ரிஷி மற்றும் சஞ்சய் சமியின் வீட்டில் சோகத்துடன் உட்கார்ந்திருந்தனர். அவர்கள் எதிரில் சமி,ஆகாஷ் மற்றும் ராம் உட்கார்ந்திருந்தார்கள்.
“யுகி நீ சொல்லும் போது அப்பா கண்டிப்பா கொலைலாம் பண்ணிருக்க மாட்டார்னு நினைச்சேன். ஆனால் அவரே அவர் வாயால சொல்லிட்டார். அவர் தான் எல்லாத்துக்கும் காரணம்னு. இனி நீங்க எது செஞ்சாலும் நான் உங்களுக்கு உறுதுணையா இருப்பேன்.”
“ரிஷி உண்மையா தான் சொல்றியா??”
“ஆமாம் ஆகாஷ். ஆனால் எனக்கு ஒரே ஒரு நெருடல் மட்டும் இருக்கு.”
“என்ன நெருடல் ரிஷி??”
“இல்லை. அப்பாக்கு அவர் கூலிக்கு ஆள் ஏற்பாடு பண்ணி கொலை பண்ணச் சொன்னதே அந்த ஃபோன் கால் வந்ததுக்கு அப்புறம் தான் தெரிஞ்சிருக்கு. அதான் எனக்குச் சந்தேகமா இருக்கு.”
“எனக்கும் அதுல சந்தேகம் இருக்கு ரிஷி. உங்க அப்பா தான் மது பழக்கத்துல இருந்து முழுசா வெளில வந்துட்டேனு சொன்னார்ல?? அப்புறம் எப்படி பார்ல??”
“நான் அதைக் கேட்டேன் அப்பாகிட்ட. அதுக்கு அவர் என்னோட அப்பாவைத் தாத்தா கம்பெனிக்கு கூட்டிட்டு வந்தது பிடிக்கலைன்னு சொல்லி மண வருத்தத்தில் குடிக்கப் போய்ட்டேனு சொன்னார்.”
“ஓ!!!!”
“ஏய் இந்த விஷயம் எப்படி ஆர்த்தியோட பாட்டிக்குத் தெரியும்??” என்று சமி கேட்க,
“நானும் கேட்டேன் யுகி. அதுக்கு அப்பா சொன்னார், அந்த கொலையைப் பண்ணவன் அவருக்கு ஃபோன் பண்ணி பிளாக்மெயில் பண்ணிருக்கான். அப்போ அங்க வந்த கங்கா பாட்டி அப்பா பேசிட்டு இருந்ததை கேட்டுட்டாங்க. அப்பாக்கு என்ன பண்றதுன்னு தெரியாம அந்த வீடியோவை அவங்களுக்கு காமிச்சுட்டார். அப்பா அசந்த நேரத்துல அந்த வீடியோவ அவங்க மொபைலுக்கு அனுப்பிட்டாங்க.”
“ஓ இதை வச்சு தான் ஆர்த்தியோட பாட்டி உன்னை ஆர்த்திக்குக் கல்யாணம் பண்ணி வைக்கச் சொல்லி உங்க அப்பாகிட்ட பிளாக்மெயில் பண்ணிருக்காங்களா??”
“ஆமா.”
“ஒரு நிமிஷம். பாதி பங்குகள் தான உங்க குடும்பத்துக்கு?? அப்புறம் எப்படி சஞ்சய் பேர்ல இருபத்தைந்து சதவிதம் பங்குகள் இருக்கு இப்போ??”
“அது ஆர்த்தியோட பாட்டி அப்பாகிட்ட பேசுன டீலிங். என்னை ஆர்த்தி கல்யாணம் பண்ணிக்கணும். அதுக்கு பதில்ல அவங்க பங்குகள்ள இருந்து பாதி சஞ்சய் பேருக்கும் இந்த வீடியோ காட்டி பிளாக்மெயில் பண்றவனை தான் பார்த்துக்குறேனு சொல்லிருக்காங்க.”
“நம்புற மாதிரி இல்லையே ரிஷி.” அவ்ளோ நேரம் அமைதியாக இருந்த ராம் கேட்டார்.
