Loading

“ஏ வண்டிய நிறுத்துடா… என்ன சிக்னல்ல கூட நிறுத்தாம வேகமா போயிட்டு இருக்க பின்னாடி ஒரு பொண்ணு இருந்தா போதுமே அப்படியே பறக்க வேண்டியது” என பிரவீனின் வண்டியை நிறுத்தி கேட்டார் டிராபிக் போலீஸ்.
“என் மனைவிக்கு பிரசவ வலி வந்துடுச்சு அதான் ஹாஸ்பிடலுக்கு வேகமா போயிட்டு இருக்கோம்” என பதட்டத்துடன் சொன்னான் பிரவீன்.
“என்னடா ஏதோ டேட்டிங்கு போற மாதிரி சாதாரணமா பைக்குல கூட்டிட்டு போற” என ஆச்சரியமாக கேட்ட டிராபிக் போலீஸ் அப்போது தான் யாழினியை கவனித்தார்.
நிறைமாத கர்ப்பிணியான யாழினி மெதுவாக இருசக்கர வாகனத்திலிருந்து கீழே இறங்கி “பிரவீன் முடியல சீக்கிரம் போலாம்” என் இடுப்பில் கை வைத்தபடி வலியுடன் சொன்னாள்.
                                                                                       *********

“தம்பி பிரசவ வார்டு ஐந்தாவது மாடியில் இருக்கு, வீல்சேர் எதுவும் கிடைக்கல லிஃப்டும் ஒர்க் ஆகல, ஒரு அஞ்சு நிமிஷம் பொறுங்க” என வார்டுபாய் சொன்னார்.
“இவ்வளவு பெரிய ஆஸ்பிடல்ல ஒரு எமர்ஜென்சிக்கு கூட வீல்சேர் கிடைக்கலனு அசால்ட்டா சொல்லுறீங்க” என கோபமாக சொன்ன பிரவீன் யாழினியை இரு கைகளில் ஏந்தியபடி வேகமாக பிரசவ வார்டுக்கு செல்ல படி ஏறினான் .
அவனின் செயல் யாழினிக்கு ஆச்சரியத்தை தந்தது. அவனையே பார்த்துக் கொண்டே சொன்னாள் “ஒன்னும் கவலைப்படாதீங்க… நல்லபடியா குழந்தை பொறந்துடும், எனக்கு ஒன்னும் ஆகாது”

“யாரு இப்ப கவலைப்பட்டா யப்பா…வெய்ட் தாங்கல குழந்தை பெயரை சொல்லி சொல்லி வகைவகையாக சாப்பிட்டு நல்ல வெயிட் ஏறிட்ட” சிரித்துக்கொண்டே சொன்னான் பிரவீன்.

                                                                                            **********
பிரசவ வார்டுக்கு வெளியே நின்று கொண்டு “ஆத்தா.. மாரியாத்தா…. முதல் குழந்தை ஆம்பள புள்ளையா பொறக்கணும்” என மனம் உருகி வேண்டினாள் ஆண்டாள்.
“அம்மா ஆம்பள புள்ளையா பொம்பள புள்ளையானு கரு உருவாகும் போதே முடிவாகிவிடும் குழந்தை பொறக்குற நேரத்துல உன் மாரியாத்தா நினைச்சாலும் ஏதும் மாத்த முடியாது. ஆம்பளப் புள்ளையா இருந்தா என்ன… பொம்பள புள்ளையா இருந்தா என்ன… நல்லபடியா பொறந்தா போதாதா என்றான் பிரவீன்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
5
+1
2
+1
3

  உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

  9 Comments

    1. xmaxtree vedi

     super laks… Haaa silent oru periya dialogue sollitingaa… Oru visiyatha palathadaava sollupothu athu nalla pathijirum… So super

  1. hani hani

   பிள்ளை பேறு… அற்புதமான வரம்.. எல்லாமே பிள்ளைங்க தான். ஆணா இருந்தா என்ன பொண்ணா இருந்தா என்ன ? வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️❤️

  2. சில்வியா மனோகரன்

   அப்ப தலைப்புலே தெரிஞ்சுடுச்சு … பெண் னா வச்சு செய்ய போறாஙாகளா இல்ல வேற காண்சீட்ப்ட் அ 🙄🙄
   பாப்போம் … நமக்குச் சொல்லாம எங்க போவாங்க ‌‌‌‌‌😌😌😜😜

   ப்பா பிரீவீன் உன்னோட பாசத்த பாத்து எனக்கு சளி பிடிக்காம இருந்தா சரி … 😜😜💝💝
   யாழினி மா … நல்லா சாப்டு சாப்டு என்ஜாய் பண்ணுன போலயே 😉😉

   பாட்டி மா… உனக்கு பேரக்குழந்தை வேணும் னா நீயும் பையனா பிறந்துருக்கலாமே 😉😉😜😜
   மீ எஸ்கேப் 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️

   ****

   பெண்ணென்றால் ஏன்
   இந்த மு(அ)கச்சுருக்கம் ?… – இதைச்
   சொல்லும் நீயும் பெண்ணே
   என்று உணர்ந்திடுவாயோ
   மனுக்குலமே …