Loading

                      அத்தியாயம் 6

அவர்கள் இருவரும் காரில் ஏறியவுடன் வண்டியை கிளப்பியவன், “டேய் யோகி நம்ம குட்டிமா மட்டும் மிஸ் ஆகுற டா அவளையும் கூப்புட்டுங்களமா?”.

 

“இல்லை வேண்டாம் டா அவளுக்கு அடுத்த வாரம் எக்ஸாம்ஸ் வருது சொன்ன  அதுனால அவ இன்னோரம் வீட்டுக்கு போயிருப்பா படிக்க.”

 

“ஓஓஓ!ஆமா அவ வண்டி ரிப்பேர் ஆகிடுச்சுனு நீ தானே கொண்டு போயி காலேஜ்ல விட்டுட்டு கூட்டிட்டு வர அப்புறம் எப்படி தனியா போனாள்?”

 

நான் காலையிலேயே அவள டிராப் பண்ணதும்,ஈவினிங் ஓர்க் இருக்கு நீ ஆட்டோ புடுச்சு வீட்டுக்கு போயிடுனு சொல்லிட்டேன் டா..

 

டேய்  அவ சின்ன பிள்ளை டா எப்படி தனியா போவ என்கிட்ட சொல்லிருந்த நானாவது போயி கூட்டிட்டு வந்துருப்பேன், இப்போ அவ எப்படி ஒழுங்க வீட்டுக்கு போனால என்னானு தெரியலையே என்று புலம்பியவனை பார்த்து..

 

“அட கேள்விக்கு பொறந்தவனே அவள டா சின்ன புள்ளை விட்ட இந்த ஊரையே விலை பேசி வித்துட்டு வந்துடுவா,அது எல்லாம் அவ சேஃப்பா தான் வீட்டுக்கு போயிருக்க போனாதும் எனக்கு மெசேஜ் போட்ட போதுமா,இப்பே நீ ஒழுங்க வண்டியை ஓட்டு டைம் ஆச்சு நான் ஆபிஸ்லயாவது இருந்து மீதி ஓர்க்க கம்பிளிட் பண்ணிருப்பேன் அதையும் பண்ணவிடமா கூட்டிட்டு வந்து கேள்வி மேல கேள்வி கேக்குறன் என்று சலித்து கொண்டான்”..

 

“ஈஈஈஈஈஈஈஈஈ சாரி மச்சன் சின்ன புள்ளையா  அதான் எப்படி போனாலேனு கவலைல கேட்டேன்”.

 

“ம்க்கும் நல்ல கேட்ட போ”.

 

இவ்விருவரின் உரையாடலை பார்த்து திருதிருவென முழித்தவள் “ஏன் வருண் அண்ணா அவங்க என்ன ரொம்ப சின்ன புள்ளையா இவள்ளவு பயப்படுறிங்க என்றாள்”.

 

“இல்லை அவ காலேஜ் படிக்குற டா நான் கவலைப்பட்டது அவளை நினைச்சு இல்லை அவ போனா ஆட்டோ டிரைவர் நினைச்சு”.

 

ஏன் அண்ணா?

 

“ஏன்னா அவ இவன மாதிரி அமைதியா இருக்க மாட்ட சரியான வாலு தப்புனு தெருஞ்ச அத தையிரியாம தட்டி கேட்ப அதே மாதிரி எதையாவது பண்ணி எங்கையாவது வம்பு இழுத்துட்டு வந்துருவா, அது தான் அந்த டிரைவர என்ன பாடுப்படுத்துனாலே தெரியால”.

 

அதை கேட்டவள் அண்ணா தைரியமா இருக்கது நல்லது தானே அப்போ தான் எவ்வளவு பெரிய பிரச்சனை வந்தாலும் அவங்களாள சமாளிக்க முடியும். அந்த காலம் மாதிரி எதுக்கொடுத்தலும் பயந்துட்டு இருக்கமா தப்புனு தெருஞ்ச தட்டிக்கேக்குறங்களா அது வரை நீங்க பெருமை தான் படனும்..

