Loading

இன்று முதல் நான் உன்னை விட்டுப் போகிறேன்……..

இனி உனக்கும் எனக்கும் சம்பந்தமில்லை………

இப்படிக்கு உன் துன்பம்

சென்னை தரமணியில் உள்ள ஒரு வீட்டில் காலை வேலையில் ”அம்மா சாப்பாடு ரெடியா?, இன்னைக்கு, சீக்கிரமா  ஆபீஸ் போகணும்மா.” என்ற குரல் கொடுத்தவாறே சமையலறைக்குச் சென்றாள் சாதனா. ”இதோ ரெடிடா” என்றவாறே அவளுடைய மதிய உணவும், காலை டிபனும் எடுத்து வைத்துக் கொண்டிருந்தார் அவளுடைய அன்னை மங்கை. ”இன்னைக்கு மங்கை ஸ்பெஷல் என்ன?” என்று அன்னையைக் கொஞ்சிய சாதனாவை “ அடிக்கழுத அம்மா பேர் சொல்லி கூப்பிட்ற உன்ன…” பொய் கோபம் காட்டிய அன்னையிடம், ”பேர் சொல்லும் பிள்ளை கேள்விப்பட்டதில்லையா மங்கை?” என்று கூறியவாறே அவரின் கன்னத்தில் இதழ் பதித்து செல்லம் கொஞ்சியவளிடம், கொண்ட பொய் கோபமும் மாயமாய் மறைந்தது.

“ஆபீஸுக்கு டைம் ஆச்சுன்னு யாரோ அவசரப்பட்டாங்க அவங்கள பார்த்தியா தனுக்குட்டி?” என்ற மங்கையிடம் “ அச்சோ மறந்தே போய்விட்டேன். இதோ கிளம்பிட்டேன்” என்று கிளம்பிய சாதனாவின் கையை பிடித்து நிறுத்திய மங்கையிடம் ”என்னம்மா ஆபீஸுக்கு டைம் ஆச்சுமா”  எவ்வளவு தாமதமானாலும் பரவாயில்லை ஒழுங்கா காலை டிபனை சாப்பிட்டு போ” .என்றார். மூன்று தோசைகளை வேகமாகச் சாப்பிட்டு அலுவலகம் கிளம்பியவளை வாஞ்சையோடு பார்த்துக் கொண்டிருந்தார் மங்கை. சாதனா இருபத்தி நான்கு வயது மாநிற அழகி. மங்கையும், அவளும் மட்டுமே வாழும் மிகச்சிறிய குடும்பம். அன்னைதான் அவளது உலகம். மங்கைக்கும் அதே.

சென்னையில் அண்ணா நகரில் இயங்கிவரும் ஃபேஷன் இம்போர்ட் & எக்ஸ்போர்ட் கம்பெனி அலுவலகம் காலை 9 மணிக்கு மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.  அலுவலகத்திற்குச் சரியான நேரத்திற்கு வந்த சாதனா அவளின் தோழி மதுவிற்குக் காலை வணக்கம் கூறி தனது இடத்திற்கு வந்தாள். சாதனாவிற்கு அக்கவுண்ட் செக்‌ஷனில் வேலை. அவள் மும்மரமாக வேலைபார்த்துக் கொண்டிருக்கும்பொழுது, அங்கே வந்த மது “சாது நம்ம கம்பெனி மேனேஜ்மெண்ட் வேற ஒருத்தருக்கு மாற போகிறதாம்,

இப்போதுதான் ரிசப்ஷன்கிட்ட நின்னு மேனேஜர் பேசிட்டு இருந்ததைக் கேட்டு நம்ம ரிசப்ஷனிஸ்ட் சொன்னா. ஆனால் இன்னும் சரியா தெரியலை” எனவும், ஏண்டி ஒட்டுக் கேட்கிறதே தப்பு இதில் அரைகுறையா கேட்டுட்டு எதாவது உளறாத. நிறைய வேலை பெண்டிங் இருக்கு நான் பார்க்கவேண்டும் இடத்தை காலி பன்னுடி. அப்படியே நீ சொன்ன மாதிரியே இருந்தாலும் எப்படியும் அறிவிப்பாங்கள்ள அப்ப பார்த்துக்கல்லாம். எனக் கூறி தன் வேலையைப் பார்த்தாள் சாதனா. மதுவும் தனது வேலை பார்க்கச் சென்றுவிட்டாள்.

மாலை அலுவலகம் முடிந்து வீடு வந்துகொண்டிருந்தவள் வீட்டிற்குத் தேவையான மளிகை பொருட்கள் வாங்க அங்கிருந்த காம்ப்ளெக்ஸில் நுழைந்தாள். தேவையான பொருட்களைக் கூடையில் எடுத்துக்கொண்டு பில் கவுண்டர் வந்து வரிசையில் நின்று கொண்டிருந்தாள். அப்பொழுது ஒரு குழந்தையின் சிரிப்பொலி அவளின் கவனத்தை ஈர்த்தது. இரண்டு வரிசையாக நின்று கொண்டிருந்தவர்கள் வரிசையில் பக்கவாட்டில் அன்னையுடன் விளையாடி கொண்டிருந்தது அக்குழந்தை. குழந்தையின் சிரிப்பில் இவள் முகமும் அனிச்சையாய் மலர, குழந்தை இவளைப் பார்த்ததும் தனது பொக்கை வாயைத் திறந்து அழகாய் சிரித்தது.

இவளும் சைகை மொழியிலே விளையாடிப் பறக்கும் முத்தம் ஒன்றைக் கொடுக்க, “செ என்ன அசிங்கம் இது பொது இடத்தில் இப்படி முத்தம் கொடுத்துக்கிட்டு கொஞ்சுறதுனா வீட்டில் வச்சுக்கனும். இல்லனா இதுக்குன்னு எத்தனை இடம் இருக்கிறது. அங்க போகவேண்டியதுதான கொஞ்சம் கூட மேனர்ஸ் இல்லாமல். என்று  அவளுக்கு மட்டும் கேட்குமாறு, கடித்த பற்களுக்கிடையே வார்த்தைகளை விட்டவன், “ஹலோ மேடம் வரிசை நகருகிறது கொஞ்சம் முன்னே போறிங்களா இல்ல பின்னால் நிற்கிறவர்களுக்கு வழி விடுங்க” எனச் சத்தமாகக் கூறினான் அவள் பின்னால் பில் கட்டுவதற்காக நின்ற இளைஞன். திடீரென தன் பின்னால் கேட்ட குரலால் திகைத்தவள் அவன் தன்னைத்தான் பேசினான் என்பதைப் புரியவே சில நொடிகள் தேவைப்பட்டது சாதனாவிற்கு. ‘நாம என்ன தப்பு செய்தோம் ..?குழந்தைக்கு முத்தம் கொடுத்துத் தப்பா? அதுக்கு இப்படி பேசுறாங்க’ என்று நினைத்தபடி தன் பின்னால் நின்றவனைப் பார்க்க

அவன் பார்வை குழந்தை இருக்குமிடத்திலிருந்தது. அவன் பார்வை போன இடத்தைப் பார்த்தவள் திகைத்தாள். ஏனெனில் இப்பொழுது அந்த குழந்தை இருந்த இடத்தில் வேற ஒரு ஆடவன் இருந்தான். குழந்தையின் தாய் நின்ற வரிசை முன்னே செல்லவும் அவர் நகர்ந்து விட, இவள் கண்ணை மூடி  முத்தம் கொடுத்த வேளையில் அந்த ஆடவன் வரிசையில் வர அவள் கண்ணைத் திறப்பதற்குள் இவனின் வசை மொழி கேட்டு குழந்தையைப் பார்க்காமல் இவனைப் பார்க்க அப்பொழுதுதான் அவன் திட்டியதற்கான காரணம் புரிந்தது. நல்ல இவளை அந்த ஆடவன் கவனிக்க வில்லை. இருந்தும் தன் முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாமல் பில்லை கட்டிவிட்டு அவனைத் திரும்பியும் பார்க்காமல் வீடு வந்து சேர்ந்தாள்.

