Loading

கஞ்சனடா கவிஞ்சா நீ!!
அத்தியாயம் – 28 ( 28.2 )
( நிறைவு அத்தியாயம் )

மயக்கத்திலிருந்த பத்மா  தன் கணவரின் குரல் கேட்டு முழித்தவர் , அங்கே அவர் பேசிக்கொண்டிருந்ததை எல்லாம் கேட்டு கோவத்தில்  பளாரென்று அறைந்தவர் 

” ஏன்யா இப்படி பண்ண ? எவ்ளோ ஆர்வமா நா பண்ணயிருந்த ஆராய்ச்சிய பத்தியும் அதுல வர கான்செப்ட்டான ஸ்டெம் செல்ஸ் வச்சு ஒரு உடலுறுப்பையே உருவாக்குறத பத்தியும் , அத மனித உடம்புக்குள்ள சேர்க்கிறது பத்தியும் அவ்ளோ தெளிவா விளக்குனேன். என் புருஷன்குற நம்பிக்கைல தான உன் கிட்ட இதெல்லாத்தையும் பகிர்ந்துக்கிட்டேன். அதுமட்டுமா இந்த ஆராய்ச்சிய மேற்கொண்டா அது மனிதவுயிர்களோடு விளையாடுற மாதிரின்னு சொல்லி ஜெனெடிக் இன்ஜினியரிங் அப்ரைசல் கம்மிட்டி ( ஜி.ஈ.ஏ.சி ) அதுக்கு தடை விதிச்சிட்டாங்கன்னு சொல்லி உன் கிட்ட என் கனவெல்லாம் நினைவாகாம போயிடுச்சுன்னு அழுதேனே … நீ கூட எனக்கு ஆறுதல் சொன்னியேயா … ஆனா என் முதுகுக்கு பின்னாடி இப்படி என் ஆராய்ச்சிய திருடுனதும் இல்லாம என்னை மாதிரி அனாதை பசங்க மேல இப்படி அத பிரயோகிச்சு பார்த்திருக்கியே … நீ எல்லாம் ஒரு மனுஷனா ? த்து .. அறிவு திருடா …பச்ச துரோகி …  ”  என்று ஆதியின் மூஞ்சிலே காரி உமிழ்ந்தார்.

அதில் கோவம் கொண்ட ஆதிகேசவன் ” ஏய் போதும் நிறுத்துடி. நானும் பார்த்துகிட்டே இருக்கேன் ரொம்ப தான் துள்ளுற. எதே நா அறிவுத்திருடனா ? அடியே இன்னைக்கி நீ படிச்சு பட்டம் வாங்கி உன் பெயருக்கு பின்னாடி பையோடெக் இன்ஜினியர்னு போட்டுக்குறேன்னா அது நா உனக்கு போட்ட பிச்சைடி. 

ச்ச இது எல்லாத்துக்கும் காரணம் என் அப்பனும் , ஆத்தாளும் தான். அப்பவே அந்த ஒன்னுத்துக்கும் உதவாத அனாதை ஆசிரமத்த வித்து அதுல வர காசுல நல்லா ராஜா மாதிரி வாழலாம்னு சொன்னா, அதெல்லாம் முடியாது அந்த ஆசிரமம் எங்க உசுரு அத எல்லாம் விக்க முடியாதுன்னு சொல்லிடுச்சுங்க. சரி அது கூட பரவால்ல , என் இஷ்டத்துக்கு ஒரு பணக்கார பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணி லைப்ல செட்டில் ஆகலாம்னு பார்த்தா , என்னை அதையும் பண்ண விடாம , போயும் போயும் ஒன்னுத்துக்கும் உதவாத இந்த அனாதைய என் தலையில கட்டிவச்சிட்டானுங்க. சரி நமக்கு விதிச்சது இதுதான்னு மனச தேத்திக்கிட்டு உன்னைய படிக்க வச்சு , ஒரு நல்ல வேலையில உட்கார வச்சேன் . நீ  சம்பாதிச்சு எனக்கு சொத்து சேர்த்துகுடுப்பேன்னு பார்த்தா,  நீ சம்பாதிக்கிற பாதி காச அந்த அனாதை ஆசிரமத்துல இருக்கறதுங்களுக்கே தண்ட செலவு செஞ்ச. 