 

“ம்ம் நீ சொல்லுறதும் சரி தான் டா”, என்று பேசியவறே அந்த கடைக்கு சென்றனர்.

 

அங்கே “உனக்கு என்ன பிளேவர் புடிக்குதே அதையே ஆர்டர் பண்ணுடா என்றான்”. 

 

“ஓகே, வெயிட்டர் அண்ணா இங்க வாங்க மூனு அல்மெண்ட் கிராஞ்ச்சு கொண்டு வாங்க என்று கூறினாள்.

 

“டேய் யோகி என்னடா நீ அப்போத்துல இருந்து சைலண்ட்டா இருக்க என்னாச்சு?”

 

அது எல்லாம் ஒன்னும் இல்லை டா,சும்மா தான் அந்த பிராஜெக்ட் எப்படி கம்பிளிட் பண்ணுறதுனு திங்க் பண்ணிட்டு இருந்தேன் வேற எதும் இல்லை..

 

அடேய் இப்போ நாம வெளிய  வந்துருக்கோம் இங்கையும் வந்து ஆபிஸ் விசயத்தையே பேசுறியே டா என்று முறைந்த வண்ணம் இருந்தான்..

 

இவர்கள் பேசிக்கொண்டு இருக்கும் பொழுதே அவர்கள் ஆர்டர் செய்த ஜஸ்கீரிம் வரவும் உண்ண ஆரம்பித்தனர்..

 

அப்பொழுது அவர்கள் அருகில் இரண்டு டேபிள் தள்ளி இரு பெண்கள் சாப்பிட்டு கொண்டிருந்தனர்.அவ்விருவரில் ஒருத்தியை மட்டும் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே இருந்தான் வருண்.

 

“டேய் மச்சன் என்ன நானும் உன்னை ரொம்ப நேரமா வாட்ச் பண்ணுறேன் உன் கண்ணு அந்த டேபிளயே பாக்குது என்ன விசயம்”?.

 

அதுவா மச்சி அந்த ரெட் டிசார்ட் போட்டுருக்குல்ல  அந்த பொண்ண தான் பாத்தேன் அழகா இருக்கங்கள்ளா?

 

“எனக்கு என்னம்மே அது பொண்ணு மாதிரி தெரியல டா என்றான்”.

 

எப்படி டா சொல்லுற அது பொண்ணு இல்லைனு?

 

“அடேய் அவங்க பாடி லாங்குவேஜ் வைச்சு தான் டா,நீ வேணும்னா அவங்க திரும்பு போது பாரு உனக்கே தெரியும்”.

 

ஏய் அப்படி இருக்காது டா அவங்க ஹேர் பாரேன் எவ்வளவு லேந்த்தா இருக்கு சே கண்டிப்பா அவங்க பொண்ண தான் இருப்பாங்க..

 

டேய் இப்பே பாய்ஸ்ஸூம் அந்த மாதிரி ஹேர் வைச்சுக்கறாங்க டா,எனக்கு என்ன நான் சொல்லுறதா சொல்லிட்டேன் அப்புறம் உன் விருப்பம் என்று அசட்டையாக கூறிவிட்டு தன் தோளை குலுக்கிக் கொண்டான்..

 

இவர்கள் இவ்வாறு வாக்குவாதம் செய்து கொண்டிருக்கும் போதே அந்த டேபிளில் இருப்பவர்கள் உண்டு முடித்து கிளம்ப எத்தனித்து திரும்புகையில் தான் தெரிந்தது அந்த ரெட் டிசார்ட் பெண் இல்லை ஆண்! என்று அதை பார்த்த வருண் அதிர்ச்சியடைந்தான்..

 

“ச்சை மச்சன் என்ன டா இது கருமம் நான் கூட ஏதே பொண்ணுன்னு நினைச்ச இவன் பையனா டா”?

 

ஹாஹாஹாஹாஹா நல்ல பல்ப்பு வாங்குனியா நான் தான் சொன்னேன்ல டா அது பொண்ணு மாதிரி தெரியலை பையன்னு கேட்டியா?என்று கூறியவன் இன்னும் சிரிப்பை விடாது சிரித்துக்கொண்டே இருந்தான்..

