கங்கா பாட்டி, ப்ரகாஷிடம் தன் பேத்திக்கு ரிஷியை விட வசதியான இடத்தில் மாப்பிள்ளைப் பார்த்து கல்யாணம் செய்து வைப்பேன் என்று கூறிவிட்டு அவர்களின் வீட்டிற்குச் சென்றார். சந்தோஷமாக உள்ளே நுழைந்த அவரை கேள்வியாகப் பார்த்தனர் வாசுகியும் முரளியும்.
“என்னமா இவ்ளோ சந்தோஷமா வரீங்க??”
“ஏன்டா சோகமா இருந்தா தான் கேள்வி கேட்பாங்கனு பார்த்தா நீ என்னடா சந்தோஷமா இருக்கிறதுக்குக் கேள்வி கேட்குற?? அதுவும் என்னையே!!!”
“இவ்ளோ பிரச்சனை நடந்துருக்கு!! ஆனால் அதுக்கான எதிர்வினை உங்ககிட்ட எதுவுமில்லாம சந்தோஷமா வரீங்கனு கேட்டேன். அது தப்பா??” ஒரு மாதிரி குரலில் கேட்டார் முரளி. என்றும் பேசாத தன் மகன் இவ்வளவு பேசுவதைக் கேட்டு கங்கா பாட்டி ஒரு நிமிடம் அதிர்ந்தார். பின் முகத்தைச் சீராக வைத்துக் கொண்டு,”பேச்செல்லாம் ஒரு மாதிரியா இருக்கு முரளி!!! நான் இப்ப சந்தோஷமா இருக்கேன். அதுனால உன்னை சும்மா விடுறேன்.”
“அத்தை அதைத் தான் அவரும் கேட்கிறார். நீங்க சொன்னா நாங்களும் சந்தோஷபடுவோம்ல!!!”
“சொல்றேன் வாசுகி. இது என்னோட பல வருட உழைப்பு. ஆனால் இப்ப அதுவா நடக்கப் போகுது. என்னால சந்தோஷத்தை அடக்க முடியலை.”
“சொல்லுங்க அத்தை.”
“நம்மளோட கம்பெனி இனிமே முழுசா நமக்கே சொந்தமாக போகுது.”
“என்னமா சொல்றீங்க!! புரியலை.”
“ப்ரகாஷ் அவன் பிள்ளைங்களோட பங்கையும் அந்த ஷாம்பவியோட பங்கையும் நமக்கே எழுதி தரேன்னு சொல்லிட்டான்.”
“என்னது?? எப்படி அவன் இதுக்கு சரினு சொன்னான்!!!”
“அதலாம் உனக்குத் தேவையில்லை. இனிமே அந்த கம்பெனி நம்மளது. அவ்ளோதான். ஹான் அப்புறம் இன்னொரு விஷயம் நம்ம ஆர்த்திக்கு அந்த டைமண்ட் ஷோரூம் வச்சுருக்க பழனி அவரோட பையனுக்கு கேட்டார்ல?? அவரை நாளைக்கு வரச் சொல்லிடு.”
“எதுக்கு மா??”
“ப்ச் நான் சொல்றதை மட்டும் செய். இது என்ன புதுசா கேள்வி கேட்டுட்டு இருக்க??”
“அம்மா இது என் பொண்ணு விஷயம். நான் கேட்கத் தான் செய்வேன்.” என்று முரளி கூற, கங்கா பாட்டி எரிச்சலுற்றார். இருந்தாலும் விட்டுப் பிடிப்போம் என்று,”வேற எதுக்கு எல்லாம் நம்ம ஆர்த்திக்குக் கல்யாணம் பேச தான்.” என்று அவர் கூற, முரளி பேசுவதற்கு முன் அங்கு வந்த ஆர்த்தி,”பாட்டி.”என்று கத்தினாள்.
“என்னாச்சு ஆர்த்தி எதுக்கு கத்துற??”