இது எல்லாத்துக்கும் முடிவு கட்டணும்னு தான் , நா அந்த போலி ஜோசியன போய் பார்த்து எங்க அப்பா , அம்மா மூளைய பிரைன் வாஷ் பண்ணி , எப்படியாச்சும் அந்த அனாதை ஆசிரமத்த விக்க வச்சிருன்னு சொல்லி , அப்படியும் அவுங்க ஒத்துக்கலேன்னா , ஒரு வசிய மருந்த அவன் கையில குடுத்து , அத என் அப்பன் மேல யூஸ் பண்ண சொன்னேன். அந்த பிராடு பயலும் நா சொன்னதுக்கு எல்லாம் மண்டைய மண்டைய ஆட்டிக்கிட்டு , என்னை பெத்ததுங்க கிட்ட அப்படியே பிளேட்ட திருப்பி போட்டு என்ன என்னமோ பீலா விட்டுருக்கான். அப்புறம் விசாரிச்சதுல தான் தெரிஞ்சுது அவன் ஒரு நரபலி காங் தலைவன் , அதுவும் எங்க ஆசிரமத்த பத்தி தெரிஞ்சுக்கிட்டு எங்க மூலமா குழந்தைங்கள நரபலி குடுக்க பிளான் பண்ணியிருக்கான். இது தெரிஞ்சவுடனே அவன் சட்டைய பிடிச்சு ஏன்டா என்னை ஏமாத்துனனு சண்ட போட்டேன். ஆனா அவன் நரபலியில அவனுக்கு நிறையா காசு வரதாவும் , அதுல எனக்கும் ஷேர் குடுக்குறேன்னு சொல்லி என்னை பிரைன் வாஷ் பண்ணான். நானும் அவன் சொன்னத நம்பி , அதுக்கு ஒத்துக்கிட்டேன். அவனும் என் கிட்ட சொன்ன மாதிரியே என் அப்பன வசியம் பண்ணி , அவன் நினைச்சத சாதிக்க பாத்துருக்கான். எல்லாம் நல்லா தான் போயிட்டு இருந்துச்சு , ஆனா எப்ப இந்த கௌரி சனியன நரபலி குடுக்க என் அப்பன் தத்தெடுத்தானோ அன்னைக்கு பிடிச்சது சனியன். இது வந்த நேரம் , அந்த நரபலி ஜோசியன போலீஸ் புடிச்சிட்டு போயிடுச்சு. இந்த அதிர்ச்சியில என் அப்பனும் மேல போய் சேர்ந்துட்டான். சரி என் அப்பா தான் இல்லையே , என் அம்மா கிட்ட  பேசி சொத்தயெல்லாம் என் பெயர்ல மாத்திக்கிட்டு அப்படியே அந்த ஆசிரமத்தையும் வித்துரலாம்னு ஐடியா பண்ணா. எங்கம்மா இந்த கிழவி பேச்ச கேட்டு சொத்தயெல்லாம் இதோ நிக்குதுங்களே இந்த தண்டங்க மேல எழுதி வச்சிருச்சு. 

அப்போ எனக்கு வந்த ஆத்திரத்துக்கு இதுங்க ரெண்டையும் அப்படியே கொன்னு புதைக்கணும் போல இருந்துச்சு. ஆனா சொத்து பூரா இதுங்க பெயர்ல இருந்ததுனால என்னால நேரடியா எதுவும் பண்ண முடியல. சோ இதுங்க மேலயிருந்த வன்மத்த வேற வழியில தீர்த்துக்க நினைச்சேன்.  அதுக்கு தான் இந்த பத்மாவ ரெண்டு பொண்ணுங்க வளர்க்கணும்னா நிறையா பணம் வேணும்னு பிரைன் வாஷ் பண்ணி , இதுங்கள பிரிஞ்சு குஜராத்துக்கு வேலைக்கு அனுப்பி வச்சேன். அதே நேரம் நானும்  அதிகமா பணம் சம்பாதிக்க , ப்ரோபஸ்ஸர் வேலையோட சேர்த்து ஸ்டாக் மார்க்கெட்ல இன்வெஸ்ட் பண்ணேன். 

எல்லா நல்லா தான் போயிட்டு இருந்துச்சு , ஆனா திடீர்னு ஒரு நாள் எங்கம்மா என் கிட்ட பசங்க கூடயிருந்து கவனிச்சுக்க சொல்லி சண்டபோடுறதுக்காக நா தங்கியிருந்த ஹாஸ்டலுக்கு வந்துச்சு. அந்த நேரம் பார்த்து நா ஹாஸ்டல்ல வேறயில்ல . அப்போ என் ரூமுக்குள்ள போய் , என் கப்போர்ட் அழுக்கா இருக்குறத பார்த்துட்டு அத கிளீன் பண்ண போயிருக்கு. அப்போ தான் அந்த சாமியாரோட சேர்ந்து நா எடுத்துக்கிட்ட ஒரு பழைய போட்டோவ பார்த்து என் மேல சந்தேகம் வந்து , என்னை புடிச்சு கத்த ஆரம்பிச்சிருச்சு. 

நானும் எங்க அத வெளிய விட்டா உண்மைய வெளியில சொல்லிடுமோன்னு பயந்து அத கொன்னுட்டேன். ஆனால் ஊருக்கு முன்னாடி உடம்பு சரியில்லாம இறந்ததா பொய் சொல்லிட்டேன்.இந்த உண்ம என்னை தவிர வேறயாருக்கும் தெரியாது. ஸ்யபாடா ஒரு வழியா என் அம்மாவ போட்டு தள்ளியாச்சுன்னு நிம்மதியா இருந்தேன். அடுத்தது என்ன பண்ணலாம்னு நினைக்கும் போது தான் , இந்த கௌரி எம்.பி.பி.எஸ் படிக்க போறேன்னு சொன்னா. சரி நானும் இவ மூலமா காசு சம்பாதிக்கலாம்னு நினைச்சேன், ஆனா இவளும் அவ சம்பாத்தியத்த எல்லாம் அந்த அனாதை ஆசிரமத்துலையே கொட்டுனா. சரி இவ தான் இப்படி இருக்கா , இந்த வந்திக்கு அந்த அனந்தரூபன கல்யாணம் பண்ணி வச்சு , அது மூலமா பெரிய வீட்டு சம்பந்தம் கிடைக்கும்னு பார்த்தா , இவ என்னடானா என் கிட்ட ரெண்டு வருஷம் டைம் கேட்டா. சரி நானும் விட்டு பிடிப்போம்னு பார்த்தா , அந்த ரெண்டு வருஷ கேப்புல , இவ  ஃபூட் சேப்டி ஆஃபீஸர் ஆகிட்டா , இந்த அமுதனும் டிடெக்ட்டிவ் ஆகி , புதுசா ஒரு பிரைவேட் டிடெக்ட்டிவ் ஏஜன்சியே ஆரம்பிச்சுட்டான். சரி தலையெழுத்துனு நானும் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன். 