அவள் போவதையே பார்த்துக் கொண்டிருந்த அந்த இளைஞன் ‘கொஞ்சம் கூட ரோசம் இல்லதாவ இவளதான் திட்டுகிறேன் தெரிந்தும் முகத்தில் எந்த ரியாக்‌ஷனும் காட்டாமல் போறா.” தன் மனதுக்குள்ளே அவளைத் திட்டிக்கொண்டே தன் பில்லையும் கட்டிவிட்டு  கார் நிறுத்துமிடம் வந்து தன் காரை  வீடு நோக்கிச் செலுத்தினான்.

வீடு வந்த சாதனா வீட்டிற்குள் வரும்பொழுதே தன் அன்னையை அழைத்துக் கொண்டே வந்தாள். ”தனுக்குட்டி வந்தாச்சா என்றபடி மங்கையும் அவளை வரவேற்றார். அம்மா இதுல மளிகை சாமான் இருக்கிறது” என்று தன் கையில் உள்ள பையைக் கொடுத்தவள் நீங்க அடுக்க வேண்டாம் நானே வந்து அடுக்கிறேன் எனக் கூறிக்கொண்டே தன் அறைக்குச் சென்று முகம் கழுவி வந்தவள், வாங்கி வந்த பொருட்களை உரிய இடத்தில் அடுக்கத் தொடங்கினாள். அவள் அடுக்கி முடிக்க, மங்கை காபி கொண்டுவரவும் இருவரும் பேசிக்கொண்டே காபியை அருந்தினர்.

மங்கை வீட்டில் நடந்த நிகழ்வுகளையும், சாதனா அலுவலகத்தில் நடந்த நிகழ்வுகளையும் பேசிக்கொண்டிருந்தனர். இது அன்றாடம் நடக்கும் வழக்கமே. சாதனா தயங்கிக் கொண்டே இன்று ஷாப்பிங் காம்ளெக்ஸில் நடந்ததைக் கூறியவள் அன்னையிடம் அம்மா என்ன பார்த்தா அந்த மாதிரி பெண்ணா தெரிகிறதா? எப்படி மா அவங்க அப்படி கேட்டாங்க. முத்தம் கொடுத்ததை பார்த்தவங்க அது யாருக்கென்று பார்த்திருக்கலாம்ல என தன் போக்கில் சொல்லிக் கொண்டிருந்தவள் வேறு நினைவுகளில் மனம் போக அதனை மாற்றும் விதமாக ” என்ன தனுக்குட்டி நமக்குச் சம்பந்தமே இல்லாத யாரோ எதுவோ சொன்னாங்கனு இப்படியா பீல் பன்னுறது?. அவங்க எப்படி நமக்கு எந்த சம்பந்தமும் இல்லையோ அதேமாதிரி தான் அவர்களுடைய வார்த்தைகளும் நமக்கு சம்பந்தமில்லாதது. என்ன புரிந்ததா? அதுவும் நம்ம மேல் கொஞ்சம் கூட தப்பே இல்லங்கிறப்போ

நம்ம அதை காதிலேயே வாங்கக் கூடாதுடா. நீ என்னடான்னா, அந்த குப்பையை காதில் வாங்கி, மனசுக்குள்ள போட்டு வீட்டில் வந்து கொட்ற. ”என்ன கொடுமை தனு இது:  இப்ப அந்த குப்பையை வீட்டில் இருந்து வெளியே தள்ளு பார்ப்போம்” என்று சீரியஸாக பேசி நகைச்சுவையாக முடித்தார். அதைக் கேட்டு சாதனா மனமும், முகமும் தெளிவடைய, மங்கை மனதிற்குள்ளே மகிழ்ந்தார். அன்னையின் பேச்சைத் தானும் பின்பற்றி அம்மானனா அம்மாதான் சோ ஸ்வீட் மனசு கொஞ்சமே கொஞ்சம் சங்கட பட்டுச்சு இப்ப டபுள் ஒ கே. அந்த குப்பையை வீட்டில் மட்டுமில்லை ஏரியாவ விட்டே தொரத்திற மாட்டேன்” என கூற இருவருமே நகைத்தனர்.

இரவு உணவு தயார் செய்ய மங்கைக்குச் சிறு சிறு உதவிகள் செய்தவள், நாளை அலுவலகம் செல்ல தேவையான உடைகளை எடுத்துவைத்தாள். இரவு உணவை உண்டு முடித்து கிட்சனை ஒதுங்க மங்கைக்கு உதவி செய்து உறங்கச் சென்றாள். இரவு உறங்கும் முன் இன்று நடந்த அனைத்து நல்ல நிகழ்வுகளுக்கும் கடவுளுக்கு நன்றி சொல்வது சாதனாவின் வழக்கம் இன்றும் அதேபோல் நன்றி கூறி படுத்தவளை அதற்காகவே காத்திருந்த நித்ரா தேவி அவளை அணைத்துக் கொண்டாள்.

அத்தியாம் 2

சென்னையில் வி ஐ பி க்கள் மட்டுமே வசிக்கும் பகுதியில் கம்பீரமாக வீற்றிருந்தது அந்த மாளிகை. வீட்டின் முன்புறம் பசுமையான புள்வெளியும், புல்வெளியின் நடுவே கார் போவதற்கு பாதை அமைத்து அதில் சிவப்பு கல் ஓடு பதித்திருந்தது. மாலை வேளைகளில் இயற்கையை ரசித்துக்கொண்டே தேநீர் அருந்துவதற்கு ஏதுவாக புல்வெளியில் வெள்ளை கலரில் வட்ட டேபிளும் அதை சுற்றி சேர்களும் போடப்பட்டிருந்தது. வீட்டுக்கு வெளியே பார்த்தது போதும் வீட்டுக்குள்ள என்ன நடக்குதுன்னு பார்ப்போம் வாங்க பிரெண்ட்ஸ். எனக்கு பாட்டு சத்தம் கேட்குது உங்களுக்கு கேட்குதா?.. வாங்க போய் என்ன பாட்டுன்னு கேட்போம்.

“குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா

குறை ஒன்றும் இல்லை கண்ணா

குறை ஒன்றும் இல்லை கோவிந்தா

கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா

கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்குக்

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா

வேண்டியதைத் தந்திட வேங்கடேசன் என்றிருக்க

வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா

மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா

(அருமையான பாட்டு இல்ல……ஒ கே பிரெண்ட்ஸ் இனிமே நாம எட்டி நின்னு இங்க என்ன நடக்குதுன்னு பார்ப்போம்.)

