Loading

ஆர்த்தியை மருத்துவமனையில் சேர்த்தனர் ரிஷியும் சமியும். ரிஷிக்கு ஒரு மாதிரியாகி விட்டது.

“என்ன யுகி இவ இப்படி பண்ணிட்டா!!! “

“ப்ச் விடு நந்து. இதுக்கெல்லாம் காரணம் அவளோட பாட்டி தான். அவளுக்குத் தப்பு தப்பா சொல்லிக் கொடுத்துருக்காங்க. அதனால தான் அவ முதல்ல சூசைட் பண்ற மாதிரி நடிச்ச. அப்படி பண்ணா நீ அவளைக் கல்யாணம் பண்ணிப்பனு. ஆனால் நீ கண்டுக்கலை அப்படினு தெரிஞ்சதும் உண்மையிலே சூசைட் பண்ணிக்கிட்டா.”

“ப்ச் அவளுக்கு அறிவே இல்லை. இது வரைக்கும் நான் அவகிட்ட பாசமா பேசுனதே இல்லை. அப்புறம் எப்படி இப்படி ஆனானு தெரியலை.” இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே அங்கு நர்ஸ் வந்தார்.

“அவங்களுக்கு AB- இரத்தம் தேவை. எங்க ஹாஸ்பிட்டல்ல ஸ்டாக் இல்லை. உங்களுக்குத் தெரிஞ்சவங்ககிட்ட சொல்லி சீக்கிரம் வரச் சொல்லுங்க.” என்று கூற, சமி வேகமாக,”நர்ஸ் எனக்கும் அதே இரத்த வகை தான். நான் இரத்தம் தரேன்.” என்று கூற, நர்ஸ் அவளை அழைத்துச் சென்றார்.

சமி வெளியே வருவதற்கு முன் முரளிக்கு அழைத்து விஷயத்தைச் சொல்லி அவரை வரச் சொன்னான். பின் கேன்டீன் சென்று சமிக்கு ஜூஸ் வாங்கி வந்தான். அவன் வருவதற்கும் சமி வெளியே வருவதற்கும் சரியாக இருந்தது. ரிஷி சென்று சமியைப் பிடித்துக் கொண்டு அங்குள்ள நாற்காலியில் உட்கார வைத்தான்.

“ஏய் நந்து எனக்கும் ஒன்னுமில்லை. ப்ளட் தான் குடுத்துட்டு வந்தேன். ஐ ஆம் ஆல்ரைட்.”

“அத தான் நானும் சொல்றேன். நீ ப்ளட் குடுத்துட்டு வந்துருக்க. ஸோ ஒரு மாதிரி கிடினெஸ் இருக்கும். இந்தா முதல்ல இந்த ஜூஸை குடி.” என்று கையிலிருந்த ஜூஸை தந்தான். அவளும் வாங்கி அதைப் பருகினாள்.

சிறிது நேரத்தில் முரளியும் வாசுகியும் அங்கு வந்தனர். ரிஷியிடம் சென்று,”ரிஷி என்னபா ஆச்சு??”

“அங்கிள் நாங்க பார்க் போயிருந்தோம். எங்களை பின் தொடர்ந்து அவள் வந்துருப்பா போல, திடீரென கத்தி எடுத்து முதல்ல யுகியைக் கொலை பண்ணுவேனு சொன்னா. அப்புறம் என்ன நினைச்சாளோ அவ கையைக் கீறிக்கிட்டா.”

“இப்ப எப்படி இருக்கா ரிஷி??” என்று முரளி கேட்க, வாசுகி வேகமாக,”எல்லாம் இவளால தான்.” என்று யுகியைக் கை காமிக்க. ரிஷி முறைத்துக் கொண்டு,”இப்ப உங்க பொண்ணு உயிரோட இருக்கானா அதுக்கு காரணம் என் யுகி தான்.”

“என்ன சொல்ற ரிஷி??” என்று முரளி கேட்க,

“அங்கிள் அவ தான் உங்க பொண்ணுக்கு இரத்தம் குடுத்துருக்கா. அதனால கொஞ்சம் பார்த்துப் பேச சொல்லுங்க.”

“வாசுகி அமைதியா இரு. ப்ச் எல்லாம் அம்மானால தான்.”

“எங்க அங்கிள் அவங்களை காணோம்??”

“தெரியலை ரிஷி. திடீர்ன்னு ஏதோ ஃபோன் வந்துச்சு. அதுக்கு அப்புறம் வெளில போனாங்க. இப்ப ஃபோன் போட்டாலும் எடுக்க மாட்டேங்குறாங்க.”

“ஓ சரி அங்கிள்.” அந்த நேரம் போலிஸ் அங்கு வந்தனர். கூடவே டாக்டரும் வந்தார்.

