Loading

நாட்கள் அதன் போக்கில் நகர்ந்தன. ஆர்த்தி, சஞ்சய் மற்றும் ரிஷி கல்லூரிக்குச் சென்று கொண்டிருந்தனர். ஆர்த்தி முதுநிலை வணிக நிர்வாகம்(M.B.A) முதலாம் ஆண்டு படிக்கிறாள். சஞ்சய் முதுநிலை வணிக நிர்வாகம் இரண்டாம் ஆண்டு படிக்கிறான். ரிஷி அதே கல்லூரியில் கட்டிடப் பொறியாளர் பேராசிரியராக இருக்கிறான்.

சமியின் வீட்டில் அவள் தன் மாம்ஸ் மற்றும் அத்தையுடன் குஷியாக நாட்களை போக்கிக் கொண்டிருந்தாள். யாமினி மருத்துவர், ஆதலால் அவரால் சமியுடன் நேரம் செலவு செய்ய இயலவில்லை. அவளின் அத்தை தான் அவளுடன் இருந்து அவளின் தனிமையை போக்கியவர். ஆதலால் அவளுக்கு தன் அத்தையை மிகவும் பிடிக்கும்.

“சமி நாளைக்கு நீ,நான், வாசு சென்னைக்கு போறோம். காலேஜ்ல அட்மிஷன் ஃபார்ம் குடுத்துட்டு உனக்கு ஹாஸ்டல் நல்லா இருக்கானு பார்த்துட்டு வந்துருவோம். காலைல 5 மணிக்கு ஃப்ளைட். அதனால் போய் தூங்கு போ.”

“யாமினி எதுக்கு சமி ஹாஸ்டல்ல இருக்கனும்?”

“பின்ன வேற எங்க அண்ணா அவ இருப்பா?”

“யாமினி நான் கல்யாணத்துக்குப் போனேன்ல அங்க நம்ம தூரத்துச் சொந்தம் ஒருத்தவங்கள நான் பார்த்தேன்.”

“யார் அண்ணா அது?”

“நம்ம சரோஜா அத்தையோட பொண்ணு நளினியை தான்.”

“ஓ அவர்களா சரி அதுக்கு என்ன அண்ணா?”

“அவங்களிடம் நான் சொன்னேன் இந்த மாதிரி நம்ம சமி சென்னைல காலேஜ் படிக்க வரானும், ஹாஸ்டல்ல தான் இருக்க போறானு சொன்னேன். அதுக்கு நளினியோட வீட்டுக்காரர் அவங்க வீட்டிலேயே சமி இருக்கட்டும்னு சொன்னாரு. நான் வேனானு எவ்வளவோ சொல்லிட்டேன். அவங்க கேட்கவே இல்ல. அவங்க பசங்களும் அதே காலேஜ்ல தான் படிக்கிறார்களாம். அதுனால நம்ம சமிய அங்கேயே ஸ்டே பண்ண சொல்லிட்டாங்க. சரி நானும் நம்ம சமி சாப்பாட்டுக்குக் கஷ்டப்பட கூடாதுனு சரினு சொல்லிட்டேன்.”

“என்ன அண்ணா சமி எப்படி அவங்க வீட்டில் இருப்பா?”

“ஏன் இருக்க மாட்டா மினிமா?”

“இல்ல வாசு, சமி தனியா யார் வீட்டிலயும் இருந்தது இல்ல அதான் யோசிக்கிறேன்.”

“மினிமா அதுக்கு தான நீ அவளை ஊருக்கு அனுப்புற? அவ அதுலாம் பலகிக்குவா. நாமலும் ஆறு மாசத்துக்கு அப்புறம் அங்க போய்டுவோம். ஸோ அது வரைக்கும் பாப்பு அவங்க வீட்டிலே இருக்கட்டும். நாம நாளைக்கு அவங்க வீட்டை போய் பார்ப்போம். நமக்கு ஒகேனா பாப்பு அங்கயே இருக்கட்டும். என்ன ராம் சொல்ற?”

“வாசு சொல்றது சரி தான். நீங்க முதல்ல போய் பாருங்க.”

“சரி அப்ப நாங்க வரதை அவங்கிட்ட சொல்லிடுங்க அண்ணா.”

