Loading

கஞ்சனடா கவிஞ்சா நீ!!
அத்தியாயம் – 23

கௌரியும் சரணும் சுற்றம் மறந்து தங்கள் உலகில் சஞ்சரித்துக்கொண்டிருக்க , அவர்களை சுற்றி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த அமுதன் , ரூபன் , வல்லி பாட்டி என்று அனைவரும் அவர்களையே வாயை பிளந்து பார்த்துக்கொண்டிருந்தனர்.

” என்னடா இந்த சங்கு பையன் , கிடைச்ச கேப்புலயெல்லாம் ஸ்கோர் பண்ணிக்கிட்டு இருக்கான். நீ என்னடான்னா இப்படி ஆற அமர உட்கார்ந்து பிளாஷ் பாக் சொல்லிக்கிட்டு இருக்க ? ” என்று வல்லி பாட்டி அமுதனின் காதை கடிக்க , அமுதனோ ” இப்போ என்னை என்ன தான் கிழவி பண்ண சொல்லுற ?” 

” க்கும் இவ்ளோ நாள் என்ன பண்ணிக்கிட்டு இருந்த ? “

” இவன் ரொமான்ஸ் பண்ணும் போது நடுவுல போய் பிரிச்சிவிட்டுருவேன் “

” அப்போ இப்பவும் அதையே பண்ணு … ” என்று வல்லி பாட்டி அவனை பார்த்து கண்ணடிக்க , இம்முறை சிவபூஜையில் ஒரு கரடி அல்லாது இரண்டு கரடிகள் சேர்ந்து சரணை கௌரியிடமிருந்து பிரித்து நிற்க வைத்தனர்.

ஆனால் அவர்களது செயலில் இம்முறை வழக்கத்திற்கு மாறாக சரணுக்கு பதிலாய் கௌரி கத்த துவங்கினாள் 

” ஏன் மாம்ஸ் ? உங்களுக்கு ஏன் இந்த கொலவெறி ? நாங்க ரொமான்ஸ் பண்ண ஆரம்பிச்சாலே உங்களுக்கு மூக்கு வேர்க்க ஆரம்பிச்சுடுது. எப்ப பார்த்தாலும் எங்க ரொமான்டிக் மொமெண்ட்ட கெடுக்கறதுலையே குறியாயிருக்கீங்க ? இதுல இந்த கிழவியையும் கூட்டு சேர்த்து கிட்டு நீங்க அடிக்குற லூட்டி தாங்கல மாம்ஸ் ” என்று அமுதனிடம் பொரிய, சரணோ , அமுதனை நோக்கி கண்ணடித்து விட்டு , அவனை வெறுப்பேற்ற வாய் பொத்தி சிரிக்க , நம் அமுதனோ 

” ஏன் கிழவி  ? ஒரு காலத்துல மாம்ஸ் மாம்ஸ்னு என்னையே சுத்தி சுத்தி வந்த என் மச்சினிச்சி கௌரி , இன்னைக்கு அவ ஆள பார்த்தவுடனே , எப்படி கட்சி மாறிட்டா பார்த்தியா ?”

” நா தான் அப்பவே சொன்னேனடா உன் மச்சினிச்சி அவளுக்குன்னு ஒரு ஆள் வர வரைக்கும் தான் உனக்கு சப்போர்ட் பண்ணுவான்னு. நீ தான் என் மச்சினிச்சி அப்படி இல்ல இப்படி இல்ல அப்புடி நொப்புடின்னு கலர் கலரா ரீல் விட்ட , கடைசியில பார்த்தியா , நா சொன்னது தான் நடந்துச்சு. ” என்று வல்லி பாட்டி வேண்டுமென்றே அமுதனை ஏற்றிவிட , வல்லி பாட்டியின் பேச்சில் முகத்தை சோகமாக வைத்துக்கொண்ட அமுதன் கௌரியை நோக்கி ” ஏன் கௌரி செல்லம் … நீங்க தான் எனக்கு ஹீரோன்னு சொல்லுவியே , ஆனா இந்த சங்கு பையன் வந்ததுக்கு அப்புறம் உனக்கு அவன் ஹீரோவாகிட்டான் , நான் ஜீரோவாகிட்டேன்ல ” என்க , ” ஐயோ மாம்ஸ் என்னை பார்த்து என்ன வார்த்தை சொல்லிட்டிங்க. என்னைக்கா இருந்தாலும் நீங்க தான் மாம்ஸ் எனக்கு  ஹீரோ. அப்பா பாசம்னா என்னன்னு தெரியாம இருந்த எனக்கு அப்பாவாவும் , அண்ணனாவும் , தம்பியாவும் , பெஸ்ட் பிரெண்டாவும் , ஸ்வீட் மாம்ஸ்ஸாவும் இருந்து என்னை சிரிக்கவும் வச்சு சிந்திக்கவும் வச்ச நீங்க என்னைக்குமே என்னோட ஹீரோ தான் மாம்ஸ் ” என்றவள் உணர்ச்சி போங்க அமுதனை அணைத்துக்கொள்ள , அவ்வணைப்பில் காதலில்லை , காமமில்லை , ஓர் தந்தைக்கும் மகளுக்குமான உணர்ச்சிப்பிழம்பாவே அவ்வணைப்பு இருந்தது.