“இவங்க தான் அந்த பேஷன்ட் ஓட ரீலேடிவ்ஸ்.”என்று கூற, போலிஸ் அவர்களிடம்,”சார் என்னாச்சு?? எதுக்கு உங்க பொண்ணு சூசைட் ட்ரை பண்ணாங்க??”

“சார் அவ ஏதோ ஒரு சூழ்நிலைல செஞ்சுட்டா. எங்களுக்கும் தெரியலை. அவ முழிச்சா தான் எங்களுக்கே தெரியும் சார்.” என்று முரளி கூறினார்.

“சரி சார். அப்ப நான் அவங்க கண் முழிக்கிற வரைக்கும் வெயிட் பண்றோம்.” என்று கூறி அங்கிருந்த இருக்கையில் அமரப் போனார்.

சமி அவரிடம்,”சார் உங்களுக்குக் கோவை கமிஷ்னர் ராம்குமாரைத் தெரியுமா.”

“ம் நல்லாவே தெரியும் மா. அவர்கிட்ட நான் இரண்டு வருஷம் வேலை பார்த்திருக்கேன்.”

“சார் அவர் என்னோட மாமா தான். நீங்க எங்களை நம்பி விட்டிட்டு போங்க. பேஷன்ட் கண் முழிச்சதும் நாங்க சொல்றோம் சார்.”

“ம் அது வந்து…” என்று அவர் தயங்க, சமி,”சார் நான் வேணா மாமாவைப் பேசச் சொல்லவா??”

“இல்லை மா இருக்கட்டும். நான் நம்புறேன். மறக்காம கூப்பிடுங்க” என்று கூறிவிட்டுச் சென்றார்.

அவர் சென்ற சிறிது நேரத்திலே ஆர்த்தி கண் முழித்தாள். முரளியும் வாசுகியும் உள்ளே சென்றனர். அவள் அருகில் சென்று,”ஏன்டா இப்படி பண்ண??”

“அப்பா எனக்கு ரிஷி வேணும். அவன் இல்லாம என்னால இருக்க முடியாது பா.”

“அவன் தான் உன்னை வேண்டாம்னு சொல்லிட்டானே!! அவனை விட்டுடு மா.”

“அப்பா எனக்கு அவன் தான் வேணும்.”

“ப்ச் அப்ப நாங்கலாம் வேண்டாமா ஆர்த்தி?? உனக்கு என்ன குறைடா?? அப்பா சொல்றதை கேளுடா.” என்று முரளி அவளுக்குக் கூற, ஆர்த்தியோ கூறியதையே திரும்பத் திரும்ப கூறிக் கொண்டிருந்தாள். கடுப்பான முரளி அவளை அறைந்து விட்டார். வாசுகியும் ஆர்த்தியும் அதிர்ந்தனர்.

“இங்கப் பார் ஒழுங்கா நான் சொல்றதை கேளு. இல்லாட்டி என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது.” என்று கோவமாகக் கூறிவிட்டு வெளியே வந்தார்.

“அங்கிள் ஆர்த்தி எப்படி இருக்கா??”

“ப்ச் எனக்கு என்ன சொல்றதுனே தெரியலை. உனக்குப் பிடிக்காட்டி முதல்லயே சொல்லிருக்கலாம் ரிஷி. பார் இப்ப அவ எப்படி பிஹேவ் பண்றானு!!! பைத்தியம் மாதிரி எனக்கு ரிஷி வேணும்னு சொன்னதையே சொல்லிட்டு இருக்கா!!!”

“சாரி அங்கிள். இப்படிலாம் ஆகும்னு நான் எதிர்ப்பார்கலை. நான் அவளை வேண்டாம்னு சொன்னதுக்கு அவ தான் காரணம் அங்கிள். நீங்களும் நடந்ததை எல்லாம் பார்த்தீங்க தான?? அவளோட பிஹேவியர் எதுவும் எனக்கு பிடிக்கலை அங்கிள். இல்லை நீங்களே சொல்லுங்க அங்கிள் என் மனசுல யுகி இருக்கும் போது என்னால எப்படி ஆர்த்தியை கல்யாணம் பண்ணி சந்தோஷமா இருக்க முடியும்?”

“புரியுது ரிஷி. இருந்தாலும் அவ என் பொண்ணு. அதான் மனசு கேட்க மாட்டீங்கது.”

“நான் ஒன்னு சொல்லட்டுமா??”என்று இடையில் புகுந்து சமி கேட்டாள்.

“சொல்லு மா.”