“ம் சரி மா.”

அடுத்த நாள் மூவரும் சென்னை சென்றனர். ஏர்போர்ட்டில் இறங்கியவுடன் வாசுவின் அலுவலகத்தில்(சென்னை கிளை) இருந்து மகிழுந்து வந்தது. அதில் ஏறியவர்கள் லீலா பேலஸ்ஸில் இறங்கி அவர்கள் புக் செய்த அறைக்குச் சென்றனர். சிறிது நேரத்தில் தயாரானவர்கள் ஆர்டர் செய்த உணவைச் சாப்பிட்டு விட்டு கல்லூரிக்குச் சென்றனர்.

கல்லூரி வாயிலில் காவலாளி அவர்களது வண்டியை நிப்பாட்டி விசாரித்து விட்டு அவர்களை உள்ளே அனுப்பினார். வாசு,யாமினி மற்றும் சம்யுக்தா கல்லூரி அலுவலகத்துக்குச் சென்றனர். அங்கே ரெஜிஸ்டரிடம் சென்று ஃபார்மாலிட்டி முடித்தனர்.

“பாப்ஸ் பசிக்குது. கேன்டீன் போகலாம்.”

“நீ முன்னாடி போடா. இங்க கொஞ்சம் வேலை இன்னும் இருக்கிறது. நாங்க முடிச்சுட்டு வரோம்.” வாசு தன் பணப்பையை(wallet) சமியிடம் கொடுத்தார். சமி அதை வாங்கிக்கொண்டு சென்றால்.

சமி அங்கு இருந்தவர்களிடம் கேட்டுக்கொண்டு கேன்டீன் நோக்கிச் சென்றால். அப்பொழுது அவளது மாமா அழைக்க பேசிக் கொண்டே சென்றதில் எதிரில் வந்தவர் மீது இடித்துக்கொண்டாள்.

“அவுச். பார்த்து வர மாட்டீர்களா?” சமி கோவத்துடன் வினவ, எதிரில் இருந்தவர்,”மேடம் நீங்க தான் ஃபோன் பேசிட்டே வந்தீங்க.”

“அய்யோ ஆமா, சாரி பாஸ்.” எதிரில் இருந்தவருக்கு ஆச்சரியம், உடனே அவள் மன்னிப்பு கேட்டது.

“பரவால இருக்கட்டும். காலேஜ்கு புதுசா?”

“ஆமா பாஸ். இப்போ தான் ஜாயின் பண்ணிட்டு வந்தேன். அப்பாவும் அம்மாவும் இன்னும் ஆபிஸ் ரூம்ல தான் இருக்காங்க.”

“ஓ ஓகே. நான் என்ன கொல்ல கூட்டத் தலைவனா? இப்படி பாஸ் பாஸ்னு கூப்பிடுற?”

“ஹி ஹி நீங்க உங்க நேம் சொல்லல அதான்.”

“நீயும் தான் சொல்லல.”

“அய்யோ ஆமால, என் பேர் சம்யுக்தா.”

“நல்ல பேர். நான் ரிஷி.”

“நீங்க என்ன டிபார்ட்மெண்ட் & எந்த வருஷம் ரிஷி?”

“நான் சிவில்…” ரிஷி கூறி முடிக்கும் முன் சமி,”ஐ நானும் சிவில் தான் ரிஷி. எந்த வருஷம் நீங்க??”

“அது ஹச்.ஓ.டி தான் சொல்லவேண்டும்.”

“ஏன்?” சமி புரியாமல் கேட்க.

“பிகாஸ் நான் பேராசிரியர்.” ரிஷி சொன்னவுடன் சமியின் இரு கண்களும் ஒரு வினாடி ஆச்சரியத்தில் பெரிதாகின. பின் இயல்பாக,”ஓ அப்படியா!!!” என்று சாதாரணமாகச் சொன்னால். ஆனால் ரிஷி அவளின் முக மாற்றத்தைக் கவனித்துவிட்டான். பின் சிரித்துக் கொண்டு,”சரி சரி நீ சாரிலாம் கேட்க வேண்டாம் நான் தப்பாலாம் நினைச்சுக்கல.”

“சார் நான் ஒன்னும் சாரி கேட்கலையே.”