“ஏன் அங்கிள்?? அப்பாவை நீங்க நம்பலையா??”
“இல்லை ரிஷி. உங்க அப்பாக்கும் ஆர்த்தியோட பாட்டிக்கும் நடந்த டீல் நம்புற மாதிரி இல்லை.”
“இல்லை அங்கிள் அந்த கம்பெனி மேல பாட்டிக்கு ஒரு கண். அவங்களுக்கு தன்னோட குடும்பத்துக்கு மட்டும் அந்த கம்பெனி சொந்தமாகனும்னு நினைச்சு இருக்காங்க. அதுனால தான் அப்பாக்கும் மனோஹர் அப்பாக்கும் நடுவுல சண்டை இழுத்து விட்டுருக்காங்க.”
“யார் சொன்னா இதை??”
“அப்பா தான் அங்கிள் சொன்னாங்க.”
“அவருக்கு எப்படி தெரிஞ்சது??”
“இந்த இன்சிடென்ட் நடந்த கொஞ்ச நாள் கழிச்சு அப்பாவோட பி.ஏ.வரதன்ன பார்த்துருக்கார். அவர் அப்பாகிட்ட பாட்டியோட சூழ்ச்சி எல்லாத்தையும் சொல்லிட்டார். தாத்தா கம்பெனி போன போது வரதன்னும் பாட்டியும் பேசுறது கேட்டுறிக்கார். அதான் அப்பாவ ஏமாத்துறாங்கனு தெரிஞ்சு மனோஹர் அப்பாகிட்ட போய் பேசி கம்பெனி வரச் சொல்லிருக்காங்க.”
“அந்த பி.ஏ.வரதன் உங்க அப்பாகூட தான இருந்தான்??”
“இல்லை அங்கிள் மனோஹர் அப்பா வந்த கொஞ்ச நாள்லே வரதன்னை வேலை விட்டுத் தூக்கிட்டார். அதுக்கு அப்புறம் அவர் பாட்டியைப் பார்க்க போயிருக்கார். ஆனால் பாட்டி ஏதோ அவரை திட்டி அனுப்பிட்டாங்க போல. அதான் அப்பாவைப் பார்த்ததும் உண்மையைச் சொல்லிருக்கார்.”
“ஓ அப்ப இவ்ளோ நடந்துருக்கா!!! சரி அந்த வீடியோ எனக்கு அனுப்பு.” என்று ராம் கூற, ரிஷி அவருக்கு அனுப்பினான்.
“அங்கிள் எனக்கும் சஞ்சயக்கும் ஒரு டவுட் இருக்கு.”
“என்ன டவுட் பா??”
“அங்கிள் இந்த வீடியோவ என்னால நம்ப முடியலை. யாரும் பிளான் பண்ணி அப்பாவை இதுல மாட்டி விட்டுருப்பாங்களோனு தோணுது.”
“ரிஷி இறந்தது உன்னை பெத்த அப்பா. அவரைக் கொலை பண்ணது உன்னை வளர்த்த அப்பா. வளர்த்த பாசம் உன்னுடைய கண்ணை மறைக்குது. அப்படிதான??” என்று கோவமாக சமி கேட்டாள்.
“அய்யோ இல்லை யுகி. என்னோட இன்ட்யூஷன் அப்படி சொல்லுது. அவ்ளோ தான்.”
“சமி நான் பார்த்துக்கிறேன். நீ அமைதியா இரு. நான் இந்த வீடியோவை எனக்குத் தெரிஞ்ச ஒருதர்கிட்ட கொடுத்து இது முதல்ல உண்மையானு கண்டுபிடிப்போம். அப்புறம் மிச்சத்தை பார்த்துக்கலாம்.” என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.
“அப்புறம் சஞ்சய் மச்சான் உன்கிட்ட ஒரு விஷயம் பேசனும்.” என்று புதிரோடு சொன்னான் ஆகாஷ். அவனது மச்சானில் மற்ற மூவரும் அதிர, ஆகாஷோ கூலாக,”எதுக்கு இப்ப எல்லாரும் இப்படி ஒரு ரியாக்ஷ்ன்??”
