Loading

அத்தியாயம் 2

 

சிறிது நேர பயணத்திற்க்கு பின்,தன் அலுவலகத்தை அடைந்தவன்,காரை அதன் இடத்தில் நிறுத்திவிட்டு தன் அலுவலகத்தை நோக்கி நடைபோட்டான்.அலுவலக பணியாளர்கள் கூறிய வணக்கத்தை சிறு தலையசைப்புடன் ஏற்றவன் தன் அறையை அடைந்தவனின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தது!!

 

“வா டா நல்லவனே வா”என்று கூறியவாறு அங்கு அமர்ந்திருந்தான் வருண்.நம் நாயகனின் நண்பன்.”டேய் நீ அதிர்ச்சியாகி நிக்கிறதுக்கு இங்க ஒன்னும் படம் ஒடல வா டா” உள்ள என்றவன் அவனை முறைத்து  பார்த்த வண்ணமே “ஏன் டா இது தான் நீ ஆபிஸ் வர டைம்மா”என்று வினவினான்?

 

“இல்லை டா கொஞ்சம் லேட் ஆகிடுச்சு”என்றான்.

 

“ஏது கொஞ்சம் லேட்டா,மணி என்ன ஆகுதுனு பார்த்தியா?இது தான் நீ ஆபிஸ் வர லட்சணமா டா,ஒரு எம் டி நீயே இப்படி லேட்டா வந்த மற்ற  எம்பிளாய்லாம் எப்படி டா வருவாங்க.என்று பொருமியவன் அருகில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து மடக்கு மடக்கு என்று குடித்து காலி செய்தவன்,எவ்வளவு கத்துறேன் எதாவது வாயை திறக்குறான பாரு,எருமை மேல மழை பெஞ்சவன் மாதிரி நிக்குறான் அடச்சீ வாயத்திறந்து ஏதவாது சொல்லி தொலை டா..

 

“ஈஈஈஈஈ கூல் மச்சி இப்ப என்ன இன்னைக்கு கொஞ்சம் லேட் ஆகிடுச்சு, அதுக்கு ஏன் டா இப்படி திட்டுற.”

 

“டேய் இன்னைக்கு முக்கியமான ஒரு கிளையண்ட் மீட்டிங் இருக்கு சொன்ன இப்ப வந்து கொஞ்சம் லேட் ஆகிடுச்சு சொல்லுற.”

 

“டேய் விடுறா,விடுறா மீட்டிங்கை இன்னொரு நாள் வைச்சுக்கலாம்.”

 

“அடேய் எருமை பயலே அந்த ஆளே மீட்டிங்க இன்னொரு நாள் வைச்சுக்கலாம்னு சொல்லிட்டு போய்ட்டார் போவியா அங்குட்டு,சரி சொல்லு ஏன் லேட் இன்னைக்கு..” என்றான்.

 

“அதுவா தூங்கிட்டேன் டா மச்சான் அதான் லேட்..” என்றவனை வெட்டவா,குத்தவா என்ற ரீதியில் நோக்கினான் வருண்.

 

“ஏன் டா லேட்டா வந்ததும் இல்லமா தூங்குனானல தான் லேட்டுனு ஸ்கூல் பையன் மாதிரி சொல்லுற வெட்கமா இல்லை..?” என்றவன் அவனை பார்த்து முறைத்த வண்ணமே இருந்தான் அவன்.”நைட் எல்லாம் தூங்காம அப்படி என்ன ராசா பண்ணிங்க?.”

 

அசடு வழிந்தவறே “அதுவா மச்சி நானும் எவ்வளவே உருண்டு,புரண்டு தூங்க டிரைப் பண்ணேன் டா,தூக்கம் வரலையா அதுனால லேப்டாப்ல படம் பார்த்தேன் மச்சி அதும் பேய் படம் “ஈவில் டெட்”செமையா இருந்துச்சு பாத்துட்டு தூங்க லேட் ஆகிடுச்சு.அதான் மார்னிங் கொஞ்ச நேரம் தூங்கிட்டேன்.”

 

“அட நாசமா போறவனே “ஏன் டா தூக்கம் வரலைன்னு யாராவது பேய் படம் பார்ப்பாங்கள டா அதும் நைட் டைம்..”

 

“ஈஈஈஈஈ தூக்கம் வரலை என்ன பண்ணுறது அதான் படம் பார்த்தேன் செம இன்ட்ரெஸ்டிங்கா இருந்துச்சு தெரியுமா?அதை பாத்துட்டு படுக்க மணி 3ஆகிடுச்சு.”