அந்த நேரத்துல தான் இதோ நிக்குதே இந்த நன்றி கெட்ட ஜென்மம் அதிரூபன் மூலமா என் ரீசர்ச்ச தொடங்குறதுக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சுது. நானும் அந்த வாய்ப்ப பயன் படுத்திகிட்டு நா பாட்டுக்கு என் வேலைய பார்த்துகிட்டு இருந்தேன்.  தேவயில்லாம அந்த ரூபிய கடத்துனது தான் தப்பா போச்சு. இதுல கொடுமை என்னனா , அந்த ரூபி , இந்த அனந்த ரூபனோட அத்தை பொண்ணாம். ஜாதி மாறி கல்யாணம் பண்ணவங்கன்னு அந்த காலத்துல அவுங்க அப்பன் அவன் அத்தைய அடிச்சு துரத்தியிருக்கான். கடைசியில இந்த ரூபி பாக்கிறதுக்கு அப்படியே அந்த ரூபனோட அத்தை மாதிரி இருக்கறத பார்த்து , அவ தான் அவன் அத்தை பொண்ணுனு கன்பார்ம் பண்ணிக்கிட்டு அவ மேல ஆசைய வளர்த்தவன் , அவள மட்டும் ரீசர்ச் பண்ண யூஸ் பண்ணிக்க கூடாதுன்னு என் கிட்ட சண்டைக்கு வந்தான். நா அதுக்கு ஒத்துக்கல. 

என் மேலேயிருந்த கோவத்துல ,  அந்த அனந்தரூபன் நித்யாவ பார்த்து அவ கிட்ட எல்லா உண்மையும் சொல்லிட்டான். அந்த நித்யாவும் நேரா என் கிட்ட வந்து சண்ட போட ஆரம்பிச்சவ , இந்த உண்மையெல்லாம் வெளிய சொல்ல போறேன்னு என்னை மிரட்டுனா . அதான் வச்சேன்ல ஆப்பு … ” என்று ஆதிகேசவன் குரூரமாக சிரிக்க , அவன் கன்னத்தில் பளாரென்று ஓர் அறை அறைந்த வந்திதா 

” ச்சி நீ எல்லாம் ஒரு அப்பாவா ? இப்படி காசு காசுன்னு காசு பின்னாடி அழைஞ்சு உன் குடும்பத்தையே பழிவாங்கி இருக்க… ச்சி உன்னயெல்லாம் அப்பான்னு சொல்லவே எனக்கு வாய் கூசுது .. சொல்லு டா … நித்யாவ என்ன பண்ண ? ” என்று ஆக்கிரோஷமாக கத்த , அவளை தள்ளிவிட்ட ஆதி , ” சும்மா என்னை மட்டும் குறைசொல்லாத வந்தி. ஏதாச்சும் ஒரு விஷயத்துலயாச்சும் நீயும் , இதோ உன் கூட நிக்குற என் பொண்டாட்டியும் , அந்த கௌரியும் என் பேச்ச கேட்டுருக்கீங்களா , இல்லைல … என் குடும்பமே என் பேச்ச கேக்கலன்னு என் மேலயே எனக்கு வெறுப்பு வர ஆரம்பிச்சிது. அதுக்காக தான்  இந்த மொத்த உலகமும் என் பேச்ச மட்டும் கேக்குற மாதிரி செய்யணும்னு நினைச்சேன். அதோட ஒரு டீஸரா தான் , இந்த நித்யா மூளைக்குள்ள ஒரு ச்சிப்ப பொருத்தி பார்த்தேன். அந்த ச்சிப்பும் நா எதிர் பார்த்த மாதிரி அவ மூளையில வர அனலாக் சிக்னல்ஸ் எல்லாம் என் கம்ப்யூட்டருக்கு டிஜிட்டல் சிக்னல்ஸா மாத்தி குடுத்துச்சு , அதே மாதிரி நாஎன் கம்ப்யூட்டர்லயிருந்து கமண்ட் பண்ண டிஜிட்டல் சிக்னல்ஸ் எல்லாம் அவ பிரைன்ல அனலாக் சிக்னல்ஸா மாத்தி குடுத்துச்சு. அந்த ச்சிப்ப  வச்சே அவ மூளைய ஹாக் பண்ணி எனக்கு தேவையானத எல்லாம் சாதிச்சுக்கிட்டேன். இது தெரியாம பாவம் அந்த பொண்ண கொன்னுட்டிங்களே டா லூசு பசங்களா ” என்று ஆதிகேசவன் நக்கலாக சிரிக்க துவங்கினான்.

இச்செய்தியை கேட்டு அனைவரும் அதிர்ந்திருக்க , ஸ்ரீஜனுக்கோ தன் முட்டாள்தனத்தால் தன்னவளை தானே கொண்றுவிட்டோமே என்ற குற்றவுணர்ச்சி இதயத்தை கிழிக்க , கோவம் முழுவதும் ஆதிகேசவனின் புறம் திரும்ப , அவனை ஓங்கி மிதிக்க போக , அதை தடுத்த ஆதியோ ” ஏய் இதுக்குமேல என் மேல ஒரு அடி விழுந்துச்சு, மவனே அந்த ரூபியும் , ரூபனும் நேரா பரலோகம் போயிடுவாங்க பாக்குறியா பாக்குறியா ?? ” என்று நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு சண்டைக்கு வர , சரியாக அந்நேரம் பார்த்து , முன்வாசல் வழியாக உள்ளே நுழைந்த கதிரும் கதிரின் தந்தை சிவபிரகாசமும் , கை கால்கள்  கட்டப்பட்ட நிலையில் அத்வேய்தனை அவர்கள் கையோடு தூக்கிக்கொண்டு வந்தவர்கள் , ஆதிகேசவனை பார்த்து கண்ணடித்தனர்.

