Loading

கயலும் ,சித்ராவும் தீவிரமாக பேசிக்கொண்டிருக்கும் போது, ஒரு மாணவன் வேகமாக ஓடிவந்து கயல் டீச்சர் உங்களைப் பார்க்க , ஒருத்தர் வந்திருக்கிறார்….. அவரு உங்களுக்காக வெளியே காத்திருக்கின்றார் …. உங்ககிட்ட சொல்ல சொன்னார்….

 

 

சித்ரா, யாருடா அந்த ஒருத்தர்…?….

 

எனக்கு யாருனு தெரியில…! ஆனால் பார்க்க அவரு ஒரு சார் மாதிரி இருக்கார் டீச்சர்….

 

  சித்ரா மறுபடியும் அவனிடம் ஏதோ கேட்க போக, இடையில் கயல் மறுத்து பேசினாள்….. சரிடா நீங்க உங்க வகுப்புக்கு போங்க…. நான் பார்த்துக்கொள்கிறேன்…..அந்த மாணவனும் சரி என்று தலையசைத்துவிட்டு சென்றுவிட்டான்….. கயல்,… சித்ராவின் புறம் திரும்பி , ஏன்டி அவன்கிட்ட கேள்விகேட்டுக்கொண்டு இருக்க….. நம்ம வெளியே போய் பார்த்தால் யாருனு தெரிய போகுது….. “சரி” என்று சித்ரா தலையசைக்க…. இருவரும் வகுப்பறையைவிட்டு வெளியே சென்று பார்த்தனர்…… எங்கு ஒரு மனிதன் ஆணழகனின் உருவமாய் காரில் சாய்ந்தபடி மொபைலை பார்த்துக்கொண்டிருந்தார்….

 

கயலின் வாய் “இவனா, …. எதற்கு இங்கு வந்திருக்கிறான்……என்று வாய் தன்னாலே முணுமுணுக்க …..

 

சித்ரா, அந்த ஆடவனைப் பார்த்தவுடனே “அன்பு அண்ணா” என்று கத்திக்கொண்டே அவனின் அருகில் வேகமாக சென்றாள்….. “அண்ணா நான் உங்களை இங்கு எதிர்பார்க்கவில்லை” என்று துள்ளிக்கொண்டே கூற…… அவனிடம் இருந்து சிறு புன்னகை மட்டுமே வந்தது……. 

 

சித்ரா, அண்ணா இங்க வந்ததின் நோக்கம் என்னவோ……!!…. என்ன தான் பார்க்க வந்தேனு பச்சையா மட்டும் பொய் சொல்லாதீங்க….

 

அன்பு, ….. அடடே !! என் தங்கச்சிக்கு அறிவு இருக்கு போல…… “அண்ணா” என்று சிணுங்க……… இந்த பக்கம் ஒரு வேலையா வந்தேன் .அப்படியே என்னுடைய வருங்கால மனைவி என்ன பண்றாங்கனு பார்த்துவிட்டு போகலாம்னு வந்தேன்….

 

சித்ரா, அப்போ என்னைப் பார்க்க வரவில்லை ….. உங்க வருங்கால மனைவியைப் பார்த்து பேச தான் வந்தீங்க….. என்று காட்டமாக கேட்க….

 

அன்பு, உன்கிட்ட தானே தினமும் பேசிக்கொண்டே இருக்கேன்…. ஆனா அவ என்னை என்னனு கூட கேட்க மாட்றா… இவளை வச்சி என்ன பண்ண….? …. கல்யாணம் முடிவு ஆனாலே பையனும் பொண்ணும் வெளியே ஜாலியா சுத்துறாங்க ஆனால் இங்க பேச்சு கூட இல்லை ….என்று குறைபட….. 

 

சித்ரா, அது என்னவோ கரைட்தான் அண்ணா…. அவ அப்படி தான் ….. நீங்க தான் அவளை பேச வைக்கனும்…. அவளே! இந்த கல்யாணத்துல கொஞ்சம் குழப்பமா இருக்கா… இந்த கல்யாணம் வேண்டாம்னு சொல்றா…… இப்ப கூட பாருங்க ,” இந்த பக்கம் போற சின்ன பசங்க முதல் மேக்கப் போட்ட பாட்டி வரைக்கும், உங்கள வெச்ச கண்ணு வாங்காம பாக்குதுங்க……. யாரு உங்கள பாக்கவேணுமோ அவளோ …! யாரு எக்கேடுகெட்டா எனக்கென்ன…?… “யாரு வந்தா எனக்கென்ன……? என்ற ரீதியில் அங்கேயே நின்னு வேடிக்கைப் பாக்குது….. இவளை வெச்சி ….. என்று அவனைப் பார்த்து சிரிக்க……

 

அன்பு, “பாருடா , என் தங்கச்சிலாம் என்னை கலாய்க்குது”….. என்று சிரிக்க… கயலோ …, இதற்கும் நமக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தாள்….. நம்ம இப்படி பேசுறோமே , கயல் அமைதியா அங்கையே இருக்காள்….. இங்க வர சொல்லு மா என் அன்பு தங்கையே….!!

