இளங்கலைப் பொழுதில் நிலவு மகளை தன்னுள் பொதித்துக் கொண்டு கதிரவன் அவன் செங்கதிர்களை மெல்ல புவிக்கு பரப்பிக் கொண்டிருந்தான்.
நகரத்தில் மையப்பகுதியில் அமைந்த “பார்வதி இல்லத்தின்” ஓர் அறையில் ஒருவன் உறங்கிக் கொண்டிருந்தான். அவன் தான் “நம் கதையின் நாயகன்”. வெகு நேரமாக அவனை எழுப்ப போராடிக் கொண்டிருந்தாள் ஒருத்தி.
“டேய் எருமை, மலை மாடு, காட்டு பன்னி, குரங்கே…” என்று இன்னும் சில பல நல் வார்த்தைகளினால் அவனை அர்ச்சனை செய்து கொண்டே இடுப்பில் இருகைகளையும் ஊன்றி அவனை முறைத்து பார்த்த வண்ணம், “ச்சை, இது என்னடா எனக்கு வந்த சோதனை! நானும் இந்த எருமைய எழுப்ப என்னவெல்லாம் பண்ணுற, பன்னிபய எழுந்திரிக்க மாட்டிங்கிறனே” என்று புலம்பிக் கொண்டிருந்தவளின் மூளையில் சடுதியில் ஒரு எண்ணம் உதயமானது.
அதை செயல்படுத்த எண்ணி வேகமாக குளியலறைக்குள் புகுந்தவள் வரும் பொழுது ஒரு பாக்கெட் நீரை கொண்டு வந்து உறங்கிக் கொண்டிருந்தவன் மேல் ஊற்றினாள்.
இதுவரை கனவுலோகத்தில் மிதந்தவனின் தலையில் தீடிரென்று குளிர்ந்த நீர் படவும் அலறி அடித்து கொண்டு எழுந்து அமர்ந்தான்.
“அடியேய் குட்டாச்சி ஏன் டீ என்மேல தண்ணிய கொட்டுன?” என்று கத்தி கொண்டிருந்தான். “ஏன்டா டேய் எவ்வளவு நேரமா எழுப்புறன், எழுந்திரிக்கமா மலை மாடு மாதிரி நல்ல தூங்கிட்டு மேல தண்ணிப்பட்டதும் கத்துற. போடா டேய் போடா” என்று சொல்லிக்கொண்டு அவனின் கைகளுக்கு அகபடாமல் ஓடியவளை துரத்தி கொண்டு இவனும் ஓடியவன் சமையலறையில் தன் தாயின் முதுகுப்புறத்தில் ஒளிந்திருந்தவளின் காதைப் பிடித்துத் திருகி இழுத்து வந்தவன், “ஏன் டீ என்மேல தண்ணிய ஊத்துன”என்று வினவினான்.
அதற்கு அவளோ “உன் மேல தண்ணிய தான ஊத்துன என்னமோ ஆசிட் ஊத்துன மாதிரி கத்துற… நீயெல்லாம் ஒரு கம்பெனிக்கு எம்டி னு வெளிய சொல்லிறாதடா. நல்ல கும்பகரணுக்கு தம்பி மாதிரி தூங்குற” என்று கூறியவளின் காதை பிடித்து மீண்டும் திருகினான்.
“டேய் காட்டு பன்னி விடுறா, என் காத வலிக்குது. ஐய்யோ அம்மா, மம்மி, மதர் இன்டியா உன் பையன என் காத விட சொல்லு வலிக்குது, இப்படி ஒரு பச்சை மண்ணை போட்டு அடிக்குறான். நீ அத வேடிக்கை பாக்குற, நீ எல்லாம் தாயா பேய்” என்று கூறியாவளின் காதை மேலும் திருகினான்.
