Loading

மாலை நேரத்தில் மயங்கும் சூரிய ஒளியில் , வண்ணமயமான வானத்தில், சூரியன் இனிதே விடைப்பெற்று சென்றது…..

 

கயல், தன்னுடைய பணியை முடித்து விட்டு குழப்பங்கள் தீரா மனதுடன் இருக்க மறுபக்க மனதோ , அன்பிடம் இருந்து தனக்கு சாதகமான பதில் வரும் என்று எண்ணியது…. இப்படி அலைபாயும் மனதுடனே வீட்டிற்கு வந்து சேர்ந்தாள்….. தான் வேலைவிட்டு வந்ததும் தன்னை முதலில் வரவேற்கும் பாட்டியில் குரல் இன்று தன்னை வரவேற்கவில்லையே என்று எண்ணியப்படி வீட்டிற்குள் சென்றாள்…. தான் வந்து சிறிது ஆகிவிட்டது இன்னும் இந்த பாட்டியில்லையே என்று நினைத்தவள் .தன்னுடைய அன்னையிடம் பாட்டி எங்க என்று கேட்கலாம் என்று முடிவு பண்ணினாள்….

 

கண்ணம்மா, வாடாமா இன்னைக்கு மாப்பிள்ளை உன்னை பாக்கவந்தாரா….?…

 

ஆமாம் மா….. பாட்டி எங்கே…?…. எங்கேயும் காணவில்லை….?…

 

கண்ணம்மா, உன்னுடைய பாட்டி கோவிலுக்கு போயிருக்காங்க ….. மாப்பிள்ளை வீட்டில் இருந்து கால் வந்ததும் மா……. கயலோ , மனதிற்குள் அவன் கல்யாணம் வேண்டானு சொல்லியிருப்பான்…. என்று நினைத்து மனதிற்குள் புன்னகைச் செய்துக்கொண்டாள்………கண்ணம்மாவோ , அவளின் எண்ணங்கை உடைக்கும் வகையில்…., மாப்பிள்ளை வீட்டுகாரர்கள் நாளை புடவை எடுக்க போகலாம்னு சொல்லிட்டாங்கமா……

 

என்னமா தீடீர்னு சொல்றீங்க…. அதற்குள்ள என்ன அவசரம் மா….

 

கண்ணம்மா, நம்ம வீட்ல இருந்து யாரும் தேதி குறிப்பிடலமா ….. மாப்பிள்ளைதான் இன்னும் நான்கு நாள் கழித்து வரும் நல்ல நாளில் நிச்சயதார்த்தமும் , இந்த மாதம் கடைசியில் வரும் வளர்பிறை முகூர்த்தத்தில் திருமணமும் வைக்க வேண்டும்னு சொல்லிட்டாருமா….. அவங்க குடும்ப ஜோசியர் கிட்ட போய் பார்த்து நாட்களை குறித்து வந்தாராம்….. நாளைக்கு பள்ளிக்கு விடுப்பு சொல்லிடுமா…. நிச்சியத்திற்கும் கல்யாணத்திற்கு சேர்த்தே நாளைக்கு புடவை எடுக்கணும் மா…… நீ போய் சாமி குப்பிட்டு சாப்பிடு….. நான் நம்ம சொந்தகாரங்க எல்லோருக்கும் இந்த விசயத்தை சொல்லனும், இல்லனா இதையே ஒரு சாக்கா வெச்சி கல்யாணத்துல ஏதாவது கலாட்டா பண்ணுவாங்க….. கயலுக்கோ தலையில் இடியே இறங்கியது போலானது….. கண்ணம்மா மற்ற வேலைகளை பார்க்க சென்றுவிட்டார்….. 

