Loading

அத்தியாயம் பதினைந்து

 மகி அறை : 

அழுது அழுது சோர்வடைந்து அப்படியே சாய்ந்து உறங்கி போனாள் பேதை  . கதிரவன் தன் மகளை சாப்பிட அழைக்க வந்து மகியின் அறை கதவை திறக்க , மகள் அமர்ந்த வாரு உறங்கிக் கொண்டிருப்பதை பார்த்து  மகி அருகில் சென்றார் . 

” மகி… மகி எழுந்திரு…வா சாப்பிட்டு தூங்கலாம் ” என்ற அவர் சத்தமாகவே தான் அழைத்தார் . குயிலவளிள்  அழுத சோர்வினாள் அவள்  செவிகளுக்கு கேட்க வில்லை . இரண்டு முறை உறைக்க அழைத்து பிறகே எழுந்து அமர்ந்தாள் . விழிகள் கோவை பழமாய் சிவந்து இருக்க , கதிரவன் தான் பதறி விட்டார் .

” மகி … என்னாச்சு எதாச்சும் பிரச்சனையா ?  அப்பா கிட்ட சொல்லுடா நீயே அழுது உன்னை கஷ்டப்படுத்திக்காத டா …” என்று அவர் கேட்க , தன் தந்தையின் விழிகளை பார்த்தவளுக்கு மீண்டும் கண் கலங்கியது . 

” சரி எதுவும் சொல்ல வேண்டாம் வா சாப்பிடலாம் ” 

” இல்..லை பா வே..ண்டாம் .. நீ..ங்க சாப்பிடுங்க ” என்றாள் உடைந்த குரலில் . எப்போதும் அனைத்தையும் விளையாட்டாக எடுக்கும் மகி இப்படி இருப்பதை பார்த்து கவலையாக இருந்தாலும்  , மகளை  தொல்லை செய்ய விரும்பாமல் அவர் கிளம்பினார் . 

அடுத்த நிமிடம் அடக்கி வைத்திருந்த கண்ணீர் கன்னத்தை நனைத்தது அருவியாய் ஓடியது . அதை அழுந்த துடைத்து

” இல்ல மகி எதாச்சும் முக்கியமான வேலையா இருக்கும் உன் கண்ணா கண்டிப்பா வேலை முடிஞ்சதும் சாரி  கேட்பான்  ” என்று தனக்கு தானே ஆறுதல் கூறினாலும் கண்ணீர் மட்டும் அவள் பேச்சை கேட்க வில்லை .ஏதோ மனதிற்கு உறுத்தலாகவே இருந்தது . மிகவும் கடினபட்டு கண்ணீரை கடுப்படுத்தியவள் உறங்க நினைக்க , எங்கே வந்த அசதியான தூக்கமும் இப்போது போய் விட்டது . இப்போது மூளை , மனது என இரண்டையும் தன் கண்ணாவை பற்றி நினைவுகள் பட்டாம்பூச்சியாய் வட்டம் அடிக்க எங்கிருந்து தூக்கம் வரும் . சித்தின் நினைவிலே இருந்தவள் எப்போது தூங்கினாள் என்று தெரியவில்லை . காலையில் அவசரமாக செல்வி எழுப்பும்போதே உணர்வுக்கு வந்தாள் . 

 சித்தார்த் வீடு

” அம்மா எவ்வளவு நேரம் தான் கிளம்புவிங்க  சீக்கிரம் வா மா ” என்று குட்டிப் போட்ட பூனையாய் வீட்டில்  குறுக்கும் நெடுக்குமாக நடந்தான் . 

” உன்ன எல்லாம் காதலிக்குறேனு சொன்னதும் திட்டாம  உன் பேச்ச கேட்டு பொண்ணு கேட்க கிளம்புறோம்ல எல்லாம் பேசுவ டா ” என்று சலித்துக் கொண்டார் ராதை . 