“பாட்டி இப்ப நீங்க என்ன சொன்னீங்க?? எனக்கு வேற இடத்துல மாப்பிள்ளை பார்க்குறீங்களா?? இத்தனை வருஷம் ரிஷி தான் உன் புருஷன்னு சொல்லிட்டு இப்போ இப்படி பேசுறீங்க!!”
“எனக்கு மட்டும் ஆசை இல்லையா என்ன?? ஆனால் இதுக்கு ரிஷி சம்மதிக்கலையே!!!”
“பாட்டி அதான் நீங்க தான் ப்ரகாஷ் அங்கிள் அவர் தம்பியையும் அப்பாவையும் கொலை பண்ண ஆதாரம் வச்சுருக்கீங்களே!! அதை வச்சு தான இத்தனை நாள் அவரை ஒத்துக்க வைச்சீங்க. இப்போ என்ன இப்படி பேசுறீங்க???” என்று ஆர்த்தி கூற, இதைக் கேட்ட முரளியும் வாசுகியும் பெரிதாக அதிர்ந்தனர்.
“அம்மா ஆர்த்தி என்ன சொல்றா??”
“அதலாம் ஒன்னுமில்லை. அவ ஏதோ உளறுறா!!”
“என்னது நான் உளறுகிறேனா!!! பாட்டி ஏன் இப்படி பொய் சொல்றீங்க?? அப்பா நான் சொல்றது உண்மை தான். ரிஷியோட அப்பா, அம்மா, தாத்தா அப்புறம் வாசுகி அம்மாவோட கணவர் எல்லாத்தையும் கொலை பண்ணது ப்ரகாஷ் அங்கிள் தான். இதைப் பாட்டி தான் என்கிட்ட சொன்னாங்க.”
“அத்தை உண்மையை சொல்லுங்க!!! ஈஸ்வரைக் கொலை பண்ணது ப்ரகாஷ் அண்ணனா??” என்று அழுகையுடன் கேட்க, பாட்டி அவரை ஒரு மாதிரி பார்த்துவிட்டு,” ஆமா அவன் தான்.” என்று கூற, வாசுகி பயங்கரமாக அழுதார். அவருக்கு தன் குழந்தை மேல் தான் பாசமில்லையே தவிர அவரது கணவன் ஈஸ்வர் மேல் பயங்கர பாசம் கொண்டவர். குழந்தை பிறந்த பொழுது தன் கணவர் குழந்தை மேல் அதிக பாசம் காட்டியதைப் பார்த்து தன்னை விட அவருக்குக் குழந்தை மேல் தான் அதிக பாசம் என்று எண்ணி ஷாம்பவியை அவர் வெறுத்தது. முரளி வாசுகியைச் சமாதானம் செய்தார். ஆனால் அவரை விடுத்து கங்கா பாட்டியிடம் சென்று,”அத்தை அந்த ஆதாரத்தை என்கிட்ட குடுங்க. அந்த ப்ரகாஷை நான் ஜெயில்ல போடாமா விட மாட்டேன்.”
“எந்த ஆதாரமும் என்கிட்ட இல்லை.”
“அத்தை பொய் சொல்லாதீங்க!!!”
“நான் எதுக்கு பொய் சொல்லனும்?? என்கிட்ட இருந்த ஆதாரத்தை நான் அவன்கிட்ட குடுத்துட்டேன்.”
“அத்தை என்ன சொல்றீங்க??”
“அம்மா எதுக்கு அவன்கிட்ட குடுத்தீங்க??”
“அப்போ தான் கம்பெனி ஷார்ஸ் எல்லாம் நம்ம பேருக்கு எழுதி தரேன்னு சொன்னான். அதான் குடுத்துட்டேன்.” இதைக் கேட்ட மற்ற மூவருக்கும் அதிர்ச்சி.
“அத்தை அப்போ உங்களுக்கு பணம் தான் பெருசா?? நாலு உயிர் போயிருக்கு. அதைப் பத்தி கவலையில்லையா??”
“அதைப் பத்திலாம் எனக்கு எந்த கவலையும் இல்லை. எனக்குத் தேவை அந்த கம்பெனி அவ்ளோ தான்.”