 

இதை வேடிக்கை பார்த்த யாழினியும் கொக்கபிக்க என தன் வயிற்றை பிடித்துக்கொண்டே சிரித்தவள் “ஐய்யோ முடியல அண்ணா தொப்பி தொப்பி”என்று தன் சிரிப்பை விடாது சிரித்தாள்.. 

 

இவர்கள் சிரிப்பதை பார்த்து முகத்தை தொங்க போட்டு கொண்டாவன் “போங்க டா டேய் நான் அதை பொம்பளை புள்ளைனு நினைச்சு பார்த்த அது இப்படி இருக்கு ச்சை”போதும் போதும் ஏதே ஒரு தடவை நாங்க பல்ப்பு வாங்கிட்டோம் அதுக்காக இப்படி தான் சிரிப்பிங்காலா  போதும் சாப்புடுங்கா இந்த இடத்தை முத காலி பண்ணலாம்” என்றவன் தன் முன் வைக்கப்பட்ட ஐஸ்கிரீமில் கவனத்தை பதித்தான்..

 

ஏன் அண்ணா “கீழ விழுந்தாலும் மீசையில மண்ணு ஒட்டலா” அப்படி தானே என்று கேட்டவாறு அவளும் தன் ஐஸ்கிரீமை உண்ண ஆரம்பித்தாள்.

 

அதற்க்கு பதிலுக்கு ஈஈஈஈஈஈஈ என்று பல்லை காண்பித்தன் அவன்..

 

யோகேஷ் அவள் உண்ணும் அழகை ரசித்தவரே  உண்டு கொண்டு இருந்தவனை வருண் ஓரவிழியால்  கண்டும் காணாதது போல்  பார்த்துக் கொண்டே அவனும் உண்டான்..

 

சாப்பிட்டு முடித்த பின் பீல் செட்டில் செய்து வெளியே வந்தவர்கள்,மீண்டும் காரை எடுத்துக்கொண்டு கிளம்ப ஆயுத்தமாகினார்.

 

யாழி மட்டும் அவர்கள் இருவரிடமும் சொல்லிக்கொண்டு ஆட்டோவில் செல்ல தயாராகினாள், “சரி அண்ணா அன்ட் சார் நான் கிளம்புறேன் ரொம்ப தேங்க்ஸ் நான் கேட்டேனு சொன்னதுக்காக நீங்க இரண்டு பேரும் இவ்வளவு தூரம் வந்து எனக்கு ஜஸ்கீரிம் வாங்கி தந்துருகிங்க”.

 

ஏய் ஏய் இரு இப்போ எதுக்கு நீ எங்களுக்கு தேங்க்ஸ் எல்லாம் சொல்லிட்டு இருக்க எனக்கு தங்கச்சி இருந்த நான் இப்படி தான் பண்ணிருப்பேன் நான் உன்னை என் தங்கச்சியா தான் பாக்குறேன் ஆனா நீ தான் என்னை அண்ணான பாக்கால சும்மா வாய் வார்த்தைக்காக தான் அண்ணானு சொல்லுற அப்படி தான?ஆமா கிளம்புற சொல்லுற எப்படி போவா?என்றவன் அவளை முறைத்து பார்த்து கொண்டிருந்தான்..

 

அய்யே அப்படி எல்லாம் இல்லை அண்ணா நான் உங்களை என் கூட பிறந்த அண்ணனான தான் பாக்குறேன்,நீங்க ஏன் அப்படி எல்லாம் நினைக்குறிங்க?எனக்காக நீங்க இவ்வளவு தூரம் வந்ததே பெருசு அதான்  ஏன் உங்களை இன்னும் தொந்தரவு பண்ணுவனேனு தான் நான் ஆட்டோல போகலாம் பார்த்தேன் மத்தபடி வேற ஒன்னும் இல்லை அண்ணா..

 

இதுவரை இவர்களிருவரும் சண்டையிடுவதை அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவன் “எங்களுக்கு இப்போ எந்த ஒர்க்கும் இல்லை யாழி சே நாங்களே உன்னை உன் வீட்டுல டிராப் பண்ணிட்டு போறோம் ஓகே வா”என்றான் யோகேஷ்.