 

 

கயல், பூஜையறையில் அந்த கடவுளிடம் சண்டையிட்டுக் கொண்டிருந்தாள்…. “எல்லோரும் சதி செய்து விட்டீர்கள் , உங்களை எல்லாம் நம்பினேன் பாரு என்னைய சொல்லனும் “….. என்று பெரியமனுசியாட்டம் பேசிக்கொண்டிருந்தாள்….. எவ்வளவு நேரம் இப்படியே போனது என்று தெரியவில்லை அவளுக்கு ,கமலம் பாட்டி வந்து அழைக்கும் வரையில்…… பாட்டியில் அழைப்பில் நிதானத்திற்கு வந்தவள், தன்னை அமைதிபடுத்திக்கொண்டு ஒரு புன்னகையை உதிர்த்தாள் ….

 

 

கமலம், கயல் மா என்ன பண்றீங்க, இன்னைக்கு ரொம்ப நேரம் பூஜையறையில் சாமிகிட்ட சண்டை போட்டுவிட்டீங்க போல என்று குறும்புடன் கேட்க……

 

கயலுக்கு தீடீரென மண்டையில் ஒரு மணி அடித்தது…. நம்ம அவ்வளவு சொல்லியும் அவன் கல்யாணத்தை நிறுத்தவில்லை….. இந்த பாட்டிக்கும் வயசாயிடுச்சி “பேசாம பாட்டியை கருணை கொலை பண்ணிடலாமா”…… என்று யோசிக்க……

 

கமலம், என்னடி யோசிக்கிற , யாரை போட்டு தள்ள பிளான் பண்ற……

 

ஈ…. ஈ…. யாரையும் இல்ல….. கிழவி கண்டுபிடிச்சிடுச்சி…… கிழவிய தான் போட்டு தள்ள பிளான் பண்ணோம்னு தெரிஞ்சுதுனா , அது நம்மளை போட்டு தள்ளிடும்…. நமக்கு எதுக்கு வம்பு…. நம்ம இந்த கல்யாணத்தை எப்படி நிறுத்தலாம்னு யோசிப்போம்…. வேற ஏதாவது ஐடியா கிடைக்குதானு பார்ப்போம்….. என்று தன்னுடைய அறைக்கு சென்றுவிட்டாள்…..

 

கமலம் பாட்டி போகும் அவளையே அமைதியாக பார்த்துக்கொண்டிருந்தார்…. அவருக்கும் தெரியும் கயலுக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லை என்று….. கயல் எதாவது குட்டி கலாட்டா பண்ணி கல்யாணத்தை நிறுத்த பிளான் பண்றத்துக்கு முன்னாடி இந்த கல்யாணத்தை பண்ணிடனும் என்று எண்ணிதான், இன்று மாலை கோவிலுக்கு சென்று கடவுளை வணங்கி விட்டு , தன்னுடைய குடும்ப ஜோசியரைப் பார்த்து நிச்சதார்த்தத்தையும் கல்யாணத்தையும் ஒன்றாக வைக்க நல்ல நாளை குறித்துக்கொண்டு வந்தார்….. 

 

 

ரூம் உள்ளே வந்ததும் வருத்தம் கோவம் எல்லாம் சேர்ந்து அழுகையாக வந்தது கயலுக்கு…. தன்னுடைய முடியாமையை எண்ணி….. தன்னுடைய குடும்பத்தில் இருப்போரின் புன்னகையை காணும் போது திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என்கிறது ஒரு மனது…. மற்றொரு மனமோ பெற்றோரை விட்டு எப்படி செல்வது, அவர்களை பாதுகாக்க யார் இருக்கா தன்னை தவிர என்றது…… அந்த நேரத்தில் அவளின் போன் ஒலித்து ,அவளின் சிந்தனையை திசைதிருப்பியது…. புது எண்ணாக இருக்க அட்டண் செய்து “ஹலோ” …

 

“ஹாய்” டியர்…

 

யார் நீங்க, லூசு தனமா பேசுறீங்க, ஏற்கனவே கோவத்தில் இருந்தவளுக்கு வார்த்தைகள் கோவமாக வாயில் இருந்து வந்தன….

