Loading

கஞ்சனடா கவிஞ்சா நீ!!
அத்தியாயம் – 19

ரத்த சிகப்பில்  குளித்தது போல் , காணும் இடமெங்கும் ரத்த துளிகள் தெளித்து காய்ந்து போயிருக்க , ஐந்து மாடிகளை கொண்ட அம்மாளிகை தனக்கே உரித்தான ஓர் வித அமைதியை தத்தெடுத்துக்கொண்டு,  அதன் வாயிலில் நின்றுக்கொண்டிருந்த  சரண் , நித்யா , அமுதனை பயமுறுத்திக்கொண்டிருந்தது.

 

சரணின் கண்களில் பயம் அப்பட்டமாக தெரிய , தன் அருகில் நின்றுக்கொண்டிருந்த அமுதனின் கரங்களை அழுந்த பற்றிக்கொண்டான்.

 

அமுதன் முயன்ற வரை சரணுக்கு தைரியம் கூறியவன் , அவன் கரங்களை அழுந்த பற்றிக்கொண்டு அவனுடன் அம்மாளிகையின் நிலக்கதவை அடைந்தான்.

 

” எனக்கு ரொம்ப பயமா இருக்கு சார் “ என்று சரண் பயத்தில் அமுதனின் கையை  சற்று வேகமாக இழுக்க ,  அவன் இழுத்த வேகத்தில் அமுதன் நிலை தடுமாறி , பற்றுதலுக்காய் நிலக்கதவை அழுந்த பற்ற , அவன் நேரம் , அதில் தொங்கிக்கொண்டிருந்த , பல சிகப்பு  கயிர்களுக்கு நடுவிலிருந்த  ஓர் தங்க மந்திர தகுடு , தரையில் விழுந்து சில்லு சில்லாய் நொறுங்கியது.

 

இதை சற்றும் எதிர்பாராத அமுதன் தரையில் உடைந்து கிடந்த அத்தகுடையே , தொண்டையில் உருண்டோடிய பயப்பந்துகளை அடக்கிக்கொண்டு பார்த்துக்கொண்டிருந்தான்.

 

இத்தனை நேரம் அத்தகுடையே உற்றுநோக்கி கொண்டிருந்த அமுதன் , அப்போது தான் நியாபகம் வந்தவன் போல் தன் பின்னால் நின்றுக்கொண்டிருந்த  நித்யாவை  நோக்க , அவளோ வியர்வையில் குளித்திருக்க , அவள் கண்களோ நிலகதவிற்கு மேல் மாட்ட பட்டிருந்த ஆறடி உயரத்திலிருந்த அக்கண்ணாடியில் நிலைகுத்தி இருந்தது.

 

” நித்யா என்னமா ஆச்சு ? ஏன் இப்படி நிக்குற ? என்னம்மா என்னாச்சு ?” என்று அவள் நிலை கண்டு பதறிய அமுதன் அவளை போட்டு உலுக்க , நித்யாவோ தன் வறண்ட தொண்டையை செருமிக்கொண்டு ஏதோ கூற முயன்றவள் , அது முடியாமல் போக , தன் வலது  கை ஆள் காட்டி விரலை உயர்த்தி அமுதனிடம் அக்கண்ணாடியை காண்பிக்க , அமுதனும் அவள் விரல் சென்ற திசையை நோக்க , அங்கே அவன் கண்ட காட்சி ….

 

