Loading

கஞ்சனடா கவிஞ்சா நீ!!
அத்தியாயம் – 20

ஸ்ரீஜனின் கூற்றில் அதிர்ந்திருந்த சரண் , அவனிடம் நித்யாவை பற்றி ஏதோ கேட்க வர , அவனை தடுத்த ஸ்ரீஜன் , ரத்த வெள்ளத்தில் கிடந்த நித்யாவை நெருங்கி , அவளது மொபைலை சோதிக்க , அவன் பெண்கள் நால்வரையும் கடத்தியிருப்பதாக அனுப்பிய குறுஞ்செய்தியினூடே ஓர் அநாமதேய இணைப்பின் ( anonymous link )  விளைவால் , அதிலிருந்த ஆடியோ கால் ஆட்டோ ரெக்கார்டர், வீடியோ கால் ஆட்டோ ரெக்கார்டர், லொகேஷன் ட்ராக்கர் என்றவள் உளவு வேலைக்காக செய்திருந்த அனைத்து செயலிகலின் சேவையும் தடைபட்டிருந்தது.

நித்யாவின் அலைபேசியை சோதித்த ஸ்ரீஜன் , அதிலிருந்த லொகேஷன் ட்ராக்கரை மட்டும் நிரந்தரமாக முடக்கி விட்டு ,  மத்த செயலிகளை உயிர்பித்தவன் , அதிலிருந்த ஆடியோ கால் ரெகார்டர் செயலியின் மூலம் அவள் அப்பா , பெரியப்பாவிற்கு பகிர்ந்திருந்த ஆடியோ கோப்புகளை சரணுக்கும் , அமுதனுக்கும் போட்டுக்காட்ட , அதில் அவளுடன் அவர்கள் தங்களை பற்றி பகிர்ந்துக்கொண்ட அனைத்து தகவல்களும் ஒருவரி மாறாமல் வெங்கடராம சேஷாத்ரி மற்றும் அவனது அண்ணன் அத்வேய்தராம சேஷாத்ரிக்கும் பகிர பட்டிருந்தததை கண்டு அதிர்ந்தனர். 

அதிலும் குறிப்பாக அமுதன் சி.பி.ஐ ஆஃபீஸர் என்றும் , அவர்களை வேவு பார்ப்பதற்காக தான் அவர்கள் கோச்சிங் இன்ஸ்டிடியூட்டில் சேர்ந்திருக்கிறான் என்பது வரை அனைத்தும் நித்யாவின் மூலம் சேஷாத்ரி சகோதரர்களுக்கு பகிரபட்டிருப்பதை கண்டு அமுதனுக்கு நித்யாவின் மேல் கோவம் பெருக்கெடுத்தது.

 ” நித்யா  ப்ளடி ச்சீட் … ச்ச அண்ணா அண்ணான்னு பாசமா என்னையே சுத்தி சுத்தி வந்த பொண்ணு , இப்படி என் முதுகுல குத்துவான்னு நா நினைச்சே பாக்கல … ” என்று அமுதன் கோவத்தில் கையை மடக்கி, தன் தொடையில் குத்திக்கொள்ள , 

ஸ்ரீஜனோ ” உன்னோட வீக்நெஸ்ஸ தெரிஞ்சுக்கிட்டு அத நல்லா யூஸ் பண்ணிருக்கா … இதுகூட புரியாம , துரை அப்படியே பாசமலர் சிவாஜி கணேஷன் ரேஞ்சுக்கு ” தங்கச்சி தங்கச்சின்னு ” பாசத்த லிட்டர் கணக்குல பொழிஞ்சிருக்கீங்க … ” என்று அவனை கேலி செய்ய , 

தன் தவறை உணர்ந்த அமுதனோ ” ச்ச இவ பேச்ச நம்பி நா சரண கூட சந்தேகப்பட்டுடேனே … ” என்று வருந்த , அமுதனின் கூற்றில் அதிர்ந்த சரணோ ” எதே அவ பேச்ச கேட்டு தான் என்னை சந்தேகப்பட்டியா ? ” 

” ஆமா சரண் … அவ தான் நீ  கேஸ் பைல் பண்ணும் போது வேணும்னே உன் நேம்ம  யூஸ் பண்ணாம , அவ  நேம்ம மட்டும் யூஸ் பண்ணி கேஸ் பைல் பண்ணன்னு சொன்னா . அது மட்டுமில்லாம நீ என்னை யாருக்கும் தெரியாம பாலொவ் பண்ற விஷயத்தையும் அவ தான் என் கிட்ட சொன்னா ” 