இவர்கள் இருவரின் பாசப்பிணைப்பை கண்டு குழம்பிய சரண் ” ஏய் ஒரு நிமிஷம் ஒரு நிமிஷம்  ” என்ற சரணை , ” ஸ்யபா இவன் வேற , நடுவுல நடுவுல ஒரு நிமிஷம் ஒரு நிமிஷம்ன்னு சொல்லி அரை மணிநேரத்துக்கு பிளேடு போடுறான் ” என்ற தலையில் அடித்துக்கொள்ள , அதை கண்டுக்கொள்ளாத சரண், 

” அன்னைக்கு வல்லி பாட்டி , அமுதனுக்கு வந்திதாவ பொண்ணு கேட்டு போகும் போது கௌரி உன்ன அனாதை , வேல வெட்டியில்லாத வெட்டி பையன் , அது இதுன்னு  எப்படியெல்லாம் அசிங்க படுத்துனா ? அப்படியிருக்கப்போ இப்போ என்னடான்னா மாம்ஸ் மாம்ஸ்னு உன் மேல பாச மழைய பொழியுறா ? லாஜிக் இடிக்குதே ? ” என்று வினவ , 

இம்முறை அவன் கேள்வியில் வாய் விட்டு சிரித்த அமுதன் ” ஏன்டா நீ இன்னுமாடா எங்கள நம்பிகிட்டு இருக்க ?  எங்க பேஸ் கட்டையெல்லாம் பார்த்தாலே உனக்கு தெரியவேணாமா நாங்க பொய் சொல்றோமா இல்ல உண்மைய சொல்றோமான்னு ? இன்னும் பச்சை புள்ளையாவே இருக்கியேடா. கௌரி ” தேவன் இல்லம்”னு காப்பகம் வச்சு நடத்துற விஷயம் உனக்கு நல்லாவே தெரியும். அப்படியிருக்கப்போ அவ எப்படிடா என்னை அனாதைன்னு சொல்லி திட்டுவா ? அதுவுமில்லாம இப்போ தான் அவளுக்கு அவ அனாதைங்குற விஷயம் முன்னாடியே தெரியும்னு சொன்னேன். அப்படியிருக்கப்போ எப்படிடா அவ என்னையும் வல்லி பாட்டியையும் அனாதைன்னு சொல்லி திட்டுவா ? சுத்தமா லாஜிக் தெரியாத பசங்களா இருக்கீங்களேடா ? ” என்று மீண்டும் நக்கலடிக்க , அதில் வெறுப்பின் உச்சத்திற்கே சென்ற சரண் , கௌரியிடம் திரும்பி ” அவன் சொல்றதெல்லாம் உண்மையா ? ” என்று வினவ , அதற்கு கௌரி பதிலளிக்கும் முன்பே அவளை முந்திக்கொண்ட அமுதன் 

” டேய் சரா … காம் டவுன் … இன்னும் ஒரு பாதி பிளாஷ் பாக் தான் பேலன்ஸ் இருக்கு. நா அத டீடைலா எக்ஸ்பிளைன் பண்ணி முடிச்சிடுறேன். அதுக்கு அப்புறம் நீ உனக்கு இருக்க டவுட்டையெல்லாம் ஒரு லிஸ்ட் போட்டு உன் ஆளுக்கூட பொறுமையா டிஸ்கஸ் பண்ணு ” என்றவன் சரணின் பதிலுக்கு காத்திருக்காமல் , மீண்டும் தன் கடந்த கால நினைவலைகளில் மூழ்கிப்போனான் ….