” என் செல்ல அம்மாவே  என்ன பண்றது  ஒரே பதட்டமா இருக்கு  அவ எப்படி ரியாக்ஷன் குடுப்பானு நினைச்சாலே சும்மா ஜிவ்வுன்னு இருக்கு ” என்று சிலாகித்து கூறினான் சித் .

” சரி டா பொண்ணு பேரு என்ன ? ” தன் மருமகள் பெயரை‌ கேட்க , தன் மகன் உதட்டை பிதுக்குவதை பார்த்து தலையில் அடித்துக் கொண்டார் . 

” மச்சான் என்ன நிம்மதியா சாப்பிட கூட விடாம கூப்பிட்ட  நீங்களே இன்னும் கிளம்பளையா ” என்றவாறே உள்ளே நுழைந்தான் சந்துரு. 

” அட இரு டா மச்சான் , அதெல்லாம் கிளம்பிட்டோம்  நானே என் ஆள பாக்க போற சந்தோசத்துல இருக்கேன் ” என்று வெட்கம் பட்டுக் கூறும் நண்பனை பார்க்க சிரிப்பாக வந்தது .

” மச்சான் நா வெளிய இருக்கேன் டா . அந்த பொண்ணு முன்னாடி இப்படி வெட்கப்பட்டுறாத ” என்று கூறி ஒரே ஓட்டமாய் வெளியே வந்து விட்டான் . மூவரும் பல அட்டகாசங்கள் செய்து மகி வீட்டை வந்து அடைந்தனர் . 

மகியின் வீடு :

” டேய் உன் ஆளு வீடு தா இல்லேன்னு சொல்லல  , அதுக்குனு உள்ள போய்ருவியா  இரு டா  பெல் அடிப்போம் ” என சந்துரு கூறி சுவிட்சை அழுத்த கதிரவன் தான் வந்தார் .

” உன் மாமா போல டா  ” என்று சித் காதில் முனுமுனுக்க , ராதை தான் அதட்டினார் அமைதியாக இருக்கும் படி 

” யாரு நீங்க  என்ன வேனும் ” என்று வழமையான கேள்வியையே அவரும் கேட்க 

” முக்கியமான விசியமா வந்திருக்கோம்  உள்ள வந்து பேசலாமா ” என்று ராதை கேட்க , அவரும் யோசித்த வாரு தலை அசைத்தார் . அவர்களின் உடையிலையே தெரிந்தது அவர்களின் செழுமை .  தன் மனைவியிடம் காபியை போட கூறியவர் 

” சொல்லுங்க என்ன விசியம் ” என்று கேட்க 

” உங்க பொண்ணு  வேணும் ” என்று சட்டென்று சந்துரு கூற , சித் தலையில் அடித்துக் கொண்டான் . ராதா முறைப்பதை பார்த்து சந்துரு நல்ல பிள்ளையாக வாயில் விரலை வைத்துக் கொண்டான் . 

” அது எங்க பையனுக்கு உங்க பொண்ண கேட்டு வந்துருக்கோம் ” என்றார் ராதா .

” அது ..அது ..அவங்க இப்போ தான் ஃபைனல் இயர் படிக்குறாங்க ” என்றார் சற்று அதிர்ச்சியாக.  அதற்குள் தன் மகள்கள் வளர்ந்து விட்டார்களா என்றே அவர் மனதில் ஓடியது   , கிட்சனுள் உள்ளே இருந்த செல்விக்கும் அதே யோசனை தான் .

” அதுக்கு என்ன சம்மந்தி எங்க வீட்ல இருந்தே படிக்கட்டும் ” கல்யாணம் முடிவு செய்யாமலே சம்மந்தி என்று அழைப்பவரை  சித்தும் சந்துருவும்  தான்  ‘ செம்ம கலக்குறிங்க மா  ‘ என்பது போல் பார்த்தனர் . அவரே மீண்டும் தொடர்ந்தார்

” இது என் பையன் சித்தார்த் கிருஷ்னன் , SK கம்பெனி எல்லாத்தையும் பாத்துக்கிறான் . நா அவங்க அம்மா ராதை , அவங்க அப்பா பிஸ்னஸ் விசியமா வெளியூர்  போய்ருக்காங்க அதான் வர முடியல .அது சந்துரு சித் ஓட ஃபிரண்ட் . எங்களுக்கு உங்க பொண்ண ரொம்ப பிடிச்சிருக்கு அதான் தாமதிக்காம வந்துட்டோம் ” என்று தன் உரையை முடித்தார் . 