“பாத்திங்கலா ம்மா உங்களை பேய்னு சொல்லுறா” என்று தன் தாயை துணைக்கு அழைத்தான். இவ்வளவு நேரம் அமைதியாக இவர்களின் சாம்பாஷணைகளை வேடிக்கைப் பார்த்தவர், தன் மகனின் அருகில் வந்து அவனை உற்று நோக்கினார். மழையில் நனைந்தவன் போல் தன் மகன் இருப்பதை பார்த்தவர் எதற்காக இந்த அடவடி என்பதை கண்டு கொண்டார். தன் மகள் செய்த குறும்புத்தனத்தையும் கண்டு கொண்டவர்,
“கண்ணா விடுப்பா சின்னபுள்ள ஏதோ தெரியாம பண்ணிட்டா. விடு கண்ணா” என்றவர் தன் மகளையும் கண்டித்தார்.
தன் அன்னை சொன்ன காரணத்தால் அவன் கரத்தில் அடைப்பட்டு இருந்த அவள் காதுக்கு விடுதலை அளித்தான். அவன் கரத்திலிருந்து விடுபட்ட தன் காதை நீவி விட்டவாறே, அவனுக்கு ஒழுங்கு காண்பித்து தன் அறைக்குள் ஓடி சென்று மறைந்து கொண்டாள்.
“கண்ணா இங்க பாரு எப்படி நெனஞ்சு போயிட்டனு, போ போய் முதல்லா குளுச்சு ரெடியாகி வா. டைம் ஆகுது பாரு, அம்மா டிபன் எடுத்து வைக்கிறேன், சாப்புட்டு ஆபிஸ் கிளம்புவியாம்” என்றவர் சமையலறைக்கு சென்றார்.
இவங்க போய் ரெடியாகி வரட்டும் நாம அதுக்குள்ளையும் இவங்க குடும்பத்தை பத்தி பார்த்திட்டு வந்துடலாம்…
ஈஸ்வர மூர்த்தி – பார்வதி அம்மாளின் செல்வ புத்திரர்கள் தான் இவ்விருவரும். மூத்தவன் யோகேஷ்,”யோகேஷ் குருப் ஆஃப் கம்பெயின்ஸ்-யோட எம்.டி”. சின்ன வயசிலயே தன் தந்தைய இழந்தவன். தன்னோட கடின உழைப்பாலையும், விடா முயற்சியினாலயும் இன்னைக்கு இந்த இடத்துக்கு வந்து நிக்குறான். வளர்ந்து வரும் “இளம் தொழிலதிபர்களில்” இவனும் ஒருத்தன். இவனுக்கு உயிருனா அது மூனு பேரு மட்டும் தான் ஒன்னு அவன் அம்மா, தங்கச்சி, அவன் ஆருயிர் நண்பன் வருண் தான் இவனோட குடும்பம். இளையவள் “தேவி ஸ்ரீ” இந்த வீட்டோட இளவரசியும் கூட இப்பொழுது தான் கல்லூரியில் படித்து கொண்டிருப்பவள். நம் நாயகனின் “செல்ல தங்கை”. குறும்புக்காரி, சரியான அறுந்தவாலும் கூட இவளாள தான் இந்த குடும்பம் உயிர்ப்போட இருக்கு.
சரி வாங்க, இனி கதைக்குள்ள போகலாம்…
தன் அறைக்குள் நுழைந்தவன் தன் உடைகளை எடுத்துக் கொண்டு குளியலறையில் புகுந்து தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு தயாராகி கீழே வந்து டைனிங்கில் அமர்ந்தவாறே தன் தாயிடம், “பாப்பு இன்னைக்கு என்ன டிபன் சீக்கிரம் எடுத்து வைங்க, டைம் ஆகுது” என்று கூறினான். “ஏன் டா இப்படி காலுல சூடு தண்ணி ஊத்துனவன் மாதிரி பறக்குற, இவ்வளவு நேரம் விளையாடுறப்ப டைம் ஆகலாயா!” என்று கேட்டுக் கொண்டே அவனுக்கு உணவை பரிமாறினார்.
இந்நிகழ்வுக்கும் தனக்கும் சம்பந்தமில்லாதது போல் தன் தட்டில் இருந்த “பூரி கிழங்கை” கபளீகரம் செய்து கொண்டிருந்தாள். “பாத்திங்கலா ம்மா இவளுக்கும் இதுக்கும் சம்பந்தமில்லாத மாதிரி எப்படி சாப்பிட்டுகிட்டு இருக்கா பாருங்க” என்று அவள் தலையில் ஒரு கொட்டு வைத்தான்.
அதை அலட்சியம் செய்தவள், “சோறு முக்கியம் பாஸ், சோறு முக்கியம்” என்று கருமமே கண்ணாக அவள் தட்டில் கண்பாதித்தாள். இவர்கள் அடித்த கூத்தை வேடிக்கை பார்த்தவர் தன் தலையில் அடித்து கொண்டு, “டேய் சீக்கிரம் சாப்புடுங்க டைம் ஆகுது” என்றவர், தன் மகளிடம் திரும்பி “குட்டிமா சாப்புட்டு சீக்கிரம் போய் உன் காலேஜ் பேக் எடுத்துட்டு வா…” என்றவர், அவனிடம் திரும்பி, “கண்ணா குட்டிமாவ அவ காலேஜ்லா டிராப் பண்ணிட்டு ஆபிஸ் போ ப்பா” என்று கூறினார்.
“ஏன் அவளோட ஸ்கூட்டி என்னாச்சு, நான் கொண்டு போய் விடுறன் சொன்னதுக்கு ஸ்கூட்டில தான் போவேன் சொல்லி அடம் பண்ணி வாங்குனா” என்க, “அதுவா கண்ணா அவ வண்டி பஞ்சர் ஆகிடுச்சாம் டா சார்வீஸ்க்கு விட்டுருக்கா போல இன்னும் வரலயாம், அதனால இன்னைக்கு ஒரு நாள் மட்டும் இந்த அம்மாக்காக கொண்டு போய் விட்டுட்டு கண்ணா”
“சரி சரி சரிமா போறேன் அவள கொண்டுபோய் காலேஜ்லா விட்டுட்டடு அப்புறம் ஆபிஸ் போறேன்,போதுமா” என்று கூறியவன் தன் தங்கையை அழைத்தான்.
“ஏய் குட்டச்சி சீக்கிரம் வா டீ டைம் ஆகுது. ஆபிஸ்ல முக்கியமான ஒரு மீட்டிங் இருக்கு உன்னை டிராப் பண்ணிட்டு நான் போய் அத அட்டென் பண்ணனும்” என்று கூறி கொண்டிருந்தான்.
“இருடா வரேன் தடிமாடு” என்று கூறி கொண்டே வந்து காரில் அமர்ந்தாள். அவள் அமர்ந்ததும் தன் நான்கு சக்கர வாகனத்தை எடுத்து கொண்டுப் புறப்பட்டான்.
அந்த பிஎம் டபாள்யூ காரனாது சாலையில் சீறி பாய்ந்து சென்றது. “தீடிரென்று கார் சிக்னலில் நின்றவுடன், “டேய் தடிமாடு என்னடா இப்படி காலங்காத்தால அருக்குற மாதிரி பாட்டு போட்டுருக்க, நல்ல குத்து சாங் போடு டா அப்போ தான் நல்ல எனார்ஜி வரும்” என்று மியூசிக் பிளேயரில் ஓடிக் கொண்டிருந்த
பாடலை மாற்றினாள். பாடலைக் கேட்டுக்கொண்டே வெளிப்புறம் பார்வையை சூழல விட்டவளின் விழிகளில் விழுந்தாள் அவள்.
தன் நீல நிற ஸ்கூட்டியில் எழிலோவியமாக நின்று கொண்டிருந்தாள், நம் கதையின் நாயகி யாழினியாள்.
“டேய், டேய் தடிமாடு ச்சை அண்ணா அங்க பாரேன், அங்க பாரேன் டா”
“எங்க டி பாக்க சொல்லுற”
“அட பைத்தியகாரா, காருக்கு வெளிய பாரு டா” என்று அவர்களின் காருக்கு இடப்புறத்தில், தன் நீல நிற ஸ்கூட்டியில் நின்றிருந்தவளை சுட்டி காட்டினாள்.