“நான் உன் கிளாஸ்கு வந்தால் நான் தான் உனக்கு மார்க் போடனும் மறந்திராத.”

“சார் நீங்க எனக்கு ஜீரோ போட்டா கூட எனக்கு கவலை இல்லை ஏனா எனக்கு மார்க் முக்கியம் இல்ல, நீங்க சொல்லிக் குடுக்கிறத தெரிந்துகொண்டாலே போதும். அதாவது நாலேட்ஜ் போதும்.”

“ம் குட், இப்படி தான் இருக்கனும்.”

“நன்றி சார். எனக்கு பசிக்கிறது ஸோ நான் கேன்டீன் போகிறேன்.” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டாள். ரிஷியும் தலையை ஆட்டிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டான்.

வாசு,யாமினி மற்றும் சமி கேன்டீனில் ஸ்நாக்ஸ் சாப்பிட்டு விட்டு ரிஷியின் இல்லம் நோக்கிச் சென்றனர்.

ப்ரகாஷும், நளினியும் வீட்டின் வாயில் வரை வந்து வாசு, யாமினி மற்றும் சமியை வரவேற்றனர்.

அன்று கல்லூரி விடுமுறை ஆதலால் சஞ்சய் வீட்டில் தான் இருந்தான். பேராசிரியர்களை மட்டும் வரச் சொல்லியிருந்தாங்க. அதனால் ரிஷி கல்லூரி சென்று இருந்தான்.

வாசுவும் ப்ரகாஷும் தத்தம் தொழில்களைப் பற்றி பேசிக்கொண்டு இருந்தார்கள். நளினியும் யாமினியும் அவர்களின் உறவுகளைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். சமி இவர்கள் பேசுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தால். கொஞ்ச நேரத்தில் சஞ்சய் அங்கு வந்தான்.

“இவன் தான் என் இரண்டாவது பையன் சஞ்சய்.”

“வணக்கம்” சஞ்சய் கூற, வாசுவும் யாமினியும் பதில் வணக்கம் கூறினார்கள்.

“சஞ்சய் இது எங்க பொண்ணு சம்யுக்தா. நீ படிக்கிற காலேஜ்ல தான் இவ பி.இ. சிவில்ல சேர்ந்து இருக்கிறா.”

“ஹாய் சமு. நான் அப்படி கூப்பிடலாம்ல.”

“யா கூப்பிடலாம் ஜெய்.”

“ஜெய் உம் இதுவும் நல்லா தான் இருக்கு.” என்றதும் இருவரும் சிரித்துக் கொண்டனர். பின் இவர்கள் ஒருவரை பற்றி ஒருவர் கூறி நட்பாகி கொண்டனர்.

கங்காதேவி, அவர்கள் வீட்டு பால்கனிக்கு வந்த போது ப்ரகாஷ் வீட்டிற்கு வாசு வருவதைப் பார்த்து விட்டார். குடும்பம் சகிதமாக இறங்கியதைப் பார்த்தவுடன் அவருக்கு ஏனோ பயம் தொற்றிக்கொண்டது. உடனே சென்றால் நன்றாக இருக்காது என்று எண்ணி சிறிது நேரத்திற்குப் பிறகு ப்ரகாஷ் வீட்டிற்கு வந்தார்.

ப்ரகாஷும் நளினியும் அவர்கள் வருவதைப் பார்த்து எழுந்து நின்று,”வாங்க அம்மா.”

“ம் நம்ம வீட்டுக்கு புதுசா யாரோ வந்துருக்காங்கனு ஆர்த்தி சொன்னா அதான் யாரென்று பார்த்துட்டு போகலாமென வந்தேன். நீங்க உக்காருங்க.”

“அம்மா இவங்க யாமினி, நாங்க கொஞ்ச நாளுக்கு முன்னாடி ஒரு கல்யாணத்துக்கு போனோம்ல அங்க தான் தெரிஞ்சது இவங்க நம்ம நளினியோட தூரத்து சொந்தமென்று. இப்ப அவங்க பொண்ணு நம்ம பசங்க படிக்கிற காலேஜ்ல தான் சேர்த்து இருக்கிறாங்க. அதான் நம்ம வீட்டிலேயே இருக்கட்டும்னு சொன்னேன்.”