மகியின் தந்தைக்கோ அதிர்ச்சி தான் எவ்வளவு பெரிய இடம் இன்று வீடு தேடி வந்தே பெண் கேட்கிறார்களே என்ற ஆச்சிரியம் கூட 

” ரொம்ப யோசிக்காதிங்க  மாமா எங்க வீட்டுக்கு வந்தாலும் அவ இஷ்டப்படி இருக்கலாம் ” என்று புன்னகையுடன் கூறினான் சித் . 

அவனை பார்த்ததும் பிடித்து விட்டது கதிரவனுக்கு இருந்தாலும் அவர்களின் தகுதி வேறு நாம் நடுத்தர மக்கள் என்றே யோசித்தார் . 

” அது இல்லைங்க உங்க ஸ்டேட்ஸ் வேற ” என்று கூறும் போதே வழி மறித்தான் சித்

” மாமா இன்னைக்கு பணம் வரும் நாளைக்கே  போகும் , ஸ்டேட்ஸ் லாம் பாக்காதிங்க  உங்களுக்கு சம்மதமா மட்டும் சொல்லுங்க ” 

‘  மாமாவ எப்படி கவுக்குறான் பாரு … உனக்கு இப்படி திறமை இருந்தா நீ தான் எப்பவோ கல்யாணம் பன்னியிருப்பியே !! வாய் மட்டும் தான் டா உனக்கு ‘ என்று தனக்குள் புலம்பினான் சந்துரு .

” அது எல்லாம் சரி தான் தம்பி இருந்தாலும் ” என்று அவர் இழுக்க 

” வேற என்ன மாமா உங்களுக்கு சரி தானே … அத்தை உங்களுக்கு ” என்று ஹாலில் இருந்தவாறே உறைக்க கேட்க , அவரும் கதிரவனின் இஷ்டம் என்று விட ,அவரின் பதிலுக்காக தான் காத்திருந்தனர் . 

” எனக்கு ஓகே தான் சம்மந்தி ” என்று புன்னகையுடன் கூற , அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சி தாண்டவம் ஆடியது . 

” அப்போ என்ன சம்மந்தி  வாங்க நிச்சியம் பண்ணிக்கலாம்  ” என்று ராதா, ஒரு  குண்டை தூக்கி போட

” என்ன சம்மந்தி அதுகுள்ள எப்படி ” 

” உங்களுக்கு சம்மதம் தானே ?  கல்யாணத்தை பெரிசா வச்சுக்கலாம் . விட்டா உங்க பொண்ணை இப்போவே ஒருத்தன் எங்க வீட்டுக்கு கூட்டிட்டு வந்துருவான் ” என்று கூறி சித்தை பார்க்க அவனுக்கே அது அதிர்ச்சி தான் . பெண் கேட்க வந்த இடத்தில் அம்மா நிச்சயம் பண்ண நினைத்ததற்கு ஒரு நன்றியை மனதில் நினைத்தவன் அவர்கள் முன் அசடு வழிந்தான் . 

” அது .. அது …”  என்று கதிரவன் தன் மனைவியை பார்க்க , அவரும் கண்ணை சிமிட்டி சம்மதம் தெரிவித்தார் 

” சரிங்க சம்மந்தி ..எந்த பொண்ண நீங்க உங்க வீட்டுக்கு வரனும்னு நினைக்குறிங்க ” என்று முக்கியமான கேள்வியை கேட்டார் கதிரவன் .

” உங்க பொண்ண தாங்க சம்மந்தி ”  என்று வெகுளியாய் ராதா கூற, கதிரவனுக்கு தான் குழப்பம் வந்தது.