தன் தங்கை கை காட்டிய திசையில் பார்த்தவன் பார்த்த கணம் ஸ்தம்பித்து விட்டான். அழகே எழிலோவியமாய் இருப்பவளை பார்த்தவுடன் பிடித்துவிட்டது. இருந்தும் நொடியில் தன்னை மீட்டெடுத்தவன், தன் தங்கையிடம் “எதுக்கு டி என்னை வெளிய பாக்க சொன்ன” என்று வினாவினான்.
“அங் அங்க ஒரு குரங்கு குட்டிகாரணம் போட்டுச்சு, அதான்” என்று கூறியவளின் தலையில் நங்கு என்று ஒரு குட்டு வைத்தவன், “கேட்டதுக்கு பதில் சொல்லு டி குட்டச்சி” என்றான்.
தன் தலையை நிவி விட்டவாறே, “அங்க பாரேன் டா அவங்க எவ்ளோ கியூட்டா,அழகா பேபி டால் மாதிரி இருக்கங்க”
“ஆமா அதுக்கு இப்ப என்ன”
“என்னாது என்னானு கேட்குற டா” என்றவளின் புறம் திரும்பி “வேற எப்படி கேக்குனும் மேடம்” என்றான்.
“நீ எப்படியும் கேட்க வேணாம், நான் ஒன்னு சொன்னா கேட்பியா” என்றவளை பார்த்து, “அது நீ கேக்குறது பொறுத்து இருக்கு” என்றான்.
“அது, அது…”
“எது, எது! சொல்ல வந்தத சொல்லு டி”
“அங்… அது அவங்களையே எனக்கு அண்ணியா கொண்டு வந்துடுறியா” என்று தான் கூற வந்ததை கூறிவிட்டு அவன் முகம் பார்த்தவளின் கையில் ஒரு அடி போட்டு அவளை முறைத்து பார்த்த வண்ணமே பதில் கூற தொடங்கினான்.
“வாய பாரு வாய, படிக்குறத விட்டுட்டு பேச்சை பாரு குட்டச்சிக்கு” என்று கூறியவன் ,மீண்டும் அவளின் தலையில் குட்டு வைத்தவன் “படிக்குற வேலைய மட்டும் பாரு எனக்கு பொண்ணு தேடுற வேலை எல்லாம் பாக்காதே” என்று மிரட்டினான்.
“டேய் சும்மா சும்மா கொட்டாத டா, நீ கொட்டி தான் நான் இன்னும் வளராமயே இருக்கேன்” என்றாள். அவனை பார்த்து மீண்டும்
அவனிடம் அதையே கூற, அவன் பார்த்த பார்வையில் அமைதியாகிவிட்டாள்.
பின்பு சிக்னலில் இருந்து கார் நகர்ந்தவுடன் அவளின் கல்லூரிக்கு சென்றவன் கல்லூரி வளாகத்தினுள் அவளை இறக்கி விட்டவன், “குட்டிமா இங்க பாரு டா படிக்குறப்ப எதையும் யோசிக்க கூடாது என்ன புரியுதா” என்று கூறியவனை பார்த்து, பூம் பூம் மாடு மாதிரி தலையை ஆட்டியவள் தன் வகுப்பறைக்கு சென்று விட்டாள்.
அங்கு தான் முகம் தெரியாத இருவருக்குமிடையே விவாத பொருளாக மாறியதை, எதும் அறியமால் தன் வாகனத்தை உயிர்ப்பித்து தான் போக வேண்டிய இடத்துக்கு தன் ஸ்கூட்டியில் பறந்து சென்றாள்.
டேய்
இங்கு, தன் தங்கையை அவள் கல்லூரியில் இறக்கி விட்டவன், தன் காரை கிளப்பிக்கொண்டு அவன் அலுவலகத்தை நோக்கி சீறி பாய்ந்தான்.
இன்று வெவ்வேறு திசைகளில் சென்றவர்களை நாளை விதியெனும் ஒரே நேர்க்கோட்டில் பயணிக்க வைக்க போவதை அறியாமல், அவர் அவர் வழிகளில் சென்றவர்களை பார்த்து காலம் சிரித்து கொண்டிருந்தது. நாமும் அதனுடன் பொருத்திருந்து பார்ப்போம்.
தொடரும்…
துர்கா கார்த்திகேயன்