Loading

கஞ்சனடா கவிஞ்சா நீ!!
அத்தியாயம் – 24

ஸ்ரீஜனின் கூற்றில் கோவம் கொண்ட கௌரி , தன் நித்யாவையும் , சரணையும் துரோகிகள் என்று கூறியதற்கு அவனிடம் சண்டைக்கு செல்ல , ஆனால் ஸ்ரீஜனோ , சம்மந்தமே இல்லாமல் அமுதனிடம் திரும்பி, 

” அமுதா , நீ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஒரு கதை சொல்லி , அதுலேயிருந்து கேள்வி கேட்டியே , அந்த கேள்விக்கு அன்சர் தெரிஞ்சிருச்சு… ” 

” ஹலோ மிஸ்டர். ஸ்ரீஜன் நா இங்க என்ன பேசிக்கிட்டு இருக்கேன். நீங்க என்னடான்னா என் மாம்ஸ் கிட்ட ஏதோ சம்மந்தமே இல்லாம கதைச்சுகிட்டு இருக்கீங்க ? வாட் இஸ் ஹாபெனிங் ஹியர் ? நீங்க சி.பி.ஐ ஆஃபீஸர்னா உங்க வாயிக்கு வந்ததெல்லாம் பேசுவீங்களா ? அதுவும் என் நித்யாவையும் , சரணையும் பார்த்து நீங்க எப்படி துரோகிங்கன்னு சொல்லலாம் ? ” என்று கௌரி ஸ்ரீஜனிடம் சரண் , நித்யாவிற்கு வக்காலத்து வாங்க , அவளை சட்டை செய்யாத ஸ்ரீஜனோ , 

” அமுதா … உன் கதைப்படி , அந்த பொண்ணுக்கு வேண்டியபட்டவங்க ரெண்டு பேரும் , அந்த போலீஸ் ஆஃபீஸ்ர்கிட்ட , ஒரே விஷயத்த ரெண்டு விதமா  சொல்லுறாங்க. இதுல ஒருத்தர் , அந்த பொண்ணு மெண்டலி டிஸ்டர்ப் ஆனதுனால , அவளாவே சூசைட் பண்ணியிருக்கதான் சான்சஸ் அதிகமா இருக்குன்னு சொல்லி அந்த பொண்ணுக்கு அகைன்ஸ்டாவும் , கடத்தல் காரனுக்கு பெவராவும் பேசுறாங்க. இதே இன்னொருத்தர் , அந்த பொண்ணு ரொம்ப தெளிவான பொண்ணு , சூசைட் பண்ணிக்கிறதுக்கெல்லாம் சான்ஸ் இல்ல ,  சோ அவள யாரோ கடத்திட்டாங்கன்னு சொல்லி , அந்த கடத்தல் காரனுக்கு அகைன்ஸ்டாவும் , அந்த பொண்ணுக்கு பெவராவும் பேசுறாங்க. ” என்ற ஸ்ரீஜனை பார்த்து , 

” டேய் சோடாபுட்டி இப்போ இங்க எவ்ளோ பெரிய பிரச்சனை போயிகிட்டு இருக்கு , நீ என்னடான்னா இந்த அமுதன் பயலோட சேர்ந்து அவன் மொக்க கதைய பத்தி பேசிகிட்டு இருக்க ” என்று பொறுமையிழந்த வல்லி பாட்டி கத்த , அவருக்கு பதிலளிக்காத  ஸ்ரீஜனோ , மீண்டும் அமுதனிடமே தன் முழு கவனத்தை செலுத்த , அமுதனோ ” கிழவி , சப்போர்ட்டுக்கு புதுசா ஆள் வந்தவுடனே  என் கதையவே மொக்கைன்னு சொல்லி கலாய்கிறியா ? இரு கிழவி , தனியா மாட்டுவேல்ல அப்போ கவனிச்சிக்குறேன் உன்ன … ” என்று வல்லி பாட்டியிடம் கதை பேச , 

ஸ்ரீஜனோ ” அமுதன் ப்ளீஸ் இட்ஸ் வெரி இம்பார்ட்டண்ட் , ஐ நீட் யுவர் கோவாப்பரேஷன் … சோ உங்க கதைய நம்ம கேஸோட மேட்ச் பண்ணி பாக்கும் போது எக்ஸாக்டா மேட்ச் ஆகுது. அம் ஐ ரைட் ?  ” என்க , சுற்றியிருந்த அனைவரும் “பே” வென முழித்தனர்.