 

“எது ,எது இன்ட்ரெஸ்டிங்கா இருந்துச்சா ஏன் அதுல வர பேய் கூட போய் அப்படியே டூயட் ஆடிகிட்டு வந்துருக்கலாம்ல..”

 

“அதையும் பண்ணுணேண் டா ,அதுக்குளையும் அந்த குட்டச்சி வந்து மேல தண்ணிய ஊத்தி எழுப்பி விட்டுட்டா  இல்லைனா அது கூட இன்னைக்கு ஒரு டூயட் ஆடிருப்பேன் ஜஸ்ட் மிஸ் ஆகிடுச்சு.”

 

“எடு செருப்ப நாயே டூயட் ஆடிருப்பரம்லா டூயட் அதும் பேய் கூட ஏன் டா கொஞ்சமாவது ஒரு கம்பெனிக்கு எம்டி மாதிரி நடந்துகுறியா டா.ஸ்கூல் கோயிங் பாய் மாதிரி பண்ணிட்டு திரியுறா.எத்தனை தடவ சொல்லிருக்கேன் வீக் என்ட்ல மூவிஸ் பாரு,வீக் டெய்ஸ்ல பாக்காத அப்புறம் ஆபிஸ் வர லேட்டாகும் சொன்ன கேட்டகவே மாட்டியா டா..”என்று கூறியவன் நொந்து அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தான்.

 

இவனும் அவன் அருகில் ஒரு நாற்காலியை இழுத்து போட்டு அமர்ந்தவன்,அவன் தோளில் கை போட்டவாரு பதில் கூற ஆரம்பித்தான்.

 

“மச்சான் ஏன் டா இப்படி டென்ஷன் ஆகுற,கூல் மச்சி கூல்.. ஏன் டா நான் தெரியமா தான் கேக்குறேன் எம்.டினா எப்பப்பாரு  விரைப்பவே சுத்தனுமா என்ன? இந்த மாதிரி சின்ன சின்ன என்டர்டைமென்ட் இல்லைனா நான் ரோபோ மாதிரி மாறிடுவேன் டா.அதான் அப்போ அப்போ இந்த மாதிரி சின்னதா ஏதவாது பண்ணி என்னை நானே கூலா வெச்சுருக்கேன்.”

 

“நீ சொல்லுறதும் சரி தான் டா ,இருந்தாலும் நீ இந்த இடத்துக்கு வர எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கேனு கூடவே இருந்து பாத்த எனக்கு தெரியும் டா அதோட வலி.அதான் நீ இப்படி இருந்த நம்ம பழைய படி மாறிடுவமோனு சின்ன பயம் வந்துடுச்சு சாரி டா மச்சி..” என்றான்.

 

“டேய் இப்போ எதுக்கு சாரி சொல்லிட்டு இருக்க கொன்னுடுவேன் பாத்துக்க.நீ டென்ஷன் ஆகாத டா நாம இன்னும் இதைவிட மேல உயர்ந்து தான் போவமே தவிற,இதுல இருந்து கீழ போக மாட்டோம் சரியா.எப்பையும் பாசிட்டிவா திங்க் பண்ணு பாசிட்டிவாவே நடக்கும். ஒகே வா இப்பே போய் நம்ம வேலையா பார்க்கலாம்.”

 

“சரி டா நல்லதே நடக்கும்னு நினைப்போம்.நல்லதே நடக்கும். வா போய் வேலையா பார்க்கலாம்..”என்று கூறியவாறு தன் அறைக்கு சென்றான்.

 

போகும் தன் நண்பனை பார்த்து கர்வம் பட்டு கொண்டவன் ‘இப்படி ஒரு நண்பன் கிடைக்க நான் என்ன தவம் செய்தேனோ’ என்று எண்ணி பெருமிதம் கொண்டான்.

 

சிறிது நேரத்தில் இருவரும் அவரவர் வேலையில் மூழ்கி விட்டனார். மதிய உணவு இடைவெளையின் போது வருண் வந்து உணவு உண்ண அழைத்தும் மறுத்தவன்.”இரு டா இன்னும் கொஞ்சம் வொர்க் தான் கம்பிளிட் பண்ணிட்டு வந்துடுறேன்.அப்புறம் நாம இரண்டு பேரும்  சோர்ந்தே போய் லன்ச் சாப்பிடலாம்.”என்றவனை பார்த்து முறைத்தான் அவன்.