தேவஸ்வரூபி எவ்வாறு காணாமல் போனாலோ அதே போல் ஸ்ரீஜனின் தம்பி நிரஞ்சனும் காணாமல் போனதை கேட்டு அமுதனும் , வல்லி பாட்டியும் அதிர்ந்து போயினர். 

பின் அதிர்ச்சியிலிருந்து முதலில் வெளியில் வந்த வல்லி பாட்டி ” ஏன் தம்பி , எங்க ரூபி விஷயத்துல தான் இந்த கௌரி லூசு அந்த நித்யா பேச்ச கேட்டு,  சரணோட சேர்ந்து , ரூபிய அந்த பாழா போன இன்ஸ்டிடியூட்ல சேர்த்து விட்டுட்டா. ஆனா உங்கள பார்த்தா ரொம்ப தெளிவான ஆள் மாதிரி தெரியுதே, நீங்க எப்படி உங்க தம்பிய போய் , போயும் போயும் அந்த பாழங்கிணத்துல  தள்ளிவிட்டிங்க ” என்று முடிக்கும் முன்னே  , ” என்ன கிழவி இதான் சாக்குன்னு என்னைய லூசுன்னு சொல்லுற ? ” என்று  கௌரி அவரிடம் வம்புக்கு செல்ல , 

பதிலுக்கு வல்லி பாட்டியும் ” பின்ன என்னடி பைத்தியம் …. நா அன்னைக்கே சொன்னேன், அந்த நித்யாவையும் , சரணையும் நம்பி நம்ம ரூபிய அந்த இன்ஸ்டிடியூட்ல சேர்க்க வேண்டாம் , ஒரு ரெண்டு நாள் பொறுத்தா வேல விஷயமா வெளியூர் போன வந்திதாவும் , வேலையேயில்லாம வெட்டியா ஊர் சுத்த போன அமுதனும் வந்ததுக்கு அப்புறம் , அவுங்க கிட்டயும் கலந்து பேசிட்டு முடிவு பண்ணலாம்னு சொன்னேன். ஆனா நீ தான் என் பேச்சை கேக்காம , அந்த ரெண்டு லூசுங்க பேச்சையும் கேட்டு , ரூபிய கொண்டு போய் அந்த இன்ஸ்டிட்யூட்ல சேர்த்த. நீ பண்ண வேலையினால கடைசியில நம்ம எல்லாரையும்  எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்க தெரியுதா ? ” என்றவர் ரூபியை நினைத்து வருத்தம் கொள்ள , 

ஸ்ரீஜன் நிலமையை சகஜமாக்கும் பொருட்டு ” பாட்டி என்னை பார்த்தா ரொம்ப தெளிவா இருக்கேன்னு சொன்னிங்க ? ” என்று வினவ , பதிலுக்கு வல்லி பாட்டியும் ” இதுல என்ன தம்பி சந்தேகம் ? நீங்க எவ்ளோ நீட்டா சட்டையயெல்லாம் அயன் பண்ணி போட்டுருக்கீங்க. அப்போ நீங்க கண்டிப்பா தெளிவான ஆளா தான் இருப்பீங்க ” என்று வல்லி பாட்டி கூறி முடிக்கும் முன்பே , ஸ்ரீஜன் தன் பையிலிருந்த ஓர் பழைய சோடாபுட்டி கண்ணாடியை எடுத்து அணிந்துக்கொண்டவன் , வல்லி பாட்டியின் அருகில் சென்று , 

” இப்போ சொல்லுங்க , நா நிஜமாவே ரொம்ப தெளிவான ஆளா பேப் ” என்று வினவ , அவனது கண்ணாடியை கண்ட மறுநொடியே அவன் யாரென்று நியாபகம் வந்த வல்லி பாட்டி , மேலும் அவன் தன்னை ” பேப்” என்று அழைத்ததில் அகமகிழ்ந்து போனவர் , அவனை  ஆசையாய் அணைத்துக்கொள்ள , ஸ்ரீஜனும் இத்தனை வருடத்திற்கு பின் காணும் தன் பேப்பை கட்டிக்கொண்டான்.

