குளிர் ஊசி – 3 ❄️
புதியவனான மித்ரனும் , ஸ்காட்டிஸ் காளையான ராகேஷ் சார்லியும் முறைத்துக் கொண்டு நிற்க, “ஏனடா கேட்டோம் ? ” என்பது போல் இரண்டு கதவிற்கு நடுவில் எலி சிக்கியது போன்ற உணர்வு லாராவிற்கு .
இருவரும் சுற்றுபுறம் அறிந்தே தனது சண்டை வாய்மொழியிலா இல்லை கை மொழியிலா என்று புரிந்து நடந்து கொள்வதால் கொஞ்சம் ஆசுவாசமாக இருந்தது லாராவிற்கு. இருந்தும் இருவரும் இம்மூவருக்கு மட்டும் கேட்கும் அளவில் பேசுவது கூட மனம் படபடவென அடித்துக் கொண்டது.
எப்போதடா கிளம்புவார்கள் என்று நினைத்து கொண்டிருந்த சமயம் மித்ரனிற்கு அலைபேசியில் அழைப்பு வந்தது. அதைப் பார்த்து மகிழ்ந்தாள் லாரா. அதே நேரம் கடுப்பாகிய சார்லி தரையை எட்டி உதைத்து விட்டு காரை நோக்கிச் சென்றான்.
இதை கண்டும் காணாமல் மித்ரன் வந்த அலைப்பிற்கு பதிலளித்து கொண்டிருந்தான். அவன் சென்றப் பின் லாராவிடம் எதையோ கூறிவிட்டு, இவனும் காரின் அருகில் வர, பின்னால் வந்த லாராவை அழைத்து மாயா மற்றும் சரணுடன் வந்த அவர்களது விருந்தாளியான ஜனனியையும் அழைத்து வரக் கூறினான்.
மித்ரனிற்கு தனது காரில் அடுத்தவர்கள் வருவது பிடிக்காத விஷயம். சார்லி இவனை வெறுப்பேற்றுவதற்காகவே தனது காரில் வராமல் மித்ரனின் காரில் வந்தான்.
அதே போல், தான் கூறி அதற்கான வேலையை செய்யாமல் மித்ரனின் வாய்மொழிக்காக காத்துக் கொண்டிருந்தாலும் அவனுக்கு கோபம் அதிகரிக்கும் . அது அவனின் உடலையும் பாதிக்கும். இது போல் ஒரிரு முறை நடந்திருப்பதால் சார்லி ஏதேனும் கூறினால், லாரா மித்ரனின் பக்கம் தனது கருவிழியைக் கூட நகற்றாமல் வேலை செய்வாள். அதன் பின்பே மித்ரனைப் பார்ப்பாள்.
இன்றும் அதே போல் சரண் மற்றும் மாயாவை அழைப்பதற்காக , மித்ரனின் பின்னால் வந்தவள் அப்படியே திரும்பி விட்டாள்.
ஜனனி , மாயா மற்றும் சரண் சிரித்துக் கொண்டே கப்பசினோவே ஒருவரிடம் இருந்து மற்றவர் பறித்து அதை அருத்திக் கொண்டே நிறைய கதைகள் பேசிக் கொண்டிருந்தனர்.
அவர்களின் சிரிப்புகளைக் கண்டு அகமகிழ்ந்து லாரா மாயாவின் தோளில் தட்டி “என்ன உங்க ஃபிரண்ட்டும் உங்க வேவ் லென்த் (ஒரே எண்ணம்) தானா? பயங்கரமா அரட்டை அடிக்கிறாங்க ” கூறினாள்.
அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டே ஜனனி, சரணின் தோளைச் சுரண்டி “என்னடா தமிழ் இவ்ளோ தெளிவா பேசிறாங்க ? ” என்று கூற, ஜனனி திருதிருவென முழித்தாள்.
” இந்த தகவல் மட்டுமில்லாமல், இன்னொரு தகவலும் சொல்லுறேன். டேய் சரணு நம்ம சார்லிக்கு தமிழ் தெரியுமா. அதான் ஜனனினு பேரு போட்டு போர்ட்டு பிடிச்சிடுச்சு இருந்தான்ல அவன் தான் ? ” என்று கூறியவுடன் சரண் வாயைப் பொத்திக் கொண்டு சிரிக்க , ஒரளவுக்கு புரிந்ததால் லாராவும் சிரித்தாள்.