 

சரி…. சரி … – கோவப்படாதே நான்தான் கவி அன்பன்….. உன்னுடைய வருங்கால கணவன்… –

 

உங்களுக்கு கொஞ்சமாவது மனசாட்சி இருக்கா ….? …. நான் அவ்வளவு சொல்லியும் இப்படி கல்யாணத்திற்கு ஓகே சொன்னதும் இல்லாம, கல்யாணத்தை சீக்கிரமா வேற பண்ணனும்னு சொல்லியிருக்கீங்க….. நீங்க எல்லாம் ஒரு மனுசனா “….. கோவம் இப்பொழுது அழுகையாக மாற … – அவளின் பதிலுக்கு எதிர்பார்க்காமல் போனை தூக்கி அடிக்க , அது சுவரில் பட்டு வெடித்து சிதறியது…… அவனுக்கு “டமால்” என்ற சத்தம் மட்டுமே கேட்டது….. அவனோ உதட்டில் சிறு புன்னகையுடன் ” என்னுடைய செல்ல பொண்ணாட்டிக்கு போனை உடைக்கும் அளவுக்கு கோவமா “….. எப்படி தான் சமாளிக்க போறோமோ என்ற நினைப்பிலே நிம்மதியாக உறங்கிவிட்டான்….. இங்கு கயலோ சாப்பிடாமலே உறங்கிவிட்டாள்…..

 

   கமலம் பாட்டி சாப்பிட்டுவிட்டு தன்னறைக்கு சென்று விட்டார் உறங்க….. வேலப்பனும் கண்ணம்மாவும் சாப்பிட்டு முடித்துவிட்டு , சாப்பிட்ட பாத்திரங்களை எல்லாம் எடுத்து வைத்துவிட்டு, தங்களுடைய அறைக்கு வந்தனர்…. இருவரும் கட்டிலில் உட்கார்ந்துக்கொண்டு சிறிது நேரம் பேச….. சிறிது நேரம் கழித்து கண்ணம்மா வேலப்பரைப் பார்த்து, என்னங்க இந்த கல்யாணம் பண்றது நம்ம பொண்ணுக்கு சரியா தானே அமையும்!!… இந்த கல்யாணம் தவறாக எதையும் நடத்திவிடாதே என்று ….. சற்று பயத்துடன் கேட்க…..

 

 

வேலப்பன், தன்னுடைய மனைவியின் முகத்தை கையில் ஏந்தி…. என்னுடைய மனைவிக்கு தீடீர்னு ஏன் இந்த சந்தேகம்…

 

ஏனு தெரியவில்லை ….. எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு…. நம்ம பொண்ணுக்கு இந்த கல்யாண வாழ்க்கை நல்லபடியா இருக்கனும் ….என்று வேலப்பரின் மடியில் தலைவைத்து படுத்துக்கொண்டார்…..

 

 

வேலப்பர், தன்னுடைய மனைவியின் தலைமுடியை கோதிக்கொண்டே ” எல்லாம் சரியா அமையும் கண்ணம்மா” ….. நீ எதை நினைச்சியும் பயப்பிடாதே…. என்று ஆறுதல் கூற…. சிறிது நேரத்தில் இருவரும் நித்திரையின் பிடியில் இருந்தனர்…..

 

 