“ஆகாஷ் நீ எதுக்கு இப்ப மச்சானு கூப்பிட்ட இவனை??” என்று ரிஷி கேட்க,
“ஓ அப்ப மச்சான் உன்கிட்ட இன்னும் விஷயத்தைச் சொல்லலையா??”
“என்ன விஷயம்??” என்று ரிஷி கேட்க, சஞ்சய் திருட்டுத்தனமாக முழித்தான்.
“என்னடா முழியே சரியில்லை??” என்று ரிஷி சஞ்சயைப் பார்த்துக் கேட்டான்.
“அதை நான் சொல்றேன்.” என்று சமி கூற,
“நோ நான் தான் சொல்லுவேன்.” என்று ஆகாஷ் கூறினான்.
“ப்ச் யாராவது சொல்லுங்களேன்.” என்று ரிஷி கூற,
“அது உன் தொம்பி லவ் பண்றாரு. அது தெரியுமா உனக்கு??”
“என்ன சொல்ற ஆகாஷ்??”
“ஆமா அவன் லவ் பண்றது என்னோட தங்கச்சியை. அப்ப அவன் எனக்கு மச்சான் தான??”
“அடப்பாவி. இது எப்போ நடந்தது??”
“அதலாம் ஒரு ஆறு மாசத்துக்கு முன்னாடியே சார் ப்ரோபோஸ் பண்ணிட்டார்.”
“என்னது ஆறு மாசத்துக்கு முன்னாடியேவா?? அப்புறம் ஏன் நீ என்கிட்ட எதுவும் சொல்லலை??”
“சொல்லகூடாதுனு இல்லை. நான் மட்டும் தான் அப்போ லவ் பண்ணேன். ப்ரீத்திக்கு என்னை பிடிக்குமானு தெரியலை. அதான் சொல்லலை.”
“ஓ!!! அப்போ ப்ரீத்தி இப்ப சரினு சொல்லியாச்சா??”
“அதலாம் அவளுக்கு ஓகே. பட் சார் இப்ப கொஞ்சம் பிஹூ பண்றார்.”
“ஏன் என்னாச்சு??”
“அதை மச்சான் தான் சொல்லனும்.”
“என்னாச்சு சஞ்சய்??”
“இல்லை அண்ணா. நீ சமியை லவ் பண்றனு சொன்னதும் நான் சந்தோஷம் பட்டேன். ஆனால் ப்ரீத்தி சமியோட அத்தை பொண்ணுனு தெரிஞ்சதும் எனக்கு ஷாக். எப்படி உறவு முறை வரும்னு…” என்று தயங்கித் தயங்கி கூற, மூவரும் அவனை அதிர்ந்து நோக்க,”அப்போ சமியை உன் அண்ணனையும் சேர்த்து வச்சுட்டு நீ வேற பொண்ணை கல்யாணம் பண்ணிப்ப அப்படி தான??” என்று கோவத்துடன் கேட்டப்படி அங்கு வந்தாள் ப்ரீத்தி. அவளை அங்கு எதிர்பார்க்காத சஞ்சய் என்ன சொல்வதெனத் தெரியாமல் முழித்தான்.
“ப்ரீத்தி நீ எப்ப வந்த??”
“நான் கேட்கறதுக்கு முதல்ல பதில் சொல்லு. அப்போ சமி என் அத்தை பொண்ணுனா நீ அப்படியே என்னை வேண்டாம்னு சொல்லிட்டு வேற எவளையாவது கல்யாணம் பண்ணிக்கலாம்னு பிளான்ல இருக்கியா??”
“அய்யோ அப்படிலாம் இல்லை ப்ரீத்தி. நான் அப்படி நினைப்பேனா??”
“அப்போ எதுக்கு அன்னைக்கு நீ யோசிக்க டைம் கேட்ட??”
“அது எப்படி இதை வீட்டுல சொல்றதுக்கு மட்டும் தான் யோசிச்சேன். மத்தபடி நீ நினைக்கிற மாதிரிலாம் இல்லை. அண்ணாக்கும் கஷ்டம் இல்லாம நம்மளுக்கும் கஷ்டம் இல்லாம எப்படி இதைச் சரி பண்ணலாம்னு யோசிச்சேன். அவ்ளோ தான்.” என்று சஞ்சய் கூற,
“நிஜமா தான் சொல்றியா??”