பிறை நிலா போல் பறந்து விரிந்த நெற்றியில் ஓர் கருந்துளை உருவாகி , அதிலிருந்து சதுப்பு நில காடுகளின் சுந்தரி மரங்களின் வேர்களை உரித்துவைத்தது போல் , பச்சை நிறத்தில் நரம்பு முடிச்சுகள் வேர்விட்டுக்கொண்டிருக்க , அந்நரம்பானது ஒற்றை கல் மூக்குத்தி அணிந்த அக்கூர் நாசிகளை பிளந்துக்கொண்டு , லாவெண்டர் நிறத்தில் பளிச்சென்று பரவிக்கிடந்த அத்தடித்த உதடுகளின் வாயிலில் வந்து நிற்க , அவ்வுதடுகளுக்குள் சிக்கி தவித்துக்கொண்டிருந்த இரண்டடி செவ்வந்தி நிற தசை நாக்கு , தண்ணீரிலிருந்து வெளியில் போட்ட மீனை போல் துள்ளி குதித்துக்கொண்டு, வாயிலிருந்து  வெளியில் துள்ளி குதிக்க , அதன் வரவிற்காய் காத்திருந்தது போல் ,  இரண்டு மீட்டர் நீளம் கொண்ட அப்பச்சை நரம்புகள் அந்நாக்கோடு பிண்ணி பிணைந்துக்கொள்ள , கண்ணாடிக்குள் தெரிந்த அக்கோர உருவம் மெல்ல தன் கண்ணை திறக்க , அதில் விழி வெண்படலம் செஞ்சூரியனின் நிறத்தை தன் வசமாக்கி , கருவிழிகளை விடுத்து செந்தூர நிறத்தில் கொண்ட விழிகளுடன் , அனலை கக்கிகொண்டிருந்த அப்பெண் உருவம் அமுதனை நோக்கி மெல்ல மெல்ல முன்னேறியது …. 

கண்ணாடியில் அப்பிம்பத்தை கண்டு பயந்து நடுங்கிய நித்யாவும் , சரணும் , அமுதனை ஆளுக்கு ஒருபுறம் கெட்டியாக பிடித்துக்கொள்ள , சரியாக அந்நேரம் பார்த்து கதவை திறந்துக்கொண்டு அவர்கள் முன் வந்து நின்ற நெடியவனை கண்டு சரணும் , நித்யாவும் பயத்தில் அலற , அந்நெடியவனோ சற்றும் யோசிக்காமல் தன் கையிலிருந்த துப்பாக்கியை கொண்டு நித்யாவின் நெற்றிபொட்டில் பட்டென சுட்டுவிட , நொடி பொழுதில் நித்யாவின் உயிர் அவள் உடலை விட்டு பிரிந்திருந்தது.

கண்ணிமைக்கும் நொடியில் நடந்துமுடிந்த இந்நிகழ்வை கண்டு, சரண் அதிர்ச்சியில் உறைந்து நிற்க , நம் அமுதனோ முதுகில் மறைத்து வைத்திருந்த தன் துப்பாக்கியை எடுத்து அந்நெடியவனின் நேருக்கு நேர் நீட்டி 

” ஹவ் டேர் யூ ? நீ பாட்டுக்கு இப்படி பட்டுன்னு சுட்டுட்ட … ஒரு உயிரோட வேல்யூ தெரியுமா உனக்கு ? ” என்று கோவத்தில் கர்ஜிக்க , அந்நெடியவனோ , தன் முகத்தில் உறைந்திருந்த சிரிப்பை மாற்றாது , 

” எனக்கு இவ உயிரோட வேல்யூவும் தெரியும் , மிஸஸ் வந்திதா அமுதவாணன் உயிரோட வேல்யூவும் தெரியும் மிஸ்டர் அமுதவாணன் … ” என்க , 

அவன் குரலில் தெரிந்த உறுதியில் தன்னவளுக்கு ஏதோ நேர்ந்துவிட்டது என்னும் பயத்தில் , அந்நெடியவனின் கன்னத்தில் அறையப்போக, ஆனால் அமுதன் தன்னை அடிக்க வருவதை உணர்ந்து , பின்புறம் சாய , அமுதன் நிலை தடுமாறி அம்மாளிகைக்குள் தடுக்கி விழுந்துவிட்டான்.