” மை சன்  அமுதா … நீ சொன்ன வேலைய பக்காவா செஞ்சிட்டேன்பா. இந்த கேடுகெட்டவன் அந்த ரூபிபொண்ணையும் மத்த பசங்களையும் அவன் லேப்லயிருந்து கடத்திட்டுவந்து என் ஹோட்டல் குடோன்ல  தான் வச்சிருந்தான். கூடவே இந்த பயலையும் அவுங்களுக்கு பாடிகார்டா வச்சிருந்தான். அதான் இவன ரெண்டு தட்டு தட்டி , அந்த பசங்கள காப்பாத்தி ஹாஸ்பத்திரில சேர்த்துட்டு வந்து அப்படியே இந்த பயல உன் கிட்ட ஒப்படைச்சிட்டு போலாம்னு வந்தேன். ” என்று சிவபிரகாசம் முடிக்கும் முன்பே , 

” டேய் பச்ச துரோகி .. எதிரிக்கு எதிரி நண்பன்னு நினைச்சு தானடா. அந்த பசங்கள உன் குடோன்ல தங்க வச்சேன். ஆனா நீ இப்படி என் முதுகுல குத்திட்டியேடா துரோகி … ” என்று ஆதி அவரது சட்டையை பிடித்து சண்டைக்கு போக , அமுதனோ ஆதியை பார்த்து நக்கலாக சிரித்தவன் 

” ஏன்யா நீ எத்தன பேர் முதுகுல குத்தியிருக்க … அதான் அதோட வலி தெரியணும்னு நானும் சிவா அப்பாவும் உன் கூட ஒரு கேம் ஆடனோம். ” என்றவன் , சிவபிரகாசத்தை கட்டிக்கொள்ள , சிவபிரகாசமும் ” அப்படி சொல்லு மை சன். இந்த மாதிரி ஈன பிறவிய நா வாழ்க்கைலயே பார்த்தது இல்லடா. ஸ்யபா இவன நம்ப வைக்கறதுக்காக , ஏதோ ஜாதிக்கு அகைன்ஸ்டா இருக்க மாதிரி சீன் போட்டு , மார்க் ஆன்டனி ரேஞ்சுக்கு வில்லன் டயலாக் பேச வச்சிட்டியே மை சன் … ” என்று அவனை கட்டிக்கொண்டார்.

இவர்கள் இருவரும் பேசிக்கொள்வதை வைத்தே , தன்னை அவர்களது சூழ்ச்சியில் வீழ்த்தவே அவர்கள் அது போன்று நடித்திருக்கிறார்கள் என்று தெரிந்துக்கொண்ட ஆதிகேசவன் அவர்களை அடிக்க பாய , அவனை பின்னிருந்து பிடித்த கதிர் ” தங்கச்சி இவ்ளோ நாள் உன் முகத்துக்காக தான் இந்தாள விட்டு வச்சிருந்தோம். ஆனா இதுக்கு மேலையும் முடியாது … சொல்லு வந்தி இந்தாள என்ன பண்ணலாம் ? ” என்று அவன் வந்தியை பார்த்து கேட்க , வந்தியோடு சேர்ந்து அனைவரும் ஒருசேர அவனை கொன்று விடலாம் என்று கூற , அமுதன் பத்மாவை ஒரு பார்வை பார்த்தான். பத்மாவும் அதற்காகவே காத்திருந்தவர் போல் 

” இல்ல … இவன அவ்ளோ ஈஸியா சாகவிடக்கூடாது. வாழுற ஒவ்வொரு நிமிஷமும் அந்த பசங்க அனுபவிச்ச அதே வலிய இவனும் , அதோட சேர்ந்து இந்த அத்வேய்தனும் அனுபவிக்கனும் … ” என்க , 

ஸ்ரீஜனோ ” ஆமா மா … இவனால என் நித்யா என்ன சித்திரவதை அனுபவிச்சாலோ அதையே இவனும் அனுபவிக்கனும் ” என்க , அவர்கள் இருவரும் கூறியது போலவே , ஆதிக்கும் , அத்வேய்தனுக்கும் தண்டனை வழங்கப்பட்டது.

அவர்கள் இருவரது மூளையிலும் நித்யாவிற்கு பொருத்தப்பட்ட அதே ச்சிப்பை பொருத்தியவர்கள் , கணினியில் ஒரு இரண்டு நாட்களுக்குள் ஒவ்வொரு உடல் உறுப்புகளாய் செயழிலப்பது போல் கோட் செய்தனர். 

