என்னை விட்டுப் பிரியாதே !! ❤️
டீசர் – 2
சித்தார்த் கூறிய வார்த்தைகளே ரிங்காரமாய் அவள் காதில் மீண்டும் மீண்டும் ஒலித்தது . இதுவே தன் கண்ணாவுடன் வாழ்ந்திருந்தால் நினைக்கவே இனித்தது அவளுக்கு . இந்த உலகத்தில் தன்னை விட மகிழ்ச்சி கொண்டவர்கள் இல்லை என்று அடித்து சத்தியம் செய்து கூற தயங்க மாட்டாள் , அவ்வளவு காதல் . வார்த்தைகள் பரிமாறி கொள்ள வில்லை என்றாலும் காதல் … காதல் தானே !! . பார்காமல் காதலித்தாளே , அவனை பார்த்த பின்பு இன்னும் கூடியது . அவன் முகத்தில் விழும் சிரிப்பிலே தொலைந்து போவாள் .
இன்று சித்தார்த் பேச்சில் உடைந்து போனாள் . அதனாலே , நேரத்தை தாழ்த்தாது நாளை முதல் பகுதி நேர வேலையை தேட வேண்டும் என்று முடிவு செய்தாள் மகி .
❤️
” நீ சொல்லுருரத கேட்க முடியாது …கண்டிப்பா என்னால இதை பன்ன முடியாது … கண்டிப்பா முடியாது ” என்று கதிரவன் கண்ணீர் வடிய கூற , அதை சிறிதும் பொருட்படுத்தாது மிருகத்தின் பாதி குணம் கொண்டவனோ
” நீ பெத்து பாசம் கொட்டி வளர்த்த பொன்னு என்கிட்ட தா இருக்கானு மறந்திறாத ..அந்த சித் ரெடி பன்னிருக்க டாக்குமெண்ட் அப்பரம் நா கேட்டது எனக்கு இரண்டு நாள்ல கிடைக்கனும் ….இல்லேனா …சொல்ல வேண்டிய அவசியம் வராதுனு நினைக்கிறேன் ” என்றவன் அவரின் பதிலையும் எதிர் பாராது போனை பட்டென்று துண்டித்தான் .
❤️
அதித போதையில் கண்மண் தெரியாமல் பிதற்றிக் கொண்டு வருபவனை பார்க்கவே பாவமாக இருந்தது . அனைவரும் முகத்தில் சந்தோசத்தை பார்க்க நினைப்பவனுக்கு ஏன் இவ்வளவு துக்கங்கள் என்று புரியவில்லை சந்துருவிற்கு . காதலையும் இழந்து விட்டான் , இன்று நடந்ததை நினைக்கவே கூட இருந்த அவனுக்கே வலித்தது அப்போது சித் ற்கு எவ்வளவு வலிக்கும் என சந்துருவால் உணர முடிந்தது . ஆனால் , கவலைகள் மறப்பதற்கு குடிப்பது அதற்கான தீர்வாகாதே !! … நாளை இதை பற்றி தன் நண்பன் சித்தார்திடம் பேசவேண்டும் என்று பல சிந்தனைகளை மூளைக்குள் ஓட விட்டவாறே வந்தவன் நேராக விடியற்காலை ஐந்து மணிக்கு சித்தார்த் வீட்டின் முன் காரை நிறுத்தினான் .
காரின் கதவை திறந்து மறுபக்கம் போதையில் இருந்த சித்தார்த் ஐ இறக்கியவன் அவன் ஒரு கையை தோளில் போட்டி தாங்கலாக வீட்டிற்குள் அழைத்துச் சென்றான் . சித்தார்த் ஆடிய ஆட்டத்திற்கு எவன் குடித்தவன் என்று எதிரே உள்ளவர் நிச்சியம் கண்டு பிடிக்க முடியாது . முதல் குடி அல்லவா !! .
❤️
” கண்டிப்பா அவன் வெற்றிக் கொள்ள கூடாது … இயற்கை உரம் , இயற்கை வேளாண்மை , மண்ணு , தாவரங்கள் , மக்கள் நலன்னு அழையுரான்ல நாளைக்கு எதுவும் இருக்க கூடாது . இயற்கை இயற்கைனு போனா நம்ம எப்படியாம் சம்பாரிக்குறது . முடிஞ்சா அவனையும் சேர்த்தே முடிச்சிட்டு வாங்க ” என கூறி சிரித்தவன் , வீட்டிற்குள் சென்று சமைத்துக் கொண்டிருந்த தன் புது மனைவியை கட்டிக் கொண்டான் .
❤️
மருத்துவமனையில் அனுமதித்த தன் தோழி சந்தியாவை பார்க்க வந்தவள் நலம் விசாரிக்காமல் கன்னத்தில் ஐ விரல் பதிய ஓங்கி ஒரு அறையை விட்டாள் . அடித்தும் கோபம் குறைய வில்லை . காதலித்தவன் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் உடனே இறந்து விட வேண்டுமா என்ன .. என்ற ஆதங்கம் அதிகம் இருக்க தன் தோழியை மீண்டும் அடிக்க கை ஓங்கியவள் ..சந்தியாவின் வதங்கிய முகத்தை பார்த்து அவள் அருகே சென்று கட்டிக் கொண்டாள் மகி .
❤️
” ஏய் …அங்கேயே நில்லு டி பக்கத்துல வந்த அவ்வளவு தான் ..நீ மட்டும் ஏன் இன்னும் இருக்க நீயும் போ ..என் காதலும் என்ன விட்டு போயிருச்சு ..நா இப்போ வர உயிருக்கு உயிரா நேசிச்சதும் காதலிச்சதும் இன்னைக்கு இல்லாம போச்சு…நீயும் போ ” என்றவாறே போதையுடன் மெத்தையில் சரிந்தான் சித்தார்த் கிருஷ்ணன் .
பிரியாமல் தொடரும்…😍💋
உங்களின் புல்லட் வெடி 😁
I’m waiting for ur story…🔥&more exciting…💯😍❣️………..2treaser are very nice &while reading ur treaser very excited✨ what happened next……………💯.can’t wait 🥺plss post the story lot of memebers are waiting…💯👍🙈✌️💌💞…
நன்றி சகி 🥰🥰
Super da ma 😊😊
Waiting for the full story 😍😍
😁😁😁😁 Thankyou 🥰❤️
நன்றி சகி 🥰🥰😁❤️
ரெண்டு டீசரூம் நல்லா இருக்கு😍😍😍 இந்த “சித்”தே இவ்வளவு பீல் பண்ண விட்ட அந்த அமி பொண்ண எனக்கே பார்க்கனும் போல இருக்கு 😆😆.
நன்றி சகி 🥰🥰😁
கனியின் கனிந்த மொழியின் கதையை கேட்க மேலும் ஆர்வம் அதிகரித்க்கிறது💙
-நசி💙
நன்றி சகா 🥰🥰😁
மிக அருமை ❤❤❤❤
நன்றி 😁😁❤️❤️❤️🥰
யாருமா நீ எனக்கே உன்ன பாக்கணும் போல இருக்கு … அந்த புள்ளய இவ்வளவு குடிக்க விட்டு போனியே தங்கமே … ஞானத்தங்கமே 😜😜😂😂😝…
இதான் டா குடிச்சுட்டு வர்ற புள்ளையள தாங்கப்போனா கடைசில எவன் குடிச்சான்னே கண்டுபிடிக்க முடியாதே 🤭🤭🤭
இரண்டு டீசரும் வேற லெவல் ❣️💕💕👏👏
மிக்க நன்றி சகி 🥰🥰😁❤️