“நீங்க ஏன் ஆர்த்தியை ஒரு சைக்கிட்ரிஸ்கிட்ட(psychiatrist) காட்டக் கூடாது?? நான் ஒன்னும் ஆர்த்திய பைத்தியம்னு சொல்லலை!!! அவளோட மனசு மாறும். அதுக்காக தான் சொல்றேன். கேரளால அம்மாவோட ப்ரண்ட் இருக்காங்க. நீங்க அவளை அங்க கூட்டிட்டு போங்க. கண்டிப்பா அவ மனசு மாறும். வயநாடுல எங்க கெஸ்ட் ஹவுஸ் இருக்கு. நீங்க அங்க ஸ்டே பண்ணிக்கலாம். உடனே பதில் சொல்லனும்னு இல்லை அங்கிள். நல்லா யோசிச்சு முடிவு எடுங்க. எங்களை எல்லாம் கொஞ்ச நாள் பார்க்காமலிருந்தாள் கூட அவ மாற சான்ஸ் இருக்கு.”

“ம் சரி மா. நான் அம்மாகிட்ட, வாசுகிகிட்ட பேசிட்டு சொல்றேன்.”

“உங்க பொண்ணு குணமாகனும்னு நினைச்சீங்கனா நீங்களே முடிவு எடுங்க. கண்டிப்பா உங்க அம்மா இதுக்கு ஒத்துக்க மாட்டாங்க. அவங்களால தான் உங்க பொண்ணு இந்த நிலைமைல இருக்கா. நந்துனால இல்லை. இனிமேலாவது உங்க பொண்ணுக்காக யோசிங்க அம்மாக்காகனு பார்க்காம. நான் எதாவது தப்பா சொல்லிருந்தா என்னை மன்னிச்சுடுங்க.” என்று சமி கூற, முரளிக்கும் சமி சொல்வது சரி என்று பட்டது.

ஒரு வழியாக ரிஷியும் சமியும் வீட்டுக்கு வந்தனர். அங்கு இவர்களுக்காக ராம் மற்றும் ஆகாஷ் காத்திருந்தனர்.

“எங்க போய்ருந்தீங்க இரண்டு பேரும்??”

“சும்மா பக்கத்துல பார்க் போனோம் அங்கிள். அங்க..” என்று ஆரம்பித்தி எல்லாவற்றையும் சொன்னான் ரிஷி.

“சை ஏன் இந்த ஆர்த்தி இப்படி இருக்கா??”

“அவ அப்படி தான் ஆகாஷ். விடு.”

“மாம்ஸ் என்ன யோசனை?? நமக்கு ஏதாவது ப்ராப்ளம் வரும்னு நினைக்குறீங்களா??”

“சை சை. இவ்ளோ நடந்துருக்கு அந்த அம்மா எங்க போச்சு??”

“தெரியலையே!!”

“எனக்குத் தெரியும்.”

“எதுக்கு அப்பா??”

“இன்னைக்கு நான் ஜெயில்லுக்கு போய் அந்த குற்றவாளியைப் பார்க்குறதுக்குள்ள யாரோ அவனை ஜாமின் எடுத்துட்டதா சொன்னாங்க. யாருனு கேட்டதுக்கு அவனோட லாயர்னு சொன்னாங்க. இப்ப புரியுது அந்த அம்மா தான் அவனை ஜாமின்ல எடுத்துருக்கனும்.”

“ப்ச் அப்பா அவங்க எடுத்து என்ன ப்ரியோஜனம்??”

“ஆகாஷ் அவங்களுக்கு நான் அவனைப் பார்க்க போறது தெரிஞ்சிருக்கு. அதான் அவனை மீட் பண்ண விடாம செஞ்சுருக்காங்க.”

“எப்படி மாம்ஸ் அவங்களுக்கு தெரிஞ்சிருக்கும்??”

“நான் தான் சொன்னேன்.” என்று ரிஷி கூற, மூவரும் அவனை அதிர்ந்து நோக்கினர்.

“என்ன ரிஷி சொல்ற?? நீ சொன்னியா?? எதுக்கு??” என்று ஆகாஷ் கேட்டான்.

“ஆகாஷ் எனக்கு அங்கிள் அவன்கிட்ட கேட்டா சொல்லுவானு தோனைல. தேவையில்லாம டைம் தான் வேஸ்ட். அதான் நான் வேற ஒரு ப்ளான் பண்ணேன்.”

“என்ன நந்து சொல்ற??”

“ஆமா யுகி. கண்டிப்பா அங்கிள் கேட்டா நமக்கு எதுவும் விஷயம் தெரியாது. அந்த கங்கா பாட்டி பயங்கர விவரமா இருக்காங்க. நம்ம அவங்களை விட விவரமா இருந்தா தான் ஜெயிக்க முடியும். அதான் அந்த ரௌடியை சஞ்சயை விட்டு ஃபாலோ பண்ண சொல்லிருக்கேன். இப்ப வரும் போது தான் அவன்கிட்ட இருந்து மெசேஜ் வந்தது. அந்த ரௌடி கங்கா பாட்டியைத் தான் ஜெயில்ல இருந்து வெளில வந்த உடனே மீட் பண்ணிருக்கான். அவன் குடும்பத்தைக் கூடப் பார்க்கப் போகலை.”