அந்நேரம் பார்த்து மயக்கத்திலிருந்து முழித்த அத்வேய்தன் , அமுதனை நோக்கி ” ஏன்டா அம்பி , நீ நம்மவா தான , ப்ளீஸ் டா அம்பி , நேக்கு ரொம்ப பயமா இருக்குதுடா. என்னை எப்படியாச்சும் காப்பாத்துடா அம்பி , நீயும் நானும் ஒரே ஜாதிடா ” என்று உயிர் பிச்சைக்கு மன்றாட , ஆனால் அமுதனோ அவனை நெருங்கி , அவன் கன்னத்திலே ஓங்கி பளாரென்று ஒரு அறை அறைந்தவன்

” டேய் யார பார்த்து ஒரே ஜாதின்னு சொன்ன ? பெத்த புள்ளையவே அவன்  திருநங்கையா மாறிட்டாங்குற ஒரே காரணத்துக்காக வீட்டுக்குள்ள அடைச்சு வச்சு சித்திரவதை பண்ண நீயெல்லாம் ஒரு அப்பனா த்து … ஹான் அப்புறம் என்ன சொன்ன , நீயும் நானும் ஒரே ஜாதியா ? டேய் நீ மிருக ஜாதி , நா மனுஷ ஜாதிடா … ஆமா வேற ஜாதிக்காரங்க உன்ன தொட்டா , பெரிய ஆச்சாரம் பேசி தலையில தண்ணி உத்திப்பல்ல … இருடா மவனே … ” என்றவன் , அருகிலிருந்த ஒரு வாலியில் தண்ணீர் நிரப்பியவன் , அதை அத்வேய்தன் தலையிலும் , ஆதி தலையிலும் ஊற்றிவிட்டு , அவர்கள் மூளையிலிருந்து ச்சிப்பின் வோல்டேஜை அதிகரிக்க , நொடி பொழுதில் அவர்கள் மூளையில் பலவித மாற்றங்கள் ஏற்பட்டு மூளை செயலிழக்க , அதை தொடர்ந்து நுரையீரல் , கல்லீரல் , குடல் என்று ஒவ்வொரு உறுப்பாக உள் இரத்தப்போக்கு ஏற்பட்டு , வலியில் துடிக்க துவங்கினர்.

 

மரணம் தங்களை இப்போதே தழுவிக்கொள்ளாத என்று ஏங்கி தவிக்க துவங்கினர். வலியில் கதறி அழத்துவங்கினர். அது மட்டுமல்லாது நேரம் கடக்க கடக்க ஒவ்வொரு உறுப்பாய் செயழிக்க துவங்க , உடலிலிருந்து ஒவ்வொரு பாகமாய் யாரோ உயிருடன் வெட்டி எடுப்பது போன்ற ஓர் வலியை அனுபவிக்க துவங்கினர்.

 

 வேலை முடிந்ததும் அமுதன் அனைவரையும் கூட்டிக்கொண்டு அவ்விடத்தை விட்டு நகர , சரணும்  ,கௌரியும் ஆதியை நெருங்கியவர்கள் , அவர்கள் பங்கிற்கு அவன் முகத்திலேயே காரி உமிழ்ந்துவிட்டு சென்றனர்.

இரண்டு நாட்களுக்கு பின் ….

” ஊருக்கு ஒதுக்குபுறமாக இருக்கும் ஒரு பங்களாவிலிருந்து பாதி அழுகிய நிலையில் இரண்டு உடல்கள் கண்டெடுக்க பட்டன. பிரேத பரிசோதனைக்கு கூட உட்படுத்த முடியாத நிலையில் அவ்வுடல்கள் இருந்ததாலும் மேலும் , அவ்வுடல்களிலிருந்து ஒரு ச்சிப் கண்டுபிடிக்க பட்டிருந்ததால், அவர்களை தீவிரவாதிகள் என்று கருதி தமிழக போலீஸார் அனாதை பிணங்களை யாருமில்லா ஓர் புதிய மயானத்தில் எரித்துவிட்டனர். ” என்ற தலைப்பு செய்தி தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருக்க , அதை சுற்றி நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த அமுதன் குடும்பத்தினர் மனதில் நிம்மதியும் , மகிழ்ச்சியும் பரவியது.

ஆறு வருடங்களுக்கு பின் ….

நித்யா உணவகம் 

” யாருக்கு என்ன வேணுமோ கூச்சப்படாம கேட்டு வாங்கி சாப்பிடுங்கோ … ” என்று கையில் உணவு பாத்திரத்துடன் பரிமாறிக்கொண்டிருந்த அமுதனை பார்த்து வாயை பிளந்த வந்திதா , தன்னருகில் நின்றிருந்த ஏழு வயது நிரம்பிய தன் மகன் நித்ரனிடம் ” பாருடா வருஷத்துல எல்லா நாளும் கஞ்சகருமியா இருக்க உன் அப்பா , இன்னைக்கு மட்டும் ஏதோ வள்ளல் பரம்பரை மாதிரி சீன் போடுறான் ” என்று கேலி பேச , பதிலுக்கு நித்ரனோ ” எஸ் மம்மி .. இந்த அப்பா சரியான மைஸர். இன்னைக்கு நித்யா ஆண்ட்டிக்கு சாமி கும்பிட போறோம் புதுசா டிரஸ் வாங்கி தாப்பான்னு கேட்டதுக்கு , போன வருஷம் ஆண்ட்டிக்கு சாமி கும்பிடும் போது போட்ட அந்த டிரஸ்ஸே நல்லா தான இருக்கு , அதையே போட்டுக்கோன்னு சொல்லிட்டாரு. ” என்று முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு அமுதனை புகார் செய்ய , அவனருகில் நின்றிருந்த அவனது ஆறு வயது தங்கை வான்மதியோ ” ஏன்டா அப்பாவ குறை சொல்லுற. அப்பா என்ன சொல்லியிருக்காரு … என்னைக்குமே நமக்கு எது நெஸிசிட்டியோ அதுக்கு மட்டும் தான் செலவு பண்ணனும், அப்படி நாம சேவ் பண்ற மனில நம்ம ஹோம்லயிருக்க பசங்களுக்கு ஹெல்ப் பண்ணலாம்னு சொன்னாருல. அப்புறம் ஏன் அப்பாவ மைஸர்னு  சொல்லி டீஸ் பண்ற. போ மம்மி உன்னால தான் அண்ணாவும் அப்பாவ டீஸ் பண்றான் ” என்று தன் தந்தைக்காய் இருவரிடமும் சண்டைக்கு சென்ற அவ்வாண்டை பின்னிருந்து தூக்கிக்கொண்ட தேவஸ்வரூபி  ”  அப்படி சொல்லுடா என் செல்ல குட்டி.உன் மம்மிக்கு வேற வேலையேயில்ல. எப்ப பார்த்தாலும் மாம்ஸ திட்டிகிட்டே இருக்க வேண்டியது ” என்று தன் பங்கிற்கு அமுதனுக்கு வக்காளத்து வாங்கினாள்.