” எனக்கு ரெண்டு பொண்ணு சம்மந்தி ” என்றதும் ராதை கேவலமாக தன் மகனை பார்க்க , சித்தோ திரு திருவென முழித்தான் . பெயரும் தெரியாது , என்ன செய்கிறாள் என்றும் தெரியாது இப்போ என்ன செய்வது என்று யோசித்தவன் 

” அது கால்ல அடி பட்டுருக்குற பொண்ணு ” என்று கூறி குனிந்துக் கொண்டான்

” ஏண்டா  பொண்ணு  பேரு தெரியாம தான் நிச்சயம் பண்ண வந்தியா ”  என்று சத்தமாக சந்துரு கேட்க  , செல்வி சிரித்து விட்டார் .  சித் அசடு வழிய 

” ஓஓ அமிழ்தினியா ? சரிங்க எங்களுக்கு சம்மதம் தான் ” என்று தன்‌ முடிவை கூறி அமிழை கிளம்ப கூறி தன்‌ மனைவியிடம் கூறினார் . சித் அமிழ்தினி என்ற பெயரையே பல முறை உதிர்த்து பார்த்தான் . 

” ஏண்டா இப்போ பேர் வைக்குற பங்சன் மாறி இத்தனை தடவ அந்த பொண்ணு பேர சொல்லுற ” என்று சந்து சித் காதில் கிசு கிசுக்க 

” அவ்வளவு சத்தமாவா மச்சான் இருக்கு ” என்றபடி அசடு வழிந்தான் மகியின் மன்னன்.

” அந்த பொண்ணுக்கே கேட்ருக்கும் ” என்று அவன் கலாய்க்க , எல்லாம் என் நேரம் என்று நினைத்து கொண்டான் சித் . 

____

” மகி…  மகி ..எந்திரி டி அக்காவ பொண்ணு பார்க்க வந்திருக்காங்க ” என்று மகியை எழுப்ப , பதறி அடித்துக் கொண்டு எழுந்தாள் . இன்னும் முகத்தில் சோகமே குடி இருந்தது.

” ஏன்டி‌ அதுக்குள்ள சோகமாகுற நிச்சயம் பண்ண போறாங்கலாம்  …குளிச்சிட்டு அமிழை ரெடி பண்ணு  நா அவள எழுப்ப போறேன் ” என்ற படி அமிழ்தினி அறைக்கு சென்றார் . அமிழ்  ஏற்கனவே குளித்து அமைதியாக செல்பேசியில் மண்டையை நுழைத்து  அமர்ந்தே இருந்தாள் 

” அமிழ் சேரி எடுத்து கட்டு  மாப்பிள்ளை வீடு வந்துருக்காங்க ” என்றவுடன் அதிர்ந்து விட்டாள் அமிழ்தினி .

அவளுக்கு எங்கே தெரியும் சித் தன்னை தவறாக பார்த்து விட்டான் என .

” என்..என்ன மா சொல்லுற ” 

” அதுக்கு ஏன்டி இவ்வளவு ஷாக் ஆகுற  நல்ல பெரிய சம்மந்தம் டி … அவங்களா தேடி வந்தகருக்காங்க  அப்பாவுக்கும் பிடிச்சிருக்கு , சேலை கட்டி இரு டி கூப்பிடும் போது வா. இந்த போண மொத குடு  போ ரெடி ஆகு  ” என்று அவளின் பதிலை எதிர் பாராமல் வெளியே சென்று வருங்கால சம்மந்திக்கு சமைக்கச் சென்றார் . 

அமிழுக்கு தான் தலையில் கல்லை போட்டது போல இருந்தது . எப்படி இப்போது தான் வேறு பையனை காதலிக்கிறேன் என்று உரைப்பது . சரி பெண் பார்க்க தானே அவர்கள் சென்றதும் தன்‌ மறுத்து விடலாம் என்று நொந்துக் கொண்டு ஒரு சேலையை எடுத்தார் . கதிரவன் எப்போதும் மகள்களுக்கு பார்த்து பார்த்து அனைத்தையும் செய்வார் . அது அவர்களுக்கும் சரியாக இருப்பதால் மறுப்பு கூற மாட்டார்கள் இன்றும் தன் மகளின் பதிலை எதிர் பாராது சென்று விட்டார் செல்வி .