” சார் எனக்கு நீங்க சொல்லவர விஷயம் புரியல ” 

” கூல் அமுதா … லேட் மீ எக்ஸ்பிளைன் கிளீயர்லி … நீங்க எல்லாரும் சரணும் , நித்யாவும் சேர்ந்துதான்  கோர்ட்ல ரூபிய காணும்னு கேஸ் பைல் பண்ணதா நினைச்சுகிட்டு இருக்கீங்க ? ஆனா அது உண்மை கிடையாது. சரண் அவனோட நேம்ம யூஸ் பண்ணாம , நித்யா நேம்ம மட்டும் யூஸ் பண்ணி கேஸ் பைல் பண்ணியிருக்கான். இதுல இன்னொரு முக்கியமான விஷயம் , அவன் எந்த ஒரு இடத்துலயும் காப்பகத்தோட நேம் மென்ஷன் பண்ணவே இல்ல. பக்காவா பிளான் பண்ணி நித்யாவ கோர்த்துவிட்டுருக்கான் ” என்று ஸ்ரீஜனை இடைமறைத்த அமுதன் , 

” ஏன் ஸ்ரீஜன் , ஆல்ரெடி இங்க லோக்கல் போலீஸ் ஸ்டேஷன்ல கம்பிளைன் பண்ணி , ரூபன் இன்ஸ்டிடியூட் ஆளுங்கலால கௌரி , சரண் , நித்யா , காப்பக குழந்தைங்கன்னு எல்லாரும் எவ்ளோ ப்ரோப்லம் பேஸ் பண்ணாங்கன்னு எங்களுக்கு நல்லாவே தெரியும். சோ சரண் , எங்க தன்னோட நேமையும் , காப்பகத்தோட நேமையும் மென்ஷன் பண்ணா , அதுனால காப்பகத்துக்கும் , கௌரிக்கும் ஏதாச்சும் ஆபத்து வருமோன்னு பயந்து கூட அப்படி பண்ணியிருக்கலாம்ல. ” என்று தன் பக்க வாதத்தை முன் வைக்க , 

ஸ்ரீஜனோ ” நீ சொல்ற விஷயமும் லாஜிக்கா கரெக்ட்டா தான் இருக்கு. ஆனா சரண் அவனோட குருநாதர் , இந்த கேஸ்ஸ ஹாண்டில் பண்ண அட்வகேட் ப்ரதாப் பன்சால்கிட்ட பேசும் போது , ரூபி மெண்டலி ரொம்ப ஸ்டராங்கான பொண்ணு , சோ அவ சூசைட் பண்ணியிருக்க சான்ஸ் இல்ல , அவள அந்த ரூபன் இன்ஸ்டிடியூட்ல தான் கடத்தியிருக்காங்கன்னு சொல்லியிருக்கான். அதே மாதிரி அந்த அட்வகேட் நித்யா கிட்டயும் தனியா பேசியிருக்காரு. ஆனா அந்த நித்யா , ரூபி நீட்ல நல்ல மார்க் வாங்கி டாக்டர் சீட் வாங்க முடியலன்னு அவ ரொம்ப டிப்ரகஷன்ல இருந்ததாகவும் , மே பீ அந்த ஸ்ட்ரெஸ்ல சூசைட் பண்ணியிருக்கலாம் , எங்க அவ சூசைட் பண்ண விஷயம் வெளிய தெரிஞ்சா அவுங்க இன்ஸ்டிடியூட்டோட ரெப்பியூடேஷன் பாதிக்க பட்டிருமோன்னு பயந்து கூட அவ சூசைட் பண்ண விஷயத்த மறைச்சியிருக்கலாம்ன்னு ஸ்டேட்மென்ட் குடுத்திருக்கா. ” என்று அவன் முடிக்கும் முன்பே , 

” நோ ரூபிய பத்தி எனக்கு நல்லாவே தெரியும். அவ சூசைட் பண்ணிக்கிற அளவுக்கு கோழை கிடையாது ” என்ற கௌரியை முறைத்த வந்திதா , 