பாடலை மனமுருகி பாடி கொண்டிருந்தார் அந்த வீட்டின் இல்லத்தரசி வாசுகி… அவர் குரலின் இனிமையில் கண்மூடி ரசித்து கொண்டிருந்தனர் அந்த வீட்டின் தலைவர் தனசேகரும், அவருடைய அன்னை பாக்கியத்தம்மாளும். பூஜை முடித்து விட்டு ஆரத்தி காட்டி, நெற்றியில் திருநீறு, குங்குமம் இட்டு, வெளியே தனது கணவருக்கும், அத்தைக்கும் பிரசாதம் கொடுத்தவரை பார்ப்பதற்கு மிகவும் மங்களகராமாக் தோற்றமளித்தார். பூஜை முடித்துவிட்டு வந்தவர் தன் கணவருக்கும், அத்தைக்கும் காபி போட சமயலறை சென்றார். காபி கலந்து கொண்டிருக்கும்போதே வீட்டில் வேலை செய்யும் வேணி வந்தாள் அவளையும் காபி அருந்த சொல்லிவிட்டு, காலை டிபனுக்கான மெனுவையும் சொல்லிவிட்டு வெளியே வந்தார்.

அங்கு சோபாவில் அமர்ந்திருந்த சேகருக்கும், பாக்கியத்தம்மாளுக்கும் காலை வணக்கம் கூறி காபி கொடுத்தார். சேகர் அன்றைய நாளிதழை வாசித்து கொண்டே காபி குடித்தார். பாக்கியத்தம்மாள் “ நீ காபி குடித்தாயா வாசு?” என கேட்க இல்ல அத்தை இன்னைக்கு சஷ்டி நான் விரதம் கோவிலுக்கு போய்ட்டு வந்துதான் எல்லாம் என கூற. கணவரும், அத்தையும் தன்னை முறைப்பதை கண்டு, அச்சோ வாயை விட்டுட்டோமோ, பேசாம அப்பவே குடிச்சிட்டேன் சொல்லிருக்கனும், ’வடபோச்சே’ என்ற ரீதியில் சிந்தித்து கொண்டிருந்தவர் சிந்தனைய கலைப்பது போல சேகர் ”எத்தன தடவை சொன்னாலும் உனக்கு ஏன் புரிய மாட்டிங்குது வாசு, கடவுள மனசார கும்பிட்டா போதும், பட்டினி கிடந்துதான் சாமி கும்பிடனும்னு எந்த கடவுளும் சொல்லவில்லை புரியுதா? ஒழுங்கா சாப்பிட்டு கோவிலுக்கு போ என்று கட்டளை போல் கூறியவரிடம்

“சரிங்க ஆபீஸர்” என்று போலி பணிவை காட்டியவரை பார்த்த பாக்கியத்தம்மாள் மனதுக்குள்ளே சிரித்து கொண்டார். பின்னே அவருக்கு தெரியாதா தன் மருமகளை பற்றி. உன்ன திருத்தவே முடியாது எப்படியோ போ… பொய்யாக அலுத்து கொண்டே அலுவலகம் கிளம்ப தயராக உள்ளே சென்றார் சேகர். என்ன அத்த நான் என்ன பரீட்சை பேப்பரா? என்ன திருத்தமுடியாதுன்னு போறாங்க என்றபடி தன் அத்தையை பார்க்க அவரின் முறைப்பில் மி எஸ்கேப் என்றபடி சமையலறை சென்றார்.

கீழே இத்தனை களேபரம் நடந்து கொண்டிருக்க மேலே ஒரு ஜீவன் சுகமான நித்திரையில் ஆழ்ந்திருந்தது. அபிமன்யு 30 வயது பெயருக்கேற்ற மாதிரி மிகுந்த சுய மரியாதை உள்ளவனும், மிகுந்த புத்தி கூர்மையும் உள்ளவன். அபி குரூப் ஆப் கம்பெனி எம் டி. அபி கன்ஸ்ட்ரக்‌ஷன், அபி இம்போர்ட் & எக்ஸ்போர்ட், அபி டெக்ஸ்டைல்ஸ், போன்ற தொழில்களை கைவசம் வைத்திருப்பவன். சில விசயங்களில் எளிதில் உணர்ச்சிவசப்பட கூடியவன். உதாரணத்திற்கு ஷாப்பிங் காம்ப்ளெக்ஸில் நடந்ததே. (என்ன ஹீரோ ஜாக்கிங் போகாம இருக்காருன்னு நினைக்கிறிங்களா பிரெண்ட்ஸ் நேற்று அந்த ஷாப்பிங் காம்ப்ளெக்ஸில் நடந்ததை நினைத்துக் கொண்டே இருந்த்தால தூங்க வெகு நேரம் ஆகிவிட்டதால இன்னைக்கு ஜாக்கிங் கட்.)

அவனுக்கு பிடித்த பெண்கள் பாட்டி, அம்மா. ஏழு மணிக்கு சாவகாசமா எழுந்த அபி தன் வீட்டில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் ஒரு மணி நேரம் பயிற்சி செய்து வெளியே வந்தவன் பிறகு அவசரமாக ஒரு குளியல் போட்டு கிளம்பி அலுவலகம் செல்ல தயராக வந்தான். அங்கிருந்த அன்னைக்கும் பாட்டிக்கும் காலை வணக்கம் கூறியவன், அன்றைய நாளிதழில் மூழ்கினான். வீட்டில் வேலைகளுக்கு ஆட்கள் இருந்தாலும் சமையல் மட்டும் வேணி உதவி செய்ய வாசுகி தானே செய்வார். அவர் சமையல் செய்தால்தான் வீட்டில் உள்ளவர்களுக்கும் பிடிக்கும். அபிக்கு பிடித்த இடியாப்பம்- தேங்காய் பால், காரத்திற்கு குருமா செய்தவர், சேகருக்கும், அத்தைக்கும் இட்லி-புதினா சட்னி செய்து அனைத்தையும் வேணி உதவியுடன் டைனிங் டேபிளில் எடுத்து வைத்தார். வாசுகி “

என்ன அபிக்கண்ணா நேத்து எந்த பொண்னு உன் கண்ணுல தப்பு பண்ணி மாட்டுனா நேர்லையே நல்லா திட்டியிருப்ப நைட்டும் தூங்காம அந்த பொண்ண மனசுக்குள்ள வறுத்தெடுத்தியா..? அதான் இன்னைக்கு ஜாக்கிங் கட்டா? “ என்று தன் மகனை பற்றி அறிந்த அன்னையாக தன் கணவருக்கும், அத்தைக்கும் உணவை பரிமாறிக் கொண்டே கேட்க, அபி அவரை முறைத்தான். சேகரும், பாக்கியத்தம்மாளும் இதில் தலையிடவே இல்ல, பின்ன யாரு மூக்கு உடை பட்றது. ரெண்டுபேரும் சண்டை போட்றாங்கன்னு சமதானம் செய்ய போனா ரெண்டுபேரும் சேர்ந்து நம்மள கலாய்ப்பங்கன்னு அவங்களுக்கு தெரியுமே.