அமுதன் கூறியதை கேட்டு கடுப்பான சரண் ” அட ச்ச அன்னைக்கு என்னமோ நீயே,  நா உன்ன பாலோவ் பண்றத கண்டுபிடிச்ச மாதிரி அப்படி பீத்துண்ண … கடைசியில அவ சொல்லி தான் உனக்கு நா உன்ன பாலொவ் பண்ற விஷயமே தெரிஞ்சுதா ? எப்பா சாமி பொய் சொல்லலாம் ஆனா ஏக்கர் கணக்குலலாம் சொல்லக்கூடாது. ச்ச நீ பண்ற வேலைய பார்த்தா எனக்கு சி.பி.ஐ ஆஃபீஸர்ஸ் மேலயிருக்க மரியாதையும் பயமும் சுத்தமா போயிடுச்சு … ” என்று தலையில் அடித்துக்கொள்ள , 

சரணின் புலம்பலை கேட்டு வாய் விட்டு சிரித்த ஸ்ரீஜன் ” உனக்கு இவன் சி.பி.ஐ ஆஃபீஸர்ன்னு எந்த பைத்தியக்காரன் சொன்னான் ? ” என்று வினவ , 

ஸ்ரீஜனின் கேள்வியை உள்வாங்கிக் கொள்ளவே சரணுக்கு ஒரு ஐந்து நொடி  பிடித்தது .

” வாட் அப்போ இந்த அமுதன் சி.பி.ஐ ஆஃபீஸர் இல்லையா ? ” என்று சரண் அதிர்ச்சியின் உட்சத்திற்கே செல்ல , ஸ்ரீஜனோ ” அடேய் நீயெல்லாம் ஒரு க்ரிமினல் லாயர்ன்னு இந்த கருப்பு கோட்ட போட்டுக்கிட்டு சுத்தாத … சரியான கிறுக்கு பயலா இருக்கியே ? ” என்று கேலி செய்ய , 

சரணோ ” இல்ல இல்ல … நா இத நம்ப மாட்டேன் … அப்போ அன்னைக்கு டெல்லிலயிருந்து சென்னைக்கு பிலைட்ல வந்து , ஏர்போர்ட்லயிருந்து சி.பி.ஐ ஆஃபீஸர்ஸ் யூஸ் பண்ற ஜீப்ல சும்மா ஹீரோ மாதிரி டிரைவ் பண்ணிட்டு வந்து தாஜ் ஹோட்டல்ல ரூம் புக் பண்ணி தங்குனியேடா … அத பார்த்து தான , நானும் நீ நிஜமாவே சி.பி.ஐ ஆஃபீஸர்ன்னு கன்பார்ம் பண்ணேன் … அட பாவி ஏன்டா என்ன ஏமாத்துன ? ” 

சரணை நோக்கி தன் முகத்தை பாவமாக வைத்துக்கொண்ட அமுதன் ” ” நா எப்போ சகல உன்ன ஏமாத்துனேன் ?  நீயா என்னை சி.பி.ஐ ஆஃபீஸர்ன்னு நினைச்சுகிட்டா நா என்ன பண்ண முடியும் ? ” 

” டேய் அமுதா .. ஒழுங்கா உண்மைய சொல்லு .. நீ சி.பி.ஐ ஆஃபீஸர் இல்லேன்னா , அப்போ நீ யாரு ? ” 

” ஆஹ் வெல் இட்ஸ் குய்ட் காம்ப்ளிகேட்ட் … அத நா எப்படி சொல்றது ? ? ” என்ற அமுதனுக்கு , 

” ஹ்ம்ம் வாயால தான் சொல்லுவாங்க … வேற எதுல சொல்லுவாங்க ? ” என்ற வல்லி பாட்டியின் குரல் கேட்க , அதில் கடுப்பான அமுதன் 