” அத நீ சொல்லுறியா ? ஏன்டி எரும காலேஜ் படிக்கும் போது ஒரு பேப்பர்ல அரியர் விழுந்திருச்சுனு சூசைட் பண்ணிக்க போனவ தான நீ. தாங்க் காட் அன்னைக்கி சரண் மட்டும் கரெக்ட்டான டைம்க்கு வந்து உன்ன காப்பாத்தாம போயிருந்தா உன் நிலமை என்னவாகிருக்கும் ? ” 

” எதே அப்போ அந்த ஸைகார்டிக் டிசார்டரால தனிமையோட வலிய தாங்கிக்க முடியாம தான் சூசைட் பண்ணிக்க போனேன்னு சொன்னதெல்லாம் பொய்யா கௌரி ? அப்போ நீ அரியர் வச்சதுக்கு தான் சூசைட் பணிக்க போனியா ? ” என்று அமுதன் அதிர , ” ஐ அம் சாரி மாம்ஸ்… அன்னைக்கு இருந்த கண்டிஷன்ல எங்க உங்க கிட்ட உண்மைய சொன்னா நீங்க திட்டுவீங்களோன்னு தான் மாத்தி சொல்லிட்டேன். இன்பாக்ட் அக்கா கிட்ட கூட பர்ஸ்ட் அப்படி தான் சொன்னேன். பட் அவ கிட்ட பொய் சொல்லிட்டோங்குற கில்ட்டி பீலிங் தாங்காம ஒரு நாள் சூசைட் பண்ணிக்க போனதுக்கான உண்மையான ரீசன்ன சொல்லி , நல்லா திட்டு வாங்கி கட்டிகிட்டேன்…  உங்க கிட்ட பொய் சொன்னதுக்கு சாரி மாம்ஸ் … ” என்று கௌரி அசடு வழிய , 

வந்திதாவோ ” பாஸ்ட் இஸ் பாஸ்ட். இனிமே யாரும் அத பத்தி பேச வேண்டாம். தற்கொலைங்கறது அந்த நிலமைய சமாளிக்க முடியாம , ஒரு ஸ்ட்ரெஸ்ல பத்து செகண்ட்ல பண்ற விஷயம். இதுல அவுங்களோட பாஸ்ட்ல அவுங்க எப்படி இருந்தாங்கங்குறத நாம கணக்கெடுத்துக்க கூடாது. இதுக்கு ஒரு பெட்டர் எக்ஸாம்பிள் ஆக்டர் சுஷாந்த் சிங் ராஜ்புத். அவர் அவரோட சிச்சோறே படத்துல சூசைட்க்கு அகைன்ஸ்டா எவ்ளோ பேசியிருப்பாரு தெரியுமா. அந்த மூவி மூலமா காம்பெடிட்டிவ் எக்ஸாம்ஸ்க்கு ப்ரிபேர் பண்ற பசங்க எல்லாருக்கும் சூசைட் பத்தி ஒரு அவேர்நெஸ் கிரியேட் பண்ணிருப்பாரு. ஆனா கடைசியில நிஜ வாழ்க்கையில அவரே சூசைட் பண்ணிப்பாருன்னு யாருமே எதிர்பார்க்கல. சோ நித்யா சொல்ற மாதிரி ரூபி சூசைட் பண்ணியிருக்க கூட சான்ஸ் இருக்கு.  ” என்று அவள் கருத்தை கூற , அமுதனோ ” அப்போ நித்யா மேல ஃபால்ட் இல்லேன்னு சொல்லுரியா ? ” என்று வினவ , பதிலுக்கு வந்திதாவோ ” ஐயோ அமுதா நா சொல்ல வர விஷயத்த கொஞ்சம் புரிஞ்சுக்கோ. சரணும் , நித்யாவும் அந்த அத்வகேட் கிட்ட மாத்தி மாத்தி பேசுனதுல , நமக்கு அவுங்க மேல டவுட் வந்துருக்கு , சோ அத தான் டிஸ்கஸ் பண்ணிக்கிட்டு இருக்கோம் “