 

 

சித்ரா, அண்ணன் அவர்களே….!! இந்த விளையாட்டுக்கு நான் வரவில்லை….. நீங்களாட்சு , அவளாட்சு எப்படியோ எதையோ பண்ணுங்க……! என்னை விடுங்க…. ஆல்ரெடி அவ கல்யாணத்திற்கு குழப்பத்தோட சுத்துறா…… நான் எதாவது சொல்ல போக என்னை உண்டு இல்லனு பண்ணிடுவா….. 

 

அன்பு, நீங்க ரெண்டு பேரும் சாப்பிட்டீங்களா…..! 

 

சித்ரா, சாப்பிடலாம்னுதான் நினைச்சோம்…. நீங்கதான் கரெட்டான டைம்கு வந்து எங்களை சாப்பிடவிடாம டிஸ்டப்பண்றீங்க…. என்ன பண்ணலாம் உங்கள…?….

 

அன்பு, எதுவும் பண்ண வேண்டாம்…. கயல் வீட்டு சாப்பாடு எப்படி இருக்கும்.?

 

சித்ரா, சூப்பரா இருக்கும் அண்ணா….. அதனாலயே அவ அவங்க அம்மா சமைச்ச சாப்பாடு மட்டும் தான் சாப்பிடுவா…. எப்பவாவது அவளுக்கு உடம்பு சரியில்லனா , அவளுடைய சாப்பாடு முழுதாக எனக்கு கிடைக்கும்…. மத்த நேரத்துல கொஞ்சம்தான் கிடைக்கும்….. நான் சொல்ற இந்த விசயத்தை வைத்து என்னை தீனீபண்டாரம்னு நினைக்ககூடாது…. என்று சமாளிக்க….

 

அன்பு, அவளைப் பார்த்து சிரித்துவிட்டு, சரி சரி இன்னைக்கும் கயல் வீட்டு சாப்பாடு, அதாவது என்னுடைய மாமியார் சமைத்த சாப்பாட்டை சாப்பிடு…. ஆனால் இன்று நீ கயல் கூட சாப்பிட முடியாது என்று சிரிக்க….. அவனை சித்ரா பே வென பார்க்க….. அன்பு, சரி…சரி ரொம்ப யோசிக்காத…’ மண்டையிலதான் ஒன்னும் இல்லையினு தெரியுதுல….. அப்புறம் எதுக்கு வேஸ்டா யோசனை……. சித்ரா , அவனைப் பார்த்து முறைக்க…… அவனோ சிரித்துக்கொண்டே நானும் என் மனைவியும் வெளியே போய் சாப்பிட போறோம்…. சாரி என் தங்கையே’ , உன்னை எங்க கூட அழைத்து செல்ல முடியாது…. ஏன்னா நான் கயல் கிட்ட கொஞ்சம் பேசனும்……

 

சித்ரா, புன்னகையுடன், “ஆல் த பெஸ்ட் அண்ணா”…… அவளை எப்படியாவது அவளுடைய குழப்பத்தில் இருந்து வெளியே கொண்டு வந்திடுங்க….. நான் போய் அவளை அனுப்புறேன் ….என்று கயலின் அருகில் வந்தவள், கயல் ‘, அண்ணா உன்கிட்ட பேச தான் வந்திருக்கு … நீ போய் என்னனு கேளு…. கயலோ நான் ஏன் போய் பேசனும் என்ற ரீதியில் அவளைப் பார்க்க….” சித்ரா, மனதிற்குள் இவள் நம்பளை ஒருவழியாக்காம விடமாட்டா போலயே….” என்று நினைத்தவள்….”ஆங் , அது என்னனா நீ அண்ணாகிட்ட பேசினால் உன்னுடைய குழப்பத்திற்கு ஏதாவது தீர்வு கிடைக்கலாம்… அதற்குதான் சொல்றேன்மா……

 

 

கயல், சித்ரா சொல்வதும் ஒருவகையில் சரி என்று தோன்ற”சரி” என்று தலையசைத்தால்….. சரிடி நான் உன்கிட்ட கேட்கனும்னு நினைச்சேன், ராமு அண்ணா எங்கடி ……? அவரு வரலையா….