அன்னையை முறைத்த அபி நேற்று ஷாப்பிங் காம்ப்ளெக்ஸில் நடந்ததை கூற இப்பொழுது வாசுகி அவனை முறைத்தார். அன்னையின் முறைப்பில் “என்னம்மா” என்ற அபியிடம் “நீ அந்த பொண்ண இதுக்கு முன்னாடி பார்த்திருக்கிறாயா?” என்று கேட்க ”இல்லை” என்றான். ”அட்லீஸ்ட் ஷாப்பிங் காம்ப்ளெக்ஸில் அந்த பொண்ணு பொருள் எடுக்குபோதாவது பார்த்தியா?” என்ற அன்னையிடம் ’எதுக்கு இந்த கேள்வி?’ என்று பார்வையால் கேட்க, ”கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு அபி” என்றார் வாசுகி. இல்லை என்ற அபியிடம் ”பின்ன எத வச்சு அந்த பொண்ண அந்த பையனுக்கு பிளெயிங் கிஸ் கொடுத்தான்னு சொல்ற”

. அந்த பொண்ணு உன் கண்ண ஒரு நொடி நேருக்கு நேரா பார்த்தான்னு சொல்ற, ”தப்பு செய்றவங்க எப்பவும் கண்ணை நேருக்கு நேர் பார்க்க மாட்டங்க…” அபி, அவங்க கிட்ட ஒரு பதட்டம் இருக்கும், ஆனா நீ சொல்றத பார்த்தா அந்த பொண்ணுகிட்ட தப்பு இல்லாத மாதிரிதான் தெரியுது. நல்லா யோசிச்சு பாரு அபி அந்த பையன் அந்த பொண்ண பார்த்து சிரிச்சானா? என்ற கேள்விக்கு இல்லை என்று இடவலமாக தலை அசைத்தான். எனக்கென்னமோ நீ அவசரப்பட்டுட்டன்னு நினைகிறேன். இனிமேல் இதுமாதிரி செய்யாத அபி” என்று தன் மகனை கண்டித்தார்.

இதுதான் வாசுகி கலகலப்பாக பேசுபவர் அதே சமையம் தேவையான நேரத்தில் தக்க அறிவுரையும் வழங்குவார். காலை டிபன் அனைவரும் உண்டுவிட்டு அபியும், தன சேகரும் அலுவலகம் கிளம்பிவிட, பாக்கியத்தம்மாள் ராமாயணம் புத்தகத்தை எடுத்து கொண்டு அவர் அறைக்கு சென்றார். வாசுகி தனது அத்தையிடம் கூறிவிட்டு கோவிலுக்கு சென்றார். இன்றைக்கு சஷ்டி என்பதால் கோவிலில் கூட்டம் அதிகமாக இருந்தது. அர்ச்சனை சீட்டு வாங்கி விட்டு சன்னிதானத்திற்குள் சென்றவர் தரையிலிருந்த வாழைப்பழ தோலை பார்க்காமல் மிதித்து வழுக்கி கீழே விழப்போனவரை இரு கரங்கள் தாங்கி கொண்டது.

தன்னை தாங்கியவரை பார்த்த வாசுகி ஒரு இளம் பெண் நின்று இருப்பதை பார்த்து ”ரொம்ப நன்றிமா” என்றார். “பராவாயில்லமா யாரோ வாழை பழத்தை சாப்பிட்டு தோலை இங்கயே போட்டிட்டு போய்ட்டாங்க அவங்களுக்கு என்ன அவசரமோ” என யாரையும் குறை கூறாமல் ”உங்களுக்கு அடி எதுவும் படலையே..?” என அக்கறையாக விசரித்தாள். ஒரு நிமிடம் அவளின் அழகை ரசித்தவர், ”எனக்கு ஒன்னுமில்லமா அதுதான் நீ பிடிச்சிட்டியே..” என கூறி புன்னகைத்தார். சரிமா நான் சாமி கும்பிட்டேன் நீங்க போய் கும்பிடுங்க தீபாராதனை காட்ட போறாங்க என்று தன் வாட்சை பார்த்தவள் அவரிடம் விடை பெற்று வெளியே வர அவளை அழைத்தவர்,

அவள் திரும்பி பார்க்கவும் உன் பேர் என்னமா? என கேட்க ”சாதனா” என கூறிக்கொண்டு கோவிலை விட்டு வெளியே வந்தாள்.

கோவிலில் இருந்து வெளியே வந்த சாதனா பஸ் பிடித்து அலுவலகம் சென்றாள். அலுவலகத்தில் காலை வணக்கம் கூறியவர்களிடம் தானும் வணக்கம் கூறிக்கொண்டே தன் இருப்பிடம் வந்து வேலை செய்ய ஆரம்பித்தாள். பதினொரு மணியளவில் மது, டீ குடிக்க அழைக்க, மதுவும் சாதனாவும் கேண்டீன் சென்றனர். தேவையானதை வாங்கிக்கொண்டு இருவரும் அங்கிருந்த டேபிளில் அமர்ந்து டீ அருந்திகொண்டிருந்தனர். மது” “ஹே சாது நான் சொன்னேன்ல கம்பெனி வேற கைக்கு மாறப்போகுதுன்னு அது உறுதி ஆகிருச்சுடி எனவும்…

“உனக்கு எப்படி தெரியும் என்று சாதனா கேட்க “என்னடி நீ இன்னும் மெயில் பார்க்கலையா? இன்னைக்கு 4.30 மணிக்கு எல்லாரையும் மீட்டிங் ஹால் வர சொல்லி மெயில் பன்னிருந்தாங்களே…..” என. அச்சோ நேத்து ஒரு கணக்கு டேலி ஆகலின்னு அத பார்த்துட்டு இருந்தேன். மெயில் செக் பன்னலப்பா,,,” என, அபி குரூப் ஆப் கம்பெனி அபிமன்யூதான் நம்ம கம்பெனிய வாங்க போறார். என்று மது கூற :என்னடி அவங்கள ஏற்கனவே உனக்கு தெரியுமா? அபிமன்யூ உரிமையா சொல்ற” என்றவளிடம் “ம் பார்த்திருக்கிறேனே அவங்க கன்ஸ்ட்ரக்‌ஷன் கம்ப்பெனிக்கு இண்டெர்வியூ போயிருக்கேன் மை பேட் லக் வேலை கிடைக்கல” சோகம் போல கூறிக்கொண்டிருந்தவளை பர்ர்த்து சாதனா சிரித்து விட்டாள்.