அந்நேரம் சார்லி தூரத்தில் தள்ளி நின்றுக் கொண்டு அலைப்பேசியில் உரையாடிக் கொண்டிருந்த மித்ரனை கண்டு முறைத்துக் கொண்டே கோக் டின்னை நசுக்கினான். அதைத் தூரத்தில் இருந்த கண்ட ஜனனி தன்னைத் கண்டு தான் இவ்வாறு செய்கிறான் என்று நினைத்துக் கொண்டாள்.
அதோடு மித்ரன் சார்லிக்கும் ஜனனிக்கும் உள்ள நடுக்கோட்டில் சார்லியின் பக்கமும் இல்லாமல், ஜனனியின் பக்கமும் திரும்பாமல் பக்கவாட்டில் திரும்பி பேசிக் கொண்டிருந்தான். அதோடு மித்ரனின் பக்கவாட்டில் ஒரு தூண் வேறு இருந்ததால் ஜனனிக்கு மித்ரன் நின்றுக் கொண்டிருப்பது தெரியவில்லை. சார்லிக்கு தூணோடு மித்ரனும் இருப்பதால் ஜனனி கண்ணுக்கு தென்படவில்லை.
அவள் பீதியடைந்ததைக் கண்டு சிரித்துக் கொண்டே, லாரா கையோடு அவளை அழைத்துச் சென்றாள். அவள் லாராவின் கையைப் பிடித்து நிறுத்தி, “இல்லை சிஸ்டர், ரொம்ப டயர்டா இருக்கு. நான் இவங்களோட வீட்டுக்கு போய் ஃபிரஷ் ஆகிட்டு வந்து உங்ககிட்டையும் அந்த சார்டையும் பேசுறேனே “என்று கூறிக் கொண்டே தனது கையை உருவ முயன்றாள்.
அதில் நன்கு பலமாக சிரித்தனர் மாயா மற்றும் லாரா. அதில் மலங்க மலங்க விழித்தவளைக் கண்டு தனது மனைவியை கண்களாலேயே அதட்டி “பம்கின், நம்ம அவங்க கார்ல தான் போறோம் ” என்று பாவமாக கூற, “அட கஞ்ச பயலுகளா, இங்கையும் ஓசி தானா? ” என்று பதற்றத்தில் கோபம் கலந்து கேட்க , அதில் அவளை முறைத்து “சாவு ” என்று கூறி தரதரவென இழுத்துக் கொண்டு சென்றான் .
அதற்குள் மித்ரன் ஓட்டுனர் இருக்கையில் அமர, சார்லி அவனது பக்கவாட்டில் அமர்ந்தான். இடையில் இருக்கும் சீட்டில் சரண் மற்றும் ஜனனி அமர, மாயா மற்றும் லாரா பின்சீட்டில் அமர்ந்தனர்.
அரை மணி நேரப் பொழுது அமைதியாக சென்றது. அதற்கு மேல் முடியாது என்று நினைத்து ஜனனி “சார் , சார் …….. ” என்று மெதுவாக ஆரம்பித்தாள்.
“டோன்ட் கால் மீ சார். ஐ ஆம் சார்லி ” என்று திரும்பாமலேயே கூறினான். “ஓகேடா சார்லி, ஐ ஆம் சாரி . நான் …..” என்று அவள் தொடங்க, அனைவரும் அவளைத் திரும்பி பார்த்தனர் சார்லி உட்பட.
சரண் தான் அவளின் தோளை சுரண்டி “அடி அர வேக்காடு. உன்னை சாருனு தான் கூப்பிட வேணாம்னு சொன்னாங்க. போடா வாடானுலாம் பேச சொல்லல” என்று ஓட்டுநர் சீட்டில் அமர்ந்திருப்பவனை ஒரக்கண்ணால் பார்த்துக் கொண்டே கூறினான்.
ஏனென்றால், மித்ரனுக்கு யாரும் சார்லியை மரியாதை இன்றி பேசுவதை அவன் விரும்ப மாட்டான். அதனாலேயே சார்லிக்கு நண்பர்கள் வட்டாரம் என்பது இல்லை.
அதை புரிந்து கொள்ளாமல் ஜனனி, “என்னடா உளருற …. தண்ணி எதுவும் போட்டிருக்கியா? ” என்று அவளும் ஹஸ்கி வாய்ஸில் கேட்டாள்.
“எது நானு ? “என்று கூறி தலையில் அடித்துக் கொண்டான் சரண்.
“ஆமாடா நீ தான். ஒருத்தன் பேரு சொல்லி கூப்பிடுனு சொன்னா மரியாதை தரத் தேவையில்லைனு தான் அர்த்தம் “என்று அவளே விளக்கவுரை கொடுத்தாள்.