” டேய் படவா … நீ தானா ? நா கூட யாரோன்னு நினைச்சிட்டேன்டா சோடாபுட்டி. அதுவுமில்லாம உன்ன சோடாபுட்டியில்லாம பார்த்ததுல அடையாளமே தெரியல. ஆமா நீ தான் வந்தி சொன்ன அந்த சி.பி.ஐ ஆஃபீஸரா ? ” 

” ஆமா பேப் உங்க சோடாபுட்டி தான் இப்போ ஸ்ரீஜன் சி.பி.ஐ ஆஃபீஸரா உங்க முன்னாடி நிக்குறேன். “

” டேய் ஒரு நிமிஷம் … அப்போ காணாம போனது என் சின்ன குட்டியா ? ” என்ற வல்லி பாட்டியின் குரலில் தெரிந்த பதற்றதிலேயே  , அவர் நிரஞ்சன் மேல் வைத்திருக்கும் அன்பை அறிந்துக்கொண்ட ஸ்ரீஜன் , தன்னையும் மீறி வழிந்த கண்ணீரை துடைத்துக்கொண்டு ” ஆமா பேப் … உங்க சின்ன குட்டிய தான் காணும் ” என்க , அதை கேட்ட மறுநொடி ” ஏன்டா லூசு பசங்களா , உங்களுக்கெல்லாம் அறிவே கிடையாதா ? இப்படி என் ரெண்டு கண்ணையும் துளைச்சிட்டு வந்து நிக்குறீங்க ? அப்படி என்னடா உங்களுக்கு மூளை மழுங்கி போச்சு … ” என்ற வல்லி பாட்டி ஸ்ரீஜனையும் , கௌரியையும் சரமாரியாக திட்ட , ஸ்ரீஜனிடம் அத்தனை உரிமையாக பேசும் வல்லி பாட்டியையே அமுதன் புரியாத பார்வை பார்க்க , அவனது பார்வையிலேயே அவனது எண்ண ஓட்டத்தை அறிந்துக்கொண்ட வந்திதா அவனை நெருங்கி 

” அமுதா , ஸ்ரீஜனும் , அவன் தம்பி நிரஞ்சனும்  நம்ம அன்பு இல்லத்துல வளர்ந்தவங்க . ஸ்ரீஜன் ரொம்ப ஸ்மார்ட். படிப்புல ரொம்ப கெட்டி. அந்த காலத்துலயே ஐ.ஐ.டி என்ட்ரன்ஸ் எக்ஸாம் க்ளியர் பண்ணி , ஐ.ஐ.டி டெல்லில இன்ஜினியரிங் சீட் வாங்கிட்டான். அப்புறம் ஸ்டடீஸ்காக அவன் தம்பியையும் கூட்டிகிட்டு டெல்லி போயிட்டான். படிச்சு முடிச்சு ஒரு நல்ல ஜாப்ல செட்டில் ஆனவன், அப்புறம் அந்த மெஷினோட சண்டை போடுற வேலை புடிக்காம , அத ரிசைன் பண்ணிட்டு , சிவில் சர்வீஸ் என்ட்ரன்ஸ் எக்ஸாம் எழுதி , சி.பி.ஐ ஆஃபீஸராகிட்டான். எனக்கும் அவனுக்கும் நடுவுல ரொம்ப நாள் டச் விட்டு போச்சு. லாஸ்ட் இயர் டெல்லில என் பிரென்ட் ஒருத்தியோட வெட்டிங் அட்டென்ட் பண்ண போனப்போ தான் , அங்க இவன எதர்ச்சையா மீட் பண்ணேன். அதுக்கப்புறம் ரெண்டு பேரும் அடிக்கடி போன்ல பேசிக்க ஆரம்பிச்சோம். 

இப்படி தான் ஒருநாள் கௌரி திடீர்னு வந்து ரூபிய காணும்னு சொன்னவுடனே , எனக்கு ஸ்ரீஜன் கிட்ட ஹெல்ப் கேட்கலாம்னு தோணுச்சு. உடனே அவனுக்கு கால் பண்ணி விஷயத்த சொன்னேன் , பட் அங்க தான் எனக்கு ஒரு அதிர்ச்சி காத்துகிட்டு இருந்துச்சு. எக்ஸாக்டா நம்ம ரூபி எப்படி காணாம போனாலோ அதே மாதிரி தான் ஸ்ரீஜனோட தம்பி நிரஞ்சனும் காணாம போயிருக்கான். ” என்றவள் மேலும் விவரிக்க துவங்க , அவளை தடுத்த அமுதன் ” அதுக்கப்புறம் தான் சரணும் நித்யாவும் , அதர் ஸ்டேட் ஆர்ப்பனேஜசோட சேர்ந்து கௌரிகிட்ட கூட சொல்லாம கேஸ் போட்டது. சோ அந்த கேஸ்ஸ விசாரிக்க தான் இந்த கிழவியோட சோடாபுட்டி வந்திருக்காரு. அம் ஐ ரைட் ?” என்றவன் தீடீரென்று வந்த ஒருவனிடம் வல்லி பாட்டி கொஞ்சி கொஞ்சி பேசுவதை கண்டு அவன் கண்களில் தெரிந்த பொறாமையை கண்டு தனக்குள்ளே சிரித்துக்கொண்ட வந்திதா, 