“பாட்டி அப்போ உங்களுக்கு என்னைப் பத்தியும் கவலையில்லையா??”
“என்ன ஆர்த்தி இப்படி கேட்டுட்ட?? இதலாம் நான் யாருக்கு செய்றேன். எல்லாம் உனக்குத் தான்டா!!!”
“பொய் சொல்லாதீங்க!!! உங்களுக்கு நான் முக்கியமா இருந்திருந்தா நீங்க இப்படி டீல் பேசிருக்க மாட்டீங்க.”
“ப்ச் ஆர்த்தி நான் இதலாம் உனக்காகத் தான் செய்றேன். இங்க பார் அந்த ரிஷியை விட பெரிய இடத்துல உனக்கு நான் கல்யாணம் பண்ணி வைக்கிறேன். நீ அவனை மறந்துரு.”
“பாட்டி சின்ன பிள்ளைல இருந்து எனக்கு ரிஷி தான் புருஷன்னு சொல்லி ஆசை காட்டிட்டு இப்போ இவ்ளோ சாதாரணமா மறந்துருனு சொல்றீங்க!!! என்னால எப்படி அது முடியும்??”
“ஆர்த்தி அதான் அவன் உன்னை பிடிக்கல அந்த சம்யுக்தாவை தான் பிடிச்சுருக்குனு சொல்லிட்டானே!! அதனால அவனை மறந்துரு. இதுக்கு மேல இதுல பேச எதுவுமில்லை. போ உன் ரூமுக்கு.” என்று கூறிவிட்டு கங்கா பாட்டி சென்று விட்டார். இங்கு மூவரும் திக் பிரமை பிடிச்சது போல் நின்றிருந்தனர். பின் ஆர்த்தி அழுது கொண்டே அவளது அறைக்குச் சென்று விட்டாள்.
அடுத்த நாள் ரிஷியும் சஞ்சய்யும் சமி வீட்டுக்கு வந்தனர்.
“வாங்க வாங்க. என்ன இவ்ளோ காலைல வந்துட்டீங்க??” என்று ராம் கேட்டார்.
“நேத்து நம்ம பேசிட்டு இருந்தப்போ ஒரு விஷயத்தை மறந்துட்டோம் அங்கிள்.” என்று சஞ்சய் கூறினான்.
“என்ன விஷயம் சஞ்சய்??” என்று கேட்டுக் கொண்டே அங்கு வந்தாள் சமி.
“நேத்து அப்பாவும் ஆர்த்தியோட பாட்டியும் பேசுனதை நாம் கேட்டோம்ல!!”
“ஆமா அதுக்கு என்ன??”
“ப்ச் சமி அதுல அப்பா அந்த ஆக்ஸிடெண்ட் பண்ணவங்களை கங்கா பாட்டி ஆள் வச்சு கொலை பண்ணிட்டாதாவும், அந்த ஆட்கள் இப்போ அப்பாகிட்ட இருக்கிறதாவும் சொன்னார்ல!!”
“ஆமா!! அதை எப்படி நாம மறந்தோம்??” என்று சமி கேட்க,
“நீங்க வேணா மறந்திருக்கலாம். நானும் அப்பாவும் அதை மறக்கலை.” என்று கூறிக் கொண்டே வந்தான் ஆகாஷ்.
“என்ன சொல்ற ஆகாஷ்??”
“ஆமா சமு. இதுல எதோ பெரிய சதி நடந்துருக்குனு எனக்கும் அப்பாக்கும் தோணிச்சு. அதான் நேத்து நாங்க ரிஷியைத் தனியா கூப்பிட்டு பேசுனோம். அவன்கிட்ட ப்ரகாஷ் அங்கிள்கிட்ட இருக்குற ஆட்களை நாங்க பார்க்க ஏற்பாடு பண்ணச் சொன்னோம். அவனும் அவங்க அப்பாகிட்ட பேசிட்டு எங்களை அங்க கூப்பிட்டுப் போனான். அங்க போனதுக்கு அப்புறம் நிறைய விஷயங்கள் எங்களுக்கு தெரிஞ்சது. எங்களுக்குப் பயங்கர அதிர்ச்சி.” என்று அங்கு நடந்ததை ஆகாஷ் கூற, அதைக் கேட்ட அனைவருக்கும் அதிர்ச்சி.
