Loading

சஞ்சயைப் பார்த்த மூவரும் அதிர்ச்சியடைந்தனர். அவனை அவர்கள் அங்கு எதிர்பார்க்கவில்லை.

“சஞ்சய் நீ இங்க?? இப்ப தான பார்த்துட்டு வந்தோம். எதாவது சொல்லனுமா??” திக்கித் தெனறி ஆகாஷ் கேட்க,

“நான் கேட்டதுக்கு முதல்ல பதில் சொல்லுங்க. நீங்க தான் என் அப்பாவ கிட்னாப் பண்ணீங்களா??”

“ஆமா சஞ்சய் நாங்க தான். நான் சொன்னேன் ஆகாஷ் செஞ்சான்.” என்று எந்த பயமும் இல்லாமல் சமி சொல்ல, சஞ்சய் அவளை வியப்புடன் பார்த்தான்.

“சமி ஒரு தப்ப செஞ்சுட்டு எப்படி உன்னால இவ்ளோ தைரியமா சொல்ல முடியுது??”

“நான் எந்த தப்பும் செய்யலை சஞ்சய்.”

“கிட்னாப் பண்ணது தப்பில்லையா??”

“அதுக்கு பின்னாடி ஒரு வேலிட் ரீஸன் நான் இருக்குனு சொன்னாலும் தப்பா சஞ்சய்??”

“அப்படி என்ன ரீஸன் இருக்கு உன்கிட்ட??”

“சமி கொஞ்ச நேரம் நீ சும்மா இரு.” என்று ராம்குமார் சொல்ல.

“இல்லை மாம்ஸ். சஞ்சய்க்கும் தெரியட்டும்.”

“சமி இது அவசரப் படுற நேரம் இல்லை. நமக்கே சரியா தெரியாத ஒரு விஷயத்தை எப்படிச் சொல்லுவ??” என்று ராம்குமார் கேட்க, சமி அமைதியாக நின்றாள்.

“இங்க பாரு சஞ்சய், நாங்க பண்ணதுக்கு பின்னாடி ஒரு காரணம் இருக்கு. அது என்னனு நான் கண்டிப்பா சொல்றேன். ஏனா உன்னோட உதவி எங்களுக்கு தேவை படும். ஆனால் இப்ப எதுவும் சொல்ல முடியாது. நான் கூடிய சீக்கிரம் சென்னைக்கு டிரான்ஸ்ஃபர் ஆயிடுவேன். அஃபிஸியல்லா இன்னும் இரண்டு நாள்ல சொல்லிடுவாங்க. இத நான் இன்னும் யார்கிட்டயும் சொல்லலை. வாசுக்கு மட்டும் தான் தெரியும். அதனால என்னை நம்பி நீ வெயிட் பண்ணு. டைம் வரும் போது கண்டிப்பா உன்கிட்ட நான் சொல்லுவேன். அது வரைக்கும் யார்கிட்டயும் எதுவும் சொல்ல வேண்டாம்.” என்று ராம்குமார் சொல்ல,

“அங்கிள் நீங்க என்ன சொன்னாலும் நீங்க பண்ணது தப்பு. உங்களுக்கு என்ன காரணம் இருந்தாலும் என்னால ஏத்துக்கு முடியலை.” என்று சஞ்சய் கூற, சமிக்கு கோவம் வந்து விட்டது.

“சரி நாங்க பண்ணது தப்பு தான். அப்புறம் ஏன் உங்க அப்பா யார் கடத்துனதுனு கேட்டதுக்கு மாத்தி கடத்திட்டாங்கனு பொய் சொன்னார்???” என்று கேட்க, சஞ்சய்க்கு யோசிக்க ஆரம்பித்தான்.

“உடனே நாங்க மிரட்டுனோம்னு அல்ப்பமா எதுவும் சொல்லிடாது. அப்படி நாங்க எதுவும் பண்ணலை. ஒரே ஒரு கேள்வி மட்டும் தான் கேட்டோம். அதுக்கு அவர் பதில் சொன்னதும் நாங்க விட்டுடோம். இது தான் உண்மை.” என்று சமி கூற, சஞ்சய் அமைதி காத்தான்.