” டவுட்லாம் இல்ல வந்தி. நா கன்பார்மா சொல்லுறேன். அந்த சரணும் , நித்யாவும் தான் கல்ப்ரிட்ஸ் ” என்ற ஸ்ரீஜனை , திட்ட வந்த கௌரியை தடுத்த அமுதன் ” ஸ்ரீஜன் லெட்ஸ் பீ பிராக்ட்டிகல். சப்போஸ் ரெண்டு பேருமே கல்பிரிட்டா இருந்தா , அவுங்க எதுக்கு இவ்ளோ ரிஸ்க் எடுத்து, அதர் ஸ்டேட் ஆர்ப்பநேஜஸ் எல்லாரையும் ஒன்னு சேர்த்து ,  சுப்ரீம் கோர்ட்ல கேஸ் பைல் பண்ணின்னு , அவ்ளோ தூரம் போகியிருக்க மாட்டாங்க. அதே மாதிரி , ரெண்டு பேரும் கூட்டுக்களவாணிங்களா இருந்திருந்தா , ரெண்டு பேரும் முன்னாடியே பேசி வச்சிக்கிட்டு அந்த அட்வகேட் கேட்ட கேள்விகளுக்கு ஒரே மாதிரி பதில் சொல்லியிருப்பாங்க. ஆனா அவுங்க அதையும் பண்ணல. சோ என் கெஸ் படி ரெண்டு பேர்ல யாரோ ஒருத்தர் தான் கலப்ரிட் ” என்ற அமுதனுக்கு தெரியவில்லை , இவர்களின் இந்த அசட்டு தைரியத்தாலும் , அதிக பிரசங்கியான நம்பிக்கையாலும் எந்த தவறும் செய்யாத ஓர் உயிர் பலியாக போகிறதென்று. 

அமுதன் கூறியதையே அனைவரும் ஆதரிக்க , ஆனால் கௌரிக்கும் ஸ்ரீஜனுக்கும் இதில் உடன்பாடில்லை.

கௌரி இருவரும் இதுபோன்று கீழ்த்தரமான காரியத்தை செய்திருக்க மாட்டார்கள் என்று வாதாட , ஸ்ரீஜனோ , இவர்கள் இருவருமே குற்றவாளிகள் , அவர்கள் தான் இக்கடத்தலுக்கு பின்னிருக்கும் துரோகிகள் என்று வாதாட. இவர்கள் போடும் சண்டையில் கடுப்பான அமுதனும் , வந்திதாவும் 

” அட ச்ச இப்போ எதுக்கு ரெண்டு பேரும் சின்ன பசங்க மாதிரி அடிச்சிக்கிறீங்க ? ” என்று கத்த , 

கௌரியோ ” அக்கா எனக்கு நித்யாவ பத்தி நல்லா தெரியும் அக்கா. அவ அந்த மாதிரி பண்றவயில்ல “

” எதே அவள பத்தி உனக்கு நல்லா தெரியுமா ? ஏன் கௌரி அவ அந்த சேஷாத்ரி வீட்டு பொண்ணுங்குற விஷயத்த உன் கிட்ட மறைச்சிருக்கா. அப்ப கூட நீ அவளுக்கு சப்போர்ட் பண்ணிக்கிட்டு இருக்க ? ” என்று அமுதன் முடிக்கும் முன்பே ” அவ எதையும் என் கிட்ட மறைக்கல. அவ அந்த வெங்கட ராம சேஷாத்ரியோட பொண்ணுன்னு எனக்கு முன்னாடியே தெரியும். ” என்ற கௌரியை அனைவரும் அதிர்ந்து நோக்க , 

கௌரியோ ” நித்யா ரொம்ப நல்ல பொண்ணு.  பணக்கார வீட்டுப்பொண்ணுங்குற பந்தா  இல்லாம எல்லார் கூடையும் சமமா பழகுவா. இன்பாக்ட் நா காலேஜ்ல யார் கிட்டையும் பேசாம ஒதுங்கி ஒதுங்கி போறத பார்த்துட்டு அவளா வந்து என்கிட்ட பழகுனா. முதல்ல எனக்கு அவள புடிக்கல , நா அவள ஒதுக்க ஆரம்பிச்சேன். ஆனா அவ என்னை நல்லா புரிஞ்சுக்கிட்டு , நா எவ்ளோ தான் அவள ஒதுக்க முயற்சி பண்ணாலும், அதை எதுவும் கண்டுக்காம , என்கூட அவ்ளோ பாசமா பழகுனா. எனக்கும் கொஞ்சம் கொஞ்சமா அவள புடிக்க ஆரம்பிச்சிது. நானும் அவ கிட்ட மனசு விட்டு பேச ஆரம்பிச்சேன். 