“இவ்ளோ நடந்துருக்கா!!! அண்ணா என்னையும் கூப்பிட்டு போயிருக்கலாம்ல???”
“இல்லை சஞ்சய் நாங்க காலைல போகலாம்னு தான் முதல்ல யோசிச்சோம். அப்புறம் தள்ளிப் போட வேண்டாம்னு தான் அப்பவே போய்டோம். நீ நல்லா தூங்கிட்டு இருந்த டா.”என்று ரிஷி அவனைச் சமாதானம் செய்தான்.
“இப்ப என்ன பண்றது மாம்ஸ்??”
“நான் ஜெயிலுக்கு போய் அந்த குற்றவாளியைப் பார்த்து பேசிட்டு வரேன். அவன் சொல்றதைப் பொறுத்துத் தான் அடுத்த ஸ்டெப் யோசிக்க முடியும்.”
“ம் சரி மாம்ஸ்.”
“அங்கிள் நானும் வரேன்.”
“அதலாம் வேண்டாம் ரிஷி. நான் பார்த்துக்கிறேன்.” என்று கூறிவிட்டு அவர் சென்று விட்டார்.
ரிஷி சமியைப் பார்த்து,”யுகி நம்ம வெளில போயிட்டு வரலாமா??”
“இப்பவா??”
“ஆமா இப்போ தான்.”
“சரி நான் போய் ட்ரெஸ் மாத்திட்டு வரேன்.” என்று கூறிவிட்டு உடை மாற்றச் சென்றாள். சிறிது நேரத்தில் வந்த சமி ரிஷியுடன் வெளியே சென்றாள்.
அவர்கள் வந்தது அவர்கள் வீட்டிற்குப் பக்கத்தில் இருக்கும் பூங்காவிற்கு. காலியாக இருந்த இருக்கையில் அமர்ந்தனர்.
“என்ன நந்து இங்க எதுக்கு கூப்பிட்டு வந்த??”
“சும்மா உன்கிட்ட பேசிட்டு இருக்கலாம்னு தான் யுகி. இந்த இரண்டு நாள்ல நடக்க கூடாததுலாம் நடந்துருச்சு. மனசுக்குக் கஷ்டமா இருக்கு.”
ரிஷியின் கையை எடுத்து அவள் கைகுள் வைத்துக் கொண்டு,”எனக்கு உன்னோட கவலை புரியுது நந்து. நம்ம இதைக் கடந்து தான் போகனும். வேற வழி இல்லை.”
“ப்ச் புத்திக்கு புரியுது ஆனால் மனசுக்கு!!! நான் அப்பா மேல ரொம்ப மரியாதை வச்சிருந்தேன். அது இப்ப உடைஞ்ச மாதிரி இருக்கு.”
“இங்க பார் நந்து. அதான் மாம்ஸ் போய்ருக்கார்ல, அவர் வரட்டும். அதுக்கு அப்புறம் நாம முடிவு பண்ணலாம்.”
“ம்.”
“நீ ஏன் இன்னைக்கு காலேஜ் போகலை??”பேச்சை மாற்றும் பொருட்டு சமி கேட்டாள்.
“நான் காலேஜ்ல ரிஸிக்னேஷன் லெட்டர் குடுத்துட்டேன் யுகி.”
“ஏய் என்ன சொல்ற?? ஏன் என்கிட்ட சொல்லைல???”
“உங்க வீட்டுக்கு வரதுக்கு முன்னாடி தான் நான் போய் குடுத்துட்டு வந்தேன்.”
“அப்புறம் என்ன பண்ண போற??”
“நான் பீ.ஜி. பண்ண போறேன் யுகி. எப்படி இருந்தாலும் நீ படிப்பு முடிய மூன்றரை வருஷம் ஆகும். அதான் அதுக்குள்ள நான் பீ.ஜி. முடிச்சுட்டேனா எனக்கு ஈஸியா இருக்கும்.”