“சரி அங்கிள். நீங்க இவ்ளோ சொல்றீங்க. அதுனால நான் இப்ப எதுவும் பேசலை. உங்க காரணம் என்னனு தெரிஞ்சுட்டு அப்புறம் பேசலாம்.” என்று சஞ்சய் கூற, மூவருக்கும் நிம்மதியாக இருந்தது. பின் அவர்களிடம் விடை பெற்று அங்கிருந்து சென்றுவிட்டான். அவன் சென்றதும், ஆகாஷ் ராமிடம்,”அப்பா என்ன இப்படி சொல்லிட்டீங்க?? சஞ்சய்கிட்ட நாம் சொல்லனுமா??”

“சொல்லனும் ஆகாஷ். சஞ்சய் நமக்கு கண்டிப்பா உதவி பண்ணுவான். அவன் நல்லவன்.” என்று கூற, சமியும் ஆகாஷும் தலையை அசைத்தனர்.

இங்கு சஞ்சய் தன் வீட்டுக்குள் வரும் பொழுது ஆர்த்தி கோவமாக வெளியே சென்றாள். ஏதோ நடந்திருக்கிறது எனப் புரிந்து கொண்ட சஞ்சய் சமியை மறந்து ரிஷியைப் பார்க்கச் சென்றான்.

ரிஷி அவன் அறையில் கோவமாகக் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான். சஞ்சய் வந்து ரிஷியிடம்,”என்னாச்சு அண்ணா?? அங்க என்னன்னா ஆர்த்தி கோவமா போறா. இங்க நீ கோவமா சுத்திட்டு இருக்க??”

“ப்ச் அப்பாகிட்ட பேசனும் சஞ்சய். நான் சமியை லவ் பண்றேன். அதுல எந்த சந்தேகமும் இப்ப இல்லை. நான் இன்னும் அமைதியா இருந்தா ஆர்த்திக்கு ஹோப் குடுத்த மாதிரி ஆயிடும். நான் அவகிட்ட தள்ளி நிக்கும் போதே அவ ரொம்ப உரிமை எடுத்துக்குறா. இதுல நான் அமைதியா இருந்தா அது தப்பா போயிடும். நான் நாளைக்கே அப்பாட்ட பேச போறேன்.”

“அண்ணா ஆர் யூ சுயர்??”

“எஸ். நான் அப்பாகிட்ட கண்டிப்பா இதைப் பத்தி பேச தான் போறேன்.” என்று ரிஷி கூற சஞ்சய்க்கு என்ன பேசவென தெரியவில்லை. அமைதியாக அவன் அறைக்குச் சென்றுவிட்டான்.

அடுத்த நாள் காலையில் ப்ரகாஷ் டீ குடித்துக் கொண்டிருந்தார். அங்கு வந்த ரிஷி,”அப்பா உங்ககிட்டயும் அம்மாகிட்டயும் கொஞ்சம் பேசனும்.” ப்ரகாஷ் யோசனையுடன் அவனைப் பார்த்துவிட்டு நளினியை அழைத்தார். அதே சமயம் அங்கு சஞ்சய் வந்தான்.

“சொல்லுங்க.”

“ரிஷி ஏதோ நம்மகிட்ட பேசனுமாம்.”

“என்னபா ரிஷி??”

“அம்மா அப்பா எனக்கு ஆர்த்தியைக் கல்யாணம் பண்ணிக்க இஷ்டம் இல்லை.”

“என்னடா சொல்ற?? நிச்சயம் முடிஞ்சு இப்ப பத்திரிக்கை அடிக்கலாம் குடுத்தாச்சு. இப்ப போய் இப்படி சொல்ற??” ப்ரகாஷ் கேட்க,

“அப்பா நான் உங்களுக்காக மட்டும் தான் ஆர்த்தியைக் கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்கிட்டேன். மத்தபடி எனக்கு ஆர்த்தி மேல் தனிபட்ட ஆசைலாம் இல்லை. எப்படி இருந்தாலும் எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க தான் போறீங்க அது நல்லா தெரிஞ்ச ஆர்த்தியா இருக்கட்டும்னு தான் நான் சரினு சொன்னேன் அப்பா.”

“சரி இப்ப அதுக்கு என்ன??”