“ஹே என்னடி சிரிக்கிற அவர் எவ்வளவு ஹேண்ட்ஸமா இருப்பாரு தெரியுமா? அட போடி உனக்கெங்க இதல்லாம் தெரிய போகுது ஆண்களென்றாலே உனக்கு அலர்ஜியாச்சே. ஏன் சாது இப்படி இருக்க? ஆண்கள் என்றால் வெறுக்கிற பெண்கள் கேள்விபட்ருக்கேன், அப்படி இல்லயா ஆண்களை பார்த்தால் பயப்பட்ற பெண்கள பார்த்துருக்கேன். அது என்ன ரெண்டுமே இல்லாம நீ ஒருமாதிரி இறுகி போயிட்ற அப்படி என்னடி உனக்கு பிரச்சனை.,? என்ற மதுவிடம் ”அவங்ளை பார்த்து நான் எதுக்கு ரியாக்‌ஷன் செய்யணும்?, முதல்ல தேவை இல்லாம அவங்கள எதுக்கு பார்க்கனும்..?, அதுல ஆர்வமும் இல்ல, எனக்கு அது தேவையுமில்ல” என்றபடி கிளம்பிய சாதனாவை பார்த்து ’உன் மனசுக்குள்ள என்னவோ இருக்கு அத எங்கிட்ட மறைக்கிற பார்ப்போம் சாது குட்டி இந்த இரும்பயும் கவர்வதற்கு ஒரு காந்தம் இல்லாமையா போகப்போகுது..? அதுக்கான நேரம் வந்துருச்சுன்னு எனக்கு தோணுது” என்று மனதுக்குள்ளே நினைத்துக் கொண்டாள்.

அதே நேரம் அபியின் அலுவலகத்தில் காபி குடித்து கொண்டிருந்த அபிக்கு புரையேறியது. அவன் உதவியாளர் பிரபு வந்து அவன் தலையை மெதுவாக தட்டி, “உங்களை யாரோ நினைக்கிறாங்க சார்” என்றான். ஒரே ஒருநொடி அவள் முகம் மனதில் வந்து போனது. மறு நொடி தன் தோள்களை குலுக்கி விட்டு மீத காப்பியை குடித்து முடித்தான். பின் பிரபுவை அழைத்து நாளை வாங்க இருக்கும் ஃபேஷன் கம்பெனி பைல் எடுத்து வர சொல்லி பார்த்து கொண்டிருந்தான். இந்த கம்பெனில இருந்து வேற எதாவது தகவல் வந்திருக்கா? பிரபு,,,,” என்று கேட்க “சார் அவங்க ஒரே ஒரு ரிக்வெஸ்ட் மட்டும் வச்சுருக்காங்க சார்” என்றான்.

”என்ன?” என்று பார்த்தவனிடம் அந்த கம்பெனில இப்ப வேலை பார்த்துட்டு இருக்கிறவங்களை அப்படியே எடுத்துக்க சொல்லி கேட்றுக்காங்க, என்றவனிடம் “ஓ” என்றுமட்டும் கூறிவிட்டு தன் வேலைய பார்த்தான்.

இங்கே சாதனா வேலை பார்த்து கொண்டிருந்த அலுவலகத்தில் மாலை அனைவரும் மீட்டிங் ஹால் வந்தனர். அந்த கம்பெனியின் எம் டி வரதராஜன் பேச ஆரம்பித்தார் “அனைவருக்கும் வணக்கம்.. இங்க நான் எதுக்கு உங்களை எல்லாம் அழைச்சிருக்கேன்னு தெரியும்.. ஓரளவு அனைவரும் யூகித்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். சில காலமாகவே நமது நிறுவனம் நஷ்டத்தில் இயங்கி கொண்டிருப்பது உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன்… என்னால் தொடர்ந்து நடத்த மனதும், உடலும் ஒத்துழைக்க வில்லை. அதனால் நிறுவனத்தை வேறு ஒருவருக்கு மாற்றி விட்டு நான் எனது மனைவியுடன் சொந்த கிராமத்திற்கு செல்லவிருக்கிறேன். அபி குரூப் ஆப் கம்பெனி, நீங்கள் கேள்விபட்டு இருப்பீர்கள்.

அந்த கம்பெனியின் எம்.டி மிஸ்டர்.அபிமன்யுதான் நம் நிறுவனத்தை வாங்கி இருக்கிறார்,,,” எனவும் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது அதில் ஒருவர் “கம்பெனி கை மாறுச்சுன்னா எங்க வேலை” என,,, அதை பற்றி பேசத்தான் மிஸ்டர் அபிமன்யு இங்கு வரவிருக்கிறார். என கூறிக்கொண்டிருக்கும் பொழுதே மீட்டிங் ஹால் வாசலில் அழுத்தமான காலடி ஓசை கேட்க அனைவரும் வாசல் பார்த்தனர். அங்கே கருப்பு நிறத்தில் கோர்ட்டும், வெள்ளை நிறத்தில் சட்டையும், அதே கறுப்பு நிறத்தில் டையும் அணிந்து மிகவும் கம்பீரமாக வந்துகொண்டிருந்தான் அபிமன்யூ…

தொடரும்….

அத்தியாயம்..! 3

” மீட்டிங் ஹால் வந்த அபி அங்கிருந்த அனைவரையும் பார்த்துக் கொண்டிருந்தவன் பார்வை வட்டத்தில் அவள் விழுந்தாள். ஒரு கணம் பார்வையை அவள்மேல் நிலைக்க விட்டவன், அவளின் அதே உணர்ச்சியற்ற பார்வையை பார்த்ததும், தன் பார்வையை மாற்றிக் கொண்டு,, அனைவரிடமும் பேச தொடங்கினான். ”வணக்கம் என் பெயர் அபிமன்யு தனசேகர், அபி குரூப் ஆப் கம்பெனி எம் .டி. கம்பெனி கை மாறுச்சுன்னா உங்க வேலை என்னாகும்? என்று நீங்க நினை நினப்பது எனக்கு புரியுது. அதற்கு விளக்கம் தருவதற்கு தான் இப்பொழுது இங்கே வந்தேன்.

நான் நாளையில் இருந்து இந்த கம்பெனி சார்ஜ் எடுக்க போகிறேன். அபி இம்போர்ட் & எக்ஸ்போர்ட் கம்பெனி சார்பாக ஒரு வெளிநாட்டு கம்பெனியுடன் அவர்கள் கேட்ட ஆர்டரை மூன்று மாதத்தில் செய்து தருவதாக ஒப்பந்தம் செய்திருக்கிறேன். அந்த வெளிநாட்டு ஒப்பந்தத்தை நான் இந்த நிறுவனத்திற்கு மாற்ற போகிறேன். உங்களுக்கும் அதே மூன்று மாத காலம் தருகிறேன். அதற்குள் அவர்கள் கேட்ட ஆர்டரை எந்த குறையுமில்லாமல் முடித்து கொடுத்தால் உங்கள் வேலை நிரந்தரமாக்கப்படும்,

வரும் லாபத்தில் அனைவருக்கும் பத்து சதவீதம் போனஸ்ஸாக வழங்கப்படும். இல்லையென்றால் உங்கள் வேலை பற்றி நான் சொல்வதற்கில்லை. உங்களுக்கு என்னிடம் வேறு எதாவது கேட்க வேண்டும் என்றால் கேட்கலாம்” என்று பேச்சை முடித்தான். கூட்டத்தில் ஒருவர் ”சார் நாங்க நல்லா வேலை பார்த்து சொன்ன நேரத்தில் வேலை முடித்து கொடுத்ததும் நீங்க எனக்கு திருப்தி இல்லைன்னு சொல்லி எங்களைய வேலைய விட்டு அனுப்பிட்டா நாங்க என்ன சார் செய்யறது?” என கேட்க