“ம். சரி.”
“யுகி உனக்கு என்னைப் பிடிக்குமா??”
“ஏய் எதுக்கு திடீரென இப்படி கேட்கிற??”
“இல்லை சும்மா தான் கேட்கிறேன்.”
“ஏய் உன்னை எனக்குச் சின்ன வயசில இருந்து ரொம்ப பிடிக்கும். உனக்கும் ஆர்த்திக்கும் நிச்சயதார்த்தம்னு கேள்விப் பட்ட போது எனக்கு கோவம் வந்துச்சு. அது நான் ஆர்த்தி மேல இருந்த கோவத்துனால தான்னு நினைச்சேன். ஆனால் இப்ப கொஞ்ச நாள்ளுக்கு முன்னாடி தான் புரிஞ்சது அது பொஸஸிவ்நெஸ்ல வந்த கோவம்னு. உன் மேல இருந்த காதல்ல வந்த கோவம்னு.”
“எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு யுகி இதைக் கேட்க. உங்க வீட்டுல ஒத்துக்குவாங்களா???”
“அதலாம் ஒத்துக்குவாங்க. என் சந்தோஷம் தான் அவங்களுக்கு முக்கியம். என்ன பாப்ஸ் மட்டும் கொஞ்சம் கோவமா இருப்பார்.”
“நான் அன்னைக்கு எங்க வீட்டுல வச்சு உன்னை திட்டுனே அதுனாலயா??”
“ம் ஆமா. உனக்குத் தெரியாது. பாப்ஸ் யாம்ஸ கூட என்னைத் திட்ட விட்டது இல்லை. அன்னைக்கு அவர் பயங்கர கோவத்துல இருந்தார். இப்ப எனக்கு உன்னை பிடிச்சிருக்குனு சொன்னதால மே பி மாறிருக்கலாம்.”
“நீ ரொம்ப லக்கி யுகி. என் மேல அப்பா பாசம் வச்சார்னா அதுக்கு இரண்டு காரணம். ஒன்னு அவரோட குற்றவுணர்ச்சி. இன்னொன்னு அவரோட தம்பி பையன் நான். ஆனால் உங்க வீட்டுல உன் மேல வச்ச பாசம் உண்மையிலே பெரிய விஷயம் தான்.”
“ம் ஆமா. நான் ரொம்ப லக்கி தான். பாப்ஸ்,யாமஸ்,மாம்ஸ்,லக்ஸ் என் மேல பாசமா இருக்குறதுலாம் பெரிய விஷயம் இல்லை. ஆகாஷும் ப்ரீத்தியும் என் மேல பாசமா இருக்குறது தான் பெரிய விஷயம். அவங்களுக்கு என் மேல எந்த ஈகோவும் கிடையாது தெரியுமா. எத்தனையோ சமயத்துல அவங்களுக்கு கிடைக்க வேண்டியது எனக்கு கிடைச்சிருக்கு. ஆனால் கொஞ்ச கூட கோவப்படலை தெரியுமா அவங்க. ஈஸியா எடுத்துக்கிட்டாங்க. பிகாஸ் என்னை அவங்க குடும்பத்துல ஒருத்தியா தான் பார்த்தாங்க.”
“ம் நானும் பார்த்தேனே. அவங்க அப்பா அம்மா அவங்களைவிட உன்னை தான் பயங்கரமா தாங்குறாங்க. ஆனால் அவங்க முகத்துல கொஞ்ச கூட கோபத்தை நான் பார்த்து இல்லை.”
“எஸ். பிகாஸ் தே லவ் மீ.”
“ம். யுகி நீ எனக்கு ஐ லவ் யூ வே சொன்னது இல்லை. ஸோ இப்ப சொல்லு பார்க்கலாம்.” என்று ரிஷி கூறிவிட்டு அவளைப் பார்க்கும் படி அமர்ந்தான். யுகிக்கு திடீரென வெக்கம் வந்து விட்டது.