இன்னும் நேற்றைய நினைவுகளே கண் முன் வர  இரு விழிகளும் கரித்துக் கொண்டு வந்தது . தன்னை கட்டுப் படுத்த நினைத்தும் முடியவில்லை  . சித் வருகிறேன் என்று செய்தியை அனுப்பிவிட்டு  ஏன் ?…ஏன் ? வரவில்லை என்று அவள் மனது அவளை கேள்வியாய் கேள்வி கேட்க , பதில் தெரியாமல் அழுகை வந்தது அந்த பேதைக்கு . தன் மனதை பல சமாதானம்  கூறி சரி செய்தவள்  எப்போதும் போல ஒரு சட்டை அணியாமல் , ஒரு குர்தியை அணிந்து ,தன் அக்காவிற்கு நடக்க போகும் நல்ல வைபோகதிற்கு அவள் அறைக்கு சிரித்த முகத்துடன் சென்றாள் . 

அமிழ் ஏற்கனவே , சேலையை மற்றும் உடுத்தி இருக்க 

” என்ன அமிழ் மேக்கப் போடாம இருக்க  ” என்று அவளை போலி புன்னகையுடன் அமிழை அலங்கரிக்க ஆரம்பித்தாள் . சாதாரணமாக இருந்திருந்தால் அமிழ் முகத்தில் தெரியும் கடுப்பை உணர்ந்து அவளுக்கு இந்த திருமணம் பிடிக்க வில்லையா என கேட்டிருப்பாள் . அவள் இருக்கும் வருத்தத்தில் அதை கவணிக்க வில்லை  . அமிழுக்கு அனைவர் மேலும் கடுப்பு வந்தது , ஒரு வார்த்தை தன்னை கேட்க  மாட்டார்களா என்று ஆதங்கமும் .  சில ஒப்பனை செய்தவுடன் அந்த இள நீல விழிக்காறி அழகாய் ஜொலித்தாள் .  

” செம்மையா இருக்க அமிழ்  மாமா மயங்க போறாரு பாரு ” என்று தன் கண்ணில் இருந்து மையை எடுத்து உடன்பிறந்தவளுக்கு வைத்தாள் . அடுத்து பேச வரும்முன் செல்வியின் குரல் கேட்டது  . 

பிரியாமல் தொடரும் 😍💋…..

உங்களின் புல்லட் வெடி 🎉  

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
16
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    16 Comments

    1. Mahi ivolo hpy ya iruka maplaya pathathum shock aga pora paarungaa……….

    2. Janu Croos

      இவ்வளவு சந்தோஷமா இருக்கியே செவ்வாழை….உங்க அக்காவ பொண்ணு பாக்க வந்திருக்கது நீ டாவடிக்குறவன்னு தெரிஞ்சா என்ன ஆவியோ….ஏன்டா சித்து நீ ஒழுங்கா விசாரிக்காததால எவ்வளவு பிரச்சினை பாரு…..அய்யோ மகி எப்படி இத தாங்க போறாளோ….

    3. Archana

      இந்த முட்டா பீஸே இப்படி திடுதிப்புன்னு வந்து பொண்ணு கேப்பான்னு மகி என்ன நினைச்சா இருப்பா அதுவும் மிஸ்கம்யூணிக்கேட் ஆகி தன்னோட அக்காவ😏😏😏😏😏 எல்லாம் விதி என்னத்தே சொல்ல😬😬😬😬

    4. Oosi Pattaasu

      மகி வாசிச்சா ஒருதலை ராகம், பாவம் பிள்ளைக்கு இன்னும் தீரல சோகம்…

    5. kanmani raj

      பேரு கூட கேட்காம பொண்ணு பார்க்க வந்தான் சித்து, இது மகிக்கு தெரியும்போது வாங்க போறான் மொத்து..😂😂