“ஓ சரி பா.” அத்தோடு நிறுத்திக் கொண்டார். பின் எல்லோரையும் அறிமுகப்படுத்தினார். கங்காதேவி அப்ப அப்ப சமியை மட்டும் ஒரு மாதிரியாகப் பார்த்தார். அவருக்குள் பயம் வாசுவின் வசதியை பார்த்து. எங்கே சமி சஞ்சயை திருமணம் செய்துகொண்டால் ஆர்த்தியை கண்டுகொள்ள மாட்டார்களோ என்று. இது நடக்க கூடாது என்பதில் தெளிவாக இருந்தார்.

“பாப்ஸ் ஒரு மாதிரி இருக்கு. நான் கொஞ்ச வெளிய போகட்டுமா?”

“சஞ்சய் நீயும் கூட போ பா. அப்படியே நம்ம தோட்டத்தைச் சுத்தி காட்டு.” ப்ரகாஷ் கூற, கங்காதேவி உடனே,”ப்ரகாஷ் நான் யாருன்னு பார்க்க மட்டும் வரல என்னோட மருந்து தீந்து போச்சு. சஞ்சய் கொஞ்சம் வாங்கிட்டு வா பா.” வேறு வழியில்லாமல் சஞ்சய்யும் மருந்து வாங்கச் சென்றான். சமிக்கு ஏனோ இவர்கள் வேனுமென்றே கூறியது போலத் தோன்றியது. கண்டுகொள்ளாமல் அவள் அங்கிருந்து வெளியேச் சென்றாள்.

தோட்டத்தின் அழகை மெய் மறந்து ரசித்துப் பார்த்த படியே அங்கே அமைந்துள்ள மரப் பெஞ்சில் அமர்ந்தாள். பின் தன் கைப்பேசியை எடுத்து ஹெட்ஃபோனை காதில் மாட்டி பாட்டு கேட்க ஆரம்பித்தாள்.

ரிஷி தன் வண்டியை நிறுத்தி விட்டு வீட்டுக்குள் நுழையும் முன்னரே சமி பாட்டுக் கேட்டுக் கொண்டிருந்ததை பார்த்துவிட்டான்.

“இவள் இங்கே என்ன பண்றா? சரி ரிஷி வா போய் பார்ப்போம்.” தனக்குள்ளே பேசிக் கொண்டு சமியின் முன் நின்றான். திடீரென தன் முன் இருட்டாவதை உணர்ந்து சமி கண்ணைத் திறந்து பார்த்த பொழுது ரிஷியை பார்த்து ஆச்சிரியப்பட்டாள்.

“என்ன Mr.ரிஷி இங்க என்ன பண்றீங்க?”

“பார்ரா திரும்பப் பேர் சொல்லி கூப்பிடுகிற.”

“பாஸ் காலேஜ்ல கண்டிப்பா உங்களை நான் சார்னு தான் கூப்பிடுவேன். பட் இது காலேஜ் இல்ல ஸோ பேர் சொல்லி கூப்பிடுறதுல என்ன இருக்கு. நாளைக்கு நாங்க காலேஜ் முடிச்சுட்டு ஜாப்கு தான் போக போகிறோம். அங்க யாரும் சார் மேடம்னு கூப்பிட மாட்டார்கள். அதுவுமில்லாமல் நான் உங்களை மரியாதை குறைவா கூப்பிடலையே.”

“கூல் கூல். எனக்கு நீ எப்படி கூப்பிட்டாலும் பரவால. ஜஸ்ட் சும்மா உன்ன சீண்டிப் பார்த்தேன்.”

“ஓகே ஓகே நீங்க இன்னும் நான் கேட்டதுக்குப் பதில் சொல்லலையே. நீங்க இங்க என்ன பண்றீங்க?”

“ஹா ஹா இது நான் கேட்க வேண்டிய கேள்வி. பிகாஸ் இது எங்க வீடு.”

“ஓ ஓ அப்ப நீங்க தான் ஜெய்யோட அண்ணனா?”

“ஜெய்யா?”

“அட நான் சஞ்சயைத் தான் ஜெய்னு சொன்னேன்.”

