Loading

உன்னுள் தொலைந்திடவா− டீஸர் 1

புவனா! புவனா எல்லாம் எடுத்து வச்சிட்டியா. இன்னைக்கு “காஞ்சிப்புர காமாட்சியம்மன் கோயிலுக்கு போக வேண்டும்”. இன்னும் துமி என்னப்பண்றா ரெடியாகிட்டாளாப்பாரு.என்று, தன் மனைவியிடம் கத்திக்கொண்டிருந்தார் மனோஜ் குமார்.

இதோ!, எல்லாம் எடுத்து வைத்துவிட்டேன். துமி ரெடியாகி வந்தால்னா கிளம்புளாங்க.என்று புவனா சொல்லிக்கொண்டிருக்கும்போதே!

அம்மா! அம்மானு கூப்பிட்டுக்கொண்டே! தன் ரூமிலிருந்து வெளியே வந்தாள்  “துமி” சல்வார் அணிந்துக்கொண்டு.

இது, என்னடி! கோயிலுக்கு போகும்போதுக்கூட இந்த சல்வாரை மாட்டிக்கொண்டு வந்து நிற்கிற. போய் “புடவைக்கட்டிக்கொண்டு” வா போடி.புவனா அவளை திட்டிக்கொண்டிருக்க.

“ம்மா! ம்மா! புடவைக்கட்டினால் நடப்பதுக்கு கஷ்டமாக இருக்குமா?”. இதுதான்மா பெட்டர்.துமி.

துமி, “பெண்ணுக்குப் புடவைதான் அழகு”. வா, நான் உனக்கு அழகா புடவைக்கட்டிவிடுகிறேன் என்று புவனா, துமி ரூமிற்கு அழைத்து சென்றவள், பதினைந்து நிமிடத்தில் வெண்ணிற கலரில் செம்மன் நிற பார்டர் வைத்தப் புடவையை சிக்குனு அவளுக்கு கட்டிவிட்டு, அவள் தலையில் மல்லிகைப்பூவைச் சூடி வெளியே! அழைத்து வந்தாள்.

அட, இன்னும் என்னப்பண்றிங்க. வாங்க போகலாம்னு அவசரப்படுத்தினான். துமியின் தம்பி, “எழிலன்.”

“வீட்டை பூட்டிவிட்டு வாங்க. நான் போய் ஆட்டோ ஸ்டான்டிலிருந்து ஆட்டோவைக்கூட்டிக்கொண்டு வருகிறேன் மனோஜ் குமார் சொல்லிவிட்டு ஆட்டோ ஸ்டான்டிற்கு நகர்ந்தார். ஐந்து நிமிடத்தில் ஆட்டோவுடன் வந்து, தன் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் அழைத்துக்கொண்டு காஞ்சிக்காமட்சியம்மன் கோயிலுக்கு அழைத்து சென்று. ஆலயத்திற்குள் வழிப்பட்டுக்கொண்டிருந்தனர்”.

இவர்களுக்கு எதித்தாப்பில் ஒரு “குடும்பம்” நின்றுக்கொண்டு வழிப்பட்டுக்கொண்டிருந்தது.

கருவறையிலிருந்து வந்த ஐயர், அம்மா இந்தாங்கோ! “ஆரத்தியை தொட்டுக்கும்பிட்டுவிட்டு, பிரசாதத்தை வாங்கிக்கோங்கனு” தாமரைசெல்வியிடம் நீட்டினார்.

தாமரை செல்வி ஆரத்தி தட்டில் இருக்கும் “விபூதியை” தன் சுன்டு விரலால் எடுத்து தன் மகன் துகிலன் நெற்றியில் வைத்துவிட்டு, அதை தன் வாயால் ஊதிவிட்டு சரிசெய்துவிட்டாள்.

இசை, அமுதா நல்லா வேண்டிக்கோடா. அடுத்த வருடம் என் கையில் “பேரப்பிள்ளைகள்” இருக்க வேண்டும் என்று.

சரிங்கம்மா, அமுதன் கருவறையில் கவனத்தை செலுத்த.

துகிலா, உனக்கெதிரே! ஒரு பெண் நிற்குதே! அந்தப்பெண் உனக்கு ஓகேதானே!.