“என்ன நண்பா ஒரு நல்ல தொழிலாளியை எந்த முதலாளியாவது வேண்டாம்னு சொல்வாங்களா? உங்கள வேணாம்னு சொல்லிட்டு புதுசா ஒருத்தர வேலைக்கு சேர்த்து அவங்களுக்கு ட்ரெய்னிங் கொடுத்து, எனக்கு டைம் வேஸ்ட், பணம் வேஸ்ட் இதெல்லாம் எனக்கு தேவையா சொல்லுங்க என விளையாட்டாக கூறியவன், பின்பு முகத்தை கடுமையாக வைத்துக் கொண்டு அவரை கூர்மையாக பார்த்து கொண்டே “எனக்கு வார்த்தை தவறி பழக்கமில்லை” எனவும் அவர் மன்னிப்பு கேட்டு ”இந்த வேலையை நாங்கள் மூன்று மாதத்தில் நிச்சயமாக முடித்து கொடுப்போம்” எனகூற,,, அனைவரும் அதற்கு சம்மதித்தனர்.

பின்பு அனைவருக்கும் டீ, பிஸ்கட் வழங்கப்பட்டது. அபிமன்யூ தன்னை அறியாமல் மீண்டும் சாதனாவை பார்க்க அவள் வாட்சை பார்ப்பதும், வெளியே பார்ப்பதும் என இருந்தாள். உற்று பார்த்தால் மட்டுமே அவள் பதட்டத்தில் இருப்பது தெரியும் அபியும் அதை கவனித்து ஒருவேளை யாராவது காத்திருப்பார்களோ? என்று நினைக்க தேவை இல்லாமல் அன்று ஷாப்பிங் காம்ளெக்ஸ் ஆடவன் நினைவிற்கு வந்தான். முகம் இறுக நின்று கொண்டிருந்தவன் மனதில் அன்னை சொன்ன வார்த்தை மனதில் எழ நிதானத்திற்கு வந்தவன் அப்பொழுதுதான் மணி பார்க்க அவள் பதட்டத்திற்கான காரணம் விளங்கியது. அவன் மனதில் ஒரு எண்ணம் தோன்றியது. பிரபுவை அழைத்து எதோ கூறியவன் திரும்பவும் மேடை ஏறி “இன்று மிகவும் தாமதமாகி விட்டதால் பெண்களுக்கு கார் வசதி செய்யப்பட்டுள்ளது.

அலுவலகத்திற்கு பேருந்தில் வந்த பெண்கள் அதில் செல்லும்படி கேட்டுக் கொள்கிறேன்.” என கூறி கொண்டு சாதனாவை பார்க்க அவள் முகத்தில் இருந்த பதட்டம் குறைந்திருந்தது. அவனுக்கும் ஏனென்றே தெரியாமல் நிம்மதி வந்தது. மது ஸ்கூட்டியில் வந்ததால், சாதனாவை முத்லிலேயே அழைத்தாள். அனால் சாதனா மறுத்து விட்டாள். சாதனா இருக்குமிடத்திற்கும், மது இருக்குமிடத்திற்கும் தூரம் அதிகம் இதில் மது சாதனாவை அழைத்து சென்றால், மதுவிற்கு மிகவும் தாமதமாகிவிடும் என்று அவள் மறுத்து கொண்டிருக்க, அபியின் அறிவிப்பு அவளுக்கு நிம்மதி தந்தது. மீட்டிங் முடிந்து அனைவரும் வெளியேற,

மது சாதனாவிடம் ” சாது பார்த்தியா அபி சார ஒவ்வொன்னும் எப்படி யோசிச்சு செய்றார். இதுக்கு முன்னாடி யெல்லாம் நம்ம எத்தன தடவ லேட்டா போயிருக்கோம் அப்ப எல்லாம் நம்ம எம் டிக்கு இதுமாதிரி தோனுச்சா? ஆனா அபி சார பாரு வந்த அன்னிக்கு பெண்களோட பாதுகாப்பு பத்தி யோசிச்சு கார் ஏற்பாடு செஞ்சிருக்கார்.” என,,, “அடிப்பாவி நிர்வாகம் மாறி ஒரு மணி நேரம் கூட ஆகலை அதுக்குள்ள புது நிர்வாகத்துக்கு சாதகமா பேசுற” என கூறியவள் ஆனாலும் இது வரவேற்க பட வேண்டிய விசயம். இது தொடர்ந்தா நல்லா இருக்கும்” என கூற இதை அபியும் கேட்டுக் கொண்டு இருந்தான். இருவரும் பேசிக்கொண்டே வெளியே வந்தனர்.

அங்கு கார் தயராக இருக்க மது ஸ்கூட்டியில் சென்று விட, சாதனா அங்கு நின்றிருந்த காரில் ஏறினாள். அதில் ஏற்கனவே மூன்று பெண்கள் இருக்க அனைவரும் அவரவர் இல்லத்தில் இறக்கி விடப்பட்டனர். தனது இல்லம் வந்த சாதனா தனக்காக வாசலில் காத்து கொண்டிருந்த மங்கையை பார்த்து “என்னம்மா இன்னைக்கு மீட்டிங் இருக்கு வர நேமாகும்னு சொல்லிட்டுதான போனேன். பின்ன ஏன் வெளிய நின்னுட்டு இருக்கீங்க,,,” என்று அவரை உள்ளே அழைத்து கொண்டு சென்றாள். ”ஏண்டி சொல்ல மாட்ட வயசு பொண்ணு காலாகாலத்துல வீட்டுக்கு வரலைன்னா நெருப்பு மேல நிக்கிற மாதிரில இருக்கு,,,” நீ வர நேரத்துக்கு பஸ் கிடைக்குமா கிடைக்காதோ, ஆட்டோல வந்தாலும் பாதுகாப்பா இருக்குமோ, இருக்காதோனு பயந்தது எனக்கு தான தெரியும்,,,” என மங்கை கூற முகம் கழுவி வந்த சாதனா இன்று அலுவலகத்தில் நடந்ததையும், நிர்வாகம் ஏற்பாடு செய்த கார் பற்றியும் கூறினாள். சாதனா கூறியதை கேட்டு மங்கை மிகுந்த நிம்மதி அடைந்தார். பிறகு இரவு உணவு உண்டுவிட்டு இருவரும் உறங்கச் சென்றனர்.

