Loading

யஷ்!!! யஷ்!!! யஷ்!!! என்று அந்த அரங்கமே அதிரும் வண்ணம் மாணவ மாணவிகளின் சத்தம் இரவின் அமைைதியை கிழித்துக் கொண்டு இருக்க,

மேடையில், தன் முன்னே ஆர்ப்பரிக்கும் கூட்டத்தை கண்டு கையில் மைக்கோடு கண்களை அழுத்த மூடி திறந்தவள் தன் குரலால் அரங்கையே அடுத்த சில மணி துளிகளுக்கு கட்டி போட்டு இருந்தாள். 

“யஷ்…. யூ ஆர் அமேசிங்…. இன்றைக்கு நம்ம காலேஜ் டிராபி வாங்க உன்னுடைய சிங்கிங் முக்கியமான காரணம். எல்லாரும் பார்ட்டியில் ஹாப்பியா இருக்காங்க. நீ மட்டும் ஏன் என் கிட்ட கூட சொல்லாமல் வீட்டிற்கு வந்துட்ட” என்று தன் தோழியிடம் கேட்டான் ரோகித் படேல். 

“மூட் ஆஃப் ராகி… இன்றைக்கு என்னால் பாட முடியும்னு கூட நான் நினைக்கலை… ஆனால்” என்று சொல்லும் போதே இடையில் ரோகித், 

“வெயிட் மச்சி… எப்படியும் நீ ஒரு சோகக் கதையை சொல்ல போற நான் போய் அதுக்கு கரெக்டான ஐட்டத்தை ரெடி பண்ணிட்டு வரேன்” என்று உள்ளே செல்ல, பால்கனியில் இருந்த படியே டெல்லியின் குளுமையை அனுபவித்தாள். 

கையில் சரக்கோடு வரும் நண்பனை பார்த்து “அட குடிகார நாயே அப்ப நீ என்னை சமாதானம் பண்ண வரலை… குடிக்க காரணம் தேடி வந்திருக்க” என்று முறைக்க, 

“விடு மச்சி… புண்பட்ட மனதை புகை விட்டு ஆத்துனு பழமொழியே இருக்கு” என அசடு வழியே இளித்து கொண்டு சொல்ல, 

“பழமொழியா…. உனக்கு தமிழ் சொல்லி கொடுத்து பெரிய தப்பை பண்ணிட்டேன். சரி சரி எனக்கும் ஒரு க்ளாஸ் தா இரண்டு பேரும் சேர்ந்து ஆத்தலாம்” என்று சிரித்து கொண்டே சொல்ல

“இது தான் நல்ல நண்பிக்கு அழகு… எப்பவும் உன் முகத்தில் இந்த சிரிப்பு இருக்கனும். அதுக்காக இந்த ரோகித் எதுவும் செய்வான்” என்று அழுத்தமான குரலில் சொல்ல, 

“அது தான் தெரியுமே” என்று சொன்னவளின் கண்களில் சொல்ல முடியாத வலிகள் பல தேங்கி கிடந்தது. 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
7
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment