Loading

அத்தியாயம் பதினொன்று

   இன்று நடக்க போகும் செமினார் போட்டிக்கு  கடந்த சில நாட்களாக ஆராய்ச்சி செய்து பல புத்தகங்களையும் வளைதலங்களிலும்  அதன் விடயங்களை தெரிந்துக் கொண்டான் சித்  .  அக்ரி முடித்த அவனுக்கு  இது கடினமாக இல்லை,  இருந்தாலும் யாருக்கும் தெரியாததை அல்லது புதிதான  பயிற்சி முறைகளை செய்தால் தானே அதற்கு மேலும் மதிப்பு ஏறும் ,  எனவே அதற்காக நிறையவே உழைத்தான் .   புது வகையான அரிசியை உருவாக்கும் முயற்சியில் தான் கடந்த நான்கு ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து ஓரளவு கண்டு பிடித்து விட்டான் . அதித உரங்களையும் பயன்படுத்தாமல் , இயற்கையிலே வரும் சில நோய்களையும் தடுக்கும் வண்ணம்  விதை நெல்லின் மரபணுக்களை மாற்றி கண்டுபிடித்திருந்தான் . அதனை இன்று வெளிபடுத்த புத்துணர்ச்சியுடன் தனது RE யில் கல்லூரியை நோக்கி  புறப்பட்டான் . வேலையில் இருந்த , வரமாட்டேன் என்று கூறிய சந்துருவையும்  ரோட்டில் விட்டு  தரதரவென இழுக்காத  குறையாய் தன்னுடன் அழைத்து வந்தான் .

கல்லூரி

இன்று தன்னுடைய கண்ணா கண்டிப்பா போட்டியில் கலந்து கொள்வான் என மகிக்கு  தெரிந்ததே , ஏனெனில் இது ஆராய்ச்சி மாணவர்களுக்கு மட்டுமே நடக்கும் போட்டி . இல்லையென்றால் இவளும் சேர்ந்து இருப்பாள் அல்லவா . தன்னுடைய கண்ணனை பார்க்க அதே ஆர்வத்துடனே கல்லூரிக்கு வந்து , போட்டி நடக்கும் அரங்கில் காத்திருந்தாள் .  தன்னவனின் தரிசனம் கிடைக்காதா என அங்கும் இங்கும் தன் மன்னவனை தேடி தன் விழிகளை சுழல விட அவனோ தன் நண்பனுடன் இருந்தான்   

” இன்னும் எவ்வளவு நேரம் டா , எப்போ தான் ஸ்டார்ட் ஆகும் பட படனு இருக்கு டா ” என்று சந்துரு புலம்பியவாறோ இருக்க ,

” அடேய் செமினார் பண்ண போறது நான் டா ,  நீ ஏன் பதட்டமா  இருந்திட்டு என்னையும்  அவசரபடுத்திட்டு இருக்க  ” என்று சிரித்தவாறே சித் கேட்க ,

‘எனக்கு எதுக்கு டா பதட்டம் நீ மேடை  ஏறுனதும் ,அங்க நிக்கிற பொண்ணுங்க கிட்ட கடலை போட போலாம்னு பாத்தா விட மாட்டான் போலையே ‘என தன் மனதுக்குள்ளே கூறியவன் , தன் நண்பனிடம் பல்லை காட்டினான் . நண்பனின் குணம் அறிந்தவனாய்

” அடேய் எந்த பொண்ணு கிட்டையும் வம்பு வளர்க்காத டா “

‘ஐயோ எப்படி கண்டு பிடிச்சான் ‘  என திரு திருவென முழிக்கும் நண்பனை பார்த்தே உணர்ந்து விட்டான், சந்துரு அதைதான் செய்யவிருந்தான் என்பதை . அந்த நேரம் அவன் பெயரை அழைக்க , சந்துருவை பிறகு கவனித்து கொள்ளலாம் என்று தன்னுடைய  ஸ்பீச்க்கு ரெடி ஆனான். 

கண்ணை உருட்டி தேடியவளை  மிகவும் காத்திருக்க வைக்காமல்  சித்தார்த்தும் மேடை ஏற,  அவனை காஃபி நிற விழி சாசர் போல் விரிய பார்த்தாலும் செவி அவன் கூறும் கருத்துக்களை கேட்டு சேமித்தது .

பல இயற்கை வழி தாவர வளர்ப்புகளை பற்றி ஆராய்ந்து அதையே அனைவருக்கும் முன்னிலையில் தனது படைப்புகளை சமர்ப்பித்தான் .
இயற்கை வேளாண்மை (organic farming) என்பது செயற்கை உரம், செயற்கை பூச்சிக்கொல்லி மருந்துகள், செயற்கை வளர்ச்சி ஊக்கிகள், உயிர் எதிரி கொண்ட எச்சங்கள் (கோழி மற்றும் கால்நடை), மரபணு மாற்றப்பட்ட உயிரினம் மற்றும் மனித சாக்கடைக் கழிவுகள் ஆகியவற்றை முற்றிலுமாகத் தவிர்த்து பயிர்சுழற்சி, பசுந்தாள் உரம், மக்கிய இயற்கை உரம், உயிரியல் (பூச்சி, நோய் மற்றும் களை) நிர்வாகம் போன்ற இயற்கை சாகுபடி முறைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு வேளாண்மை (விவசாய) முறையாகும்.
நிலம், தாவரங்கள், விலங்குகள், மனிதர்கள் ஆகியவற்றின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு அவற்றை நீடித்து நிலைக்கும் வகையிலும் மேம்படுத்தும் வகையிலும் செயல்பட வேண்டும் என்றைய கருத்தையே முதன்மையாக கருத்தில் கொண்டு சித் அந்த தலைப்பை பற்றி அரங்கேற்றினான்  .சிலர் தங்களுக்குள் தோன்றிய கேள்விகளை கேட்க  , அதற்கும் சளைக்காமல் பதில் கூறினான் . மகியும் சில விசயங்களை தெரிந்துக் கொண்டாள்  .  அனைவருக்குமே தெரியும் அவன் சேரும் போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெற்று விடுவான் . நான்கு ஆண்டுகளாய் பார்க்கிறார்கள் தானே!!  தெரியாதா  என்ன  ,  அவன் சேரும் கவிதை போட்டிகளிலும் பாடம் சம்மந்தமாய் இருந்தாலும் சரி,    ஓவியம் வரைதல் போட்டியிலும் சரி  அனைவரும் கண்ணையும் மனதையும் மயக்கும் அளவே தனது திறமையையும் ஆர்வத்தையும்  ஈடுபாட்டையும்  தெளிக்காமல் மொத்த  காதலையும் கொட்டி  காண்பிப்பான் . இன்றும் அதே போல அவனுக்கே முதல் பரிசு வழங்கப்பட்டது . அவனுடன் சேர்ந்து அவன் கூறிய அனைத்தையும் மனதில் பதிய வைத்து மகியும் மகிழ்ந்து  இருந்தாள் .

” பாத்தியா என் கண்ணா வழக்கம் போல தூள் கிளப்பிட்டான்ல யாரோட ஆளு  ,  நல்லபடியா  வின் பண்ணிடான்  ” என்று காலர் இல்லா சட்டையை தூக்கி  பெருமையாக தன் இரு தோழிகளிடமும் கூறி கொண்டு இருந்தாள் . அது கோஎட் (co- ed ) கல்லூரியாக இருக்க உடைகளுக்கு நிபந்தனைகள் இல்லை சேலையிலிருந்து  சர்ட், ஜீன்ஸ் என்று அனைத்தையும் அனிவர் . மகியும் அவளது தோழிகளும் குறிப்பிட்டு இல்லாமல் எல்லா உடைகளையுமே அனிவர் .

” நீ அவன் பண்றத பாக்குறா, ஆனா சுத்தி பாரு அம்புட்டு பொண்ணுங்கலும் அவனா தான் கண் எடுக்காம  பாக்குதுங்க  ஹா..ஹா ” என்று சிரிப்புடன் கூறியவளை பார்த்து முறைத்தவள்
” எத்தனை பேரு பாத்தாலும் என் கண்ணா  மனசுல நான்  மட்டும் தான்  இருக்கேன் ” என்று கண்கள் மின்ன கூறியவளை பார்த்து சந்தியா யோசனையாக கேட்டாள்

” அவன்கிட்ட  பேசாம நீ எப்படி சொல்லுற மகி  “

” அது அப்படித்தான் ” என்றாள் மகி . அவன் முகத்தில் தான் எழுதும் அவனுக்கான கவிதைகளை இரசித்து படிப்பதை பார்த்து முடிவு செய்தே விட்டாள் . சொல்ல போனால் அதுவும் தான் உன்மையும் கூட . முதலில் சித்திற்கும் இது பிடிக்க வில்லை தான் ஆனால் ,  போக போக அவன் மனது தானாகவே அவளின் கவிதைகளிலும் பைத்தியக்கார காதலிலும் சிக்குண்டது. ஆனால் , அவளது கண்ணா   அவ்வளவு எளிதில் மகியிடம் வர போவது இல்லை என  தெரியவில்லை அந்த பேதைக்கு .
சந்தியாவிற்கு தான் பயம் எழுந்தது சித்தார்த் ஒருவேளை தன் தோழியின் காதலை ஏற்றுக் கொள்ள வில்லை என்றால் என்ன ஆவது , மகி தைரியமான எதையும் பாசிட்டிவாக எடுக்கும் குணமே , ஆனால் இந்த பைத்தியக்கார உண்மை காதலில் அவள் மனது எவ்வாறு மாறும் அதனை எவ்வாறு ஏற்றுக் கொள்ளும் என்று பயம் எழவே செய்தது . தன் தோழியின் காதல் கதையை தான் தினமும் கேட்கிறாளே , அவளுக்கு நல்லதே நடக்க வேண்டும் என்று கோரிக்கையை கடவுளிடம் வைத்து மகியுடன் நடந்தாள் . மகியும் சந்தியாவும் பள்ளியிலிருந்து உயிர் தோழிகள்,  சௌமியா கல்லூரியில் கிடைத்த நட்பே , மூவரும் இணைபிரியாமல் தற்போது த்ரீ இடியட்ஸ் ஆக வலம் வருகின்றனர். எப்பொழுதும்  அனைவரையும் மகிழ்வாக வைத்துக்கொள்ளும் மகியின் குணத்திற்கு சித் கிடைக்க வேண்டும் என்று தான் தன் தோழியின் காதல் மொழிகளை கேட்டதிலிருந்து வேண்டிக் கொள்கிறாள் .

அவன் வெற்றி பெற்றதற்கு டிரீட் வைக்குறேன் என்று வழக்கம் போல கல்லூரியில் உள்ள கேன்டீனிற்கு தன் நண்பர்களையும் சந்துருவையும்  அழைத்துச் செல்ல, அவனை தொடர்ந்தே தன் தோழிகளையும் இழுத்துக் கொண்டு சாதாரணமாக வருவது போல மகியும் தொடந்து சென்றாள் . சித் அமர்ந்து கன்னத்தில் குழி விழ மகிழ்ச்சியுடன் தன் நண்பர்களுடன் பேசி சிரித்தவாறே  சாப்பிடும் அழகை , ஒரு டேபிளில் அமர்ந்து  கன்னத்திற்கு கையை வாடகைக்கு  கொடுத்து பார்த்தாள் .  சந்தியாவும் சௌமியாவும்  வந்த வேலையை பார்த்தனர்.  வேறு என்ன அங்கு இருக்கும் பாதி  உணவு பதார்த்தங்களை வாங்கி வாயினுள் அமிக்கிக் கொண்டு இருந்தார்கள் . காசு கொடுப்பது மகி தானே ஹி ஹி ஹி .

” ஏய் எவ்வளவு  நேரம் டி அவன பாப்ப வந்து தின்னு கிளாஸ் போனும்ல ”  என சௌமியா கூறிய அனைத்தும் அவள் காதினுள் செல்ல வில்லை  . சித்தார்த் வாசலை தாண்டும் வரையிலும் கண் எடுக்காமல் பார்த்துக்கொண்டு இருந்தவள் , அவன் சென்றதும் தான் தன் தோழிகளிடம் கண்களை திருப்ப இருவரும் கோப மூச்சுக்காற்றை பரவ விட்டு இடுப்பில் கைவைத்து அவளை முறைத்தனர் .  மொத்த பல்லையும் அவர்களிடம் காட்டி உண்டதற்கு பணத்தை செலுத்தி ,  வாயில் ஒரு வடையை  தினித்தவாறே மீண்டும் தன் கண்ணா பின்னாள் நடந்தாள் .

” இப்போவாச்சும் அவன்கிட்ட போய் உன் காதலை  சொல்லேன் , எங்ககிட்ட தான் உன் வாய் எல்லாம் சரியான பயந்தாங் கோலி “

” ஆமா சந்தியா வாய் மட்டும் தான் போய் சொல்ராலானு பாரேன் ஹா ஹா ”   என்று தோழிகள்  இருவரும் மாற்றி மாற்றி கலாய்க்க  , அதில் கோபம் வந்தவளாய்

” இப்போ  பாருங்க டி எப்படி சொல்லுறேனு ” என்று  வீராப்பாக பேசி  கைகளை மடக்கி விட்டு , போனில்  தன் முகத்தை சரிசெய்து  , தன்னவனை  நோக்கி வேகமாக நடந்தாள் . சந்தியாவும் சௌமியாவும் ஓரமாக நின்று பார்த்துக் கொண்டு இருந்தனர் . வேகமான எட்டுக்களை எடுத்து அவன் அருகே சென்றது மனது பட படவென அடித்துக் கொள்ள , வியர்த்து கொட்டி விட்டது அவளுக்கு . கைகளை பிசைந்தவாறே வாயில் காற்று மட்டுமே வர தன்னவனனை தொடர்ந்து சிறிது இடைவெளி விட்டு  பின்னாள் நடந்துச் சென்றவள் பின்னாடி திரும்பி தோழிகளை பார்க்க இருவரும் நக்கலாக சிரித்தனர் . இங்கோ அவனிடம் பேச பயமாக இருந்தது , அதே நேரத்தில் ரோசம் வந்தவளாய் வேறு கூறி வந்துவிட்டாள்  யாராவது தன்னை காப்பாற்ற வரமாட்டார்களா என்று நினைக்கையில் கடவுள் அவளின் உடன்பிறப்பு வழியில் மகியை அழைத்தாள் . பக்காவாட்டில் அமிழ்தினி  ‘ மகி மகி ‘  என்று கூறுவதை பார்த்து அமிழ்கு ஒரு நன்றியை மனதில் செலுத்தி அவள் முன் போய் நின்றாள் . இங்கு தோழிகள்  இருவரும் தலையில் அடித்துக் கொண்டனர் .

” மகி இன்னைக்கு கொஞ்சம் புராஜெக்ட் வேலை இருக்கு டி லேட் ஆகும் வர அம்மாகிட்ட சொல்லிவிடு ” என்றாள் .

” சரி அமிழ் ” என்று அவளிடம் விடைபெற்று தன்‌ தோழிகளை நோக்கி நடந்தாள். மகி வந்ததும் இருவரும் ஒருசேர  ” ஹா த்து ” என்று தரையில் துப்ப , அதில் முகத்தை துடைப்பது போல பாவனை செய்தவள் 

” அமிழ் கூப்பிடலேனா கண்டிப்பாக சொல்லிருப்பேன் டி “

” கிளிப்ப ” என்று சந்தியாவும்  , ” என்ன என்ன சொல்லூரான் பாருங்க ” என்று சௌமியும்  அவளை கேலி செய்தனர் . இது வழக்கமாக நடப்பது தான் அவர்கள் கேலி செய்தாள் காதலை கூற போகிறேன் என்று  கையை மடக்கி விட்டு கூறி கிளம்புவாள் , அவன் அருகில் சென்றதும் எதாவது காரணத்தை சொல்லி திரும்ப வந்தே விடுவாள் ,  இது ஒரு வருடமாக நடக்கும் கூத்தாகும் . தன்னுடைய பையிலிருந்து ஸ்டிக்கி நோட்டை எடுத்து எழுத ஆரம்பித்தாள்

” தெரியாத பல இயற்கை முறைகளை கூறிய என் கண்ணனுக்கு ❤️  நன்றி.
கொஞ்சம் அழகை கட்டுப்படுத்தி கொள்ளடா  !!
பேதை,  பெதும்பை என அனைவரும் என் கண்ணனை இரசிப்பது என்னை இம்சிக்கிறது  “  

    என் உயிர் கண்ணாவிற்கு … 😍💋

என்று எழுதி வழக்கமாக போடும் எமோஜி ஸ்டிக்கரையும் ஒரு உதடு படத்தையும் வரைந்து   சித்தார்த்தின் RE யில் வைத்தாள் . கேன்டினிற்கு அருகே தான் வாகனங்களை பார்க் செய்யும் இடமும் இருப்பதால் இவளுக்கு வசதியாக இருக்கும் தினமும் அவளின் சீட்டாவை எடுக்க வரும்போது அவனுக்கான கவிதைகளையும் வைத்து விட்டு செல்லுவாள் ,  மகியின் செயலில் வழக்கம் போல தோழிகள் இருவரும் தலையில் அடித்துக் கொண்டனர் .
முவரும் வகுப்பறையை நோக்கிச் சென்றனர் . அன்றைய நாள் இனிமையாக  கழிய , வீட்டிற்கு செல்வதற்காக மூவரும் பார்க்கிங் வந்தனர் . மகி  தன் கள்வனுக்கு எழுதிய கவிதையை படித்து அவன் முகத்தை எதிர் பார்த்து காத்துக் கொண்டு இருக்க , இவளுக்காக சந்தியாவும் சௌமியாவும் கன்னத்தில் கை வைத்து தங்களின்   காத்திருந்தனர்  .

சௌமி ” சந்தியா மகி வர வர ரொம்ப சித்தார்த் நினைப்புல இருக்குற மாறி இருக்கு இது நல்லது இல்ல “

” அதான் நானும் யோசிக்குறேன் .அவ படிப்பையும்  விட்டுக்குடுக்காம அதுலையும் பர்ஃபெக்டா (perfect ah )  இருக்குறது நாளா அவளை குறை சொல்ல முடியல “

” ஒருவேளை சித்தார்த் அவ காதலை ஏத்துக்கலேனா ..!! ” என்று சந்தியாவிற்கு நினைக்கவே முடியவில்லை

” கண்டிப்பா அப்படி நடக்காது ” என்று தன்‌ தோழி மகிக்கு  சாதகமாக வாய் கூறினாலும் , அவள் மனமோ அதை தான் நனைத்து வருந்தியது . இருவரும் ஒரு சமயத்தில் மகியை பார்த்தனர் . ஆனால் , அவளோ  தன் கண்ணா  நடந்து வருவதை இரசித்துக் கொண்டு இருக்கிறாள் .

பிரியாமல் தொடரும்…

உங்களின் புல்லட் வெடி 🎉

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
23
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    12 Comments

    1. Super story 😍😍😍
      What is going to happen in her love story …..?
      All the best 👍🏻👍🏻

    2. கதை மாந்தர்கள் மனதை கொள்ளை கொண்டு விட்டனர். மனதிற்கு பிடித்தமான காதல் கதைக்களம். சிறப்பான எழுத்து நடை. மேலும் படைப்புகளை தொடர வாழ்த்துகள்.

    3. Archana

      😍😍😍😍 என்னமோ தெரிலே பிளாஷ்பேக்குலே இந்த சித் பையன் அட்ராக்ட் பண்ணுறான் ஆனா பிரெஷ்ன்ட்டுலே மகியே கொடுமை படுத்தறதாலே கடுப்பேத்துறான்😤😤😤. இந்த அமியே பத்தியும் கொஞ்சம் சொல்லுங்களேன் அவ தான் அமைதின்னு பார்த்தா அவளே பத்தி சொல்லுறதில்லே கூட அமைதியாவே இருந்தா எப்படி🙃🙃🙃🙃.

    4. Oru ponnu oru paiyana vidama love panna na athu epdi sayrama irukum kandipa avanga sayruvangaa athu teriyam ma avanga frd feel pannitu irukangaa …🤣🤣. Girls ellarum sight adikirangana avalo alagava sidh irupan apro ethukku mahi kitta mattum kovam paduran 😠😠Waiting for next epi❣️