 

அவன் பேசியது எதையும் அவள் காதில் வாங்கியது போல் தெரியவில்லை, அவள் பார்வை முழுவதும் தன்னை முறைத்து கொண்டு நிற்கும் வருணிடமே இருந்தது..

 

அவள் பார்வை போகும் திசையை பார்த்தவன் “ம்க்கும் சரியா போச்சு போ இந்த புள்ளை நம்ம பேசுனத காதுலயே வாங்கல  போல”என்று தன் தலையில் தானே தட்டிக்கொண்டான் அவன்..

 

இந்த  ம்மா “யாழி யாழினி யாழினியாள்” இங்க பாரு என்று அவள் பெயரை ஏலம் போட்டவறே உலுக்கினான் அவளை .

 

எ..எ .என்ன சார் கூப்புட்டிங்களா?

 

ஆமா இன்னும் ஒரு மணி நேரம் கழிச்சு கேளு போ மா அங்குட்டு என்றவன் தன் நண்பனை பார்த்து டேய் மச்சன் இங்க வா டா வந்து வண்டியை எடு அந்த புள்ளையை கொண்டு போய் அவங்க வீட்டுல விட்டுட்டு நாம வீட்டுக்கு போகலாம் என்றவன் சென்று வண்டியில் அமர்ந்துவிட்டான்.

 

அவனும் வந்து வண்டியில் ஏறியவன் அவளிடம் ஒரு வார்த்தை பேசாது வண்டியை கிளப்பிக்கொண்டு யாழியின் வீட்டை நோக்கி செலுத்தினான்..

 

அந்த வண்டியானது சாலையில் சீறி பாய்ந்த வேகத்தின் அளவே சொன்னது அவன் எவ்வளவு கோவமாக இருக்கிறான் என்று,அவ்வேகத்தை பார்த்தவள் இப்பே நாம என்ன சொல்லிட்டோமுனு இந்த அண்ணா இவ்வளவு கோவப்படுது?என்று சிந்தித்தவறே வந்தாள் அவள்..

 

அவளின் சிந்தனையை கலைக்கும் விதமாக “உன் வீடு எந்த ஏரியால இருக்கு எப்படி போகனும்?”என்று கேட்டான் யோகேஷ். 

 

சிறிது நேரத்தில் அவள் சொன்ன வழியில் பயணித்து அவள் வீட்டின் முன்பு வண்டியை நிறுத்தினான்..

 

வண்டி நின்ற பின்பு இறங்கியவள் முன் பகுதிக்கு வந்து வருணிடம் மன்னிப்பு கோரினாள், ” சாரி சாரி சாரிஅண்ணா இனிமேல் இப்படி பண்ண மாட்டேன் என்று சிறு பிள்ளை போல்  தன் காது இரண்டையும் பிடித்து தன் மன்னிப்பை வேண்டினாள்”. அவனும் சிறு பிள்ளை போல் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து இருந்தான்..

 

அவள் மன்னிப்பு வேண்டிய விதத்தை இரசித்து பார்த்தவாறு இருந்தான் அவன் யோகேஷ்.

 

அதற்க்குளாக தன் வீட்டின் முன் ஏதே வண்டி நின்ற சத்தம் கேட்டு வெளியே வந்து எட்டிப்பார்த்தார் யாழினியின் அம்மா….

 

கண்ணம்மா யாரு டா இது? எதுக்கு இங்க நின்னுட்டு இருக்க?என்று வினாவினார் அவர்.

 

தன் தாயின் குரலை கேட்டு நிமிர்ந்தவள் “அம்மா இவங்க தான் என் பாஸ் நான் உன்கிட்ட நேத்து கூட சொன்னானே ஒரு அண்ணா இருக்காங்கனு அது இவர் தான் ம்மா என்று வருணை கை காண்பித்தவள்,யோகேஷின் புறம் திரும்பி இவருக்கு தான் நான் பிஏவ ஒர்க் பண்ணுறேன் ம்மா என்றாள்”.சரி டா அதுக்கு அவங்கள இப்படி தான் வண்டிக்குளையே உக்கார வெச்சு பேசுவியா?என்றார் அவர்.