“சத்தியமா சொல்றேன் ப்ரீத்தி.”
“சரி சரி. பிழைத்து போ.” என்று ப்ரீத்தி கூற, ஆகாஷ்,”என்ன சமி இப்படி சப்புனு முடிஞ்சுடுச்சு. நான் பல பல பைட் சீன்லாம் எதிர்பார்த்தேன். எல்லாம் மிஸ் ஆயிடுச்சு.” என்று வருத்தத்துடன் கூற, சஞ்சய் அவனை முறைத்துப் பார்த்து,”பைட் சீன்தான இதோ இப்ப நான் காட்டுறேன்.” என்ற கூறி அவனை அடிக்கத் துரத்தினான். ரிஷி,சமி மற்றும் ப்ரீத்தி அவர்களைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தனர்.
சமி ரிஷியைப் பார்த்து,”நந்து உன்கிட்ட ஒன்னு கேட்கனும் நினைச்சேன். ஆனால் மறந்துட்டேன்.”
“என்ன யுகி??”
“எப்படி நீ நான் தான் ஷாம்பவினு கண்டுபிடிச்ச??”
“ஆர்த்தி ஹாஸ்பிட்டல்ல இருந்த அப்போ நானும் உங்க மாமாவும் அங்க போனோம்ல அப்போ உங்க மாமா ஒரு டாக்டரை பார்த்து பேசினார். அவர் யாமினி ஆண்டியோட பொண்ணுனு ஏதோ பேச வந்தார். ஆனால் ராம் அங்கிள் பேச்சை மாத்திட்டார். உன்னைப் பத்தி அவர் என்ன பேச வந்தாருனு தெரிஞ்சுக்கனும்னு நான் அவரைப் போய் பார்த்தேன். அவர் முதல்ல சொல்லலை. அப்புறம் கெஞ்சிக் கேட்டேன் சொல்லிட்டார்.”
“இதுல நான் யாம்ஸோட பொண்ணு இல்லைனு தான கண்டுபிடிச்ச. அப்புறம் எப்படி நான் ஷாம்பவினு கண்டுபிடிச்சு??”
“அன்னைக்கு அந்த ஷாம்பவி தன்னோட கஷ்டம்னு சொல்லும் போது அந்த பொண்ணைவிட நீ தான் ரொம்ப வருத்தப்பட்ட. அதுவுமில்லாம ஆகாஷ் உன் கையைப் பிடிச்சு உன்னை கன்ட்ரோல் பண்ணிட்டு இருந்தான். அப்பவே புரிஞ்சுடுச்சு நீ தான் ஷாம்பவினு.”
“நல்லா ஷார்ப் தான் நீ நந்து.”
“என்ன மேடம் முன்னாடிலாம் வாங்க போங்கனு பேசுவீங்க?? இப்ப அப்படினா என்னனு கேட்ப போலயே!!!”
“ஹீ ஹீ அது தானா வந்துருச்சு. நான் என்ன பண்ண??”
“இதுவும் நல்லா தான் இருக்கு. நீ அப்படியே கூப்பிடு.”
“இவ யாருக்கு மரியாதை குடுத்துருக்கா?? அத்தை மாமாவையே இவ பேர் சொல்லி தான் கூப்பிடுவா. அவங்களை விடுங்க. எங்க அப்பா கமிஷ்னர். ஆனால் அவரையே சில நேரம் பேர் சொல்லி தான் கூப்பிடுவா.”
“உனக்குப் பொறாமை. போ போ போய் படிக்கிற வழியப் பார்.”
“போடி போடி. எங்களுக்கு தெரியும்.” இருவரும் விளையாட்டாக சண்டை போட, ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் ரிஷி. சம்யுக்தா ஷாம்பவியாக இங்கு இருந்திருந்தால் கண்டிப்பாக இவ்ளோ சந்தோஷமாக இருந்திருக்க மாட்டாள். இதை நினைத்து அவனுக்கு சந்தோஷமாக இருந்தது. சஞ்சயும் ஆகாஷும் விளையாடி விட்டு அங்கு வந்தனர்.