“பார்ரா என்னோட யுகிக்கு வெக்கம் கூட வருது.”
“ப்ச் சும்மா இரு நந்து.”
“நான் சும்மா தான் இருக்கேன்.”
“அய்யோ!! போ நான் வீட்டுக்குப் போறேன்.” என்று கூறி விட்டு எழும்ப, ரிஷி அவள் கையை விடவில்லை.
“லவ் யூ சொல்லிட்டு போ யுகி.”
“உஃப். ஓகே. நண்டு உன்னை நான் திரும்பி பார்ப்பேன்னு எதிர்ப்பார்கலை. ஆனால் பார்த்த போது நான் ரொம்ப சந்தோஷப் பட்டேன். என்னோட சின்ன வயசைத் திரும்பி பார்த்தா என்னோட மகிழ்ச்சியான பகுதியில் ஈஸ்வர் அப்பாக்கு அப்புறம் நீ தான் இருந்த. இனிமேலும் என்னோட ஒவ்வொரு மகிழ்ச்சியான தருணத்தில் மட்டுமில்லாம சோகமான தருணத்திலும் நீ என்கூட இருக்கனும். என்னோட எல்லாமுமா நீ இருக்கனும். ஐ லவ் யூ நந்து.” என்று கூற, ரிஷிக்கு மகிழ்ச்சியாக இருந்தது. இப்படி அவள் கூறுவாள் என்று சத்தியமாக அவன் எதிர்ப்பார்க்கவில்லை. தான் இருக்கும் இடம் மறந்து சமியை இறுக்கமாகக் கட்டிப் பிடித்தான்.
“ஷ் நந்து இது பார்க்.” என்று சமி கூறியவுடன் தான் அவளை விட்டான். அப்பொழுது யாரோ தன் பெயரை அழைப்பது போல் கேட்க, ரிஷி திரும்பிப் பார்த்தான். அங்கு ஆர்த்தி நின்றிருந்தாள்.
ரிஷியும் சமியும் போவதை வீட்டிலிருந்தே பார்த்த ஆர்த்தி அவர்களை பின் தொடர்ந்து வந்திருந்தாள். ஒரு இடத்தில் அவர்களை தவற விட, கடைசியில் பார்க்கில் தேடினாள். ரிஷி சமியை கட்டிப் பிடித்த பொழுது அவள் பார்த்து விட்டாள். வேகமாக அவர்கள் இருந்த இடம் நோக்கி வந்து ரிஷியை அழைத்தாள்.
“ப்ச் என்ன??” என்று எரிச்சலுடன் கேட்டான் ரிஷி.
“உனக்கு இப்ப என்னைப் பார்த்தா எரிச்சலா தான் இருக்கும். அதான் இப்ப இவ கிடைச்சுட்டாளா உனக்கு.”என்று கூற, அவள் கூறியதன் அர்த்தம் வேறாக உள்ள ரிஷி பொங்கி எழுந்துவிட்டான்,”ஏய் என்ன பேசுற நீ?? அசிங்கமா இல்லை உனக்கு?? நீ பேசுறதுக்கு என்ன அர்த்தம் தெரியுமா உனக்கு??”
“நான் ஒன்னும் குழந்தை இல்லை. எல்லாம் எனக்கு தெரியும். இவளால தான நீ என்னை விட்டுட்டு போய்டா!! இவ செத்துப் போய்ட்டா நீ என் கூட வந்துருவல??” என்று கேட்க,ரிஷி பயந்துவிட்டான்.
“என்ன என்னைக் கொலை பண்ண போறியா?? என்ன கொன்னுட்டா நந்து கிடைச்சுருவானா??”
“இல்லை உன்னை நான் கொலை பண்ண மாட்டேன். ஆனால் என்னை குத்திப்பேன்.” என்று கூறி இவர்கள் சுதாரிக்கும் முன் ஆர்த்தி கத்தியை எடுத்து அவள் மணிக்கட்டை அறுத்து விட்டாள். ரிஷிக்கும் சமிக்கும் பேர் அதிர்ச்சி.