” ஐயடா யாரு மாம்ஸ யாரு சொந்தம் கொண்டாடுறது ? ஏய் ரூபி அப்படி ஓரமா போடி. என்னைக்கு அமுதன் மாம்ஸ் எனக்கு தான் ” என்று அவளை இடித்துக்கொண்டு கௌரி வந்து நிற்க , இவர்களையெல்லாம் முந்திக்கொண்டு அமுதனை நெருங்கிய வல்லி பாட்டி ” ஏன்டா காலைலயிருந்து இப்படி சுத்தி சுத்தி ஓய்வே இல்லாம வேல பார்த்துகிட்டு இருக்கியே. அந்த சாத குண்டான என் கிட்ட குடுத்துட்டு நீ போய் செத்த நேரம் ரெஸ்ட் எடு போ … ” என்று அவனிடம் பாசத்தை லிட்டர் கணக்கில் பொழிந்தார்.

இதை அனைத்தையும் சற்று தூரத்தில் உட்கார்ந்திருந்த  அனந்தரூபன்  ” பாருடா இங்க புருஷன்னு ஒருத்தன் உட்கார்ந்திருக்கானே. அவன வந்து கவனிப்போன்னு ஏதாச்சும் அக்கரையிருக்கா ? அத விட்டுட்டு இப்போ தான் மாமா மாமான்னு அவனுக்கு வரிஞ்சு கட்டிக்கிட்டு பேசிகிட்டு இருக்காளுங்க ” என்க , பதிலுக்கு சரணோ 

” அட நீ வேற சகல , குமரிங்க தான் இப்படி அவன் மேல பாசத்த புழியுராளுங்கனா , அங்க பாரு அந்த கிழவி கூட அவன தான் கண்டுக்குது. காலைலயிருந்து இந்த வாண்டுங்கள சமாளிச்சிகிட்டு இருக்கோமே, நம்மள ஒரு ஈ , காக்கா கூட கண்டுக்க மாட்டேங்குது ” என்று சரண் புலம்பி தள்ள , அவன் கூறியது போலவே அவனது மகளும் , மகனும் ஒருபுறம் அவனை ஒருவழி செய்துக்கொண்டிருக்க , மறுபுறம் ரூபன் , ரூபியின் பிள்ளைகளும் ரூபனை போட்டு பாடாய் படுத்தி எதுத்துக்கொண்டிருந்தனர்.

எது பிள்ளைகளா ? ஆம் மூன்று ஜோடிகளும் ஆளுக்கு ஒரு குழந்தை பெற்றுக்கொண்டதை தவிர்த்து , தங்களால் முடிந்தளவு ஆசிரமத்திலிருந்து ஒன்று , இரண்டு குழந்தைகளை தத்தெடுத்து தங்கள் பிள்ளைகளாய் வளர்த்துக்கொண்டிருக்கின்றனர்.

இம்மூன்று ஜோடிகளையும் கண்ணில் பொங்கும் ஆனந்த கண்ணீருடன் பார்த்துக்கொண்டிருந்த பத்மா , தன்னருகில் நின்றிருந்த அதிரூபியிடம் அவரது சித்தப்பா வெங்கடராமரை பற்றி விசாரித்துக்கொண்டிருந்தார். 

ஆம் அதிரூபன் தன்னுடைய அடையாளத்தை மீட்டெடுத்துக்கொண்டவர் ,  திருநங்கையாய் தன் சொந்த உழைப்பில் முன்னேறி ,  இன்று நித்யா பெயரில் உணவகம் ஒன்றை துவங்கி அதில் தன்னை போன்ற ஆதரவற்று குடும்பத்தால் தூக்கி எறியப்பட்ட பல திருநங்கைளை இணைத்துக்கொண்டு உணவகத்தை சிறப்பாக நடத்திக்கொண்டிருக்கிறார்.

தன் மகள் இறப்புக்கு தானே ஓர் பெரிய காரணமாகிவிட்டேன் என்னும் குற்ற உணர்ச்சியில் தன் சொத்துக்கள் அனைத்தையும் நித்யா பெயரில் அமுதன் துவங்கிய அனாதை ஆசிரமத்திற்கு எழுதி வைத்து விட்டு கைலாசம் சென்றுவிட்டதாய் அதிரூபி தன் சித்தப்பாவை பற்றி கூறிக்கொண்டிருந்தவர் , நித்யாவை நினைத்து வருந்தினார்.