அப்போ தான் அவ பேமிலி பத்தி என்கிட்ட அவ ஷேர் பண்ணிகிட்டா. அவுங்க பேமிலி ரொம்ப ஆச்சாரம் அபச்சாரம் பாக்குற பேமிலியாம். ஜாதி வெறி பிடிச்சவங்க , பண திமிரு அதிகம் , எனக்கு அவுங்கள பிடிக்கவே பிடிக்காது. நா நீட் எக்ஸாம்ல பர்ஸ்ட் அட்டெம்ப்ட்ல மார்க் கம்மியா வாங்கிட்டேன் , அதுனால எனக்கு மேனேஜ்மென்ட் சீட் தான் கிடைச்சது. ஆனா எனக்கு பல பேரோட வயித்தெரிச்சல்ல சம்பாதிச்ச பணத்துல படிக்க விருப்பமில்ல. அதனால ஒன் இயர் ஹார்ட் ஒர்க் பண்ணி நீட் எக்ஸாம் ரிப்பீட் பண்ணி , நல்ல மார்க் ஸ்கோர் பண்ணி , நா ஆசப்பட்ட மாதிரியே ஒரு நல்ல கவர்மெண்ட் மெடிக்கல் காலேஜ்ல ப்ரீ எம்.பி.பி.எஸ் சீட் வாங்கிட்டேன்னு சொன்னா. நானும் அவள அப்ரிஷியேட் பண்ணேன். 

ஆனா அவ அந்த கிரெடிட் எல்லாம் அவ ரூபன் அண்ணாக்கு தான் போகும். அவுங்க தான் அவள கைட் பண்ணதா சொன்னா. நானும் ஆர்வம் தாங்காம யார் அவங்கன்னு கேட்டதுக்கு , அவுங்க அவ பெரியப்பா பையன்னும் , அவுங்க ஒரு பையோடெக்னாலஜிஸ்ட்டுன்னும் சொன்னா , அதுவுமில்லாம அவுங்களுக்கு டீச்சிங்ல ரொம்ப இன்டெர்ஸ்ட் இருக்கறதுனால , கூடிய சீக்கிரம் ஒரு கோச்சிங் இன்ஸ்டிடியூட் ஸ்டார்ட் பண்ணி , நிறையா பசங்களோட டாக்டர் , இன்ஜினியர் கனவெல்லாம் நினைவாக்க போறதா சொன்னா. நானும் வந்தி அக்கா , அமுதன் மாம்ஸ் , வல்லி பாட்டி , அப்புறம் சரண்ன்னு எல்லார பத்தியும் அவ கிட்ட ஷேர் பண்ணேன்.

அதுக்கு அப்புறம் நாங்க ரெண்டு பேரும் இன்னும் க்ளோஸானோம். எல்லாம் நல்லா போயிட்டு இருந்துச்சு. ஆனா என்னைக்கு வந்தி அக்கா , நித்யா அப்பா நடத்துற ஹோட்டல்ல சாப்பாடுல ஏதோ கலப்படம் பண்றாங்கன்னு தெரிஞ்சு அந்த ஹோட்டலுக்கு சீல் வச்சாங்களோ , அன்னைக்கு ஆரம்பிச்சது பிரச்சனை.

வந்தி அக்கா அவர் ஹோட்டல்ல சீல் வச்ச கோவத்துல , அவ அப்பா வந்தி அக்காவ பழிவாங்க , அவள யூஸ் பண்ணிக்க நினைச்சிருக்காரு. வந்தி அக்காவோட வீக்னெஸ் நா தான்னு தெரிஞ்சுக்கிட்டு , அவ மூலமா என்னை ஏதாச்சும் பண்ணனும்னு பிளான் பண்ணியிருக்காரு. ஆனா நித்யா உயிரே போனாலும் என் பிரெண்டுக்கு துரோகம் பண்ண மாட்டேன்னு சொல்லியிருக்கா. அந்த கோவத்துல அவுங்க அப்பா அவள வீட்ட விட்டு வெளிய அனுப்பிட்டாரு. 

