அத்தியாயம்- 6
துகிலன், தன் அண்ணனுடன் “வைசியா காலேஜ்” கேண்டினுக்கு சென்றவன் .
காலேஜுக்குள் நுழையும் பெண்களையே பார்த்துக்கொண்டிருந்தான். துமி வருவாளா என்று. ஆனால் ‘துமி’ வந்தபாடில்லை. துகிலனுக்கு பெருத்த ஏமாற்றம் ஆகிவிட்டது. “சோகமா கன்னத்தில் கை வைத்து” உட்கார்ந்து கொண்டிருந்தான்.
அமுதன், என்னடா கன்னத்தில் கை வைத்து உட்கார்ந்து விட்ட. வந்து வடைக்கு “வெங்காயம்” நறுக்கு.
துகிலன், நானே கவலையில் இருக்கிறேன் இவன் வேற வெங்காயம் நறுக்கு கொத்தமல்லிய நறுக்குன்னு டார்ச்சர் செய்றான். இவன் கூட வந்ததே! தப்பா போச்சு. தனக்குள் புலம்பி கொண்டிருந்தான்.
அண்ணே! என்ன அண்ணே நம்ம கேண்டின் பக்கம் எல்லாம் வந்து இருக்கிங்க. என்று அமுதன் கூட வேலை பார்க்கும் ‘மணி’ சொல்லிக்கொண்டு கேண்டினுக்குள் நுழைந்தான்.
துகிலன், வாடா நேத்து நீ வராமல் போனதால் தான் இந்த கேண்டினுக்கு வர மாதிரி ஆகிவிட்டது. போய் வடைக்கு வெங்காயம் நறுக்கு.விரட்டிக் கொண்டிருந்தான்.
அமுதன், தம்பி நீ வெங்காயம் நறுக்கி கொடு அவன் வேற வேலை பார்க்கட்டும்.
துகிலன், விட மாட்டான் போல. மனதிற்குள் ‘துகிலா’ எப்படியாவது துமி படிக்கும் கிளாஸ் எங்கிருக்கிறது என்று கண்டு பிடித்து அவள் ஏன் வரலைனு தெரிந்துக்கோடா. இல்லைனா? “கண்ணீர் வடிய வடிய வெங்காயம்தான்” நறுக்கணும். தனக்குள் பேசிக் கொண்டிருந்தான்.
அமுதன், டேய் துகிலா அப்பா பொண்ணுங்க போட்டா கட்டினாரே எதாவது செலக்ட் பண்ணியாடா.
துகிலன், அந்த போட்டா எல்லாம் பார்க்கலை அமுதா.
அமுதன்,ஏன்டா எதுவும் சரியில்லையா?.
மணி, அண்ணே நீ போட்டோ பார்க்காத காரணம் என்னண்ணே யாராவது “காதலிக்கிறியா” அண்ணே!.
துகிலன், ஒரு “காதல் தேவதை” அப்படியே!என் முன்னாடி வந்து தரிசனம் கொடுத்துவிட்டு சென்று விட்டதுடா . அந்த தேவதையைதான் தேடிக் கொண்டிருக்கிறேன்.தன் காதலி பற்றி ‘வர்ணித்துக்’ கொண்டிருந்தான்.
அமுதன், உன் தேவதை இந்த “காலேஜ்ஜில்தான்” படிக்கிறாங்க போல. அதுதான் உன் வேலை வெட்டி எல்லாம் விட்டுட்டு இங்க வந்து போற வர பெண்களை பார்த்துக்கொண்டிருக்கிறியா?.
துகிலன், ஆமாம் அமுதா. நீங்க கேண்டின் வேலையை பாருங்க. நான் இதோ வந்து விடுகிறேன் சொல்லிவிட்டு ‘துமி தோழியிடம்’ சென்றான்.
வித்யா, துகிலனை கண்டதும். என்னங்க கேண்டின்ல வெங்காயம் நறுக்குற வேலை இல்லையா?. என்னிடம் வந்து நிற்கிறிங்க.
துகிலன், அது வந்துங்க… உங்க கூட வருவாங்க அவங்க வரலியா. தயங்கி படி கேட்டான்.
வித்யா, யாரு சொல்லறீங்க “துமிய” சொல்றிங்களா.
துகிலன், ஆமாம், அவங்களேதான்.
வித்யா, அவ இன்னைக்கு வரமாட்ட அவளை பத்தி இப்படி வந்து விசாரிக்கதிங்க. நீங்கள் “விசாரிப்பது” அவளுக்கு தெரிந்தால் அவ்வளவுதான் போய் வெங்காயம் நறுக்கிற வேலையை பாருங்க முகத்தை சுளித்துக் கொண்டு போனாள்.