   காலை சூரியன் கண்ணை கூச செய்ய….. அனைவரும் புடவை எடுக்க துணிக்கடைக்கு சென்றனர்….. கயலின் குடும்பம் வருவதற்கு முன்பே கவி அன்பனின் குடும்பம் சென்று கடையில் இவர்களுக்காக காத்திருந்தனர்….. சிறிது நேரத்தில் இரு குடும்பங்களும் ஒன்றாக சேர்ந்து ஆடைகளை எடுக்க ஆரம்பித்தனர்….. கயலோ எதிலும் விருப்பம் இல்லாமல் அமைதியாக இருக்க….. இதை கவனித்த கவியோ ” இவளை இப்படியே விட்டா சரியாகாது என்று நினைத்தவன்”…… அவளின் அருகில் சென்று அவளுக்கு புடவையை தேர்ந்தெடுக்க ஆரம்பித்தான்….. இரு வீட்டினரும் இவனின் நடவடிக்கைகளைக் கண்டு புன்னகைச் செய்துக்கொண்டு இருந்தனர்…… கயலோ அவனை முறைத்துக்கொண்டிருந்தாள்….. அவனோ அவளுக்கு சேலை எடுப்பதிலேயே மும்முரமாக இருந்தான்….. கடைசியில் சிகப்பு நிற பட்டு சேலை ஒன்றும், நீல பட்டுசேலை ஒன்றும் எடுத்து பில்போட்டான்…. அனைவரும் துணி எடுத்து முடித்தும் அருகிலேயே ஓட்டலில் உணவு ஆர்டர் செய்து சாப்பிட்டனர்….. அனைவரும் சாப்பிட்டதும் கவிஅன்பனின் அப்பா ரகு பேசத்தொடங்கினார்…. 

 

 

ரகு, இங்க பாருங்க சம்மந்தி இன்னும் பத்தாவது நாளில் வரும் வெள்ளிக்கிழமை நல்ல முகூர்த்தம்னு எங்க ஜோசியர் சொன்னாரு….. நம்ம வெள்ளிக்கிழமை கல்யாணத்தை வைத்துவிட்டு, அதற்கு முன்நாள் வியாழன் கிழமை நிச்சயம் வைத்துக்கொள்ளலாம்….. இப்படி பண்றது உங்களுக்கு சந்தோசம் தானே… கயல் மா என்று தன்னுடைய மருமகளைப் பார்த்துக்கொண்டே வேலப்பரிடம் கேட்டார்…. அவர்கள் அனைவரும் சரி என்று புன்னகையுடன் கூற…. சிறிது நேரத்தில் அனைவரும் வீட்டிற்கு புறப்பட…. கயல் கடைசியாக செல்ல ,அவளின் கைகளைப் பிடித்த கவியோ” ஏன் கயல் என்கிட்ட பேசமாட்ற”… என் மேல அவ்வளவு கோவமா….?….

 

உங்க மேல எனக்கு எந்த கோவமும் இல்லை…. என் மேலதான் கோவம் என்று கூறிவிட்டு , தன்னுடைய கையை அவனிடம் இருந்து விலக்கிக்கொண்டு வேகமாக சென்று விட்டாள்…. கோவமாக போகும் அவளையே பார்த்து சிரித்துக்கொண்டான் மனதிற்குள்….. சில நாட்களில் பத்திரிக்கையை உறவினர்களுக்கு அனைவருக்கும் கொடுக்க…. கல்யாண நாளும் வந்தது….

 

வியாழன் கிழமை மாலைநேரத்தில் அந்த மண்டபமே மக்கள் கூட்டம் நிறைந்து இருக்க “கயல் நீல பட்டுபுடவையில் தேவதைப்போன்று வந்து சபையில் நின்றாள்….. அவளின் அருகில் ஆண் அழகனாய் நீல நிற கோட்சூட்டில் நின்றான்…… நல்ல நேரத்தில் நிச்சயபத்திரிக்கை வாசிக்கப்பட்டதும் கயலும்- கவி அன்பனும் மோதிரத்தை மாற்றிக்கொண்டனர்…. நடு இரவு தொடும் வரை உறவினர்கள் போட்டே எடுத்த இருவரையும் களைப்பாக்கினார்கள்…. ஒருவழியாக போட்டோசூட் முடிய மணமக்கள் இருவரும் தங்கள் அறைக்கு சென்றனர்….. கவி அன்பனுக்கோ நாளை நினைத்து மகிழ்ச்சியாக இருந்தது….. கயலுக்கோ “எல்லாம் விதி என்றிருந்தது”… 

