அத்தியாயம் 17
கல்யாணம் என்பது இரு மனசும் சேர்ந்து வாழப் போகிற வாழ்க்கை. ஆனால் அதை ஒருத்திக்கு விருப்பமே இல்லாமல் பண்றது மிகப்பெரிய பாவம். அது உன்னோட பாட்டிக்கு எப்போது தான் தெரியப் போகுதோ? என வருத்தமாக கூறினார்.
ரவி, “தாத்தா ஆகாஷை எனக்கு நல்லா தெரியும். ஆனால் அவங்களோட குடும்பத்தைப் பத்தி எதுவும் தெரியாது. என்னுடைய முதல் வேளையாக நானே அவங்க வீட்டுல போய் பேசுறேன். அது தான் சரியாக இருக்கும்..
ராஜவேல்பாண்டி, “அந்த குடும்பத்தில் நீ போய் பேசுறது சரியாக வராது”.
ரவி, “தாத்தா நம்ம இதுக்கு மேலயும் பேசாமல் இருந்து விட்டால் ஹாசினி ஆசைப்பட்ட வாழ்க்கை கிடைக்காமல் போய் விடும்.இதுக்கு மேல என்னை தடுக்காதீங்க? “என அறையை விட்டு வேகமாக சென்றான்.
தன்னறைக்கு வந்த சொர்ணம்மாளும் பேத்தியிடம் எப்படி சொல்லி சமாளிப்பது என்ற ஆழ்ந்த சிந்தனையில் இருந்தாள். அந்நேரத்தில் கதவைத் திறந்து உள் நுழைந்தவள் எதுவும் பேசாது மெளனம் காத்தாள்.
ஹாசினியும் பாட்டியின் முகத்தை பார்க்காது தலைகுனிந்தபடியே நின்றாள்.
சொர்ணம்மாள்,”ஹாசினி, இந்த பாட்டி ஒரு முடிவு எடுத்தால் அது சரியாக தானே இருக்கும். “
ஹாசினி, “பாட்டி இதுவரைக்கும் நீங்க எடுத்த முடிவு எல்லாமே சரியாக தான் இருந்துச்சு! “ஆனால் என்னுடைய கல்யாண விஷயத்துல மட்டும் எல்லாமே தப்பாகவே இருக்கு..
சொர்ணம்மாள், “உன்னோட கல்யாணம் என்னுடைய விருப்பத்தோடு தான் நடக்கனும் .நாளைக்கு உனக்கும் நான் ஏற்பாடு பண்ணியிருக்கிற மாப்பிள்ளைக்கும் வீட்டுல வச்சு தான் நிச்சயதார்த்தம். இதுக்கும் மேலயும் நீ உன்னுடைய காதல் தான் முக்கியம் என்று நினைச்சேனா? “இந்த பாட்டியை உயிரோட பார்க்க முடியாது .நீயும் நல்லா யோசித்து எனக்கு நல்ல ஒரு முடிவைச் சொல்லு என்று கூறி விட்டு சென்றாள்.
“என்னுடைய வாழக்கையில் நடக்கின்ற ஒவ்வொரு சம்பவமும் என் மனதைக் காயப்படுத்துகிறதே? “ஆரம்பத்திலேயே ஆகாஷைச் சந்தித்தது என் தவறா?அவனை நினைத்த இதயம் .இந்த இதயத்துக்குள்ளே இன்னொருவனை நுழைக்கவே முடியாது. என்னுடைய பாட்டியின் உயிரும் எனக்கும் முக்கியம் தான். அதை விட நாம் வாழப்போகின்ற வாழ்க்கை கடைசி வரைக்கும் சந்தோஷமாக வாழ்வது தான் வாழ்க்கை. இதுக்கு மேலயும் நான் உயிரோடு இருக்கிறது முக்கியமில்ல என ஒரு முடிவுக்கு வந்தாள்.
பவித்ராவும் அடுப்பில் பாலை வைத்து விட்டு வேறோரு கவனத்தில் இருக்க, அந்த பால் பொங்கி வழிய ஆரம்பிக்க, அந்த நேரத்தில் அனிதா தற்செயலாக வர, அடுப்பை அமர்த்தினாள்.
அனிதா, “அத்தை அடுப்புல பாலை வைச்சுட்டு நீங்க வேற ஏதோ கவனத்தில் இருக்கிறீங்க! “
பவித்ரா, அது.. வந்து என சொல்லிட்டு ஹாலில் போய் அமர்ந்தாள்.
அனிதா, “அத்தை.. அத்தை.. உங்ககிட்ட தான் கேட்டுட்டு இருக்கேன். நீங்க எந்த பதிலும் சொல்லாமல் இருக்குறீங்க! “
பவித்ரா, “முதலில் இங்க வந்து உட்காரு? “
அனிதா, “மும்ம்..
பவித்ரா, “நேத்து நான் கோவிலுக்குச் சென்றிருந்த போது எத்தனையோ பேர் கோவிலில் இருந்தாங்க? “என்னைப் பெத்த அம்மாவே என்னைக் கண்டுக் கொள்ளாமல் சென்று விட, அந்த பொண்ணு யாரென்று தெரியல, மயக்கமாக இருந்த என்னை தண்ணீர் தெளித்து எழுப்பி விட்டாள். அதுவும் நான் எதிர்பார்க்குற குணத்துல தான் அவளும் இருக்கிறாள். அந்த பொண்ணு ஆகாஷீற்கு கல்யாணம் செய்து வைத்தால் நல்லா இருக்கும்.