 

சித்ரா சிரித்துக்கொண்டே, பர்ஸ்ட் மீட் உங்க ரெண்டுபேருடையதும் நினைத்துப் பாருங்கள் மேடம்…. சாருக்கு நீங்க குடுத்த கிப்ட்ட நினைச்சு பயத்துல இருக்காரு…. கொஞ்சநாள்ல துரையே வந்து பேசுவாரு….

 

கயல், … அச்சச்சோ சாரிடி…. அண்ணாகிட்ட சாரி கேட்டதா சொல்லுடி….

 

சித்ரா, அட அதை விடுடி…. இப்ப அது முக்கியம் இல்லை…. இதைப் பத்தி அப்பறம் பேசிக்கலாம். இப்ப போய் எங்க அண்ணாகிட்ட பேசுடி……

 

கயல், சரிடி …என்று அன்புவை நோக்கி சென்றால், அவன் அருகில் சென்றதும் …சொல்லுங்க மிஸ்டர் கவி அன்பன் …. எதற்காக என்ன பாக்க வந்தீங்க…. என்ன விசயம் என்கிட்ட பேசனும்…….?….. 

 

அன்பு, தன்னுடையவளாக ஆக போகிறவள், தன்னுடைய பெயரை முதன்முறையாக முழுமையாக கூற கேட்டவனின் இதயம் சிறகில்லாமல் பறக்கத் தொடங்கியது…… அவன் அப்படியே தன்னுடைய இதயத்தை பின்தொடர……. பதில் ஏதும் கூறாமல் இருப்பதைக் கண்டு, “மிஸ்டர் கவி அன்பன் நீங்க இப்படியே இருங்க நான் போகிறேன்”….. என்று அவள் கூற , அக் கூற்றில் நிகழ்காலத்திற்கு வந்தவன்….. “ஆங்” அது ஒன்னுமில்லை மீனம்மா…. ஒரு சிந்தனையில் இருந்துட்டேன்….. 

 

கயல், என் பெயர் மீனம்மா இல்லா…. கயல்விழி வேலப்பன்…..

 

அன்பு….., சரி …. சரி …. உங்க பெயர் கயல்விழி….. தான்…… நான் எதுக்கு உங்ககிட்ட பேச வந்தேனா’…. நம்ம கல்யாணத்தைப் பத்திதான்…… 

 

கயல், சரி சொல்லுங்க ‘ என்கிட்ட என்ன பேசனும்….. 

 

அன்பு, இங்க இப்படியே நின்னுகிட்டு பேசலாமா…?…. என்று சிறிது புன்னகையுடன் கேட்க…..

 

கயல், சற்று தொலைவில் ஒரு இடத்தை சுற்றிக் காட்டி அங்கபோய் பேசலாம் … என்று கூற….

 

அன்பு, அவளைப் பார்த்து நக்கலாக, கயல்விழி அவர்களே நான் தங்களிடம் பாடம் கற்க வந்த மாணவன் அல்ல….. நம்முடைய கல்யாணத்தை பத்தி பேச வந்த உன்னுடைய கணவன், …கணவன் என்ற வார்த்தை மட்டும் அவளுக்கு கேட்காத மாதிரி மெதுவாக சொல்ல….. 

 

கயல், அப்போ நீங்களே ஒரு இடத்தை சொல்லுங்க….

 

அன்பு, சரி, வந்து கார்ல ஏறுங்க…. வெளியே போய் பேசலாம்….

 

கயல், நான் இன்னும் சாப்பிடல, நான் போய் சாப்பிட்டு வந்திடுறேன்…..