இங்கு மித்ரனோ எரிச்சலில் பல்லைக்கடிக்க , அது சார்லி செவிகளில் விழுந்தது. அதனால், “ஆமா, ஆமா….. அதே தான் ” என்று கூறி சிரித்து கொண்டே திரும்பி அவளுக்கு கைக் கொடுத்தான்.
அவளும் சிரித்துக் கொண்டே கைகளை நீட்டியவள் ஒரு நொடி சிந்தித்து விட்டு, “ஹே லீ ….. நீ ஒரு நிமிஷம் திரும்பு “
“ஏன் ? “
“அட திரும்பு …. “என்று கூறி சார்லியை அவளே முன்னே பார்க்கும் படி திருப்பி, “வாவ்….. நீ பாக்க என் ஃபோர்ட்டின் ஹவர் கிரஷோட சாயல் மாதிரி இருக்க? “
“எதே? ஜனனி உன் சுட்டி தனத்தை கொஞ்சம் நிறுத்துறியா ? ” என்று சரண் சத்தமில்லாமல் கண்டித்தான்.
அதில் அவளின் முகம் வாடியது. இதனைக் காணப் பொறுக்காமல் சார்லி “ஹே சில்….. நீ சொல்லு ! யாரு அந்த கிரஷ் ? “
“என்னோட ஃபிளைட்டில் வந்தான். அவன் எப்படி இருந்தான் தெரியுமா? ” என்று கண்மூடிக் கொண்டே கூற,
“எப்படி “என்று லாரா அவளின் குறும்புகளை ரசித்து கேட்க,
லாராவை கண்டு வெட்க புன்னகை வீசி “அது மச்சி, பாக்க நல்லா இருந்தான். பப்பாளி கலர். அதுக்கு ஒரு வெள்ளை சட்டை அவன் போட்டிருந்தான். ஹப்பா ஹப்பா….. “என்று கூறியவுடன் , அனைவரும் அவளை அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் பார்த்தார்கள்.
“ஆனால், ஒன்னு சார்லி அவன் போட்டிருந்த டிரஸ் தைச்சுட்டு போட்டானா இல்லை போட்டுட்டு தைச்சானானு தெரில அப்படி ஒரு ஃபிட் ” என்று ஏக்க பெருமூச்சு விட்டாள்.
“ஹே, நீ ரசிச்சு தான் சொல்லுறியா? ” மாயா சந்தேகத்துடன் கேட்க, “ஹே, அவங்க எவ்ளோ ரசிச்சு சொல்லுறாங்க . நீ என்ன இப்படி கேட்குற ? “என்று லாரா கேட்க , அதே கேள்வி கணைகளோடு சார்லியும் பார்க்க, ” ரசிச்சு தான் டி சொல்லுறேன். அவனுக்குலாம் நல்ல தையல் கடைக்காரன் கிடைச்சிருக்கான். நமக்கு தான் எங்க தேடுனாலும் கிடைக்க மாட்டேங்குது ” என்று கூறிய நொடி, சரணும் மாயாவும் அவளை பற்றி முன்பே தெரிந்திருந்தால் இப்படி தான் ஏதாவது இருக்கும் என்று நினைத்தால் அவ்வளவாக சிரிக்கவில்லை. ஆனால், சார்லிக்கும் லாராவிற்கும் சிரிப்பை அடக்க முடியவில்லை.
லாரா கொஞ்சம் தன்னை சமன் படுத்தி கட்டுக்குள் கொண்டு வர, சார்லியின் கண்களில் தண்ணீர் வரும் அளவு சிரித்தான். அதில் ஓட்டுநர் இருக்கையில் இருந்தவன் சடாரென்று வண்டியை நிப்பாட்ட ,
“ஏன்டா, கண்ணு தெரில . பாத்து வண்டி ஒட்டுப்பா . எவ்ளோ ரசிச்சு பேசிக்கிட்டு இருக்கேன். டிஸ்டர்ப் பண்ணிட்டு இருக்க ? அய்யோ உனக்கு தமிழ் வேற தெரியாதா. டோண்ட் டிஸ்டிராக்ட் மீ. டூ யுவர் ஒர்க் ப்ராபர்லி ( என் சிந்தனையை கலைக்காதே. உன் வேலையை ஒழுங்கா பாரு ) என்று திட்ட,
அவன் ஸ்டீயரிங் அழுத்தி கண்கள் மூடி திறந்து திரும்பி பின் ………….
அனைவரும் அதிர்ந்து விட்டனர் அவனின் செயலில் .
கீர்த்தி ☘️