“ஓ அதுக்குள்ள செல்ல பேர்லாம் வச்சுட்டீங்க போல.”

“ஆமா ஆமா. உங்க பேரே இரண்டெழுத்து தான். இல்லாவிட்டால் உங்களுக்கும் செல்ல பேர் வைத்திருப்பேன்.”

“ஹா ஹா என் ஃபுல் நேம் ரிஷி நந்தன்.”

“சூப்பர். நான் அப்ப வீட்டில் இருக்கும் போது நந்துனே கூப்பிடுகிறேன் சரியா?”

“வீட்டில் இருக்கும் போதா?”

“ஆமா இனிமே நான் இங்க தான் இருப்பேன்.”

“ஓ ஓ நீ தானா அது?? அம்மா சொன்னார்கள். அவங்க தூரத்து சொந்தகாரவங்களோட பொண்ணு இனிமே இங்க தான் ஒரு ஆறு மாசத்துக்கு இருக்க போறானு. அது நீ தானா??”

“ஆமா அது நான் தான். எங்க அம்மாவோட அத்தை பையனோட பெரியப்பாவோட சகலையோட அம்மாவோட தக்கச்சியோட ஓரகத்தியோட பொண்ணு தான் உங்க அம்மா.” சமி கூறியதும் ரிஷி தன் தலையில் கை வைத்து அமர்ந்துவிட்டான்.

“எப்படி இப்படி ஞாபகம் வச்சுருக்க?”

“அது அம்மா சொல்லுவாங்க எனக்கு சின்ன வயசுல இருந்து ஞாபகச் சக்தி அதிகம்னு.”

“அதுக்குனு இது டூ மச்சா தெரியல??”

“ஹா ஹா ஓகே எளிமையா சொல்லனும்னா உங்க அம்மா எனக்கு அத்தை போதுமா?”

“அப்பாடா இப்பவே கண்ண கட்டுதே.” இருவரும் சிரித்தனர். இதை தன் வீட்டில் இருந்து பார்த்த ஆர்த்திக்குச் சொல்ல முடியாத உணர்வு தோன்றியது. உடனே ரிஷியின் வீட்டிற்குச் சென்றாள். சிறிது நேரத்திலே இருவரும் நந்து, யுகி என கூப்பிட ஆரம்பித்தார்கள்.

ஆர்த்தி வந்தது கூட தெரியாமல் ரிஷியும் சமியும் பேசிக் கொண்டிருந்தார்கள். ஆர்த்தி தொண்டையைக் கனைத்தாள். ரிஷி, ஆர்த்தியைப் பார்த்து,”ஹாய் ஆர்த்தி என்ன இங்க?”

“இல்ல ரிஷி சும்மா தான் வந்தேன். ஏன் வர கூடாதா??”

“ச ச. நான் அப்படி சொல்லலை சும்மா தான் கேட்டேன். சரி யுகி இது ஆர்த்தி & ஆர்த்தி இது யுகி, ஐ மீன் சம்யுக்தா.”

“ஹாய் ஆர்த்தி.”

“உன் ஏஜ் என்ன?” ஆர்த்தி கேட்க. சமி எதற்கு இந்த கேள்வி என புரியாமல்,”எனக்கு 18 வயசு ஆச்சு.”

“நான் உன்ன விட 3 வயசு பெரியவ. என்ன மரியாதை இல்லாம பேர் சொல்லிக் கூப்பிடுற?”

“நான் என் அம்மா,அப்பா,அத்தையையே பேர் சொல்லித் தான் கூப்பிடுறேன். பேர் சொல்லி கூப்பிடுறது ஒன்றும் தப்பில்லையே. அப்படி உங்களுக்கு பிடிக்காட்டி நான் உங்களை பேர் சொல்லி கூப்பிடலை.” ஆர்த்தி எதுவும் சொல்லவில்லை. ரிஷி அமைதியாக இருந்தான்.

வாசு, யாமினி கிளம்பி வெளியே வந்தவர்கள் சமியை அழைத்தார்கள்.

“ஓகே நந்து நாம அடுத்த மாசம் மீட் பண்ணலாம். ஜெய்கிட்ட சொல்லிடுங்க. என்ட அவனோட நம்பர் இருக்கு இருந்தாலும் சொல்லிடுங்க” என்று கூறிவிட்டு சமி சென்று விட்டால்.