அனிதா, ப்ச்ச்.. இவங்க எதிர்பார்க்குற குணத்துல நானில்லையா? “என பொருமியபடி இருந்தாள்.
பவித்ரா, “அனிதா நீ என்ன யோசனையில் இருக்குற? “
அனிதா, “அவுக தான் வேற ஒரு பொண்ணை லவ் பண்றாங்களே? “
பவித்ரா, “அவன லவ் பண்ற குடும்பம் நம்முடைய குடும்பத்திற்குச் சரிப்பட்டு வராது “எனச் சொல்லிட்டு சென்றாள்.
இதுவரைக்கும் அப்பாவும், அம்மாவும் உன்னிடம் மறைக்கின்ற விஷயம் என்னன்னு தெரியுமா? “
ஆகாஷ், “டேய், அண்ணா அது தான்டா எனக்கு தெரியாது?சுத்தி வளைச்சு சொல்லாமல் நேராக சொல்லு என ஆர்வமாக …
சந்தோஷ், “அப்பாவும், அம்மாவும் லவ் பண்ணி தான் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க? “
ஆகாஷ், ‘என்னது லவ் பண்ணாங்களா!,இந்த விஷயமே எனக்கு தெரியாதே?”
சந்தோஷ், “ஆமாம்.. இன்னும் நீ தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம் நிறைய இருக்குது.
ஆகாஷ், “ம்ம்ம்.. சொல்லுடா,
சந்தோஷ், டேய்!அண்ணனுக்கு மரியாதை கொடுத்து பேசுடா? “
ஆகாஷ்,’சரிங்க அண்ணா சொல்லுங்க?’
சந்தோஷ், “வெரி குட் “,நான். சொல்லி முடிக்கிற வரைக்கும் கொஞ்ச நேரம் நடுவுல தொந்தரவு பண்ணாமல் இருக்கியா?”
ஆகாஷ், “சரிங்க அண்ணே! “என வாயை மூடி கவனமாக கேட்டான்.
அம்மா இதுவரைக்கும் அவங்களோட சொந்த பந்தங்களைப் பத்தி யாரிடமும் சொன்னதே இல்லை .என்னிடம் கூட சொன்னது கூட கிடையாது. நானே தான் அத கண்டுபிடிச்சு தெரிஞ்சுக்கிட்டேன்.
ஆகாஷ்,”நீயா எப்படி கண்டுபிடிச்ச?”
சந்தோஷ், ” அம்மா எப்போதும் ஸ்டோர் அறைக்குள்ளே நுழைய அவர்களைப் பின்தொடர்ந்து நானும் சென்றேன்
அப்போது தான் அந்த புகைப்படத்தைப் பார்த்து அழுது புலம்பினார்கள். அப்போது தான் எனக்கே தெரிந்தது.
இதுல அப்பா ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர்.அம்மா செந்தூர்புரம் சொர்ணம்மாளின் செல்லமான மகள். இவர்களின் இருவரும் காதலித்த விஷயம் அப்பா ராஜவேல்பாண்டிக்கும் ,சொர்ணம்மாளுக்கும் தெரிய வந்தது. அதனால் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த மகளுக்கு அவசர அவசரமாக திருமண ஏற்பாடுகள் நடந்தது. அதை மறுத்த விட்டு வீட்டை விட்டு ஓடிப் போய் கல்யாணம் செஞ்சுட்டாங்க? “அதனால் கோபமடைந்த அண்ணன் ரத்னா, கணேசன் ,தன்னுடைய தங்கையே இல்ல எனத் தலை முழுகிவிட்டார்கள்.
ஆகாஷ், “அப்படியென்றால் நான் காதலிக்கின்ற பொண்ணு என்னுடைய மாமா பொண்ணா? “என
ஆச்சரியப்பட்டான்.
சந்தோஷ், “இப்ப புரிகிறதா? “அப்பா உன்னை எதுக்காக காலேஜ் படிப்பே வேண்டாமென்று வீட்டுக்கு அழைச்சுட்டு வந்துட்டாங்க! “
ஆகாஷ், “அண்ணா!அப்பா ஹாசினியை வேண்டாம் எனச் சொன்னதுக்கு இத தான் காரணமா? “
சந்தோஷ், “இன்னொரு காரணமும் இருக்குது.அவர்களால் உனக்கு ஏதாவது ஆபத்து வந்திடும்மோன்னு தான் பயப்படுறாங்க? “
ஆகாஷ், “அவங்க குடும்பத்தில் உள்ளவர்களால் எனக்கு எந்தவொரு பிரச்சினையும் வராது என்றான்.
சந்தோஷ், “சரிடா!,நீயும் அம்மா,அப்பா எந்த பொண்ண சொல்றாங்களோ? அந்த பொண்ணயே கல்யாணம் பண்ணிக்கனும். அதுக்காக தான் அம்மாவுடைய குடும்பத்தைப் பத்திசொன்னேன்”.
ஆகாஷ், “நீ இதுக்காக தான் என்னிடம் உண்மை சொன்னாயா? “நானும் ஹாசினியும் சேருவதற்காக தான் நீ இத்தனையும் சொன்னாய் என நினைத்தேன்”.
வானில் தொடரும்…