அப்போது தான் ஆசிரம குழந்தைகளுக்கு உணவு பரிமாறி விட்டு அமுதன் ஓர் நாற்காலியில் சோர்ந்து அமர , அவனது அலைபேசிக்கு ஓர் அழைப்பு வந்தது. அதை ஏற்று காதில் வைத்தவனுக்கு , எதிரில்

” சார், நாங்க ஸ்ரீஜன் சார்ர காண்டாக்ட் பண்ண ட்ரை பண்ணோம். ஆனா அவர் அவரோட பொண்ணு கூட பிஸியா இருக்கிறதா சொல்லி எங்கள அவாய்ட் பண்ணிகிட்டே இருக்காரு சார் ” என்க , பதிலுக்கு அமுதன் ஏதோ பேச வருகையில் , அவனது அலைபேசியை பறித்த ஸ்ரீஜன் ” சாரி என் நித்யா இடத்துல சினிமால நடிக்க கூட நா வேற ஒரு பொண்ண விடமாட்டேன். இனிமே இப்படி கால் பண்ணி டிஸ்டர்ப் பண்ணாதிங்க ” என்றவன் அழைப்பை பட்டென்று துண்டித்து விட்டு நிமிர , அங்கோ அவனது ஆறு வயது பெண்பிள்ளை அவனை நோக்கி ஓடி வந்து அவன் கழுத்தை கட்டிக்கொண்டு கதை பேச , பதிலுக்கு ஸ்ரீஜனும் ” நித்திமா நித்திமா ” என்று அக்குழந்தையை கொஞ்ச , அவனின் நிலையை கண்டு கலங்கிய அமுதன் 

” ஸ்ரீஜா .. நித்யா இஸ் நோ மோர். அவளையே நினைச்சு நீ இப்படி கல்யாணம் பண்ணிக்காம இருக்கறத பார்க்க எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்குடா. வார்த்தைக்கு வார்த்தை உன் நித்யா உன் நித்யானு சொல்லுரல்ல , அவ மேலயிருந்து நீ இப்படி வாழுறத பார்த்து அவளும் கஷ்டபடுவா ” என்று அமுதன் ஸ்ரீஜனுக்காய் பேச , ஆனால் ஸ்ரீஜனோ ” யாருடா சொன்னா என் நித்யா இறந்துட்டான்னு ? இதோ பாருடா என் நித்யா தான் எனக்கு பொண்ணா பிறந்திருக்கா. என்னைக்கு என் செல்ல குட்டிய உன் ஆசிரமத்துல பார்த்தேனோ அன்னைக்கே முடிவு பண்ணிட்டேன் , என் பாப்பா தான் என் நித்யா. இனிமே கல்யாணம் அது இதுன்னு பேசுன அப்புறம் மண்டைய பிளந்துருவேன் … ஓடி போ ” என்று அமுதனை எச்சரித்தவன் , தன் தோளில் சாய்ந்து கதை பேசிக்கொண்டிருந்த அவனது வளர்ப்பு மகள் நித்யாவை ஆசை தீர கொஞ்சிக்கொண்டிருந்தவனின் கண்களிலும் தன்னவளின் நினைவில் அவனது காதலுக்கு சாட்சியாய் கண்ணீர் சுரந்திருந்தது.

அமுதன் – வந்திதா , சரண் – கௌரி , வல்லி பாட்டி , ஸ்ரீஜன் , அதிரூபி , அனந்தரூபன் – தேவஸ்வரூபி , பத்மாவதி என்று அனைவரும் நித்யாவின் படத்திற்கு முன் நின்று அவளுக்கு  ஆறாம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்திக்கொண்டிருக்க , அனைவரது கண்களும் மௌனமாய் கண்ணீர் வடித்துக்கொண்டிருந்தது.

அவர்களுடன் ஆதியின் ஆய்வுகூடத்திலிருந்து மீட்டெடுக்க பட்ட மாணவர்கள் பலர் இன்று மருத்துவராகவும் , பொறியாளராகவும் , வழக்கறிஞ்சராகவும் , காவல் துறை அதிகாரியாகவும் , தொழிலதிபராகவும் உயர்ந்திருக்கும் பலர், நித்யாவிற்கு அஞ்சலி செலுத்திவிட்டு , நித்யா பெயரில் அமுதன் குடும்பம் நடத்திக்கொண்டிருக்கும் மருத்துவமனைக்கும் , குழந்தைகள் காப்பகத்திற்கும் தங்களால் முடிந்த உதவியை செய்து விட்டு , அன்று நாள் முழுவதும் அங்கிருக்கும் இறைவனின் குழந்தைகளுடன் ஆடி , பாடி , விளையாடி, மகிழ்ச்சியாய்  நேரம் செலவழித்து விட்டு விடைபெற்றனர்.

ஆதிகேசவனின் சுயநலத்திற்கு ஏதும் அறியா அப்பாவி நித்யா இரையாக , அன்றே அமுதனும் , அவனது குடும்பமும் இது போன்ற சுயநலபேய்களின் பேராசைக்கு நித்யா போன்று மற்றொரு  உயிர் பலியாக கூடாது என்பதற்காய் , சமுதாயத்தில் ஆதரவற்ற பிள்ளைகளுக்கு குரல் குடுத்து , அவர்களுக்கு நடக்கவிருக்கும் அநீதிகளை கருவருக்கும் பணியை தொடர்ந்து கொண்டிருந்தனர் , தொடர்ந்து கொண்டிருக்கின்றனர் , தொடர்ந்து கொண்டேயிருப்பர்…

நாமும் அவர்களது இப்பணியில் தோள் கொடுத்து , நம்மை சுற்றியிருக்கும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு நம்மால் முயன்ற உதவிகளை செய்து , அவர்களை ஒதுக்காமல் ,  அரவணைப்போமாக …. 

 

ஆதரவும் அரவணைப்பும் 

அன்பாய் அன்புள்ளங்களை சூழட்டும் ..