அபி வீட்டில் சேகர் அபியிடம் புதிதாக வாங்கிய நிறுவனத்தை பற்றி பேசிக்கொண்டிருந்தார். ”ஏன் அபி இப்ப இந்த கம்பெனி வாங்கனும்னு என்ன அவசியம். இருக்கிற கம்பெனிய பார்க்கவே உனக்கு நேரம் பத்தலை அப்பறம் எதுக்கு இத வாங்கின. அதுவும் நஷ்டத்துல போயிட்ருக்க கம்பெனிய,, ” என கேட்க அபி ”அப்பா என்னைய பத்தி உங்களுக்கு தெரியாதா சவாலான விசயங்கள் எனக்கு ரொம்ப புடிக்கும்னு. நஷ்டத்துல போயிட்ருக்கிற கம்பெனிய வாங்கி அத லாபமாக்கி காட்றதுல ஒரு சந்தோசம் இருக்கு பா” என

“நீ முடிவு பன்னிட்ட இனிமே என்பேச்ச கேட்கவா போற,,,” என கூறிக்கொண்டே தன் அறைக்கு செல்ல போனவரை அபி “ அப்பா இனிமேல் பாதி நேரத்துக்கு மேல நான் இந்த கம்பெனிலதான் இருப்பேன். சோ,, நான் அங்க ஈவ்னிங் தான் வருவேன்.,,,” என கூற சரி சொல்லிவிட்டு சென்றார். இவர்கள் இருவரும் பேசியதை கேட்ட வாசுகி அபியிடம் வந்து “என்ன கண்ணா உன் முகத்துல கொஞ்சம் பல்ப் எரியற மாதிரி தெரியுது,,,” என,, அவ்வளவு வெளிப்படையாவா தெரியுது என மனதில் நினத்து தன் முகத்தை தொட்டு பார்க்க ”தம்பி நீ மைண்ட் வாய்ஸ்னு நினச்சு சத்தமா பேசிட்டு இருக்க” என வாசுகி அவனை வம்பிழுக்க அவரை முறைக்க முயன்று, தோற்று பின் வாய் விட்டு சிரித்தான்.

இரவு உணவு உண்டு விட்டு தனது அறைக்கு வந்த அபி தான் புதிதாக வாங்கிய நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களை பற்றிய குறிப்பு அடங்கிய பைலை பார்த்து கொண்டிருந்தான். அதில் சாதனாவை பற்றிய குறிப்பு வரவும் ஆர்வமுடன் பார்த்தான். ”நீ என்ன ரொம்ப டிஸ்ட்டர்ப் பண்ற. நான் அன்னைக்கு திட்டுனதுக்கு நீ எதாவது ரியாக்‌ஷன் கொடுத்திருந்தால், நானும் அப்பவே மறந்திருப்பேனோ? என்னவோ,,, ஆனா அன்னைக்கு ஒரு பார்வை பார்த்த பாரு அது என்ன பார்வை? ப்பா,,,,,,,,,, நிச்சயமா அதுக்கான அர்த்தம் புரிந்து நான் பதில் தரவில்லை என்றால் என் பெயர் அபிமன்யு இல்ல சனா,,,” என்று மனதிலே நினைத்து கொண்டு தன்னை அறியாமலே அவளின் பெயரை சுருக்கமாக அழைத்து கொண்டான்.

காலை சாதனா வீட்டில் வழக்கம்போல் மங்கையிடம் குறும்பு செய்துகொண்டே அலுவலகம் கிளம்பினாள். அவள் அலுவலகம் வந்த சிறிது நேரத்தில் அவளுடைய மேலதிகாரி சாதனாவை அழைத்து கம்பெனி கணக்குகள் அடங்கிய பைலை எடுத்து கொண்டு எம் டி அறைக்கு வருமாறு கூறினார். “என்ன எம் டி இவ்வளவு சீக்கிரம் வந்துட்டாரா?” என மனதுக்குள் வியந்தவாரே, சென்றாள். அபி அறையில் இவளுக்கு முன் காத்திருந்தார் அவளுடைய மேலதிகாரி, சாதனாவை பார்த்த அபி, அவள் கூறிய காலை வணக்கத்தை ஏற்று கொண்டு, அவளின் அறிமுகமற்ற பார்வையை பாத்து இவளுக்கு என்னை நியாபகம் இருக்கா. இல்லையா? என குழம்பினான்.

பின்பு ”திட்டு வாங்கின அவளே அப்படி இருக்குறப்போ எனக்கென்ன வந்தது” என மனதில் வீம்பாக நினைத்து கொண்டு, அவளை பார்த்து வரவேற்பாக தலையை மட்டும் அசைத்தான். பிறகு மூவரும் வேலையில் மூழ்கி விட்டனர். சாதனா நின்று கொண்டே வேலை செய்ய, அதை பார்த்த அபி அவளை அமர சொல்ல, அவள் தன் மேலதிகாரியை பார்க்க “அதான் சாரே சொல்லிட்டாருல்ல அப்பறம் ஏன் என் முகத்தை பார்க்குற உட்கார்” என எரிந்து விழ, சாதனாவிற்கு முகம் கூம்பி விட்டது. அந்த மேலதிகாரிக்கு தனக்கு கீழே வேலை செய்பவர் தனக்கு முன் உட்காருவது பிடிக்காது. எந்த வேலையாக இருந்தாலும் சாதனா நின்று கொண்டேதான் செய்வாள். எனவே இன்று அபி அமர சொல்லவும் பார்வை தன்னிச்சையாக அவரிடம் சென்றது. அபி அந்த மேலதிகாரியை ஒரு பார்வை பார்க்க ”பரவாயில்ல சாதனா உட்கார்” என தன்மையாக கூறினார். அபி வெகு தீவிரமாக கணக்குகளை ஆராய அவருக்கு மிகவும் படபடப்பாக இருந்தது. அபி சில கணக்கிற்கு விளக்கம் கேட்க, அவர் திணற சாதனா நிதானமாக அதை பற்றி விளக்கினாள்.

உணவு இடைவேளை வர வேலை மும்முரத்தில் அதை கவனத்தில் கொள்ளாமல் வேலை செய்து கொண்டு இருந்தவளை அபி சாப்பிட்டு விட்டு வருமாறு அனுப்பி வைத்தான். அவள் சென்றவுடன், தானும் செல்ல போன மேலதிகாரியிடம் ”ஒரு நிமிஷம்” என்றவன் “ உங்களுக்கு கீழ வேலை பார்த்தா உங்களுக்கு யாரும் அடிமை இல்லை,,, இனிமேல் இப்படி யாரையும் நிக்கவச்சு பேசாதிங்க புரியுதா?” என கடுமையான குரலில் சொல்லியவன் அவரை அனுப்பிவைத்தான். தன் செல்போனை எடுக்க வந்த சாதனா இவை அனைத்தையும் கேட்டாள். அவள் உணவருந்த செல்லும்போதே நேரம் மிகவும் தாமதமாகிவிட்டது. அவள் வரும்போதும் அபி வேலை செய்து கொண்டிருந்தான். ”இவர் இன்னும் சாப்பிட போகலையா? என நினைத்தவள் ஒருவேளை நமக்கு முன்னாடியே சாப்பிட்டு இருப்பாரோ? என நினைத்து அறையை ஆராய அங்கு அவன் சாப்பிட்டதற்கான அறிகுறி எதுவும் இல்லை.

