Loading

கிரஹப்பிரவேசம் முடிந்து வாசு,யாமினி மற்றும் ப்ரீத்தி கோயம்புத்தூர் சென்றனர். ராம்குமாரும் லக்ஷ்மியும் ஒரு வாரம் இங்கிருந்து விட்டு வேலைக்கு ஆள் வைத்துவிட்டுச் செல்லலாமென இவர்கள் இங்கேயே இருந்தனர்.

சமி மூன்று நாள் கழித்து கல்லூரிக்குச் சென்றாள். ஆகாஷ் அவளைக் கல்லூரியில் விட்டுவிட்டு யு.பி.எஸ்.சி. கோச்சிங் சென்டருக்கு சென்றுவிட்டான். ரிஷிக்கு ஆர்த்தி மேல் கோவம் இருந்தாலும் அவனால் அதை வெளியில் காட்ட முடியவில்லை. ஆர்த்தியிடம் அவன் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. சஞ்சயும் அப்படி தான். அவனும் அவளிடம் பேசவில்லை. ஆனால் அதை கண்டுகொள்ளாமல் ஆர்த்தி தன் பாட்டுக்கு இவர்களிடம் பேசிக் கொண்டு வருவாள்.

சமி கல்லூரி உள்ளே அடி எடுத்து வைக்கும் போது அவளை ரிஷி பார்த்துவிட்டான். அவன் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்ப் போல் பிரகாசமாக இருந்தது. இதைப் பார்த்த ஆர்த்தி கடுப்பானாள். சமியும் ரிஷியைப் பார்த்தாள். ஆனால் கண்டு கொள்ளாமல் அங்கிருந்து சென்று விட்டாள். ரிஷி இறங்கி சமியிடம் செல்ல அடி எடுத்து வைத்த போது ஆர்த்தி அவன் கையைப் பற்றி,”ரிஷி அவ தான் நம்மலை கண்டுக்கலைல எதுக்கு அவகிட்ட போற?? அவகிட்ட நீ பேசுறது எனக்குச் சுத்தமா பிடிக்கலை. அதனால நீ அவகிட்ட பேசாத. அவ்ளோதான் சொல்வேன்.”

“ஏய் நான் ஒன்னும் உன் அடிமை இல்லை. நீ சொல்றத தான் செய்யனும்னு எந்த சட்டமும் இல்லை. ஒழுங்கா உன் கையை எடு. இல்லாட்டி நான் என்ன பண்ணுவேனு எனக்கு தெரியாது!!” என்று கோவத்துடன் சொல்ல, ஆர்த்தி வெலவெலத்து போய்ட்டாள். சஞ்சயோ ஏதோ ஆச்சரியத்தை பார்ப்பது போல் பார்த்துக் கொண்டிருந்தான். ரிஷி இதுவரை இப்படி கோவமாகப் பேசி பார்த்தது கிடையாது. சமியிடம் தான் அவன் கோபத்தை குடும்பமே பார்த்தது. இப்பொழுது இது இரண்டாவது முறை. சமியிடம் காட்டிய கோபத்தில் உரிமையுணர்வு இருந்தது. ஆனால் ஆர்த்தியிடம் காட்டிய கோபத்தில் வெறுப்பு தான் இருந்தது. சஞ்சய்க்கு புரிந்தது ரிஷி தன் காதலை உணர்ந்து கொண்டான் என்று. சந்தோஷமாக தன் வகுப்பு நோக்கிச் சென்றான்.

ரிஷி சமியிடம் பேச செல்வதற்குள் சமி தன் வகுப்பு தோழிகளுடன் பேச ஆரம்பித்து விட்டாள். அதனால் ரிஷி அங்கிருந்து சென்றுவிட்டான். இதைப் பார்த்த ஆர்த்திக்கு நிம்மதியாக இருந்தது. அவளும் சிரித்துக் கொண்டே தன் வகுப்புக்குள் நுழைந்தாள். அவளும் மூன்று நாள் கழித்து இன்று தான் கல்லூரி செல்கிறாள். எப்பொழுதும் போல் அனு பக்கத்தில் சென்று அமர்ந்து எதுவும் நடவாவது போல் பேசினாள் ஆர்த்தி. ஆனால் அனு அவளிடம் எதுவும் பேசாமல் தன் இடத்தை மாற்றிக் கொண்டு உட்கார்ந்து விட்டாள். ஆர்த்திக்கு வருத்தமாக இருந்தது. ஆனால் அவளால் கீழே இறங்கிச் சென்று மன்னிப்பு கேட்க தோன்றவில்லை.

மதிய உணவு இடைவேளையில் சமியை தனியாகப் பார்த்தான் ரிஷி. வேகமாக அவளிடம் வந்து,”யுகி உன்கிட்ட கொஞ்சம் பேசனும்.”

“சொல்லுங்க சார்.” ஏதோ மூன்றாம் நபரிடம் பேசுவது போல் இருந்தது அவளது குறள். ரிஷிக்கு வேதனையாக இருந்தது.

