அத்தியாயம் 9
சாலையின் ஓரமாக விறுவிறுவென்று நடந்து கொண்டிருந்ந ஹாசினியின் பின்னால் ஓடினான் ஆகாஷ். உனக்கு என்னாச்சு, எதுக்காக இப்படி கோபமாக நடந்துட்டு இருக்குற, நில்லு. .நில்லு ..ஹாசினி என சொல்ல சொல்ல ஹாசினியின் வேறோரு ஆட்டோவை பிடித்து சென்று விட்டாள்.
மாலையில் ஹாசினியின் எண்ணிற்கு அழைத்த ஆகாஷ், அதற்கு கூட பதில் அளிக்காமல் இருந்தாள்.
தனிமையில் இருந்த ஹாசினியிடம் ,அவளுடைய தோழி நந்தினி ஆறுதலாக பேச ஆரம்பித்தாள். “உனக்கு என்ன தான் பிரச்சினை? “ஆகாஷ் வந்து உன்னைப் பார்க்கனும் நினைச்ச போது நீ ஏன்? அவனைப் பார்க்க பிடிக்கல என்று சொன்னாய்.ஆகாஷ் பல தடவை உன்னிடம் பொய் சொல்லியிருக்கிறான். அப்போதெல்லாம் அவனை மன்னித்து விட்டுருக்க, இன்னிக்கு அவனோ எந்த தவறும் செய்ய வில்லை. எதற்காக அவனை தண்டிக்கிறாய். இத்தனை நாள் செஞ்ச தப்புக்கு மொத்தமாக அவனை பழிவாங்குகிறாயா?,என்றவள் கேட்டாள்.
ஹாசினி ,”அவனை பழிவாங்கனும் என்ற எண்ணம் என் மனசில் இருந்ததேதில்லை. ஆனாலும் இவனை எங்க வீட்டுல ஏத்துக்க போறதில்லை. அது மட்டும் நல்லா தெரிஞ்சுடுச்சு என விரக்தியோடு பேசினாள்.
நந்தினி, “நீ விரக்தியா பேசற அளவுக்கு என்ன நடந்துச்சு “நீயும் ஆகாஷீம் காதலிக்கிற விஷயம் உங்க வீட்டுக்கு தெரிஞ்சு போச்சா,
அப்படியெல்லாம் இல்ல, அவனைப் பத்தி தான் எனக்கு தெரிஞ்சு போச்சு என குழப்பத்துடனே பேசினாள்.
நந்தினி, “ஏன்டி நீயும் என்னை குழப்புற”
ஹாசினி,எங்க குடும்பத்துக்கு பிடிக்காத கார்த்திகேயனோட மகன் தான் ஆகாஷ்.அதுவும் இப்போது தான் என்னுடைய கண்ணால பார்த்துட்டு வந்தேன் அத வைச்சு தான்சொல்றேன்.
நந்தினி,உங்க குடும்பத்துக்குப் பிடிக்க வில்லையென்றால் உனக்கும் பிடிக்காதா?,இத நீ லவ் பண்றதுக்கு முன்னாடி யோசிச்சுருக்கனும். அத விட்டுட்டு இப்ப வந்து எதுவுமே நடக்காது என நெக்டிவ்வாக பேசுற,
ஹாசினி, என்னோட குடும்பம் தான் எனக்கு முக்கியம். எங்க குடும்பத்துக்கு பிடிக்காதவர்களிடம். நான் எப்போதும் பழக்கம் வைச்சுக்கவே மாட்டேன் என்று சொல்லிட்டு கைப்பேசியை எடுத்து அவங்க தாத்தா ராஜவேல்பாண்டிக்கு அழைத்தாள்.
சொர்ணம்மாள், “என்னம்மா கண்ணு எப்புடி இருக்குற “
நல்லா இருக்கேன் பாட்டியம்மா, நீங்க?
இருக்கேன்..இருக்கேன்..உன்னைப் பார்க்கனும் போல இருக்கு,
ஹாசினி, “நாளைக்கே கிளம்பி வாரேன் பாட்டியம்மா,இப்போது போனை வைச்சுடுறேன் என அழைப்பைத் துண்டித்தாள்.
நந்தினி, ஏய்!, நாளைக்கு ஆகாஷீற்கு பிறந்த நாள் நீ அவனுக்கு வாழ்த்துக்கள் கூற வில்லையென்றால் அவன்ரொம்ப வேதனைப்படுவான் என பரிவாக கூறினாள்.
ஹாசினி, நீ அவனைப் பத்தியே என்னிடம் பேசாதே?, அவனும் அவங்க அப்பாவைப் பத்தி சொல்லவே இல்ல என கடிந்து பேசினாள்.
நள்ளிரவு 12மணி ஆனது..
ஹாசினியின் அழைப்புக்காக காத்திருந்தான் ஆகாஷ்.
வானில் தொடரும்…
ஹாசினி பேசுவா பாயிண்டா, அவ ஃபேமிலி இருக்குது ஜாயிண்டா…
ஹாசினிக்கும், ஆகாஷூக்கும் லவ்வு, குடும்ப பகையால காதல்ல வந்தது வம்பு…
Yemma avanga appa va pidikalena aven enna pannuvan… Avana yen venam nu slra… Ithellam knjm over…. Pavam aven evlo feel pannirupa… Nee rmba thn ma panra…