” ச்ச இந்த கிழவி எங்கயிருந்தாலும் எனக்கு கவுண்டர் குடுக்கணும்னா மட்டும் கரெக்டா வந்துடும் .. ” என்று தலையில் அடித்துக்கொள்ள , ” ஏன் டா சங்கு பயலே , சி.பி.ஐ ஆஃபீஸர்னா ஒரு முகலட்சணம் இருக்க வேண்டாம் .. இந்த முகரைய பாத்து நீ எப்படிடா சி.பி.ஐ ஆஃபீஸர்ன்னு நினைக்கலாமா ? ” என்ற வல்லி பாட்டியை பார்த்து , கோவத்தில் பல்லை கடித்த அமுதன் ” ஏய் கிழவி .. என்ன கொஞ்சம் விட்டா ரொம்ப ஓவரா பேசுற ? என் முகத்துக்கு என்ன குறச்சல் ? சர்வலட்சணமும் பொருந்துன சாமுத்திரிகா முகம் எனக்கு . இதையேவா கலாய்க்குற ? ” என்று சண்டைக்கு போக , பதிலுக்கு வல்லி பாட்டியும் அமுதனை ஏதோ சொல்ல வர , அதில் கடுப்பான சரணோ … ” அட ச்ச இப்போ ரெண்டு பேரும் உண்மைய சொல்ல போறீங்களா ? இல்ல நா அந்த உண்மையான சி.பி.ஐ ஆஃபீஸ்ருக்கு கால் பண்ணி உங்க வண்டவாளத்தையெல்லாம் தண்டவாளம் ஏத்தட்டா ? ” என்று கத்த , 

அமுதனும் , வல்லி பாட்டியும் ஓர் நம்முட்டு சிரிப்பு சிரித்துக்கொண்டே ” நீ ஒன்னும் கால் பண்ணியெல்லாம் கேக்க வேண்டாம். அந்த சி.பி.ஐ ஆஃபீஸ்ர்  உன் பின்னாடி தான் நிக்குறாரு … கம் ஆன் அபோர்ட்டன் ” என்று ஒருசேர கத்த , அவர்கள் இருவரும் கூறியதை கேட்டு அதிர்ந்த சரண் , பட்டென பின்னே திரும்ப , அங்கோ நம் ஸ்ரீஜன் , தன் கையிலிருந்த துப்பாக்கியை அழுந்த பற்றிக்கொண்டு , காக்க காக்க படத்தில் வரும் சூர்யாவை போன்ற பொஸிஷனில் நின்றுக்கொண்டு ” ஹாய் சரண் … ஐம் ஸ்ரீஜன் , சிபிஐ ஆஃபீஸர் …நா இத சொல்லியே ஆகணும் … நீ ஒரு அவ்ளோ அழகு   …. இங்க எவனும் இவ்ளோ அழகான  ஒருத்தன பாத்திருக்க மாட்டான் … அண்ட் ஐம் இன் … ” என்று ஏதோ கூற வந்தவனின் வாயை பொத்தியது வேறு யாரு , எல்லாம் நம் கௌரி என்னும் கௌரிதுர்கா தான்.

” டேய் மலக்குரங்கே … அவன்  என் ஆளுடா … எவ்ளோ தைரியமிருந்தா , என் ஆளுக்கு என் முன்னாடியே  ப்ரொபோஸ் பண்ண போவ … யூ கலப்ரிட் ” என்று குனிய வைத்து அவன் முதுகிலே நன்றாக மொத்து மொத்தென்று மொத்த துவங்கினாள். 

” ஐயோ ராட்சசி … வலிக்குதுடி விடுடி தடி மாடே … நா சும்மா உன்னையும் உன் ஆளையும் கலாய்க்க தான்டி அப்படி பண்ணேன் … வலிக்குதுடி விடுடி செனப்பண்ணி … ” என்று ஸ்ரீஜன் கௌரியுடன் கேலி பேசி விளையாட , இதை அனைத்தும் கண்டு பேந்த பேந்த விழித்துக்கொண்டு நின்றிருந்த சரணை நெருங்கிய அமுதன் ” ஏன் சகல , சப்டைட்டில் இல்லாம கொரியன் படம் பாக்குற மாதிரியிருக்குல்ல ” என்று அவனிடம் வம்பிழுக்க , அதில் மேலும் கடுப்பான