 

“டேய்..” என்று பல்லை கடித்தவன்

“ஏன் டா இப்படி படுத்துற மணி இப்பவே 4ஆச்சு.இன்னும் காலையிலிருந்து சாப்பிடலா பசில வயிறு வேற கூப்பாடு போடுது.ஒன்னு வேலை பார்த்த பசி,தூக்கம் மறந்து வேலை பாக்குற இல்லையா காலைல பண்ண மாதிரி எதாவது பண்ணி என்னை சாவடிக்குற ஏன் டா இப்படி இருக்க..” என்றான்.

 

அவனை பார்த்து சிரித்தவாறே தன் நாற்காலியிலிருந்து எழுந்தவன்,”வா டா  முடுஞ்சுது போய் சாப்புடலாம்..” என்றவறே அவன் தோளில் கை போட்ட படி “பசி வந்த மட்டும் நீ நீயா இருக்க மாட்டிங்குற”.என்று கிண்டலடித்தாவறு அழைத்து சென்றான்.

 

இருவரும் கேன்டீன் சென்று சாப்பிட்டு முடித்து,பின்பு அலுவலக விஷயம் பேசிக்கொண்டு இருந்தனர்.”டேய் வருண் பி.ஏ க்கு ஆள் சொல்லி கேட்டுருந்தோன்ல டா என்னாச்சு..?” என்றான்.

 

“மச்சி, அதுக்கு ஏற்பாடு பண்ணிட்டேன் டா  நாளைக்கு இன்டர்வியூ வெச்சு செலக்ட் பண்ணிடலாம் ஒகே வா.?”

 

“ஒகே மச்சான் அப்படியே பண்ணிடு மார்னிங் 10மணிக்கு தான இன்டர்வியூ?”

 

.”ஆமா டா நம்ம இரண்டு பேரும் தான் இன்டர்வியூ எடுக்க போறோம்”என்றான்.

 

“டன் மச்சி அப்பே நான் சார்ப்பா 9:30க்கு ஆபிஸ் வந்துடுறேன்.வா இப்பே போய் மீதியிருக்க வொர்க்கையும் முடுச்சுட்டு வீட்டுக்கு கிளம்பலாம்” என்றான்.இருவரும் மீண்டும் தங்கள் அறைக்கு சென்று மீதமிருந்த பணிகளை முடித்து விட்டு வீட்டுக்கு புறப்பட்டனார்.

 

வீட்டிற்க்கு வந்தவன் சிறிது நேரம்,தன் தாயிடமும் தங்கையிடமும் பேசி விட்டு தன் அறைக்கு சென்று தன்னை தூய்மைப்படுத்தி கொண்டு மீண்டும் கீழிறங்கி வந்தவன் தோட்டத்தில் போடப்பட்டிருந்த நாற்காலியில் சென்றமர்ந்தான்.

 

அவன் அங்கு சென்று அமர்ந்ததும்,அவன் தாயும் அவனுக்கு பிடித்த இஞ்சி டீ போட்டு எடுத்து கொண்டு சென்று தந்தவர்.தன் பேச்சை ஆரம்பித்தார் “கண்ணா அம்மா உன்கிட்ட ஒன்னு கேட்ட கோவிச்சுக்க மாட்டியே”என்றவர்.அவனை பார்த்த வண்ணம் இருந்தார்.

 

“என்ன ம்மா இதுலாம் நான் எப்பே உங்க மேல கோபப்பட்டுருக்கேன். எதுனாலும் என்கிட்ட நீங்க தைரியமா கேளுங்க.”

 

“அது ஒன்னும் இல்ல ப்பா உனக்கு கல்யாணத்துக்கு பொண்ணு பாக்கலாமுனு இருக்கேன் அதான் உன்னை கேட்டுட்டு நம்ம தரகர் கிட்ட சொல்லாமுனு..”என்றவறை பார்த்து

 

“ம்மா இப்பே என் கல்யாணத்துக்கு என்ன அவசரம்? நம்ம குட்டிமாவ நல்ல படிக்க வைச்சு, அவளுக்கு பிடிச்ச வாழ்க்கைய அமைச்சு குடுத்துட்டு அதுக்கு அப்புறம் நான் கல்யாணம் பண்ணிக்குறேன்.”

 

“அது இல்லை டா கண்ணா,இப்பவே உனக்கு 27வயசாகிடுச்சு நீ சொல்லுற மாதிரி பண்ணுனா இன்னும் இரண்டு வருசம் போயிடும் பா அதான் கேட்டேன்”.