 

   காலையில் ஐயர் ” பொண்ணை அழைத்து வாங்க” …. என்று கூற….. சிகப்பு நிற பட்டு சேலையில் அழகின் மொத்த உருவமாய் உறவு பெண்கள் சூழ மணமேடையில் வந்து அமர்ந்தாள்…. அவளின் அருகில் பட்டு வேட்டியில் அழகனாய் கவி அமர்ந்து இருந்தான்… – ஜயர் ” கெட்டிமேளம்… – கெட்டிமேளம் “….. என்று கூற…. கயலின் கழுத்தில் தாலி கட்டி தன்னுடைய மனைவியாக்கிகொண்டான்….. வேலப்பனுக்கு கண்ணம்மாவும் கண்ணின் ஒரத்தில் வந்த சிறு துளி கண்ணீரை துடைத்துக்கொண்டனர்…. அனைவரிடம் ஆசிர்வாதம் வாங்கிவிட்டு மாப்பிள்ளையின் வீட்டிற்கு மணமக்களை அழைத்து வந்தனர்….. கவிதாவும்- ராமுவும் அவர்கள் கூடவே இருந்தனர். — மாலைவரை அனைத்து சடங்குகளையும் செய்துமுடித்துவிட்டு, கவியின் அறையில் கயலைவிட்டுவிட்டு உறவு பெண்கள் செல்ல”…. கவிதா தன் தோழியை அணைத்துக்கொண்டு ” ஆஸ் த பெஸ்ட் டி” என்று கூறிவிட்டு சென்றுவிட்டாள்….. ராமுவும் தன்னுடைய நண்பனுக்கு வாழ்த்து கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுவிட்டான்…..

 

   

   கயல் அந்த அறையை வெறித்து பார்த்துக் கொண்டு இருக்க….” க்கும்”…. என்ற கணைக்கும் சத்தத்தில் திரும்பி பார்க்க, அவளின் அருகில் இருந்தான் கவி….

 

கயலோ அவனைப் பார்த்து முறைத்துவிட்டு, திரும்பிக் கொள்ள….. அவனோ அவளின் முகத்தை தன்னை நோக்கி பார்க்கும் படி செய்துவிட்டு” என்னுடைய மனைவிக்கு என்ன கோவம்”…. கூறுங்கள் அதை சரிபண்ணலாம் ….. என்று கூற,

 

கயலோ அமைதியாக அவனைப் பார்த்துவிட்டு , எனக்கு விவாகரத்து வேண்டும்….. என்று கூற…

 

கவி, வாயிலே அடி விழும்…. இன்னொரு முறை இப்படி சொன்னீனா…. உனக்கு விவாகரத்து கொடுக்க வா உன்னை கல்யாணம் பண்ணிக்கொண்டேன்…..

 

கயல், நான் எத்தனை முறை சொன்னேன் …. இந்த கல்யாணத்தில் எனக்கு விருப்பம் இல்லையினு….. நீங்க கேட்டீங்களா…!!

 