அண்ணி, ஏன்? அண்ணி அந்தப்பெண் காதில் விழுந்திடப்போகுது. அமைதியா சாமியைக்கும்பிடுங்கனு தன் அண்ணியிடம் சொல்லிவிட்டு, “துமியை கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான்”.

சாமிக்கும்பிட்டது போதும் வாங்கப்போகலாம்னு துகிலன் தந்தை மகேந்திரன் அழைத்துக்கொண்டிருந்தார்.

ஆமாம், இவருக்குதன் கடவுள் பக்தி, இல்லை. மத்தவங்களையும் நிம்மதியா சாமி கும்பிட விடமாட்டேங்கிறாருனு முனகிக்கொண்டே!. செத்த இருங்க. “கோயில் பிரகாரத்தை சுத்திவிட்டு வந்துவிடுகிறோம்.” என்று. தாமரை செல்வி கூறிவிட்டு. தன் பிள்ளைகளை கூட்டிக்கொண்டு கோயில் பிரகாரத்தை சுத்திக்கொண்டிருந்தார்கள்.

துமியின் குடும்பமும் சாமியைக்கும்பிட்டதும். கோயில் பிரகாரத்தை சுத்திக்கொண்டிருந்தார்கள்.

துமி இந்தக்கோயிலுக்குதான் வரேனு சொன்னாள் எங்க! கண்ணிலே படமாட்டேங்கிறனு. அவளை தேடிக்கொண்டிருந்தான் அகிலன். 

துமி குடும்பம் வெளியே! வருவதைப்பார்த்ததும் “அகிலன்”  ,செருப்பு விடுற இடத்தில் வாசலுக்கு வெளியே! வந்து அமர்ந்துக்கொண்டிருந்தான்.

துமி, காலில் செப்பல் அணியப்போகும்போது, அவள் “காலைப்பிடித்து பிராண்டிக்கொண்டிருப்பதை” துமிப்பார்த்தவள். கண் ஜாடையில் நீங்களா?. எதுக்கு? இங்க உட்கார்ந்திருக்கிங்கனு கேட்க.

அவனும், “கண் ஜாடையில்” உன்னைப்பார்க்கதான் உட்கார்ந்திருக்கிறேன் கண்ஜாடையில் மறுமொழிக்கூறினான்.

நீங்க, நாம சந்திக்கும் ரெஸ்டாரண்டில் காத்துக்கொண்டிருங்க நான் வந்துவிடுகிறேன்.துமி.

சரி! சரி! நான் கிளம்புகிறேன் சீக்கிரம் வந்துவிடு. அகிலன் கூறுவதைப்பார்த்த.

மகேந்திரன், துமி அங்கு என்னப்பார்வை. 

“அப்பா, செருப்புக்கடிக்குதுப்பானு அவள் குணிந்தப்படி செருப்பை சரிசெய்கிறமாதிரி நடித்துக்கொண்டிருந்தாள்” துமி.

“புது செருப்பா இருந்தா கடிக்கதான் செய்யும். வா போகலாம். மகேந்திரன்.

ம், சரிப்பானு. தன் அப்பாவுடன் சென்றப்படியே! அகிலனைப்பார்த்துக்கொண்டேப்போனாள்.

தொடரும்….

ஹாய், பிரண்ட்ஸ் இந்த டீஸர் பிடிக்குமென நினைக்கிறேன். இந்தக்கதை ஒரு பெண்ணை இரண்டு பேர் விரும்புவார்கள்.

நாயகர்கள் இரண்டு பேர் நாயகியை விரும்புகிறார்கள். நாயகி விரும்பும் காதலன் சமூக குற்றவாளி. இவளுக்கு அதுத்தெரியாது. இன்னொரு நாயகன் நாயகியை விரும்ப. அதை அவளிடம் சொல்கிறான். ஆனால் நாயகி ஏற்றுக்கொள்ள மறுக்கிறாள். இவன்தான் முதல் நாயகன், நாயகியை அவள் தப்பான காதலனிடமிருந்து காப்பாத்தி அவள் மனதில் இடம் பிடிக்கிறானா? என்பதுதான் கதை.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    3 Comments

    1. hani hani

      நல்லா இருக்கு. அங்க அங்க இருக்க எழுத்துப்பிழை சரி பண்ணிக்கோங்க. வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️❤️