்கு போன் பண்ணியிருக்கா போல. அவளுக்கும் திரும்பவும் போன் செய்வோம் என நினைத்தான்.
ஹாசினியின் கைப்பேசி ஒலித்துக் கொண்டிருக்க, அதை அழுத்தி பேச முடியாமல் பாட்டியின் எதிரே நின்றாள்.
வானில் தொடரும்..
Acho pavam vithi ithungaluku ena Sathi seiya potho teriyalaye…