துகிலன், “இவங்ககிட்ட அவங்க தோழியை பதித்தானே விசாரித்தேன் இவங்களை பத்தி விசாரித்த மாதிரி முகத்தை” சுளித்துக் கொண்டு போறாங்க. விடு துகிலா உன் தேவதையை நாளைக்கு பார்த்துக்கலாம் என்று தானக்குள்ளே முனகி கொண்டு போனான்.
அகிலன், கையில் போனை வைத்துக் கொண்டு ‘துமிக்கு’ போன் போட்டு போட்டு பார்த்தான்.
துமி, போன் எடுக்கவில்லை.வருத்தத்துடன் தன் அம்மா பக்கத்தில் “தலை கவிழ்ந்து” உட்கார்ந்திருந்தான்.
தமிழரசி, அகிலா ஏன்பா இப்படி முகம் எல்லாம் வாடி போய் உட்கார்ந்துஇருக்கிற. நைட் முழுக்க கண் முழித்தது உடம்புக்கு ஒத்து வரலியாய்யா.
அகிலன், இல்லமா நான் நல்லாத்தான் இருக்கிறேன் எனக்கு ஒன்னுமில்லைனு ‘பொய் சொல்லி’ சமாளித்தான்.
மகிழ், வீட்டு வேலைகளை முடித்து விட்டு, தன் அம்மாவுக்கும், அண்ணனுக்கும் கேரியரில் சாப்பாட்டை கொண்டு வந்தாள் மருத்துவமனையில் இருக்கும் தன் “அம்மாவிற்கும், அண்ணனுக்கும்” .
தமிழரசி, மகிழ் வந்துட்டியா. உன் அண்ணனுக்கு சாப்பாடு போடு நேத்து முழுவதும் சாப்பிட்டானா இல்லயா என்று கூட தெரியலை.
மகிழ், ம் சரிம்மா! அண்ணா வா சாப்பிடலாம்.
அகிலன், எனக்கு பசிக்கல நீ அம்மாவுக்கு கொடும்மா நான் அப்புறம் சாப்பிட்டுக்கிறேன்.”வருத்தமாக” கூறினான்.
தமிழரசி,சாப்பிடு ராசா நீ பசி தாங்க மாட்ட. வற்புறுத்தினாள்.
அகிலன், வேண்டா வெறுப்பாக தரையில் அமர.
மகிழ், “வாழை இலையை விரித்து சாப்பாடு” பரிமாறினாள்.
அகிலனுக்கு, சாப்பாடு உள்ள போகாமல் தொண்டைக்குள் சிக்கியது, விக்கியது,கண் கலங்கியது.பாதியில் கை கழுவிவிட்டு வெளியே சென்று ‘துமியின் போட்டவை’ போனில் ஜூம் பண்ணி பார்த்துக்கொண்டிருந்தான். அவள் நினைவுகள் கண் முன் வந்து போனது.
துமியும், அகிலன் வாங்கி கொடுத்த வாட்சை பார்த்துக்கோபிடிருந்தாள்.
காதலில் கல் வீசியது யாரோ
காயங்கள் உண்டு பண்ணுதே மனதிற்குள்
கண்ணீர்தான் கரை புரண்டு வருகிறதே
என் விதியை நான் என்ன வென்று சொல்வேன்
காதல் உடைந்து போகிறதே
காதல் நினைவுகள் பல முகமா தெரிகிறதே
காதலனே காதலேனே
உன் நினைவுகளில் வாடி போகிறேன்
என் காதல் உணர்வுகள் உன்னக்கு புரிய வில்லை யா
புரிந்தும் என்னை தவிக்க விடுவது ஏன்
என் அன்பானவனே!
💞💞💞💞💞💞💞💞💞💞💞
அகிலன், “காதல் நினைவில்” தவிக்க அவன் போன் சிணுங்கியது.ஆன் பண்ணி காதில் வைத்தான். அகிலன் முகம் சுணங்கிப் போனது.
துமி, காதல் நினைவுகளில் கரைந்து போனாள்.
தொடரும்…
சாரி வாசக பெருமக்களே. என்னால் தொடர்ந்து யூடி போட முடியலை. இனி வாரத்துக்கு ஒரு முறை போடுகிறேன். உங்கள் நல் ஆதரவுக்கு என்றென்றும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 🙏🙏🙏
காதலியோட கடலை வறுக்க வந்தான் துகிலன். அவனை வெங்காயம் வெட்ட விட்டானே இந்த அமுதன்…
மிக்க நன்றி 🙏🙏🙏