சரண் ” ஐயோ இங்க என்ன தான் நடக்குது ? எனக்கு தலையே வெடிச்சிடும் போல … ஒழுங்கு மரியாதையா எல்லாரும் உண்மைய சொல்லுங்க … இல்ல உங்க எல்லாரையும் அந்த கொடூரமான வில்லன் அதி ரூபன்க்கிட்ட புடிச்சு குடுத்துருவேன் ஜாக்கிரதை …. ” என்று கத்த , சரியாக அந்நேரம் மாடிப்படிகளில் ஸ்டைலாக இரங்கி வந்த அதி ரூபன் ” ஏன் தலைவா ? நம்மல இன்னுமா இந்த உலகம் நம்பிக்கிட்டு இருக்கு ? ” என்று சரணை பார்த்து கண்ணடித்துவிட்டு , அமுதனிடம் திரும்பி ஹாய்- பய் அடித்துக்கொள்ள , 

சரணோ ” யப்பா டேய் இப்பயாச்சும் என்ன நடந்துச்சுன்னு உண்மைய சொல்லுங்கடா. எனக்கு பைத்தியமே பிடிச்சிடும் போல ” என்று விட்டால் அழுது விடுவேன் என்பது போல் முகத்தை வைத்துக்கொண்டு சரண் நொந்து போன குரலில் பேச ,அவனை சுற்றியிருந்த அனைவரும் , 

” உனக்கு உண்மை தான தெரியனும் … இருடா இந்த மொத்த பிளானோட மாஸ்டர் மைண்ட் வராங்க அவுங்க கிட்டயே கேளு .. ” என்க , சரணும் ” யாரு டா அந்த மாஸ்டர் மைண்ட் ?  ” என்று கேட்டுக்கொண்டே திரும்ப , அங்கோ நம் வந்திதா , படையப்பா படத்தில் வரும் நீலாம்பரி போல் கண்ணில் திமிருடன் நடந்து வந்தவள், அங்கே போடப்பட்டிருந்த நாற்காலியில் கால் மேல் கால் போட்டு அமர , சரணோ அதிர்ச்சியின் உச்சத்தில் மயங்கி சரிந்தான்.

”  அட என்ன டா, நா பிளாஷ் பாக் சொல்லலாம்ன்னு எவ்ளோ ஆசையா இருந்தேன் தெரியுமா ? இவன் இப்படி பட்டுன்னு மயங்கி விழுந்து , என் திட்டத்தையெல்லாம் கெடுத்துட்டான். ச்ச வேஸ்ட் பெல்லொவ் ” என்று அமுதன் தலையில் அடித்துக்கொள்ள , அவன் அருகிலிருந்த அனைவரும் ” என்ன மறுபடியும் முதல்லயிருந்தா?” என்று தலை தெறிக்க ஓட ,அதில் கடியான அமுதன் ” போங்கடா … நீங்க யாரும் பிளாஷ் பாக் கேக்கலைன்னா என்னடா , எனக்கிருக்க கோடான கோடி ரசிகர்கள் என் பிளாஷ் பாக்க கேக்க காத்துக்கிட்டு இருக்காங்கடா. போடா டேய் போடா … நா போய் என் கதையில அந்த பிளாஷ் பாக்க கண்டினு பண்ணிக்குறேன் ” என்றவன் , கையில் பேப்பர் பேனா எடுத்துக்கொண்டு ஓர் பிள்ளையார் சுழியுடன் ஆரம்பித்தவன் , ” கஞ்சனடா கவிஞ்சா நீ!! ” என்று கதைக்கு தலைப்பிட்டு , ஒரு கொசுவத்தி சுருளுடன் , தன் கடந்த காலத்தில் நடந்த உண்மை சம்பவங்களை விவரிக்க துவங்கினான்.

இவன் ஒருபுறமிருக்க , ஸ்ரீஜன் வந்திதாவுடன் சேர்ந்து அக்கயவர்களை பிடிக்க திட்டம் தீட்ட துவங்கினான்.

தொடரும் …

உங்கள் கருத்துகளை ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கும் நான் உங்கள் பென்சிலு ….

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
3
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. Archana

      என்ன டா நடக்குது இங்க🤣🤣🤣🤣 அப்புறம் எதுக்கு டா அந்த பாட்டியே போட்டு இந்த பியூட்டி பாடா படுத்திச்சு இதுக்கு நடுலே இந்த கஞ்ச பையன் எக்சாம் எழுதி பாசானன்னு ஒரு பிட்ட போட்ட பார்ததியா🤣🤣🤣 உங்க குடும்பத்துக்குளையே பல ரகசியம் ஒரு ஒருதங்களுக்கு ஒவ்வொரு விதமா இருக்கு டா.