கவி அமைதியாக எழுந்து சென்று தன்னுடைய கபோர்டில் இருந்து ஒரு பேப்பரை எடுத்து வந்து அவளிடம் கொடுத்தான்….. அதை வாங்கியவள் முகம் குழப்பத்தை தாங்க…… சிறு புன்னகை ஒன்றை சிந்தியவன் பேசத்தொடங்கினான்…. இங்க பாருங்க என் காதலே இது பேப்பர் என்னனு பாக்குறீயா….? … உங்க ஊருக்கு பக்கத்துல நம்ம ஓட்டல் ஒன்று திறக்கபோகிறோம் .அதற்கான, திறப்பு விழா அழைப்பிதழ்….. நான் தான் இந்த ஓட்டல் பாத்துக்கபோறேன்….. இங்க ஒரு ஓட்டலைக் கட்டிவிட்டு, மேனேஜரை பார்த்துக்க சொல்லலாம்னு இருந்தேன்….. நீ அன்றைக்கு உங்க பெற்றோரை விட்டு வர முடியாதுனு சொன்னியே அந்த காரணம் எனக்கு சரியானதா பட்டது….. எனக்கு எப்படி என் பெற்றோர் முக்கியமோ அதே போல தான உனக்கும்….. அதனால தான் முடிவு பண்ணேன்….. சென்னையில இருக்க பிசினெஸ் எல்லாம் அப்பா பாத்துப்பாரு, நான் இங்க பாத்துப்பேன்…..ஏன்னா என்னால உன்னை விட்டு இருக்க முடியாது….. இந்த விசயத்தைப் பத்தி உனக்கு முன்னாடியே கூறியிருக்கலாம் …..ஆனால் நான் தான் கல்யாணத்து பிறகு கூறலாம் , உனக்கு ஒரு சர்ப்ரைஸ்ஸா இருக்கும்னு நினைச்சேன்….. அதுவரைக்கு நீ என்னனென்ன பண்ற இந்த கல்யாணத்தை நிறுத்த , அதை பார்க்கலாம்னு நினைச்சேன்…. நீ பண்ண ஒவ்வொரு விசயமும் எனக்கு புன்னகையே வந்தது…. அவன் கூற கயலின் கண்களில் இருந்து கண்ணீர் அருவியாக வந்தது…… அவளின் கண்ணீர் துடைத்தவன்”…என் செல்ல பொண்டாட்டி “அழகூடாது…… போடா என்னை வருத்தப்பட வெச்சிட்டு நீ மட்டும் ஜாலியா இருந்தல என்று அவனின் நெஞ்சின் மீது அடித்தாள்….. அடிக்காதடி வலிக்குது என்று அவளை இழுத்து அணைத்துக்கொண்டான்… – சிறிது நேர அணைப்பிற்கு பின் அவனை விட்டு விலகி அமர்ந்தவள் ” அவனைப் பார்த்து எதற்காக நீ இப்படி பண்ண ” உனக்கு கஷ்டமாகவே இல்லையா….?

 

 

கவி, அவளின் நெற்றியில் இதழ் பதித்துவிட்டு, உன்னை பஸ்ர்ட் போட்டோல பார்த்தப்பவே எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சு….. அதுவும் உன்னுடைய கண்ணு ” அதனாலயே உனக்கு நான் மீனம்மானு பேர் வெச்சேன்”…..” அவன் அன்று அவளை மீனம்மா என்று அழைத்தது நியாபகம் வர அவளுக்கு புன்னகையே வந்தது”….  

 

கவி, அப்பறம் உன்னுடைய நடவடிக்கை எல்லாம் ரொம்ப பிடிச்சு போச்சு….. நீ எப்போ எப்படி எனக்குள்ள வந்தனு தெரியில….. ஆனால், இப்ப இந்த நிமிடம் என் சுவாசம் உனக்கு மட்டும் தான் என் மீனம்மா”….. நீ உங்க வீட்ல எத்தனை நாள் வேண்டும்னா இரு … – ஆனால் டெய்லியும் எனக்காக நேரத்தை ஒதுக்கனும்…..புரியுதா என் மீனுகுட்டி…. அவள் தலையை ஆட்டிவிட்டு அவனை இறுக்கமாக அணைத்துக்கொண்டாள்….. 

 

 

 கவி,ஒகே மீனம்மா, … இப்ப நம்ம வாழ்க்கையை தொடங்கலாமா….!!…… அவள் சரி என்று கூறிவிட்டு, உன் சுவாசம் எனக்கல்லவா , என் காலம் முழுவதும் என்று அவனின் நெஞ்சில் தலை சாய்த்துக்கொண்டாள்….. அவர்களின் வாழ்க்கை இனிதே தொடங்கியது……..

 

 

– …..முற்றும் …..

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்