அவ வீட்லயிருந்து கிளம்பினவ , நேரா நம்ம காப்பகத்துக்கு வந்து , நடந்ததையெல்லாம் சொல்லி என் மடியில படுத்து அழுதா. நான் தான் அவள கன்வின்ஸ் பண்ணி , அவள வீட்டுக்கு அனுப்ப ட்ரை பண்ணேன். ஆனா அவ இனிமே அந்த வீட்டுக்கு போகமாட்டேன்னு ஒரே அடம் பிடிச்சா. அப்புறம் நா தான் அவள எதுக்கும் ஒருதடவ ரூபன் அண்ணாகிட்ட பேச சொல்லி சொன்னேன். அவளும் அவுங்க கிட்ட பேச ட்ரை பண்ணா , அப்போ அந்த அண்ணா ஏதோ ரிசெர்ச் வேலையா குஜராத் போயிருந்தாங்க. அவுங்கள காண்டாக்ட் பண்ண ட்ரை பண்ணோம் , ஆனா எந்த ரெஸ்பான்ஸும் வரல. சோ கடைசியா , அவள நம்ம காப்பகத்துலையே தங்க  சொன்னேன். அவளும் அங்கயிருக்கறதா ஒத்துக்கிட்டவ , கூடவே அவள பத்தின உண்மைய வேற யார் கிட்டையும் சொல்ல கூடாது , அந்த பேமிலி பொண்ணுன்னா ஊரே அவள பத்தி தப்பா பேசும் , அதுனால அவ யாருங்குறது எக்காரணத்தை கொண்டும் யார் கிட்டயும் சொல்ல கூடாதுன்னு என் கிட்ட சத்தியம் வாங்குனா. 

இன்பாக்ட் ரூபி கூட என்னைய விட அவ தான் க்ளோஸா இருந்தா. ரூபி அவளுக்கு ஏதாச்சும் வேணும்னா முதல்ல நித்யாவ தான் கேப்பா , ரெண்டு பேரும் அவ்ளோ க்ளோஸ். எனக்கே சில நேரம் அவுங்க ரெண்டு பேரையும் பார்த்தா பொறாமையா இருக்கும். ரூபி ஆசைப்பட்ட மாதிரியே அவள எப்படியாச்சும் டாக்டராக்கணும்னு எங்க எல்லாரையும் விட அவ தான் நிறையா பாடுபட்டா.

இப்போ சொல்லுங்க எனக்காகவும் , ரூபிக்காகவும் எல்லாத்தையும் பாத்து பாத்து செஞ்சு , எங்க மேல உயிரையே வச்சிருந்த என் நித்யாவா எனக்கும் , ரூபிக்கும் துரோகம் பண்ணியிருப்பா ? ” என்ற கௌரியின் கண்களிலிருந்து கண்ணீர் அருவியாக கொட்ட , அவள் நித்யாவை பற்றி கூறியதை கேட்டு , ஸ்ரீஜனின் மனதில்,  முகமே தெரியாத அப்பெண்ணின் மேல் காதல் ஊற்றெடுக்க துவங்கியது. 

காதலுக்கு கண்ணில்லை என்பதை இங்கே ஸ்ரீஜன் மீண்டும் ஒருமுறை நிரூபித்துக்கொண்டிருந்தான். பாவம் அன்று அவன் நினைத்திருக்கவில்லை தன் உயிரானவளை தன் கையாலே கொள்ள போகிறோமென்று.

விதியாடும் விளையாட்டில் இங்கே அனைவரும் கைப்பாவை ஆகிப்போயினர் ….

தொடரும் …

உங்கள் கருத்துகளை ஆவலுடன் எதிர் நோக்கி காத்திருக்கும் நான் உங்கள் பென்சிலு ….

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
4
+1
0
+1
0

  உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

  2 Comments

  1. அப்புறம் என்னத்துக்கு கொன்னான்🤔🤔🤔

   1. Author

    Adha next epi la solluren sweety … but trust me , logic errors edhuvum irukaadhu …