 

அவளின் தாயை கண்ட இருவரும் வண்டியை விட்டு  கீழ் இறங்கி வந்தவர்கள் அவரை பார்த்து வணக்கம் வைத்தனார்..

 

வணக்கம் தம்பிங்களா வாங்க வாங்க உங்களை பாத்தி கண்ணம்மா சொல்லிருக்க வாங்க வீட்டுக்குள்ள போய் பேசலாம்..

 

இல்லை அன்ட்டி நாங்க யாழியை டிராப் பண்ண தான் வந்தேம் கிளம்புறேம் இன்னொரு நாள் வர்றோம் அன்ட்டி. 

 

அட என்னப்பா நீங்க இவ்வளவு தூரம் வந்துட்டு வீட்டுக்கு உள்ள வராமா போனா எப்படி வாங்க ஒரு காப் காப்பியாவது குடிச்சிட்டு போவிங்கலாம்.

 

அவரின் வேண்டுகோளை ஏற்று இருவரும் வீட்டிற்க்குள்ளே சென்றனார்..

 

உக்காருங்க தம்பி இதோ ஒரு பத்து நிமிசத்துல காப்பி போட்டு எடுத்துட்டு வாரேன் என்றவர் சமையலறைக்குள் நுழைந்து கொண்டார்.

அவள் இன்னமும் அவன் முகத்தை பார்த்தவாறு தான் இருந்தாள்..

 

யோகேஷ் தான் தன் நண்பனின் காதில் “டேய் மச்சன் பாவம் டா புள்ளை ஏதே தெரியாம சொல்லிட்டா மன்னிச்சுடு டா அங்க பாரு அவ முகமே சரி இல்லை உன்ன தான் பாத்துட்டு இருக்க என்று இரகசியம் போல் உறைத்தான்”..

 

“அப்படியா சொல்லுற?”

 

“அட ஆமா டா பாவம் விட்ட  அழுதுடுவா போல இருக்கு டா”..

 

“சரி டா சரி  நான் பாத்துக்குறேன்”

 

“ம்ம்”

 

அதற்க்குள் அவளின் அம்மா சமையலறையில் இருந்து வந்தவர் அவர்களிடம் காப்பியை கொடுத்து அதை பருக சொன்னவர் தன் மகளின் முகத்தை பார்த்தார்..

 

அவள் முகம் வாடி இருப்பதை கண்டவர் அவளிடம் என்ன என்று விசாரித்தார்.

 

அவளும் மாலையில் நடந்த அனைத்தையும் தன் தாயிடம் கூறி விட்டு “இந்த அண்ணா கிட்ட சாரி கேட்ட அதை அக்செப்ட் பண்ணிக்க மாட்டிங்குறங்க ம்மா என்றவள் அழுதே விட்டாள்”.

 

அவள் அழுகையை பார்த்ததும் குடித்துக்கொண்டிருந்த காப்பியை வைத்து விட்டு அவள் அருகில் வந்து மண்டியிட்டு அமர்ந்தவன் “சாரி டா பாப்பா எனக்குனு யாருமே இல்லை டா உன்னை பார்த்ததும் தங்கச்சி ஃபீல் வந்துடுச்சு அதான் நீ அப்படி சொல்லவும் நான் கொஞ்சம் கோவப்பட்டுட்டேன் சாரி டா என்று இப்பொழுது மன்னிப்பு கேட்கும் முறை அவனுடையது ஆனது”.   

 

அவன் அவ்வாறு கூறியதும் “உனக்கு எத்தனை தடவ சொல்லுறது டா யாரும் இல்லைனு சொல்லதானு ஏன் நான் அம்மா,குட்டிமா எல்லாம் இல்லையா நாங்க என்ன செத்த போயிட்டோம் என்று தன் நண்பனை பார்த்து வினாவினான்? யோகேஷ்.

 

அவன் அவ்வாறு கேட்டதும் தன் தலையை தொங்க போட்டவாறு அமர்ந்துவிட்டான்..

         

         _தொடரும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்