இத்தனை நேரம் அமுதனை வெறுப்பேற்றிய அந்நெடியவன் , இம்முறை சரணை நோக்கி திரும்பியவன் , 

” என்ன சரண் ? உனக்கு உன் கௌரிய உயிரோட பாக்கணும்னு ஆச இருக்கா இல்லையா ? ” என்று வினவ ,

அவன் கேள்வியில் , கோவம் கொண்ட சரண்    

 ” டேய் …. என் கௌரிக்கு மட்டும் ஏதாச்சும் ஆகியிருந்துதுன்னு வை … மவனே உனக்கு என் கையால தான்டா சாவு … ” என்று ஆக்ரோஷமாக அவனை எச்சரிக்க , ஆனால் அந்நெடியவனோ , அவனை பார்த்து நக்கலாக ஓர் பார்வை வீசியவன் 

” அது சரி … அப்போ அவ்ளோ தைரியமிருந்தா , நீயே நேரா வந்து அவளுக்கு என்னாச்சுன்னு பாக்க வேண்டியது தான … ” என்று வினவ , 

பதிலுக்கு சரணோ ” அது அ …து …அது … ” என்று உளற துவங்க , 

” என்ன கிரிமினல் லாயர்  சரண் தேவ் … நாக்கு ஏன் இவ்ளோ ரோலாகுது ? “

” டேய் நீ எல்ல மீறி போயிட்டிருக்க … ஒழுங்கு மரியாதையா அந்த பேய்ய வெளியில அனுப்பு , அப்போ தான் நா உள்ள வர முடியும் . ” 

” எது பேய்யா ? ” என்று அந்நெடியவன் புரியாமல் விழிக்க , 

” ஆமா , உன் தலைக்கு மேலயிருக்க அந்த கண்ணாடியில தான் அந்த பேய்யிருக்கு … அங்க பாரு , இப்போ கூட அது என்னை பார்த்து தான் முறைக்குது .. “

 அவன் கூறிய தினுசில் வாய் விட்டு சிரித்த அந்நெடியவன் ” ஐயோ , நா கூட நீ கௌரியோட ஆளா இருக்கறதுனால லைட்டா டெரர் பீஸா இருப்பேன்னு நினச்சேன்டா … ஆனா நீ இப்படி ஒரு டம்மி பீஸா இருப்பேன்னு நா எக்ஸ்பெக்ட் பண்ணவே இல்லடா ” என்க ,

” டேய் இந்த நக்கலெல்லாம் என் கிட்ட வேணா . ஒழுங்கு மரியாதையா அந்த பேய்ய விரட்டி விடு , அப்போ தான் நா உள்ள வந்து என் கௌரி செல்லத்த பார்க்க முடியும் .. ” 

” அடேய் நீயும் அவனும் இந்த கதையோட ஹீரோஸ்டா , உங்க ரெண்டு பேருக்கும் அது நியாபகமிருக்கா ? ” 

” டேய் நீ தேவையில்லாத விஷயத்த பத்தி பேசிகிட்டு இருக்க … ஒழுங்கு மரியாதையா அந்த பேய்ய முதல்ல விரட்டி விடு .. “

” அட ச்ச , அடேய் கண்ணு தெரியாத குருட்டுபயலே … அது பேய்யில்லடா … வீட்டுக்கு திருஷ்டி வர கூடாதுன்னு கட்டுன்ன திருஷ்டி பொம்மடா … ” என்று அந்நெடியவன் தலையில் அடித்துக்கொள்ள , 

” ஏதே திருஷ்டி பொம்மையா ? அட ச்ச அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய் மாதிரின்னு சொல்லுவாங்க … அது மாதிரி ஏற்கனவே பயத்துலயிருந்த எனக்கு , ஆப்டெரால் ஒரு இருவது ரூபா திரிஷ்டி பொம்மை கூட பேய் மாதிரி தெரிஞ்சிருக்கு … ஐயோ ஏற்கனவே நாமலும் ஒரு ஹீரோனா இந்த உலகம் நம்பாது , இதுல நா திருஷ்டி பொம்மைக்கு பயந்த மேட்டரெல்லாம் வெளிய தெரிஞ்சா , என் அருமை பெருமைக்கெல்லாம் பங்கம் வந்துருமே … ” என்று மைன்ட் வாயிசில் தனக்கு தானே பேசிக்கொண்டிருந்த சரணின் முகபாவனைகளை கண்டு அந்நெடியவன் வயிற்றை பிடித்துக்கொண்டு சிரிக்க துவங்கினான்.