“அப்பா எனக்கு இப்ப யுகியைத் தான் பிடிச்சிருக்கு.” என்று ரிஷி கூற சஞ்சய் ப்ராகஷின் முகத்தைத் தான் பார்த்துட்டு தான் இருந்தான். அவருக்கு அதிர்ச்சியாக இருந்தது.

“என்ன சொல்ற ரிஷி?? இப்ப நான் போய் எப்படி இதைச் சொல்ல முடியும்?? கங்கா அம்மா பத்தி உனக்கு தெரியும்ல. உன்கிட்ட கேட்டுட்டு தான எல்லாம் முடிவு பண்ணோம். இப்ப இப்படி சொன்னா என்ன அர்த்தம்??”

“அப்பா என் வாழ்க்கை மட்டுமில்லை ஆர்த்தி வாழ்க்கையும் இதனால் பாதிக்க படும். புரிஞ்சுக்கோங்க. உங்களால பேச முடியாட்டி நானே அவங்ககிட்ட பேசிடுறேன்.”

“ரிஷி இது அவசரபடுற நேரம் இல்லை. கொஞ்சம் பொறுமையா இரு.” என்று ப்ரகாஷ கூற,

“சரி அப்பா.” என்று கூறிவிட்டு ரிஷி சென்றுவிட்டான். சஞ்சய் அங்கிருந்த எழுந்து வெளியே செல்வதைப் போல் சென்று கதவின் அருகே நின்றுக் கொண்டான்.

இங்கு ப்ரகாஷ் தன் இரு மகன்களும் சென்றதை உறுதிப் படுத்திக் கொண்டு,”என்ன நளினி ரிஷி இப்படி பேசுறான்??”

“எனக்கும் அதான் யோசனையா இருக்குங்க. ஆனால் நமக்கு ரிஷி சந்தோஷம் தான முக்கியம்.”

“ப்ச் புரியாம பேசாத நளினி. அப்ப ஆர்த்தி நிலைமை??”

“என்னங்க ஒரு வேலை கல்யாணம் ஆகி ரிஷி ஆர்த்தியை வேண்டாம்னு சொல்லிட்டா என்னங்க பண்ணுவீங்க??”

“அப்படி சொன்னா கூட பரவால.”

“என்னங்க இப்படி பேசுறீங்க?? மனசாட்சியே இல்லையா உங்களுக்கு??”

“இங்க பாரு உனக்கு எதுவும் தெரியாது. கங்கா தேவி அம்மாட்ட யார் பேசுறது?? இந்த கல்யாணம் மட்டும் நடக்காட்டி நான் ஜெயிலுக்கு தான் போகனும் பரவாலையா??” என்று ப்ரகாஷ் கேட்க, நளினியும் சஞ்சயும் திடுக்கிட்டனர்.

“என்னங்க என்ன பேசுறீங்க?? நீங்க எதுக்கு ஜெயிலுக்கு போகனும்?? இதுக்கெல்லாம் ஜெயிலுக்கு அனுப்புவாங்களா??”

“நான் தான் சொல்றேன்ல உனக்கு எதுவும் தெரியாது. அந்த அம்மா நினைச்சது நடக்காட்டி என்ன வேணாலும் பண்ணும்.”

“ப்ச் நீங்க சொல்றது எனக்குப் புரியலை. எனக்கு ரிஷி சந்தோஷம் மட்டும் தான் முக்கியம். அதுக்கு என்ன வழினு யோசிங்க. நாளைக்கே ரிஷிக்குப் பழைய ஞாபகம் வந்து உங்களோட சொந்த பையனா இருந்திருந்தா என் பேச்சு கேட்டு இருப்பீங்களனு ஒரு வார்த்தை கேட்டுற கூடாது. அது மட்டும் தான் எனக்கு வேணும். எனக்கு ரிஷியும் சஞ்சயும் ஒன்னும் தான். நான் எப்பவும் பிரிச்சு பார்த்தது இல்லை. அவ்ளோ தான் சொல்லுவேன்.” என்று அங்கிருந்து சென்றுவிட்டார். சஞ்சய்க்கு ஏன் ப்ரகாஷ இப்படி பேச வேண்டும் என்று புரியாமல் நின்று இருந்தான். பிரகாஷுக்கு அடுத்து என்ன செய்வது என்று யோசனை. ஆக மொத்தம் ரிஷியைத் தவிர்த்து அனைவரும் ஒரு மாதிரியாகத் தான் இருந்தனர்.