“ஓ!!! நல்ல விஷயம் பண்ணிருக்க ரிஷி.”

“இப்ப என்ன பண்ண போற??”என்று ஆகாஷ் கேட்க, சமி,”அவன்கிட்ட இருந்து இப்ப மட்டும் எப்படி உண்மையை வர வைப்ப நந்து??

“யுகி,ஆகாஷ் இன்னேரம் சஞ்சய் ப்ரண்ட்ஸ் அந்த ரௌடியோட குடும்பத்தை தூக்கிருப்பாங்க.”

“என்னடா சொல்ற??”

“அய்யோ கடத்திருப்பாங்கனு சொன்னேன் ஆகாஷ்.”

“அவங்களை எதுக்கு கடத்துர??”

“அந்த ஆளுக்கு அவன் பொண்டாட்டி புள்ளைனா உசிரு. அதான் தூக்க சொன்னேன். அவன் கங்கா பாட்டிக்கிட்ட பேசி முடிச்சதும், அவனையும் சஞ்சய் தூக்கிருவான்.”

“டேய் சஞ்சய் சின்ன பையன். அவன் பெரிய ரௌடி.”

“அதலாம் சஞ்சய் பார்த்துப்பான். அவன் ப்ரண்ட்ஸும் கூட இருக்காங்க. டோண்ட் வொரி.” என்று கூறிவிட்டு சமியைப் பார்த்து கண் அடித்தான்.

“ஒரு போலிஸா இதுக்கு நான் ஒத்துக்கக் கூடாது தான். ஆனால் நீ நல்ல விஷயம் பண்ணிருக்க ரிஷி. ஆனால் கொஞ்சம் யோசிச்சு செய். அவனைப் பார்க்க போகும் போது என்னை மறக்காம கூப்பிடுங்க.”

“சரி அங்கிள்.” என்று ரிஷி கூற, ராம் எழுந்து உள்ளே சென்றார்.

“நந்து காலைல இருந்து என் கூட தான இருந்த?? எப்ப இதலாம் செஞ்ச??”

“நான் நைட்டே இதை யோசிட்டேன். சஞ்சய்கிட்டயும் சொல்லிட்டேன். இருந்தாலும் நீங்க போலிஸ் குடும்பம். கடத்துன குற்றத்துக்கு என்னைத் தூக்கி உள்ள வச்சுட்டா?? அதான் பயத்துல சொல்லலை யுகி.” என்று பாவம் போல் முகத்தை வைத்துக் கொண்டு ரிஷி கூற, சமி எழுந்து வந்து அவனை மொத்து மொத்து என்று மொத்திவிட்டாள். ஆகாஷ் இவர்களுக்குத் தனிமை தர எழுந்து சென்றுவிட்டான்.

யாரும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட ரிஷி சமியை ஒரே இழுவாக இழுக்க அவள் அவன் மேல வந்து விழுந்தாள்.

“டேய் என்னடா பண்றா??”

“என்னது டே வா?? வர வர மரியாதை ரொம்ப தேய்யுதே!!”

“நீங்க மட்டும் என்ன சார்?? உங்களோட செயலும் எல்லை மீறுதே!!!”

“ஹலோ மேடம். ஐ ஹேவ் ஃபுல் ரைட்ஸ். நான் என்ன வேணாலும் பண்ணுவேன்.”

“யாருங்க சார் அப்படி சொன்னது??”

“பார்த்தா தெரியலை நான் தான்.” என்று கூறிக் கொண்டே ரிஷி அவளைச் சுற்றி அனைக்கு, சமி அவன் கையில் அடித்துவிட்டு எந்திரிக்க அவள் முயற்சி செய்ய ரிஷி அவளை விடாமல் பிடித்து முத்தம் வைக்க அவளை நெருங்க, அப்பொழுது கர்ஜனையாக,”இங்க என்ன நடக்குது???”என்று குரல் கேட்டது. சமியும் ரிஷியும் வேகமாக எழுந்து நின்றனர். சமி திருட்டு முழி முழிக்க, ரிஷி சாதாரணமாக இருந்தான். அந்தக் குரலைக் கேட்டு ராமும் ஆகாஷும் வெளியே வந்தனர்.

“என்னாச்சு மாமா/வாசு??” என்று ஒரே நேரத்தில் ஆகாஷும் ராமும் கேட்டனர். ஆம் வந்தது சமியின் பாப்ஸ் வாசுதேவன்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
0
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்