 

நேசமும் நம்பிக்கையும் 

நித்தம் நம் கண்களில் ஒளிரட்டும் …

 

பிரிவினையும் பாரபட்சமும் 

பாரில் மறையட்டும் …

 

ஜாதிகள் இரண்டாகி போகட்டும் 

ஜாதிகள் இரண்டாகி போகட்டும்… 

ஒன்று மிருக ஜாதி 

மற்றொன்று மனித ஜாதி …

 

 மழலையின் சிரிப்பில் 

மனிதம் மலரட்டும் …

 

மனிதம் மலரட்டும் 

மனிதனும் வளரட்டும்  …

 

சுபம்…

உங்கள் கருத்துகளை ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கும் நான் உங்கள் பென்சிலு …

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
3
+1
0
+1
0

  உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

  4 Comments

  1. Archana

   டேய் பென்ஜில் 😍😍😍 அசத்தலா முடிச்சுட்ட டா, நல்லவேலை அந்த இளநி சொன்ன மாறி உன்னையே யாரும் சீவ விடாமே நீயே செதுக்கிட்ட😝😝😝😝 எவ்வளவு ட்விஸ்ட்டு கொடுத்து பிபி ஏத்த வெச்சு ஸ்ப்பாஆஆ😶😶😶 கடைசிலே என் ஜான்னோட ஜானே போட்டு தள்ளி அவன சிங்கிள் ஆசாமியா மாற வெச்சு மிடிலே…. எப்பா எவ்வளவு பிராசஸ் 🤣🤣🤣🤣 அடுத்த பார்ட்டு எழுதுற அதுல ஸ்ரீஜனுக்கு பேரா என்னையே போடுற😝😝😝😝😝 best wishes 2 u & all the best for ur future endeavors 😇😇😇😇🥰🥰🥰🥰🥰❤❤❤❤

  2. kanmani raj

   சமூகத்தில் நடக்கும் பல அவல நிலைகளையும் கதையின் உள்ளே இணைத்து அழகான ஒரு கதையை கொடுத்ததற்கு நன்றி சகி. ஒரு ரோலர் கோஸ்டர்ல போன மாதிரி ஏகப்பட்ட டிவிஸ்ட் கதை முழுக்க. அது கதையோட தொடக்கம் முதல் இறுதி வரை ஆர்வத்தோட படிக்க வைச்சது.

   நிறைய கதாப்பாத்திரங்கள் இருந்தாலும் எல்லாருக்கும் தேவையான அளவு வேலையும் வைச்சிருக்கீங்க. ஆதரவில்லாதவங்க நிலைமையை தெளிவா அழகா எடுத்து சொல்லியிருக்கீங்க. நம்பிக்கை வாழ்க்கையில ரொம்ப முக்கியமான விசயம். ஆனா கண்மூடித்தனமான நம்பிக்கைகள் பல பிரச்சனைகளை கொண்டு வரும். இதைத்தான் கதையில் இருந்து நான் எடுத்துக்கிட்ட கருத்து.

   மொத்தத்தில் அன்பு பாசம் இது எல்லாம் உறவுகளுக்கு அப்பாற்பட்ட ஒரு அழகான விசயம். அது நமக்கு கிடைக்கும் பட்சத்தில் வாழ்க்கையில் எதை வேணும்னா சாதிக்கலாம் என்பதை வலியுறுத்தும் கஞ்சனாடா கவிஞ்சன் இவன்..

  3. மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். மிகவும் திகிலாகவும் மர்மமாகவும் உணர வைப்பது போன்று அமைந்துள்ள தங்களின் எழுத்து நடையும், வசனமும். மிகவும் அசத்தல். பயமாகவும் அதே நேரம் ஆர்வமாகவும் அமைந்துள்ளது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.

  4. 9தானிய பொங்கல்

   கவிஞன்னா தாரள மனசு இருக்கனும்… இங்க கவிஞரோ காஞ்சனா இருகின்றாரார்.( கஞ்சனா நீ கவிஞ்சனா சொல் சொல்)

   ஆனாதை ஆசிரமத்துல வளர்ர குழந்தைகளின் மனநிலையை அழகா எடுத்து சொல்லி இருக்கீங்க…. பெற்றோர் இருந்தாலே வளர்வதில் எவ்வளவோ பிரச்சினைகள் வரும் போது… இப்படி ஆன்தை ஆசிரமத்தில் வளரும் குழந்தைகளை என்ன சொல்வது🥺🥺
   முதலில் பலிகுடுக்கவோ ஆராய்ச்சிக்கோ தேவை படும் இடத்தில் இவர்களுக்கே முதலிடம்😡

   காலம் மாறினாலும் ஆண் வாரிசு தான் வேணும்ங்குற எண்ணம் எப்போ மாற போகுதோ….

   மூட நம்பிக்கைகள்.. பலி குடுத்தால் தான் நல்லது நடக்கும்னு நம்புறதோ…..

   திருநங்கைகள் என்ன பண்ணுவாங்க அது கடவுளின் படைப்புக்களில் ஒருவர் அவர்களை ஒதுக்குவதோ….

   ( My MV….. அவங்களா திருந்தாமல் ஏதும் பண்ண முடியாதே)
   இதுனால் என்ன பிரச்சனைகள் வந்தது அவை முறியடிக்கப்பட்டதா….
   எப்படி முறியடிக்கப்பட்டது… என்பதை விறுவிறுப்பாகவும் அதோட காதலையும் கலந்து டுவிஸ்ட் மேல டுவிஸ்ட் வைச்சி…. கடைசி வரைக்கும் நம்ம BPஆ ஏத்தி விட்டு…. டுவிஸ்ட் ல கதை எழுதுன நம்ம பென்சிலுக்கு வாழ்த்துக்கள்