ரிஷி சந்தோஷத்துடன் காலேஜுக்கு வந்தான். அன்று அவன் தனியாகச் செல்வதாகச் சொல்லியதால் சஞ்சயும் ஆர்த்தியும் அவனுடன் வரவில்லை. அவன் வந்து அரை மணி நேரம் கழித்துத் தான் சமி வந்தாள். அவளுக்காக தன் காரில் அமர்ந்து காத்துக் கொண்டிருந்த ரிஷி வேகமாக இறங்கி சமியை நோக்கிச் சென்றான்.

“ஹாய் யுகி.” ரிஷியை அங்கு எதிர்பார்க்காத சமி அதிர்ச்சியாகப் பார்த்தாள்.

“என்ன அதிர்ச்சியாகிட்ட??”

“இல்லை சார் என்ன இவ்ளோ சீக்கிரம் வந்துட்டீங்க??”

“ப்ச் யுகி நாம பார்க்கிங்ல தான இருக்கோம். நந்துனே கூப்பிடு.”

“சரி சொல்லுங்க நந்து. என்ன இவ்ளோ சீக்கிரம்??”

“உன்னைப் பார்க்க தான்.”

“என்னைப் பார்க்கவா??”

“ஆமா யுகி. உன்னைப் பார்க்க தான்.” என்று அழுத்தத்துடன் கூறினான்.

“என்ன எதுக்கு பார்க்கனும்??”

“நான் இந்த காலேஜ்ல இருந்து க்வுட்(quit) பண்ணலாம்னு இருக்கேன் யுகி. அதைச் சொல்ல தான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன்.”

“என்னாச்சு நந்து?? ஏன் தீடீரென வேலையை ரிசைன் பண்ணுறீங்க??”

“ஒரு வாத்தியார் ஸ்டூடண்ட்ட லவ் பண்ணுறது தப்பு. அதான் ரிசைன் பண்ண போறேன்.”

“புரியலை நந்து. இத்தனை நாள் நீங்க இங்க தான வேலைப் பார்த்தீங்க?? அப்போ ஆர்த்தி ஸ்டூடண்ட்டா தெரியலையா??”

“நான் ஆர்த்தியை மனசுல வச்சு பேசுறேன்னு நினைக்கிறாயா யுகி??”

“அப்புறம் வேற யார்??”

“அத நான் அப்புறம் சொல்றேன். ஆனால் ஒன்னு அது ஆர்த்தி இல்லை. இப்ப தான் அப்பாகிட்ட பேசிட்டு வரேன். நான் இந்த மேரேஜ ஸ்டாப் பண்ணுங்கனு சொல்லிட்டேன்.”

“என்ன சொல்றீங்க ரிஷி?? கல்யாணத்தை நிறுத்த சொல்லிட்டீங்களா??” என்று ஆச்சர்யத்துடன் கேட்டாள். சமி எதிர்ப்பார்த்த ஒன்று. அவள் இதைத் தான் எதிர்ப்பார்த்தாள். ஆனால் ஏனோ சந்தோஷமாக இருக்க முடியவில்லை.

“ஆமா யுகி. மனசுல வேற பொண்ணு இருக்குற அப்ப ஆர்த்தியை நான் கல்யாணம் பண்றது சரியா வராது. அதான் நிப்பாட்ட சொல்லிட்டேன்.”

“என்ன நந்து அதிர்ச்சி மேல அதிர்ச்சியா தரீங்க இன்னைக்கு?? யார் அந்த பொண்ணு??”

“உன்கிட்ட சொல்லாமையா!!! கண்டிப்பா சொல்றேன். அதுக்கு தான இங்க வெயிட் பண்றேன். பட் இங்க இல்லை. வெளில போகலாம். அங்க வச்சு சொல்றேன்.”

“இப்பவா?? அப்ப கிளாஸ்??”