“சரி யுகி அந்த ஷாம்பவி பொண்ணு எங்க??”
“அவள் வெளில ஒரு வேலையா போய்ருக்கா. அதுக்கு தான் அவளை நான் இங்க கூட்டிட்டு வந்தேன். அவளுக்கு அப்பா மாதிரி போலிஸ் ஆகனும். அவ டிப்ளமா முடிச்சுட்டா. இங்க ஒரு கோச்சிங் சென்டர்ல சேர பேச போய்ருக்கா. நான் வரேனு சொன்னேன். ஆனால் அவ அவளோட ப்ரண்ட்ஸோட வந்ததால அவங்க கூட போய்ருக்கா. ப்ரீத்தி ஊருக்கு போகும் போது அவளும் போய்டுவா.”
“ஏய் இன்னைக்கு தான நீ வந்த!!! அதுக்குள்ள ஊருக்கு போறியா??” என்று சஞ்சய் கேட்க,
“உன்னை பார்த்து நாலு வார்த்தை நறுக்குன்னு கேட்கலாம்னு தான் வந்தேன். ஆனால் ஏதோ நீ சொன்னதைக் கேட்டு சரி போடானு விட்டுட்டேன்.” என்று ப்ரீத்தி கூற மற்றவர்கள் அவனைப் பார்த்துச் சிரித்தனர்.
சில நேரம் கழித்து உள்ளே வந்த ராம் அவர்களிடம் வந்து,”ரிஷி உன்னுடைய டவுட் சரியா இருக்குமோனு தோணுது.”
“என்ன சொல்றீங்க அங்கிள்??”
“ரிஷி இந்த வீடியோ உண்மை தான். ஆனால் அதுல இருக்குற ஆள் இப்ப ஒரு கேஸ்ல மாட்டி ஜெயில்ல இருக்கான்.”
“அவன கண்டுபிடிச்சு நாம என்ன பண்ண போறோம்??”
“ரிஷி என்ன இப்படி பேசுற?? அவனை கண்டுபிடிச்சா உன் அப்பா தான் இதை செய்ய சொன்னாரா இல்லையானு தெரிஞ்சுரும்.”
“ஆமா அங்கிள். நான் அப்படி யோசிக்கலை. அப்போ நீங்க போய் அவனைப் பார்த்தீங்களா??”
“இல்லை. அதுக்கு சில முறை இருக்கு. நாளைக்கு தான் போய் அவனைப் பார்க்கனும்.”
“அங்கிள் நீங்க போகும் போது என்னையும் கூப்பிட்டு போங்க.”
“இல்லை ரிஷி நீ வேண்டாம். இதை நான் பார்த்துக்கிறேன்.”
“அங்கிள் அது இல்லை….”
“ஏன் என் மேல நம்பிக்கை இல்லையா??”
“அய்யோ அப்படிலாம் இல்லை அங்கிள்.” அப்பொழுது ராம்க்கு ஒரு கால் வந்தது. அதை எடுத்துப் பேசி முடித்தவரின் முகம் யோசனைக்குள்ளானது. சமி அவரிடம்,”மாம்ஸ் என்னாச்சு??”
“அந்த கைதி இருக்கான்ல அவனைப் பத்தி நான் விசாரிக்க சொல்லிருந்தேன். அதுல ஒரு நியூஸ் கிடைச்சிருக்கு.”
“என்ன மாம்ஸ் அது??”
“அவன் ஆர்த்தியோட பாட்டி கங்காகூட இரண்டு நாள் முன்னாடி பேசிருக்கான். அதுக்கு அப்புறம் தான் அவன் அரெஸ்ட் ஆகிருக்கான். ஒன்னு இவன் கங்காகூட கூட்டா இருக்கனும். இல்லாட்டி எதிரியா இருக்கனும். எனக்கு என்னமோ முதல் ஆப்ஷன் தான் தோணுது. சரி நாளைக்கு பார்க்க போவேன்ல அங்க பார்த்துக்கலாம்.” இதைக் கேட்ட அனைவரும் அவரவர் யோசனையில் ஆழ்ந்தனர்.