அதே நேரம் , அம்மாளிகைக்குள் அமுதனின் கர்ஜனை உரக்க ஒளித்துக்கொண்டிருந்தது 

” டேய் யாருடா நீ ? எதுக்குடா இதெல்லாம் பண்ற ?  ஏன்டா நித்யாவ கொன்ன ? என் வந்திக்கு என்னாச்சு ? கௌரி , பத்மா அத்தை , வல்லி பாட்டியெல்லாம் எங்கடா ? ” 

” ஸ்யபா டேய் நீ உன் மூளைய வீட்டுலையே பூட்டி வச்சிட்டு வந்துட்டியா ? ” என்று அந்நெடியவன் அமுதனை நோக்கி வினவ , அதில் வெறுப்பான அமுதன் , அவனை ஏதோ திட்ட வர , 

மறுநொடியே அந்நெடியவன் தன் கையிலிருந்த துப்பாக்கியை கொண்டு , நித்யாவை வெறி கொண்டவன் போல் மீண்டும் மீண்டும் சுட்டவன் 

” நீ மட்டும் உன் மூளைய ஒழுங்கா யூஸ் பண்ணிருந்தா , இந்நேரத்துக்கு தேவஸ்வரூபியும் , என் தம்பி நிரஞ்சனும் அந்த சேஷாத்ரி பிரதர்ஸ்க்கு சோதனை எலியா மாறி , தினம் தினம் செத்து பிழைக்க வேண்டிய அவசியம் வந்திருக்காதுடா ” என்று அமுதனை பார்த்து கத்தியவன் , அடுத்து சரணின் புறம் திரும்பியவன் 

” நீ மட்டும் அன்னைக்கு இந்த துரோகி நித்யா பேச்ச கேட்டு ரூபிய அந்த இன்ஸ்டிடியுடுக்கு அனுப்பாம இருந்திருந்தா , இந்நேரம் என் தேவன் ஐயாவோட பேத்தி கௌரிதுர்கா அரை பைத்தியமா மாறியிருக்க மாட்டாடா ” என்று ஹிஸ்டீரியா வந்தவன் போல் கத்தியவன் , 

நித்யாவின் புறம் திரும்பி , அவள் இறந்தது அறிந்தும் கூட , மீண்டும் மீண்டும் தன் துப்பாக்கியை கொண்டு அவளை சுட்டவன் 

” நித்யகல்யாணி ராம சேஷாத்ரி … நம்பிக்கை துரோகி …. உன்ன கொன்ன மாதிரியே , உன் அப்பன் வெங்கடராம சேஷாத்ரியையும் , உன் பெரியப்பன் அத்வெய்தராம சேஷாத்ரியையும் கொன்னு , என் தம்பி நிரஞ்சனையும் , அவன் கூட சேர்ந்து அந்த நரகத்துல உயிர் போற வலிய அனுபவிச்சிக்கிட்டு இருக்க , என்னை மாதிரி அனாதைங்களையும்  அந்த நரகத்துக்குள்ளயிருந்து நா வெளிய கொண்டுவரல … என் பேரு ஸ்ரீஜன் இல்லடி ”  என்று கர்ஜிக்க , அவன் கூறிய செய்தியிலும் , அவன் குரலிலிருந்த உறுதியையும் கண்டு அமுதனும் , சரணும் அதிர்ந்து போயினர்.

யார் இந்த ஸ்ரீஜன் ?

தொடரும் …

உங்கள் கருத்துகளை ஆவலுடன் எதிர் நோக்கி காத்திருக்கும் நான் உங்கள் பென்சிலு ….

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
4
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. ஏன் இந்த ஸ்ரீஜன் அந்த ரூபனா இருக்க கூடாது🤔🤔🤔

      1. Author

        Always expect the unexpected …. but rendu perum vera vera dhaan sweety ….