“காலேஜ் முடிச்சுட்டு நம்ம வீட்டுப் பக்கத்துல இருக்குற காஃபி ஷாப் வரியா?? ப்ளீஸ் உன்கிட்ட நிறைய பேசனும். ஆனால் இது காலேஜ். நீ ஸ்டூடண்ட் நான் ஃப்ரொஃபஸர். இங்க நாம்ம நின்னு பேசுவதைப் பார்த்தால் யாராவது எதாவது சொல்லுவாங்க. அதான். ப்ளீஸ் யுகி நோனு மட்டும் சொல்லாத.”

“ஓகே சார் வரேன்.” என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டாள். ரிஷிக்கு மகிழ்ச்சியாக இருந்தது. பின் அவன் பாடம் நடத்தும் வகுப்புக்குச் சென்றுவிட்டான்.

மாலை கல்லூரி முடிந்து அனைவரும் வீட்டுக்குச் சென்றனர். இப்பொழுது ஆர்த்தி ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை. சஞ்சய்க்கு நிம்மதியாக இருந்தது. அதே போல் சமியிடம் ரிஷி பேசினானா என்று தெரிந்து கொள்ளும் ஆர்வமும் இருந்தது. ரிஷிக்கு பரபரப்பாக இருந்தது. சமி தன்னை மண்ணிக்க வேண்டுமென மனதுக்குள் ஜபித்து கொண்டே வந்தான்.

காரை நிறுத்தி விட்டு மற்ற இருவர் இறங்கும் முன் ரிஷி வேகமாக இறங்கி தன் அறைக்குச் சென்று முகம் கை கால் கழுவி ஒரு டீ சர்ட் ஜீன்ஸ் அணிந்து கீழே வந்தான். ஆர்த்தி அவள் வீட்டுக்குச் செல்லாமல் இங்கு தான் இருந்தாள். ரிஷி ஹாலில் அமர்ந்திருந்த நளினி,சஞ்சய், ஆர்த்தி யாரையும் பார்க்காமல் வெளியே செல்ல போனான். ஆனால் ஆர்த்தி அவனை வழி மறித்து,”ரிஷி எங்க போற??”

“ப்ச்!!! எங்க அம்மாவே அமைதியா இருக்காங்க!! உனக்கு என்ன??”

“நான் கேட்ட கேள்விக்கு இது பதில் இல்லை.” இதைக் கேட்ட ரிஷி கடுப்பாகி அவள் கையை உதறிவிட்டு அங்கிருந்து சென்றான். ஆர்த்திக்கு ஏதோ தப்பாக நடப்பது போல் தோன்ற வேகமாக அவள் வீட்டுக்குச் சென்றாள்.

ரிஷி காஃபி ஷாப் வந்து பத்து நிமிடத்தில் சமி உள்ளே வந்தாள்.

“சொல்லுங்க சார் எதுக்கு இங்க வரச் சொன்னீங்க??”

“யுகி ப்ளீஸ். நான் செஞ்சது ரொம்ப பெரிய தப்பு தான். மன்னிப்புன்றது சின்ன வார்த்தை. ஆனால் என்னால் இப்படிக்கு உன்கிட்ட மன்னிப்பு தான் கேட்க முடியும். ப்ளீஸ் என்னை மன்னிச்சுடு யுகி. நான் ஏதோ புத்திக் கெட்டு போய் அப்படி பேசிட்டேன் சமி. வெரி வெரி சாரி யுகி. என்னை மன்னிச்சுடு ப்ளீஸ்.”

“சார் நீங்க மன்னிப்புலாம் கேட்க வேண்டாம். நான் யாரோ எவரோ. அதனால் விடுங்க. நான் எதுவும் மனசுல வச்சுக்கலை.”

“நீ யாரோ எவரோலாம் இல்லை யுகி. நீ என் லைஃப்ல ரொம்ப இம்பார்டென்ட் பெர்சன். முதல்ல உன்னை காலேஜ்ல பார்க்கும் போதே எனக்கு ஏதோ சொல்ல முடியாத உணர்வு வந்துச்சு. அதுக்கு அப்புறம் நீ எங்க வீட்டுல தான் தங்க போறனு தெரிஞ்சதும் ரொம்ப சந்தோஷம் பட்டேன். உன்ன நான் அப்படி பார்த்ததும் ஐ லாஸ்ட் மை கன்ட்ரோல். சத்தியமா சொல்றேன் அந்த எடத்துல ஆர்த்தியை அப்படி பார்த்து இருந்தால் கண்டிப்பா நான் இப்படி நடந்திருக்க மாட்டேன். அவள் அவ்ளோதான்னு விட்டுருவேன். ஆனால் உன்னை என்னால் அப்படிப் பார்க்க முடியலை யுகி. ப்ளீஸ் என்னை மன்னிச்சுடு.”

“சார் நான் தான் சொல்றேன்ல நீங்க எந்த தப்பும் பண்ணலை. என்னைப் பத்தி உங்களுக்கு எதுவும் தெரியாது அப்படி இருக்கும் போது உங்க கோவம் நியாயமானது தான். அதனால் நீங்க சாரிலாம் சொல்ல வேண்டாம் சார்.”