 

“ம்மா, பரவயில்லை விடுங்க இப்பே இல்லைனா இன்னும் இரண்டு வருசம் கழிச்சு பண்ணிக்குறேன். அதுக்குளையும் நானும் நல்ல நிலைமைக்கு வந்துடுவேன்,நம்ம குட்டிமாக்கும் அவளுக்கு பிடிச்ச வாழ்க்கைய அமைச்சு குடுத்துடுவேன்..” என்றவனை பார்த்து பெரு மூச்சு ஒன்று விட்டவரே “சரி டா கண்ணா உன் இஷ்டம் படி பண்ணு எனக்கு ஒன்னும் கஷ்டமில்லை என்னவர்”.சரி ப்பா நான் போய் நைட்டுக்கு டின்னர் ரெடி பண்ணுறேன் சீக்கிரம் வந்துடு பனில ரொம்ப நேரம் உக்காராத என்றவர் சமையல் அறைக்கு சென்று விட்டார்..

 

தன் தாய் சென்ற பின் சிறிது நேரம் அந்த தோட்டத்தில் உள்ள மலர்களை ரசித்தவன்.பின்பு உள்ளே சென்று இரவு உணவு உண்டு முடித்து தன் அறைக்கு சென்று துயில் கொள்ள ஆரம்பித்தான்.

 

மறுநாள் காலையில் கதிரவன் தன் தங்க நிற கதிர்களை புவிக்கு மேல் பரப்பி கொண்டு மெல்ல மெல்ல கீழ் வானில் இருந்து மேல் நோக்கி வந்து கொண்டிருந்தான்..

 

“யாழி,யாழிமா எந்திரி டா டைம் ஆச்சு,மணி 6ஆகிடுச்சு டா கண்ணமா இன்னைக்கு ஏதே ஒரு கம்பெனிக்கு இன்டர்வியூ போகனும் சொன்னியே  எழுந்திரிடா மா”,என்று நம் நாயகியை எழுப்பி கொண்டிருந்தார் அவள் தாய் லட்சுமி.

 

“குட் மார்னிங்”ம்மா என்று சோம்பல் முறித்தவறே எழுந்து தன் தாயின் கழுத்தை கட்யாணைத்து அவர் கண்ணத்தில் ஈரம் பதித்தாள்.”சரி டா கண்ணம்மா நீ போய் பிராஷ் பண்ணிட்டு வா அம்மா உனக்கு காஃபி எடுத்துட்டு வரேன் என்று சமையலறை சென்றார்.

 

பல் துலக்கி வந்தவள் தான் தாய் கொடுத்த காஃபியை அருந்தியாவரு அன்றைய நாளிதழை புரட்டி கொண்டிருந்தாள்.

 

(அவ பேப்பர் படிக்கட்டும் அதுக்குளையும் நம அவளை பாத்தி பாத்துட்டு வந்துட்டாலம்)

 

நாரயணன்-லட்சுமி தம்பதியரின் ஒரே தவப்புதல்வி தான் நம் நாயகி “யாழினியாள்”.தாய் தந்தையாருக்கு செல்ல மகள்.தன் தந்தை இருந்த வரை ஒரு இளவரசி போல் வலம் வந்தவள்.அவர் இறப்புக்கு பின் மிகவும் துவண்டு போய்விட்டாள்,அதிலிருந்து தன்னை கொஞ்சம் கொஞ்சமாக மீட்டெடுத்தாவள் தன் லட்சிய பாதையை நோக்கி முன்னேறுகிறாள்.”படித்துது ஃபேஷன் டிஸைனிங்”அவள் விரும்பி படித்த பாடம்.அத்துறையில் தானும் சாதிக்க எண்ணி இன்று கிடைத்த வேலைக்கு செல்ல இருக்கிறாள்.காரணம் எந்தவொரு அடிப்படை தேவைக்கும் பணம் முக்கியம் அல்லவா,அதான் அதில் இரண்டு வருடம் உழைத்து அதில் வரும் பணத்தை சேகரித்து தன் கனவனா “லட்சுமி பெட்டிக்” எனும் கடையை நிறுவ இருக்கிறாள்.

 

 

 

“கண்ணம்மா காஃபியை குடுச்சுட்டேனா போய் ரெடியாகி வா டா சாப்பிட்டு கோவில் போய்ட்டு அப்புறேம் இன்டர்வியூ போவியாம்”,என்று சமையலறையிலிருந்து குரல் கொடுத்தார் லட்சுமி.

 

“சரி ம்மா இதே போறோன் போய் ரெடியாகி வரேன்”.நீங்க டிபன் எடுத்து வைங்க என்று கூறி தன் அறைக்கு சென்றாள்…

 

 

துர்கா கார்த்திகேயன்

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்