அவள் சென்றவுடன் ஆர்த்தி ரிஷியிடம்,” அவ எதுக்கு உன்ன மீட் பன்னனும்? அதுவும் இல்லாம உன்ன நந்துனு கூப்பிடுறா?” ரிஷிக்கு கோவம் வந்து விட்டது,”அதனால என்ன இப்போ?? அதுவுமில்லாமல் அவ இங்க தான் தங்கி காலேஜ் போக போறா. ஸோ மீட் பண்ணலாம்னு சொன்னா.”

“என்ன அவ இங்க தான் தங்க போறாலா??அய்யோ ரிஷி எனக்கு அவல பிடிக்கல. நீ அவகிட்ட பேசாத.”

“ஆர்த்தி எனக்கு புரியுது நான் அவகிட்ட குளோஸா இருக்கிறது உனக்கு பிடிக்கல. பட் அவ நேட்சரே அதான். சஞ்சய் கூடவும் தான் அவ நல்லா பேசுறா. நீ இதைத் தப்பா எடுத்துகாத.”

“அய்யோ ரிஷி உன்ன நான் தப்பா எடுத்துக்குவேனா? எனக்கு அந்த பொண்ண பிடிக்கல அவ்ளோதான்.”

“புரியுது ஆர்த்தி. பட் நீ அவகிட்ட பேசி பார் உனக்குப் புரியும் அவ சின்ன பொண்ணுனு.”

“சரி ரிஷி. வா உள்ள போகலாம்.” இருவரும் உள்ளே சென்று விட்டார்கள். இவர்கள் பேசியதை கங்காதேவி கேட்டுவிட்டார்.

“அந்த பொண்ணு இன்னும் வீட்டுக்குள்ளேயே வரல அதுக்குள்ள இந்த ரிஷி பையன் அவளுக்குச் சப்போர்ட் பண்றான். இத இப்படியே விட்டா நம்ம ஆர்த்தி வாழ்க்கை பாழா போய்டும். இதுக்கு இப்பவே முடிவு கட்டுறேன்.” என்று தனக்குள் கூறிக்கொண்டே உள்ளே சென்று ப்ரகாஷை தேடினார். ப்ரகாஷ் ஆபிஸ் ரூமில் இருப்பதை பார்த்து விட்டு அங்கு சென்று கதவை அடைத்தார்.

“வாங்க அம்மா எதாவது சொல்லனுமா?”

“ப்ரகாஷ் இங்க நடக்கிறது எதுவும் சரியில்ல.”

“என்ன ஆச்சு மா?”

“நீ அந்த பொண்ணு இங்க தங்குவது பத்தி எதுவும் சொல்லலை?? என்ன எனக்கு தெரியாமல் எதாவது ப்ளான் பண்றியா??” கோவத்துடன் கேட்க.

“அய்யோ இதுல பிளான் பன்ன என்ன இருக்குமா?”

“ஏன் இல்ல அந்த பொண்ண உன் சின்ன மகனுக்கு பொண்டாட்டியா கூட்டிட்டு வர நினைக்கலாம். அப்போ என் பேத்திய ஓரம் தள்ளிடுவல?”

“அய்யோ அம்மா அப்படிலாம் இல்ல. சஞ்சய்க்கு நளினியோட அண்ணா பொண்ணு தான் முடிவு பண்ணிருக்கோம்னு உங்களுக்கே தெரியும்ல மா.”

“அது ஞாபகம் இருந்தால் சரி. அப்படி நீ எதாவது எனக்கு கெடுதல் நினைச்ச அப்புறம் நீ செஞ்ச எல்லாத்தையும் நான் சொல்லிடுவேன் பார்த்துக்கோ. பழசை மறக்கமாட்டனு நினைக்கிறேன்.”

“அய்யோ அம்மா நான் எதுவும் மறக்கலை. நீங்க நினைக்கிற மாதிரி தான் எல்லாம் நடக்கும்.” ப்ரகாஷ் சொல்ல, கங்காதேவி சிரித்துக் கொண்டே அங்கிருந்து சென்றார்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்