” இல்ல அமுதா … அந்த கேஸ தள்ளுபடி பண்ணிட்டாங்க. ” 

” வாட் என்ன வந்தி சொல்லுற ? ” என்று அமுதனுடன் சேர்ந்து , வல்லி பாட்டியும் , கௌரியும் அதிர , 

ஸ்ரீஜனோ ” ஆமா வந்திதா சொல்லுறது உண்மை தான். இங்க நிறையா பண முதலைங்களும் , அந்த முதலைங்களுக்கு வாலாட்ட நாய்ங்களும் நிறையா இருக்குங்க. இந்த சேஷாத்ரி பிரதர்ஸ் கிட்ட லஞ்சம் வாங்கிட்டு அந்த ஜட்ஜ் கேஸ்ஸ தள்ளுபடி பண்ணிட்டான். அத விட கொடுமை , அத தட்டி கேட்க போன என்னையும் சஸ்பெண்ட் பண்ணிட்டாங்க. ஆனா ஒன்னு என் தம்பியையும் அவன மாதிரியே பாதிக்கப்பட்ட பசங்களையும் நா காப்பாத்தாம விடமாட்டேன் ” என்றவனின் கண்களில் தெரிந்த உறுதியிலேயே அவன் சொன்னதை செய்வான் என்பதை புரிந்துக்கொண்ட அமுதன் , அவனை நெருங்கி 

” பாஸ் உங்களுக்கு சப்போர்ட்டா நாங்க எல்லாரும் என்னைக்கும் இருப்போம். கூடிய சீக்கிரமே இந்த கேஸ்ஸ சால்வ் பண்றோம்.  அந்த சேஷாத்திரி பிரதர்ஸ்ஸ தட்டுறோம் தூக்குறோம் ” என்ற அமுதனை பாவமாக பார்த்த ஸ்ரீஜன் ” எதிரிய கூட ஈஸியா ஜெயிச்சிடலாம் அமுதா … ஆனா முதுகுல குத்துற துரோகிய ஜெயிக்கிறது ரொம்ப கஷ்டம் …. ” என்க , அவனது கூற்றில் அமுதன் முதற்கொண்டு அங்கிருந்த பெண்கள் அனைவரும் அதிர , ” யார் அந்த துரோகிங்க ஸ்ரீஜன் ? ” என்று வந்திதா ஸ்ரீஜனிடம் வினவ , 

ஸ்ரீஜனோ ” வேற யாரு … எல்லாம் அந்த நித்யகல்யாணி ராம சேஷாத்ரியும்  , அந்த அட்வகேட் சரணும் தான் ” என்று அங்கிருந்த அனைவரது தலையிலும் ஓர் பெரிய குண்டை தூக்கி போட , அவன் கூறியதை கேட்டு அங்கிருந்த அனைவரும் அதிர்ந்தனர் எனில் , நம் கௌரியோ அவன் கூறியதை நம்பாமல் , என் தோழி மீதும்  , என் காதலன் மீதும் எவ்வாறு துரோகி என்று பழி சுமத்தலாம் என்று ஸ்ரீஜனிடம் சண்டைக்கு சென்று விட்டாள்.

ஸ்ரீஜன் அவள் கேள்விகளுக்கெல்லாம் பதிலளிக்க துவங்க , அங்கிருந்த அனைவரது கண்களும் ஆச்சரியத்தில் விரிய , கௌரிக்கோ முதல் முறையாக தன்னவன் மேலும் , தன் உயிர்தோழியின் மேலும் சந்தேகம் வலுக்க துவங்கியது. 

 ஸ்ரீஜன் அப்படி என்ன தான் சொன்னான் ? 

ரகசியம் ரகசியமாய் ரகசியமிடம் ரகசியத்தை விவரிக்க துவங்கியது ….

தொடரும் …

உங்கள் கருத்துகளை ஆவலுடன் எதிர் நோக்கி காத்திருக்கும் நான் உங்கள் பென்சிலு ….

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
4
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. Dei penjil oru doubt ra, antha kaalathulaye iit la padichanu sollurale app srijan vayasana party ah da🤣🤣🤣