“நான் டூ ஹவர்ஸ் பெர்மிஷன் போட்டு இருக்கேன் யுகி. நீயும் மார்னிங் பிரேக் அப்புறம் கிளாஸ் அட்டெண்ட் பண்ணிக்கலாம்.” என்று ரிஷி கூற, யுகி அரை மனதுடன் அவனுடன் சென்றாள்.

இருவரும் ஒரு காஃபி ஷாப்பில் உட்கார்ந்திருந்தார்கள்.

“சொல்லுங்க நந்து யார் அந்த பொண்ணு??”

“யுகி இதை நீ எப்படி எடுத்துப்பனு தெரியலை பட் எனக்கு வேற சாய்ஸ் இல்லை. நேத்தே உன்கிட்ட சொல்ல நினைச்சேன். ஆனால் முடியலை. பட் இப்ப கண்டிப்பா சொல்லியே ஆகனும்னு சிட்டுவேஷன்ல இருக்கேன் நான்.”

“என்னாச்சு நந்து??”

“ஆர்த்தியோட பிஹேவியர் எனக்குச் சுத்தமா பிடிக்கலை. நேத்து ரொம்ப லிமிட் தாண்டிருச்சு. அதான் இன்னும் டைம் வேஸ்ட் பண்ண வேண்டாம்னு முடிவு பண்ணிட்டேன். யுகி நேத்து சொன்னேன் ஞாபகம் இருக்கா?? உன்ன பார்த்த முதல் நாள் ஏதோ சொல்ல முடியாத உணர்வு வந்துச்சு எனக்குன்னு??(அவள் ஆம் என்று தலை ஆட்டினாள்.) அது என்ன மாதிரியான உணர்வுனு எனக்கு புரிஞ்சது. ஆனால் உன்கிட்ட இப்போதைக்குச் சொல்ல வேண்டாம்னு நினைச்சேன். ஆனால் விஷயம் என் கை மீறி போய்டுமோனு ஒரு பயம். அதான் இப்ப உன்கிட்ட சொல்லிடலாம்னு முடிவு பண்ணிட்டேன். ஐ லவ் யூ யுகி.” பட்டுன்னு ரிஷி சொல்ல, சமி ஸ்தம்பித்து நின்றாள்.

“என்ன சொல்றீங்க நந்து??”

“ஆமா யுகி. ஐ ஆம் டீப்லி இன் லவ் வித் யூ. நீ இல்லாமல் என் வாழ்க்கை இல்லைனு சினிமா டயலாக் விட மாட்டேன். ஆனால் நீ இல்லாட்டி நான் வாழ்வேன். பட் அது ஒரு அர்த்தமும் இல்லாத வாழ்க்கையா தான் எனக்கு இருக்கும். ஸோ நீ இப்பவே உன் முடிவு சொல்ல வேண்டாம். யோச்சிச்சு சொன்னால் போதும். பட் சீக்கிரம் சொல்லிடு. அப்ப தான் நான் ரிசைன் பண்ணதும் வேற காலேஜ்ல ஜாப் அப்லை(apply) பண்ண முடியும்.” என்று ரிஷி சொல்ல, சமியால் பதில் பேச முடியவில்லை.

“சரி நாம காலேஜ் போகலாம் வா.”

“இல்லை நந்து. நான் வீட்டுக்கு போறேன். என்னால காலேஜ்ல கான்சென்ட்ரேட் பண்ண முடியாது.”

“சரி வா. உன்னை வீட்டுல டிராப் பண்ணிடுறேன்.” என்று ரிஷி கூற சமி அமைதியாகத் தலை ஆட்டினாள். ரிஷிக்குப் பயமாக இருந்தது. சமி தன் காதலை ஏற்காவிட்டால் என்ன செய்வதென!!! இருந்தாலும் ஓரத்தில் ஒரு நம்பிக்கை சமி தன் காதலை ஏற்றுக் கொள்வாள் என்று. ரிஷி சமியை அவள் வீட்டில் விட்டுவிட்டு காலேஜ் சென்றுவிட்டான். இதை வெளியே வந்த கங்கா பாட்டி பார்த்துவிட்டு கோவத்துடன் தன் இல்லத்துக்குள் சென்றுவிட்டார்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
0
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்