 

அன்பு, தன்னுடைய மனதிற்குள் ” எனக்கு தங்கச்சியா வந்ததும் சாப்பாடுதான் முக்கியம்னு இருக்கு…. நமக்கு மனைவியா வார்க்கப்பட போறதும் சாப்பாட்டு ராமியா இருக்கு என்று நினைத்தவன், அவளிடம் உங்களுக்கு சாப்பாடு வாங்கி தர அளவுக்கு நான் சம்பாதிக்கிறேன் மா…. இப்ப வரிங்களா, என்று அவளை அழைத்துக்கொண்டு காரில் சென்றான் ….. சிறிது நேரம் கழித்து ஓர் இடத்தில் காரை நிறுத்திவிட்டு , கயலைப் பார்த்து இறங்கு கயல்….. இப்ப சாப்பிட ஓட்டல் வந்திருக்கோம்….. சிறிது நேரத்தில் இருவரும் சாப்பிட்டு முடிக்க….. அடுத்தது என்ன என்பது போல அவனைக் கேள்வியாக பார்க்க…… அவனோ அவளின் கை விரல்களைப் பிடித்து அருகிலுள்ள பூங்காவிற்கு அழைத்துச் சென்றான்….. தன்னுடைய விரல்களை விடுவித்துக்கொள்ள பார்க்க….அது முடியாமல் போனது…. நறுக்கென்று அவனின் கையை இன்னொரு கையால் கிள்ள, ” அவனோ “ஆ” என்று கத்திவிட்டு தன்னுடைய கையை தேய்த்துக்கொண்டான்….. அந்த பூங்காவில் போடப்பட்டிருந்த மர பெஞ்சில் இருவரும் உட்கார…. சிறிது நேரம் அங்கு மெளனம் மட்டுமே நிலவியது….. அந்த மெளனத்தை முதலில் உடைத்தது கயல்தான்….

 

கயல், மிஸ்டர் கவி அன்பன், இந்த கல்யாணத்தை நிறுத்திவிடுங்க….

 

ஏன் ….?

 

கயல், எனக்கு விருப்பம் இல்லை….

 

சாரி, என்னால் நிறுத்த முடியாது….

 

கயல், ஏன் முடியாது….?”

 

நீங்க உன்மையான காரணத்தைக் கூறுங்க…..

 

கயல், ஒரு பெரிய மூச்சை ஒன்றை வெளியேற்றியவள்,… இங்க பாருங்க கவி ‘ எங்க வீட்ல நான் ஒரு வாரிசு மட்டும் தான் …. என்னால உங்களை கல்யாணம் பண்ணிக்கொண்டு என்னோட குடும்பத்தை அம்போனு விட்டு வர முடியாது…. அதனால, நீங்க இந்த கல்யாணத்தை நிறுத்திடுங்க…..

 

இந்த கல்யாணத்தை நிறுத்த சொல்வதற்கு இதுதான் காரணமா?… இல்ல வேற எதாவது இருக்கா….

 

கயல், நான் சொன்ன விசயம் உங்களுக்கு ஒரு பெரிய காரணமாக இல்லாமல் இருக்கலாம்…. ஆனால், என்னோட இடத்துல இருந்து பாருங்க … அப்போ தெரியும் உங்களுக்கு…..

 

அன்பு, சரி ஒகே…. உங்க நிலமை புரியுது… நான் உங்க வீட்ல பேசுறேன் என்று கூறிவிட்டு…. அவளை அழைத்துக்கொண்டு போய் பள்ளியில் விட்டு சென்றுவிட்டான்…..

 

கயலும், வகுப்புகள் முடிந்ததும் வீட்டிற்கு செல்ல தயாராக , சித்ரா சிரித்துக்கொண்டே வந்தாள்…..

 

சித்ரா, என்ன மேடம் குழப்பம் எல்லாம் தீர்ந்துவிட்டதா…?…..

 

கயல், ம்….ம்… சரி வா வீட்டுக்கு போகலாம்…

 

சித்ரா…. , அது வந்து டி …. நீ போ டி …. ராமு வரேன்னு சொல்லியிருக்கான்….

 

கயில், தலையை மட்டும் ஆட்டிவிட்டு….தன்னுடைய ஸ்கூட்டியில் வீட்டிற்கு புறப்பட்டாள்…. வீட்டிற்கு சென்றது வண்டியை நிறுத்திவிட்டு, முகத்தை கழுவிக் கொண்டு வீட்டினுள் செல்ல…… கண்ணம்மா புன்னகையுடன் என்னடா மா, மாப்பிள்ளை இன்னைக்கு உன்ன வந்து பார்த்தாரா…?…

 

ஆமாம் மா….

 

கண்ணம்மா, ரொம்ப சந்தோசம் டா…. இப்பதான் மாப்பிள்ளை வீட்ல இருந்து போன் பண்ணாங்க, நிச்சியத்திற்கு நாளை புடவை எடுக்க வர சொன்னாங்க மா….. நாளைக்கு நம்ம புடவை எடுக்க போக நீ ரெடியா இருமா …. என்று கூறிவிட்டு அவர் சென்றுவிட்டார்….

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்