”அச்சோ இன்னும் சாப்பிடாம இருக்காங்க போல நாம எதாவது சாப்பாடு ஆர்டர் சொல்லவானு கேடகலாமா?,,,” என நினைத்து கொண்டிருந்தவள் விதிர்த்து போனாள். நான் ஏன் இப்படி நினைக்கிறேன். யார் சாப்பிட்டா என்ன சாப்பிடலைன்ன எனக்கென்ன,,,, ஒருதடவ பட்டும் புத்தி வரலையே,,,” என தன்னையே நொந்து கொண்டு வேலைகளை கவனிக்க ஆரம்பித்தாள். சாதனா அறைக்குள் வந்தது முதல் அவளையே பார்த்து கொண்டிருந்த அபி, அவள் முக மாறுதல்களையும் கவனித்தான். அவன் தன்னை பார்ப்பதை சாதனா உணரவில்லை. இவள் வந்த பிறகும் சிறிது நேரம் கழித்தே வந்த அவள் மேலதிகாரியிடம் சில இடங்களில் சஸ்பென்ஸ் என்று எழுதி இருந்ததை பார்த்த அபி மீண்டும் விளக்கம் கேட்க பதில் சொல்ல வந்த சாதனாவை கை காட்டி நிறுத்திவிட்டு அவரை சொல்லும்படி கூற,

அவர் ரொம்பவே தினற, அபி “சாதனாவிடம் நீங்க தினமும் ரிப்போர்ட் யாருக்கிட்ட கொடுப்பிங்க?” என, அவள் தன் மேலதிகாரியை பார்க்க “நான் உங்க்கிட்ட நேரிடையா கேட்கிறேன் மிஸ்.சாதனா அதனால் நீங்க என்கிட்டதான் பதில் சொல்லியாகனும்.” என கடுமையாக கூறினான். சாதனாவிற்கு முதன்முதலில் பார்த்த அபி நினைவுக்கு வர அதை ஓரம் கட்டிவிட்டு, “நான் என்னுடைய மேலதிகாரியிடம் ரிப்போர்ட் தருவேன் சார்”.. என ”அதை படிச்சு பார்த்துட்டு கையெழுத்து போடுவாங்களா? இல்ல படிக்காம போடுவாங்களா?” என்று கேட்க ஒரு நொடி அமைதியாக இருந்தவள் மறு நொடி ”படிக்காமத்தான் கையழுத்து போடுவார்” என, அந்த மேலதிகாரி சாதனாவை எரித்து விடுவது போல் பார்த்தார். ”இப்பதான தெரியுது கம்பெனி ஏன் நஷ்டத்துல ஓடுதுன்னு,,” என்றவன், மீண்டும் அந்த சஸ்பென்ஸ் என்ன கணக்கு என்று முகத்தை கடுமையாக வைத்து கொண்டு மேலதிகாரியை பார்த்து கேட்க “ சார் இங்க நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலை பார்க்கிறாங்க அவங்க சில சமயம் முன் பணம் வாங்கிறது, சிலபேர் சம்பளத்துல புடிக்க சொல்றாங்க சிலபேர் சம்பளத்துல புடிச்சா தகராறு பண்றாங்க.

அதுல விட்டுபோன பணம் சார் இது. அதுமட்டு மில்லாம நான் படிச்சு பார்க்காம கையெழுத்து போட்டத சாதானாவே மிஸ்யூஸ் பன்னிருப்பாங்களோன்னு சந்தேகம் வருது சார்,” என்று சாதனாவை மாட்டிவிட, பார்த்து கொண்டிருந்த சாதனா ”அடப்பாவி” என்பது போல் பார்க்க ”அப்படியா சொல்றிங்க என்று சாதனாவை பார்க்க அவள் எந்த பதட்டமும் இல்லாமல் நேரடியாக அபியை பார்த்தாள். அபி அவளை முதன் முதலில் பார்த்த அதே பார்வை. ஒரு கணம் தடுமாறிய அபி சாதனாவிடம் “இதற்கு நீங்க என்ன விளக்கம் தரபோறிங்க மிஸ்.சாதனா,,” என்று அபி கேட்க ”சார் அந்த சஸ்பென்ஸ் கணக்கு எந்த வருஷத்துல இருந்து இருக்குன்னு நான் தெரிந்து கொள்ளலாமா சார்?” ஓ யெஸ் என்றபடி அபி வருடத்தை கூற “ சார் நான் இந்த கம்பெனிக்கு வேலைக்கு வந்து ரெண்டு வருஷம் ஆகுது. நீங்க சொன்ன எல்லாமே நான் இங்கே வருவதற்கு முன்னாடி நடந்தது சார்.,,,” என்ற சாதனாவிடம் ”இல்லையே சமீபத்திலேயும் இதுமாதிரி இருக்கு” என்றவனிடம் அதற்கான பதில் என்னிடம் இருக்கு சார் என்றவள் அவனிடம் அனுமதி கேட்டு ஒரு பைலை எடுத்து வந்து அவனிடம் காட்டினாள். அதை பார்த்தவனிடம் “சார் சஸ்பென்ஸ் கணக்கிற்கு யாரு எப்ப பணம் வாங்கினாங்கன்னு தேதி, நேரம் எல்லாம் போட்டு எழுதிருக்கேன் சார்” என்றாள்.

”இது நீங்களா எழுதினது, ஆனா வாங்கினவங்க கையழுத்து இதுல இல்லையே?” என்றவனிடம் “ சார் அதுனாலதான் இது சஸ்பென்ஸ் கணக்குன்னு எழுதிருக்கு. சார் இங்க ஒவ்வொரு செக்சன்லையும் சிசி டிவி கேமரா இருக்கு இதுல நான் குறிப்பிட்ட நேரத்துல அந்த கேமராவ பார்த்தீங்கன்னா உங்களுக்கு புரியும்.” என்றவளை வியப்புடன் பார்த்தவன் “தேவை இல்லை, நீங்க எழுதின கணக்கும், இதுல குறையுற பணமும் ஒரே மாதிரி இருக்கு. அதனால இத யாரு வாங்கினாங்களோ அவங்ககிட்ட விசாரிக்கலாம்.,,,” என கூறியவன் அலுவலக நேரம் முடிந்து விட்டதால் அவளை வீட்டுக்கு செல்லும்படி கூறி விட்டு மேலதிகாரியை இருக்க சொன்னான்.

அவள் தயங்கி கொண்டு இருப்பதை பார்த்து “என்ன,” என்றவனிடம் பெரும் தயக்கத்துடன் “இல்ல நீங்க மதியம் சாப்பிட்ட மாதிரி தெரியல இப்பவே மணி அஞ்சாச்சு, உங்களுக்கு கேண்டின்ல காபி பிஸ்கட் சொல்லிட்டு போகவா?” என்றவளை பெரும் வியப்புடன் பார்த்தவன், ”சரி கொண்டு வரசொல்லுங்க” என்றவன் அவள் சென்றவுடன், மேலதிகாரியை பார்த்து நாளைக்கு நீங்க சீக்கிரம் வர வரவேண்டும் என்ற கட்டளையுடன் அவரை அனுப்பி வைத்தான். கேண்டின் சென்று அவனுக்கு காபியும், பிஸ்கட்டும் அவனுடைய அறைக்கு அனுப்ப சொல்லிவிட்டு தன்னுடைய கைப்பை எடுத்து கொண்டு வெளியே வந்தாள். அவள் அலுவலகம் விட்டு வெளியேறும் வரை அறை ஜன்னல் வழியே அவள் அனுப்பிய காபியை ரசித்து குடித்து கொண்டே முகத்தில் புன்னகையுடன் அவளை பார்த்து கொண்டிருந்தான் அபி.

தொடரும்…..

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
8
+1
19
+1
4
+1
5

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    7 Comments