“அப்போ ஏன் இன்னும் என்னை சார்னு கூப்பிடுற யுகி?? எனக்குக் கஷ்டமா இருக்கு. ஐ ஆம் ரியலி ரியலி வெரி சாரி யுகி. ப்ளீஸ் பழைய மாதிரி என் கூட பேசு. வேணும்னா நான் தோப்புக் கரணம் போடவா??” என்று கூறி ரிஷி தோப்புக் கரணம் போட ஆரம்பித்து விட்டான். சுற்றி இருந்த அனைவரும் இதைச் சுவாரஸ்யமாகப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

“அய்யோ சார் என்ன பண்ணுறீங்க?? ப்ளீஸ் ஸ்டாப் பண்ணுங்க.”

“நீ என் கூட பழைய மாதிரி பேசுற வரைக்கும் நான் தோப்புக் கரணம் போட்டுட்டு தான் இருப்பேன்.”

“அய்யோ!!! ஓகே ஓகே நந்து நான் உங்களை மன்னிச்சுட்டேன். இப்பவாவது ஸ்டாப் பண்ணுங்க.” என்று சமி சொல்ல ரிஷி சந்தோஷத்துடன் சமியின் கண்ணத்தைக் கிள்ளி,”என் செல்ல யுகி. தாங்க் யூ ஸோ மச்.” என்று கூறினான். சமிக்கு ஒரு நிமிடம் அதிர்ச்சி அடைந்தாள். ரிஷி இப்படி அவளிடம் பேசியது கிடையாது. ஏதோ மாறுதல் ரிஷியிடம் தெரிந்தது. பின் அவர்கள் இருவரும் ஏதோ ஏதோ பேசினார்கள். சிறிது நேரத்தில் அங்கு ஆகாஷ் வந்தான்.

“ஆகாஷ் உன்கிட்டயும் சாரி சொல்லிடுறேன். நீயும் என்னை மன்னிக்கனும்.”

“ச ச. என்கிட்ட எதுக்கு சாரிலாம். உன் மேல கோவம் இருந்தது உண்மை தான். சமி இங்க வந்து மூணு மாசம் தான் ஆகுது. அதுக்குள்ள உன்னால சமியை பத்தி புரிஞ்சுக்குறது கஷ்டம் தான். ஆனால் நீ சமிக்கு எந்த வாய்ப்பு குடுக்கலை அவ பக்கம் ஞாயத்தை சொல்றதுக்கு. அது மட்டும் தான் எனக்கு வருத்தம். வாசு மாமா ஒரு வாட்டி பார்ட்டில குடிச்சுட்டு வந்தார். அதுவும் ஒரு கிளாஸ் தான். அதுக்கே சமி மாமாட்ட ஒரு வாரம் பேசலை. அதலாம் உனக்கு தெரிஞ்சிருக்காது. சமிக்கு லிக்கர்னாலே அலர்ஜி.”

“சாரி ஆகாஷ். ஒன்ஸ் அகெயின்(again) சாரி யுகி.”

“ப்ச் விடுங்க. பாஸ்ட் இஸ் பாஸ்ட். முடிஞ்சது பேசி ஒன்னும் ஆக போவதில்லை. இனிமே தப்பு நடக்காமல் பார்த்துக்கலாம்.”

“கண்டிப்பா யுகி. இந்த மாதிரி இனிமே நடக்காது.”

“சரி வந்து ரொம்ப நேரமாச்சு. வீட்டுக்குப் போகலாமா??”

“சரி ஆகாஷ். போகலாம்.” மூவரும் வெளியே வந்தனர்.

“யுகி அப்போ இனிமேல் எங்க கூடவே வரியா காலேஜ்கு??”

“இல்லை நந்து. ஆர்த்தி இருப்பா. தேவையில்லாம பிரச்சனை வரும். நான் ஆகாஷ் கூடவே போய்க்கிறேன்.”

“அவளை விடு யுகி. நீ ஏன் அவளை மட்டும் பார்க்கிற?? நானும் சஞ்சயும் இருக்கோம்ல!!”

“என்னால இன்னொரு பிரச்சனை வேண்டாம் நந்து. அதான் நாம காலேஜ்ல பார்த்துக்குறோம்ல அது போதும். இல்ல நீங்க எங்க வீட்டுக்கு வாங்க. நாம் நல்லா என்ஜாய் பண்ணலாம். ஆர்த்தி இருக்குற இடத்துக்கு நான் வரலை.”

“ஓகே யுகி. டேக் கேர்.” என்று கூறிவிட்டு ரிஷி காரில் ஏற சென்ற பொழுது அவனுக்கு சஞ்சயிடம் இருந்து கால் வந்தது. அதைக் கேட்டவுடன் ரிஷிக்குப் பயங்கர அதிர்ச்சி. அவனின் முக மாற்றத்தைப் பார்த்த சமியும் ஆகாஷும் அவனிடம் விஷயத்தை கேட்க,”என்ன ஆச்சு ரிஷி??”

“அப்பாவ யாரோ கிட்னாப் பண்ணிட்டாங்களாம்.”

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
0
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்